Wednesday, 26 November 2014

ப்ளூ பிலிம் பார்த்த போது

பழைய சாதம், பொக்கிஷம் என்ற லேபிளில் இருப்பது எல்லாம் பழைய தோத்தவண்டா வலைத்தளத்தில் இருந்து எடுத்து வைக்கப்படுபவை, புதிதாக பதிந்தது கிடையாது.
 
இது 2011 பதிவு

அப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்களுடன் விடுமுறையில் ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்த நேரம்.

ஒரு சிகரெட் வஅந்த சமயம் ராணிபேரடைஸ் தியேட்டரில் சிராக்கோ என்ற ஆங்கிலப்படம் அதுவும் ஏ படம் வந்திருந்தது. நாங்கள் படத்தை பலமுறை சென்று பார்த்து அதில் வரும் ஒரு குதிரை சீனை பற்றி சிலாகித்து பேசிக் கொண்டிருப்போம்.

அந்த சிராக்கோ படம் அந்த தியேட்டரில் 100 நாட்களை கடந்து ஒடிக்கொண்டிருந்தது. அப்பொழுது எனது நண்பர்களில் ஒருவனான சரண் வீட்டில் வீடியோ கேசட் பிளேயர் இருந்தது.

நாங்கள் அவர்கள் வீட்டில் யாருமில்லாத ஒரு நாளில் எப்படியும் ப்ளு பிலிம் கேசட் வாங்கி பார்த்து விடுவது என்று முடிவு செய்து அதற்காக அவர்கள் வீட்டில் எப்பொழுது வெளியில் செல்வார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம்.

அந்த நாளும் வந்தது. ஒரு நாள் அவர்கள் வீட்டில் எல்லோரும் திருப்பதி செல்ல முடிவெடுத்தார்கள் சரணை தவிர. எங்களுக்கு இரண்டு நாட்கள் கிடைத்தது. அவர்கள் அன்று காலை 11 மணியளவில் டாடா சுமோவில் கிளம்பினார்கள்.

அவர்கள் செல்லும் வரை நல்லவர்கள் போல் நெற்றியில் பட்டை போட்டு காத்திருந்த நாங்கள் அவர்கள் சென்ற பின் மூன்று சைக்கிளில் மூவர் மூவராக மொத்தம் ஒன்பது பேர் கிளம்பினோம். மருத்துவ கல்லுரி சாலையில் பாலாஜி நகரில் இருந்த ஒரு வீடியோ கடைக்கு சென்று ஐந்து கேசட் வாங்கினோம்.

அதில் தமிழ் இரண்டு, ஆங்கிலம் இரண்டு மற்றொன்று நண்பன் தினேஷ் விருப்பப்பட்டதால் விலங்கு சம்மந்தப்பட்டது. அவற்றை வாங்கிக் கொண்டு அங்கிருந்து வேகுவேகு வென்று சைக்கிளை மிதித்து கொண்டு சரண் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.

என் அத்தையிடம் என் நண்பன் வீட்டில் யாருமில்லை என்றும், அதனால் அங்கு இரவு தங்குவதாக கூறி விட்டேன். என் நண்பர்களும் அதைப்போல். வீட்டுக்காவலுக்காக ஒருவன் வாசலில் இரண்டு மணி நேரம் படிப்பது போல் உட்கார்ந்திருக்க வேண்டும். பிறகு மற்றொருவன் என எங்களுக்குள் ஒப்பந்தம். படம் ஒட ஆரம்பித்தது.

ஆகா அந்த நாட்களில் பார்ப்பதில் இருந்த சந்தோஷம். இரண்டு நாட்களும் முடிந்தது. மறுநாள் மாலை 3 மணிக்கு அவர்கள் வீட்டிற்கு போன் வந்தது. அவர்கள் திருப்பதியிலிருந்து கிளம்பி விட்டதாகவும் 5 மணிக்கு வீட்டிற்கு வந்து சேருவதாகவும் கூறினார்கள்.

நாங்கள் அவர்கள் வருவதற்கு அரைமணிநேரம் முன்பு வரை பார்ப்பது 04.30க்கு கிளம்பி விடுவது என்று முடிவு செய்தோம். ஆனால், நாங்கள் படம் பார்த்துக் கொண்டிருந்த போது சரியாக 4 மணிக்கு கரண்ட் கட் ஆனது. எங்களுக்கு பக் என ஆனது.

