Friday, 4 March 2016

போக்கிரி ராஜா - சினிமா விமர்சனம்

இன்று வெளியான படங்களில் முதல் சாய்ஸாக இதை தேர்வு செய்ய காரணம் இரண்டு. இந்த இயக்குனரின் முதல் படமான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்.  இரண்டாவது காரணம் படத்தின் ட்ரெய்லரில் வந்த ஒரு காட்சி. சிக்ஸ்ட்டி சிக்ஸ் என தண்ணியடித்த ஹன்சிகாவை ஜீவா சொல்லச் சொல்ல அவர் குழறியபடி சொல்லும் காட்சி.


படத்தின் இயக்குனருக்கு உண்மையிலேயே திறமை அதிகம். படத்தின் ட்ரெய்லரை மிக பிரமாதமாக செதுக்கி இருப்பார். பார்ப்பவர்கள் கண்டிப்பாக இந்த  படத்துக்கு போயே ஆகனும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் ட்ரெய்லர். 

படத்தின் கதை என்ன. 

ஜீவாவுக்கு கொட்டாவியில் ஒரு பிரச்சனை இருக்கிறது. அவர் கொட்டாவி விட்டால் அருகில் இருப்பவருக்கும் தூக்கம் வந்து விடும். இந்த காரணத்தால் அவர் பார்க்கும் வேலையெல்லாம் பறிபோகிறது. ஒரு சம்பவத்தில் ஜீவாவின் செய்கையால் ஊரில் மிகப்பெரிய ரவுடி சிபிராஜ் போலீஸில் சிக்குகிறார்.


கொட்டாவி பிரச்சனை பெரிதாகி அவர் உயிருக்கே உலையாகும் வேலையை செய்கிறது. சிபிராஜும் ஜீவாவை கொலை செய்ய தேடுகிறார். பிரச்சனைகளை ஜீவா எப்படி சமாளித்தார் என்பதே போக்கிராஜா படத்தின் கதை.

நாயகனாக ஜீவா, யான் என்ற உலகமகா காவியத்தை கொடுத்த பின் இரண்டு வருட இடைவெளி விட்டு வந்துள்ள  படம் போக்கிரிராஜா. ஏனோதானோவென்று நடித்துள்ளார். ஒரு காட்சியில் கூட பர்பெக்சன் இல்லை. படம் துவங்கும் போதே இந்த படம் வேலைக்காகாது என்று அவருக்கு தெரிந்து இருக்கிறது. எஸ்எம்எஸ், கோ என்று உயரே சென்ற அவரது காரியர் இப்போ அதள பாதாளத்தில். இந்த படம் இன்னும் இரண்டு அடி கீழே இறக்கியுள்ளது. 


ஹன்சிகா அழகு பதுமையாக வந்து செல்கிறார். குடித்த மாதிரி நடிக்கும் காட்சியில் மட்டும் கவனிக்க வைக்கிறார். பேஷன் ஷோவின் தலைமுடி விறைத்து நிற்க நடந்து வரும் காட்சி யெல்லாம் கடுப்பேத்துகிறது.

சிபிராஜ் எல்லாம் கொடூர கொலைகாரன் என்றால் அந்த சட்னி கூட நம்பாது. பிஞ்சு மூஞ்சிய வச்சிக்கிட்டு பெரிய கொலைகாரன் என்ற பில்ட்அப் எல்லாம் எடுபடவே இல்லை. அதிலும் பல இடங்களில் காமெடி செய்கிறேன் என்று பார்க்கிறவர்களின் கழுத்தை எல்லாம் அறுத்து தள்ளுகிறார்.

வீடியோ விமர்சனம் பார்க்க


முனீஸ்காந்த் வீணடிக்கப்பட்டு இருக்கிறார்.  யோகி பாபு எல்லாம் ஸோலோ காமெடியன் ஆகவே முடியாது. அதற்கான ஸ்டப் அவரிடம் இல்லை. பற்றாக்குறைக்கு நடிக்க வைத்த மாதிரி இருக்கிறது. 

புலி படத்தின் தயாரிப்பாளர் தலையில் நன்றாக மிளகாயை அரைத்திருக்கிறார்கள். இந்த படமும் ரசிகர்களை தெறிச்சி ஓட வைப்பதால் இனி அவ்வளவு தான் அவர்.

காமெடி என்ற பெயரில் படத்தின் கதைக்கே வராமல் அலைபாய்ந்து கொண்டு இருக்கும் திரைக்கதையில் படம் முடியும் அரை மணி நேரம் முன்பு ஜீவாவின் எள்ளு தாத்தா வெள்ளைக்காரனை எதிர்த்து காற்றை ஆயுதமாக்கி போரிட்டவர் என்றதும் நிமிர்ந்து உட்கார்ந்தேன். அடுத்த காட்சி சவக்கென்று செருப்பால் அடித்து திரும்ப உட்கார வைத்து விட்டார்கள்.

இந்த படம் திரையரங்கில் போய் பார்க்கவேண்டாம் என்பது மட்டுமல்ல டிவியில் போட்டாலும் பார்த்து விடாதீர்கள்.

ஆரூர் மூனா

3 comments:

 1. உலக சினிமாவுல கூட வராத ஜானர்'ன்னு டைரக்டரு பேட்டியில சொன்னாரே...

  ReplyDelete
  Replies
  1. என்னது உலக சினிமாவா

   Delete
 2. ஆமா இன்னைக்கு தினகரன் வெள்ளிமலர் படிக்கலையா?

  ReplyDelete