Friday, 4 March 2016

பிச்சைக்காரன்

போக்கிரிராஜா பார்த்து விட்டு தலைவலி வந்து, அதை வீடியோ விமர்சனம் செய்ய முயற்சித்து அதுவும் சொதப்பி கடுப்பில் இருந்த போது மாறுதலுக்காக அரங்கினுள் நுழைந்தேன். ஆனாலும் பயமாக இருந்தது. 


எல்லா பயத்தையும் போக்கி சசி சசி தான் என்பதை நிரூபித்து இருக்கிறார். விஜய் ஆண்டனிக்கு மற்றுமொரு வெற்றிப் படம் பிச்சைக்காரன். 

ஆயிரம் கோடி மதிப்புள்ள பெரிய ஸ்பின்னிங் மில் முதலாளியம்மாவான தீபா ராமானுஜத்தின் ஒரே மகன் விஜய் ஆண்டனி. வெளிநாட்டில் படித்து கோவை திரும்பியிருக்கிறார். மில்லில் நடந்த ஒரு விபத்தில் தீபா அடிபட்டு கோமா ஸ்டேஜ்க்கு போய் விடுகிறார். எந்த மருத்துவத்தாலும் சரி பண்ண முடியாத நிலை. 

ஒரு சாமியார் உன் தாய் சரியாகனும் என்றால் நீ உன் அடையாளத்தை தொலைத்து விட்டு 48 நாள் பிச்சையெடுத்து சாப்பிடனும் என்று கூறுகிறார். தாய்க்காக அதனை செய்ய முடிவெடுக்கிறார் விஜய்ஆண்டனி. அவரால் அது முடிந்ததா, அங்கு சந்தித்த பிரச்சனைகள் என்ன, முடிவில் அவர் அம்மா சரியானாரா என்பதே பிச்சைக்காரன் படத்தின் கதை


படத்தின் ஆகச் சிறந்த பிளஸ் சந்தேகமேயில்லாமல் வசனம் தான், ஒவ்வொன்றும் நெத்தியடி. மோகன்ராம் ஆடி காரில் இடித்த பெண்ணை திட்ட பெண்ணுக்காக பரிந்து விஜய் ஆண்டனி பேசும் வசனங்கள் ஏஒன். மெச்சூர்டு வசனங்கள், அதே போல் வில்லனின் ஆட்கள் பிச்சைக்காரன் போல் வேடமிட்டு அவமானப்பட்டு பேசும் காட்சிகள், பக்கா.

விஜய் ஆண்டனிக்கு பொருத்தமான கதாபாத்திரம். இந்தியா பாகிஸ்தானில் காமெடிக்கு முயற்சிக்கிறேன் என்று பார்த்தவர்களையெல்லாம் சோதித்து இருந்தார். இதில் அப்படி இல்லாமல் அவர் இயல்பான இறுக்கமான கேரக்டர் தான். அதனால் அவருக்கு நச்சென பொருந்துகிறது.

சென்னைக்கு வந்து எல்லாவற்றையும் விட்டு விட்டு முதல் முறையாக பிச்சையெடுக்க முயற்சித்து தோற்று சமாளிக்கும் காட்சிகளில்  எல்லாம் ஏ ஒன். சண்டை காட்சிகளிலும் நன்றாகவே செய்திருக்கிறார். ஆரம்பத்தில் கூனிக்குறுகி படிப்படியாக இயல்பாக பிச்சையெடுக்கும் நிலைக்கு வரும் வரை ரசிக்கும்படியே செய்திருக்கிறார். 


நாயகியாக புதுமுகம் சாட்னா டைடஸ். முதலில் அவ்வளவாக வசீகரிக்காத முகம், நேரம் செல்லச் செல்ல ரசிக்க வைத்து விடுகிறது. கண்களில் தீட்டிய மை அவரது அழகை அள்ளிச் செல்கிறது. ஒரளவுக்கு நடிக்கவும் செய்கிறார்.

முத்துராமனின் கஞ்சத்தனம் கைத்தட்டலை பெறுகிறது. பணத்துக்காக கடத்திக் கொண்டு போய் கொல்லும் நிலையிலும் அசராமல் நின்று கீழே விழுந்து பத்து ரூவாயை பொறுக்குவதிலேயே அவரது கதாபாத்திரத்தின் நேரேசன் சொல்லப்பட்டு விடுகிறது. 

தீபா ராமானுஜம் சில காட்சிகளில் வந்தாலும் அம்மாவாக  நெக்குருக வைக்கிறார். அந்த மான்டேஜ் பாடல்களில் அவரது எக்ஸ்பிரசன் அபாரம்.

வீடியோ விமர்சனம் பார்க்க


பிச்சைக்காரராக வந்து எப்எம்மில் ஒபிலியாவிடம் கருப்பு பணத்தை ஒழிக்க ஐடியா சொல்பவர் கைதட்டலை அள்ளி செல்கிறார். அந்த சந்திரபாபு டைப் காமெடியன் சில காட்சிகளில் நெக்கலாக சிரித்து அரங்கில் சிரிப்பை அள்ளுகிறார்.

படத்தின் வெற்றிக்கு திரைக்கதை பெரும்பங்காற்றுகிறது. கொஞ்சம் கூட தொய்வே இல்லாமல் பரபரவென்று காட்சிகள் நகர்கின்றது. ஒரு எக்ஸ்ட்ரா சீன், ஷாட் இல்லை. 

ஆரம்பித்தது முதல் முடிவு வரை ஒரு காட்சியில் கூட நம் கண்ணை விலக்க வைக்காத அளவுக்கு இயக்கி நல்ல வெற்றிப் படத்தை கொடுத்து இருக்கிறார் சசி. கண்டிப்பாக திரையரங்கில் போய் பாருங்கள்.

ஆரூர் மூனா

5 comments:

 1. பக்கா விமர்சனம்....வார விடுமுறை என்பது என்னை போல் ஓய்வில்லாமல் வேலை செய்பவருக்குத்தான் அதன் அருமை தெரியும்....அதுவும் எதாவது மொக்க படத்தில் சிக்கி சின்னபின்னமாவதில் காப்பாத்தும் உங்கள் விமர்சனத்திற்கு நன்றி...

  ReplyDelete
 2. இதற்கு வீடியோ விமர்சனம் உண்டு தானே...?

  ReplyDelete
 3. Hi anna Neenga video vimarsanam podureenga
  yennala paakka midiyaama pochi
  ippo ok

  ReplyDelete
 4. Super sir.. expecting video review very much!

  ReplyDelete
 5. சரியாக எழுதியிருக்கீறீர்கள்... படம் பார்க்கும்பொழுது பல இடங்களில் கண்ணீர் வருவதை தடுக்க இயலவில்லை

  ReplyDelete