Friday, 19 February 2016

சேதுபதி - சினிமா விமர்சனம்

பண்ணையாரும் பத்மினியும் வந்த போதே இயக்குனர் கவனம் பெற்றார். வசூலில் பின் தங்கினாலும் விமர்சகர்கள் மத்தியில் கவனம் பெற்றார் இயக்குனர். அந்த லெவலை இந்த படத்தில் தக்க வைத்துள்ளாரா என்பதை விமர்சனத்தில் பார்ப்போம்.


நேர்மையான போலீஸ் டைரியின் ஒரு பத்தி தான் சேதுபதி படம். மேலூர் பகுதி இன்ஸ்பெக்டர் அவரது எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப் படுகிறார். அந்த குற்றத்தை துப்பு துலக்கும் போது படிப்படியாக நெருங்கி ஊரில் மிக முக்கிய மனிதர் வாத்தியார் தான் குற்றவாளி என்று தெரிய வருகிறது.

சேதுபதி வாத்தியாரை கைது செய்கிறார். இருவருக்குமான பகை ஆடுபுலி ஆட்டமாக இறுதியில் யார் வென்றார் என்பதே படத்தின் கதை.

படத்தின் பலம் நாயகனின் இயல்பான பாத்திரப் படைப்பு தான். சூப்பர்மேன் ரேஞ்சுக்கு பலம் காட்டாமல் ஒரு ஆண்மகனுக்கு என்ன பலம் இருக்குமோ அதை வைத்து சண்டை போடுகிறார். வீட்டை விட்டு வெகுதூரம் இருக்கும் போது வில்லன்கள் வீட்டை சூழ்ந்து விட் நாலு பாய்ச்சலில் வீட்டுக்கு வராமல் போனிலேயே யோசனை கூறுகிறார். 

சேதுபதி நன்றாகவே நடித்து இருக்கிறார். ஈகோ பார்க்காமல் நாயகி காலில் விழும் காட்சியில் பாராட்டு வாங்குகிறார். குழந்தைகளுடன் விளையாடும் போது நல்ல தந்தையாக, மனைவியுடன் கொஞ்சலில் பெண்களின் ஆதர்ச கணவனாக, இன்னும் என்னவாகவோ அத்தனையாகவும் அசத்தியிருக்கிறார்.

மேலும் விமர்சனத்திற்கு



காலையிலேயே படம் பார்த்து விட்டு வந்து விமர்சனம் தட்டி விட்டு இருந்தால் சரசரவென்று வந்து இருக்கும். இப்போ மைண்ட் லேக் ஆகி வார்த்தைகள் விரல் வழியே வர யோசிக்கிறது. அதனால் தான் இவ்வளவு சின்ன விமர்சனம். 

ஆரூர் மூனா

2 comments:

  1. விரல் வழியே வர யோசிக்கிறது இல்லாமல், காணொளி விமர்சனத்திலும் கைகள் ஆட்டம் போடுகின்றன... அதுவும் நல்லாத்தான் இருக்கு...!

    ReplyDelete
  2. படம் பாக்கலாமா ?

    ReplyDelete