அவர்கள் வருவதற்குள் கேசட் பிளேயரில் இருந்து கேசட்டை எடுக்க வேண்டும். உடனே ஆளுக்கொரு திசைக்கு கிளம்பினோம். எந்த பகுதியில் கரண்ட் உள்ளதோ அங்கு பிளேயரை எடுத்து சென்று கேசட்டை வெளியில் எடுக்கலாம் என்று கிளம்பினோம்.

ஆனால் நான் எனது பகுதிக்கு சென்று அங்கு பேன்சி ஸ்டோர் வைத்திருந்த என் மாமாவை கேட்டேன். அவர் எங்கோ ட்ரான்ஸ்பார்மர் வெடித்து விட்டதாகவும் 7 மணி வரை கரண்ட் வராது என்றும் கூறினார். எனக்கு பயத்தில் வேர்க்க ஆரம்பித்தது. வீட்டில் இருந்த சரணிடம் போன் செய்து கூறினேன். அவன் அழ ஆரம்பித்தான்.

அவனிடம் நண்பர்கள் அனைவரையும் அவர்கள் உனக்கு போன் செய்தால் வீட்டிற்கு வர சொல் என்று கூறிவிட்டு அவன் வீட்டிற்கு விரைந்தேன். எங்கள் குழுவில் ஒருவனான சிங்கமுத்து ஒரு யோசனை கூறினான். ஏதாவது ஒரு கடையில் ஜெனரேட்டர் இருக்கும் அங்கு கூடுதலாக பணம் கொடுத்தால் அங்கு கேசட்டை வெளியில் எடுத்து விடலாம் என்று கூறியது சரியாக படவே அதன் படி யூகோ பேங்க் அருகிலிருந்த ஒரு எலட்ரானிக்ஸ் கடைக்கு எடுத்து சென்று கூடுதல் பணம் கொடுத்தோம்.

அப்பொழுது மணி நாலே முக்கால். அவர் கேசட்டை வெளியில் எடுத்துக் கொடுத்தார். மற்றவர்களை அவரவர் வீட்டிற்கு செல்ல சொல்லிவிட்டு அங்கிருந்து சைக்கிளை மிதித்துக் கொண்டு நானும் சரணும் கிளம்பினோம். என் வாழ்நாளில் அவ்வளவு வேகமாக நான் சைக்கிளை ஒட்டியதில்லை. நான் அவனை வீட்டு வாசலில் இறக்கி விட்டு கிளம்பினேன்.

அவன் பிளேயரை வைக்கவும் அவர்கள் வரவும் சாpயாக இருந்தது. இன்று காலம் எங்களை ஒவ்வொரு திசைக்கு அனுப்பி விட்டது. சரண் மருத்துவம் முடித்து புதுதில்லியில் நரம்பியல் மருத்துவராக பணிபுரிகிறான். எப்பொழுதாவது சந்திப்போம்.

பத்து நாட்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் நான் நின்று கொண்டிருந்த போது மாப்ளே என்று சத்தம் வந்தது. யாரவன் என்று திரும்பி பார்த்தால் சரண், அவனுடன் சிங்கமுத்து மற்றும் அதேகுழுவில் இருந்த மற்ற இருவர். அது விமான நிலையம்,

நாங்கள் கௌரவமான நிலையில் இருக்கிறோம் என்பதை மறந்து அனைவரையும் கட்டித்தழுவி வெளியில் வந்து பழைய முறைப்படி பில்டர் கோல்ட் பிளேக் சிகரெட் வாங்கி ஆளுக்கொரு பப் இழுத்து அன்றை தினம் நாங்கள் பட்ட பாட்டை திரும்ப நினைவுக்கு கொண்டு வந்து சிரித்து கொண்டிருந்தோம். பிறகென்ன மெரிடியன் ஹோட்டலுக்கு வந்து தாகசாந்தி தான். ஆகா அந்தநாட்கள் இனி கிடைக்காது.
 
