Friday, 12 February 2016

ஜில் ஜங்க் ஜக் - சினிமா விமர்சனம்

படத்தின் ட்ரெய்லர் பார்த்தப்புறம் படம் பார்க்கனும் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் ஜில்மோர் சிவா இந்த படத்தின் ட்ரெய்லர் பார்க்கும் போது மலையாளத்தில் வந்த டபுள் பேரல் என்ற மொக்கப் படத்தின் சாயல் இருக்கிறது. அதனால் பார்த்து போகவும் என்று பயமுறுத்தி வைத்தார். இரண்டு தினங்களுக்கு முன் வந்த புரோமோ போய் பார்க்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருந்தது.


படத்தின் கதை, தெய்வா என்னும் பெரிய டான், கொகெய்ன் ஸ்மக்லர், ஒரு கொகெய்ன் பார்சலை நெருக்கடியான நிலையில் ஐதராபாத் கொண்டு போக வேண்டிய சூழல். அப்போ தன் குழுவிற்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஜில் ஜங்க் ஜக் என்னும் மூவரை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைக்கிறார். 

மருந்து என்னும் அரைகுறை விஞ்ஞானி கொகெய்னை பெயிண்ட்டில் கலந்து ஒரு காரில் பூசி கொடுத்து அனுப்புகிறார். போகும் வழியில் ஒரு அசந்தர்ப்ப சூழ்நிலையில் கார் சினிமா படபிடிப்பில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படுகிறது. 

விவரம் தெய்வாவுக்கு தெரிந்தால் கொன்று விடுவார் என்பதால் ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் செய்து தப்பிக்க நினைக்கிறார்கள், நடந்ததா என்பதே ஜில் ஜங்க் ஜக் படத்தின் கதை.

பை எனும் பாத்திரத்தில் வருபவர் ஹரஹரமகாதேவகி டோனில் பேச அரங்கமே அதிர்கிறது. செம ஐடியா, அதே சிணுங்கல் அதே கிரக்கம் என பின்னி பெடலெடுக்கிறார்கள்.

ஜக்காக வரும் சனத் ரெட்டி எக்ஸ்பிரசனின் பின்னுகிறார். அப்பாவியாக அவர் செய்யும் சேஷ்டைகள் பலே. இவரின் கலர் ப்ளைன்ட் பிரச்சனையால் கார் மாறிப் போவது தான் பிரச்சனைகளின் ஆதாரமாக இருக்கிறது. 



மேற்கொண்டு விமர்சனத்திற்கு இந்த வீடியோ விமர்சனத்தை பாருங்கள்.

அப்புறம் மறந்துடாம சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்.

நன்றி

ஆரூர் மூனா

3 comments: