Friday, 20 May 2016

மருது - சினிமா விமர்சனம்

நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பிறகு விஷால், ஸ்ரீதிவ்யா நடித்த மருது படத்தின் விமர்சனம். இந்த படத்திற்கு என்று ஸ்பெசலாக ஒன்றும் கதை கிடையாது. இதற்கு முன் வந்த 999 தமிழ்ப் படங்களில் இருக்கும் கதையை பட்டி டிங்கரிங் பண்ணியிருக்கிறார்கள். கில்லி கூட இந்த டெம்ப்ளேட் தான்.

அது  என்னன்னா நாயகிக்கும் வில்லனுக்கும் பிரச்சனை, வில்லன் நாயகி கொன்றோ கவர்ந்தோ பிரச்சனையை தீர்க்க நினைக்க நாயகன் நுழைந்து நாயகியை காதலில் வீழ்த்தி க்ளைமாக்ஸில் வில்லனை வீழ்த்தும் அதே பழைய டெம்ப்ளேட் தான்.

இந்த பட்டி டிங்கரிங் பார்க்கப்பட்ட இந்த படத்தின் கதை என்னன்னா, ராஜபாளையம் மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் வேலை பார்க்கும் விஷால், வக்கீலின் பெண்ணான ஸ்ரீதிவ்யாவை சிறுமோதலுக்கு பின் காதலிக்கிறார். அதே நேரம் உள்ளூர் பகை காரணமாக ஆர்கே. சுரேஷ் ஸ்ரீதிவ்யாவையும் அவங்கப்பா மாரிமுத்துவையும் வீழ்த்த நினைக்கிறார்.

விஷாலுக்கு விவரம் தெரிய வர தன்னை வளர்த்த அப்பத்தாவின் ஆசியுடன்  களம் இறங்குகிறார். வில்லனை வீழ்த்தினாரா என்பதே படத்தின் கதை.


நம்ம தொடர் சிங்கம் இயக்குனர் ஹரிக்கு என ஒரு டெம்ப்ளேட் இருப்பது போல் படத்தின் இயக்குனர் முத்தையாவுக்கும் ஒரு டெம்ப்ளேட் இருக்கிறது. ஆனால் ஹரியாவது களத்தையும், நாயகனின் குணாதிசியத்தையும் மாற்றுவார். 

முத்தையா அதே ராஜபாளையம், அதே லோடுமேன் ஹீரோ, பெண்ணை கண்டால் தலையை குனிந்து செல்வது, அதீத வீரத்துடன் ஒரே அடியில் நாலு பேரை வீழ்த்தும் வல்லமை பெற்ற நாயகன், பாவாடை தாவணி நாயகி என எதையுமே மாற்றவில்லை.

நாயகனாக விஷால், இத்தனை காலங்களாக ஆக்சன் படங்களில் என்ன பெர்பார்மன்ஸோ அதே தான் இதிலும் டிட்டோ, ஆனால் பாட்டியுடனான செண்ட்டிமெண்ட் காட்சிகளில் மிளிர்கிறார். ஆக்சன் காட்சிகளில் பட்டைய கிளப்புகிறார். அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி விழுகிறது.

ஸ்ரீதிவ்யாவை எனக்கு இந்த படத்தில் மிகவும் பிடித்து இருந்தது. காரணம் காஸ்ட்டியும் அப்புறம் துடுக்கான குணாதிசியம். இதே போன்ற பெண்களை எங்கள் ஊர்ப்பக்கம் நிறைய பேரை பார்த்து இருக்கிறேன். கடினமான வேலைகளை அசால்ட்டாக செய்வார்கள். நன்றாக சமைப்பார்கள், பாசமாக பழகுவார்கள், யாராவது வம்பு பண்ணால் நொங்கெடுத்து விடுவார்கள். 

ஒரு முரட்டு ஆம்பளை சின்னதா சில்மிஷம் பண்ணப் போக புடுக்கை நசுக்கி மிதித்த வீரமங்கை என் தோழியாக இருந்தார். அதனால் ஸ்ரீதிவ்யா கதாபாத்திரத்தை என்னால் கனெக்ட் செய்து கொள்ள முடிந்தது. அந்த தோற்றம், நடை, உடை, பாவனை என என்னை மிகவும் கவர்ந்தார்.

சூரியின் காமெடி பெரிதாக எடுபடவில்லை. விஷாலுடனே வருகிறார். க்ளைமாக்ஸில் சென்ட்டிமெண்ட்டாக நடித்துள்ளார்.ஆனால் அதற்கென காட்சிப்படுத்தப்பட்ட முன்காட்சிகள் கடுப்பேத்துகிறது.

வில்லன் ஆர்கே சுரேஷ். தாரை தப்பட்டையில் எப்படி இருந்தாரோ, அதே போல் தான் இந்த படத்திலும் ஒரு வித்தியாசமும் இல்லை. வில்லன் என்றால் பெர்பார்ம் செய்வது, முறுக்கலா திரிவது இல்லை. கொஞ்சம் ரகுவரன், பிரகாஷ்ராஜ் படங்களை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

விஷாலின் அப்பத்தாவாக வருபவர் இதற்கு முன் கஸ்தூரிமான் என்ற மலையாளப் படத்தில் வில்லனின் தாயாராக வருபவர் என்று அனுமானிக்கிறேன். அந்த பாத்திரத்தின் பெரும் பின்னடைவு நான் சிங்க் வாய்ஸ். அவர் மலையாளத்தில் ஏதோ சம்சாரிக்க டயலாக் ஏதோ போகிறது. அது படத்தை ரொம்பவே டிஸ்டர்ப் செய்கிறது. 

வெறும் 3000 உறுப்பினர்கள் உள்ள சங்கத் தேர்தலில் ஜெயித்து விட்டு காட்சிக்கு காட்சி, சங்கம் தேர்தல் என்று விஷாலுக்கு பில்ட் அப் ஏற்றுவது எல்லாம் ரொம்ப ஓவரேய். 

கொம்பனில் எடுபட்ட அளவுக்கு இந்த படம் எடுபடவில்லை. வெகு சுமாரான படம் தான். இது வரை முத்தையாவின் படங்களை பார்க்காதவர்கள் இருந்தால் அவர்களுக்கான படம் தான் இது. 

ஆரூர் மூனா

டிஸ்கி : நீங்க வீடியோ விமர்சனம் பார்க்க வேண்டாம்யா, ஒரு சப்ஸ்கிரைப் தட்டி விட்டு போறதுல என்ன தப்பு. சப்ஸ்கிரைப் பண்ணுங்க. வீடியோ விமர்சனத்தை.

நன்றி

3 comments:

  1. உங்க ஈர்ப்பு ரொம்ப பிடிச்சிருக்கு ஜி...

    ReplyDelete