ஆரூர் மூனா

என் தொகுதி - திருவாரூர்

பழைய சாதம், பொக்கிஷம் என்ற லேபிளில் இருப்பது எல்லாம் பழைய தோத்தவண்டா வலைத்தளத்தில் இருந்து எடுத்து வைக்கப்படுபவை, புதிதாக பதிந்தது கிடையாது.
 
இது 2011 பதிவு

என் தொகுதி - திருவாரூர்

திருவாரூர் தாலுக்க, குடவாசல் தாலுக்கா (பகுதி) காப்பணமங்கலம், அரசவனங்காடு, தீபங்குடி, கீரங்குடி, புலவநல்லூர், வடகண்டம், மண்ணக்கால், எண்கண், காரையப்பாலையூர், நெய்குப்பை, கீழப்பாலையூர், உத்திரங்குடி, எலையூர், திருக்களம்பூர், செல்லூர், மேல் ஆதிச்சமங்கலம், அர்ப்பார், ஆய்க்குடி, அம்மையப்பன், திருக்கண்ணமங்கை, அகரதிருநல்லூர், காட்டூர், இளவங்கர்குடி, ஆனைவடபாதி, காவனூர், நட்டுவாக்குடி, அத்திசோழமங்கலம், கிருஷ்ணக்கோட்டகம், ஊர்க்குடி, வாழவநல்லூர், புத்தூர், அபிவிருத்தீஸ்வரம், கமுகாகுடி, விஸ்வநாதபுரம், பெருமாள அகரம், நாலில் ஒன்று, மேலதிருமதிக்குண்னம், தியாகராஜபுரம், குளிக்கரை, பெருத்தரக்குடி, தேவர்கண்டநல்லூர், கமலாபுரம், எருக்காட்டூர், பருத்தியூர், கண்கொடுத்தவனிதம், மேலராதாநல்லூர், திட்டாணிமுட்டம், விடயபுரம், முசிரியம், திருவிடைவாசல் மற்றும் களத்தூர் கிராமங்கள், கொர்டாச்சேரி (பேரூராட்சி) நீடாமங்கலம் தாலுக்கா (பகுதி) வக்ரநல்லூர், சித்தனங்குடி, வெங்காரம்பேரையூர், புனவாசல், பூந்தாழங்குடி, கீழமணலி, ஓகைபேரையூர், அகரவேளுக்குடி, பழையனுர், கொத்தங்குடி, வடகோவனூர், தென்கோவனூர், திருராமேஸ்வரம், மஞ்சனவாடி, ஓவர்ச்சேரி, வெற்குடி சாத்தனூர், காக்கையடி, வடபாதிமங்கலம், ஹரிச்சந்திரபுரம், புள்ளமங்கலம், கிளியனூர், பெரியகொத்தூர், மணக்கரை, பாலக்குறிச்சி, சித்திரையூர், சேந்தங்குடி, குலமாணிக்கம், மாவட்டக்குடி, செருவாமணி மற்றும் மாரங்குடி கிராமங்கள், கூத்தாநல்லூர் (நகராட்சி).

மேற்கண்ட பகுதிகளை உள்ளடக்கியது எனது ஒட்டு உள்ள திருவாரூர் தொகுதி.

ஆரூர் முனா செந்திலு

கலைஞர் வடித்த நீலிக்கண்ணீர்

 பழைய சாதம், பொக்கிஷம் என்ற லேபிளில் இருப்பது எல்லாம் பழைய தோத்தவண்டா வலைத்தளத்தில் இருந்து எடுத்து வைக்கப்படுபவை, புதிதாக பதிந்தது கிடையாது.
 
