Friday, 27 May 2016

இது நம்ம ஆளு - சினிமா விமர்சனம்

என்னடா சிம்பு படம் வெளியாகுது, தடை பற்றிய செய்திகள் வரவே இல்லையேன்னு நினைச்சேன். கடைசியில் இன்று காலை தடை உத்தரவு சில மாவட்டங்களுக்கு வந்த பிறகு தான் நிம்மதியாச்சி. 

படத்தின் கதை

ஐடியில் வேலை பார்க்கிறார் சிம்பு. அவருக்கு பொண்ணு பார்க்கிறார் தகப்பனான ஜெயப்பிரகாஷ். பொண்ணு பார்க்குமிடத்தில் பொண்ணு நயன்தாராவாக இருக்க உடனே ஒத்துக் கொள்கிறார் சிம்பு.


ஆனால் அவருக்கு ஆன்ட்ரியாவுடன் காதல் இருந்திருக்கிறது. அந்த காதலை நியாயமான காரணத்தால் நிராகரிக்கிறார் சிம்பு. அந்த காரணம் நயன்தாராவுக்கு தெரிய வர திருமணத்திற்கு சம்மதிக்கிறார். இருவருக்குமான புரிதல் படிப்படியாக கூடி நெருக்கமாகின்றனர். திருமண நிச்சயதார்த்தமும் நடக்கிறது. 

ஆனால் பெற்றவர்களுக்கிடையே ஒரு சின்ன காரணத்தினால் விரிசல் உண்டாகிறது. திருமணம் தடைபடுகிறது. இந்த திருமணம் நடந்ததா குடும்ப பகை தீர்ந்ததா என்பதே படத்தின் கதை.

சிம்புவுக்கு நன்றாக நடிக்க வரும் என்பதை வழக்கம் போல இதிலும் நிரூபித்து இருக்கிறார். அதிகப்படி இல்லாத இயல்பான நடிப்பு, வாயை மட்டும் மூடிக் கொண்டு நடிப்பில், கதைக்கேற்ற நடிப்பில் கவனம் செலுத்தியிருந்தாலே இந்நேரம் தனுஷை தாண்டி வேற லெவலுக்கு போயிருக்கலாம். 

என்ன செய்வது எல்லாம் நேரம். 

நயன்தாரா இத்தனை அழகு என்பதையே இந்த படத்தில் தான் நான் கண்டேன். என்னா ஸ்கிரீன் பெர்பார்மன்ஸ். காஸ்ட்யும்ஸ் கூட பிரமாதம். படம் கண்ணுக்கு குளிர்ச்சியாக போகிறது என்றால் ஒரே காரணம் நயன்தாரா.

சூரி ஒன் லைன் காமெடியால் முதல் பாதியில் கலகலப்பூட்டுகிறார். சிம்பு, நயன்தாராவின் ஒரிஜினலாக கலாய்க்கிறார். அவர்களும் பெருந்தன்மையாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

படத்தின் ஆகப் பெரும் மைனஸ், நிச்சயதார்த்தத்திற்கு பின்பான காட்சிகள் தான். நிச்சயதார்த்தம் முடிந்தவுடனே படம் முடிந்து விட்டது. அதற்கப்புறம் வரும் காட்சிகள் சலிப்பூட்டுகின்றன. அதுவும் ஜெயப்பிரகாஷுக்கும் உதயபானு மகேஷ்வரனுக்குமான சண்டை சுத்த மோசம்.

கடைசி அரை மணிநேரம் படத்தின் தன்மையையே குலைத்து விடுகிறது. 

இது நம்ம ஆளு - பொழுது போகலைனா ஒரு முறை பார்த்துட்டு வாங்க


ஆரூர் மூனா

1 comment:

  1. Nice for sharing.

    Too much cuts and edits in the video. Please focus on quality. You have a great future ahead.

    All the best!!

    ReplyDelete