இது 2011 பதிவு
 
இலங்கை தமிழர்களுக்காக என்றைக்கும் போராட கூடியவர்கள் தி.மு..வினர் என்று முதல்வர் கருணாநிதி சென்னையில் கூறி மீண்டும் ஏமாற்ற பார்க்கிறார்.
மேலும், "உண்மையான தமிழன், தமிழன் அழிகிறானே என்று கவலைப்பட்ட தமிழன் கருணாநிதி," என்றார் அவர்.
தென்சென்னை மாவட்ட தி.மு.. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சிந்தாதிரிப்பேட்டையில் நேற்றிரவு நடந்தது.
இந்தக் கூட்டத்தில் முதல்வரும் தி.மு.. தலைவருமான கருணாநிதி கலந்துகொண்டு பேசுகையில், "இது வெறும் பிரசார பொதுக்கூட்டம் அல்ல. இன எழுச்சிக்கான போர் முரசு கொட்டுகின்ற கூட்டம். இனம் என்று சொன்னால் ஏழை எளியவர்களின் இனம்.
தமிழகத்திலே தி.மு.கழகம் சார்பில் எல்லா இடங்களிலும் நம்முடைய கூட்டணியினுடைய குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இரண்டு நாளைக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சென்னை தீவுத்திடலிலே வந்து உரையாற்றினார்.
அவரிடம் சட்டமன்ற தேர்தலை பற்றி பேசவில்லை - சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அமையவிருக்கின்ற அரசு, அது தி.மு.கழக அரசாக இருந்தால் என்னென்ன கோரிக்கைகளை அம்மையாரே உங்களிடத்தில் வைக்கும் அந்த கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றி தரவேண்டும் என்ற என் நலனுக்காக அல்ல - யாருடைய நலனுக்காகவும் அல்ல - இந்த மாநிலத்தினுடைய நலனுக்காக தமிழனுடைய நலனுக்காக - தமிழ்நாட்டு மக்களின் நன்மைக்கான தேவைகளை எல்லாம் எடுத்து வைத்தேன்.
அப்பொழுது அங்கு நான் சொன்னேன், இலங்கையிலே வாழ்கின்ற எங்கள் தமிழர்கள் குடியமர்த்தப்படுவதிலே, பராமரிக்கப்படுவதிலே கால தாமதம் ஏற்படுகிறது. இலங்கை அரசு அவர்களுடைய தேவைகளை இன்னமும் முழுமையாக நிறைவு செய்யவில்லை. அங்கே சிங்களவர்களும், தமிழர்களும் சம நிலையிலே வாழ்வதற்கு சட்ட திருத்தத்தை கொண்டு வருவதாக இலங்கை அதிபர் சொல்லிய அந்த திருத்தத்தை கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
நான் என்னமோ இப்பொழுதுதான் இலங்கைத் தமிழர்களுக்காக கவலைப்படுவதைப் போல சில பத்திரிகைகளில் எழுதியிருக்கின்றார்கள். கேலி செய்திருக்கின்றார்கள், யார் யார் இலங்கை தமிழர்களுக்காக பாடுபடுகிறார்கள், இலங்கையிலே தமிழர்கள் கொல்லப்பட்ட போது ஒதுங்கி இருந்தவர்கள் யார்? தமிழர்கள் கொல்லப்பட்ட போது அது சரி, சரி என்று சொன்னவர்கள் யார்? இலங்கை தமிழர்கள் அங்கு வேதனைப்பட்டபோது "ஸ்கேல்'' வைத்து அளந்து பார்த்து இந்த பிரச்சினையை அணுகிய கம்யூனிஸ்ட் நண்பர்களானாலும் அதைப்பற்றி நான் கவலைப்படவே மாட்டேன் என்று சொன்ன .தி.மு.. நண்பர்களானாலும் யோசித்து பார்க்க வேண்டும்.
தி.மு.கழகம் இலங்கை பிரச்னையில் எடுத்த நிலை என்ன? தமிழன் அங்கே வாழ வைக்கப்பட வேண்டும். தமிழன் அவர்களுடைய ஊர்களிலேயிருந்து விரட்டப்பட்ட தமிழன், அங்கே நடைபெற்ற போராட்டத்தினால் ஊரை விட்டு ஓடிய தமிழன் மீண்டும் அந்த ஊருக்கு வரவேண்டும்,
அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்ற பொறுப்பை இலங்கையிலே இன்றைக்கு இருக்கின்ற அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம் என்றால் கடந்த காலத்திலே, இன்றைக்கு எங்களை கேலி செய்கிறவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள். உங்களுக்கு நினைவிருக்கிறதா? சென்னை சட்டசபையில் ஒரு தீர்மானமே வந்தது, ஜெயலலிதா ஆட்சியில்.
ஆனால் நான் சொல்ல விரும்புகிறேன், அன்றைக்கு சென்னை சட்டமன்றத்தில், தமிழக சட்ட மன்றத்தில் தமிழக முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் என்ன? அந்த தீர்மானத்தை தி.மு.கழகம் ஆதரிக்கவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை, அதை ஆதரித்து பேசவும் இல்லை. நடுநிலை வகித்தோம்.
அந்தத் தீர்மானம் இலங்கையிலே இருக்கின்ற பிரபாகரனை கைது செய்து கொண்டு வந்து, சென்னையிலே விசாரணை நடத்த வேண்டும்-தீர்மானம் போட்டது யார்? தி.மு.கழக அரசா? நெஞ்சிலே கை வைத்து சொல்லுங்கள், நெஞ்சு இருந்தால் கை வைத்து சொல்லுங்கள். நாங்களா அந்த தீர்மானம் போட்டோம், இல்லையே.
இலங்கையிலே ராஜபக்சேயினுடைய ராணுவத்தால் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, நான் கண்ணீர் விட்டு கவிதை எழுதினேன், கட்டுரை தீட்டியிருக்கிறேன், மேடையிலே தீர்மானம் போட்டோம். அப்போது அம்மையார் ஜெயலலிதா என்ன சொன்னார்? இந்த போராட்டத்திலே சாகிறவர்கள் எல்லாம் விடுதலை வீரர்கள் அல்ல, விடுதலைப்புலிகள் அல்ல என்று சொன்னார். சொல்லிவிட்டு அப்படியே புலிகளாக இருந்தாலும் இலங்கையிலே இருக்கிற தமிழர்களாக இருந்தாலும் இதற்காக நாம் கவலைப்பட தேவையில்லை.
ஏனென்றால் போர் என்றால் ஜனங்கள் செத்து மடிவது சகஜம்- யார் சொன்னது, இலங்கை தமிழர்களை பார்த்து. ஜனங்கள் என்று சொல்லி , அவர்கள் செத்து மடிவது சகஜம் என்று சொன்ன ஜெயலலிதா, இன்றைக்கு இலங்கை தமிழர்களுக்கு நெருக்கமான உறவாக இருந்தால் அதைவிட அதிகமாக இலங்கை தமிழர்களுக்காக இங்கே பேசிய இன்னமும் பேசிக்கொண்டிருக்கிற சில நெடுமரங்களுக்கு அவர் வழிகாட்டியாக ஆகிவிட்டார்.
தி.மு.கழகத்தை பொறுத்தவரையில் அதுவும் அந்த கட்சியினுடைய தலைவராக இருக்கிற என்னை பொறுத்தவரையில் இன்று நேற்றல்ல-அறிஞர் அண்ணாவுடன் இணைந்து 1956 ஆம் ஆண்டு இலங்கையிலே ஈழத்தமிழர்களுக்காக போர்க்கொடி ஏந்திய தந்தை செல்வா அவர்களை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியவர்கள் நாங்கள்.
அதைப்போலவே விடுதலைப்புலிகள் ஜெகன், குட்டிமணி, தங்கதுரை இவர்களெல்லாம் என்னோடு நெருக்கமாக இருந்து அங்கே நடைபெறுகின்ற, அந்த விடுதலைப்போராட்டத்திற்கான ஆதரவை தமிழக மக்கள் மூலமாக கோரி பெற்றார்கள்.
சகோதர யுத்தத்தால் அந்த போராட்டம் தோல்வியிலே முடிந்தது. இப்படி முடிந்துவிட்டதே என்ற ஏக்கம் எனக்கு இன்றைக்கும் உண்டு. அதனால்தான், அந்த ஏக்கத்தைப் போக்கிக்கொள்ள - இங்கே பிரதமர் வரும் போதெல்லாம், பிரதமரை காணும் போதெல்லாம் நம்முடைய அன்புக்குரிய சோனியா காந்தி அம்மையார் இங்கு வரும் போதெல்லாம் அவரிடத்திலே நான் பகிரங்கமாகவும், தனியாகவும் எடுத்துச் சொல்வது - இலங்கையிலே இருக்கின்ற தமிழர்களை காப்பாற்றுங்கள். அவர்கள் ஏதோ சில கலவரங்களால், பாதிக்கப்பட்டவர்கள் என்று எண்ணாமல், சுதந்திரப் போராட்டத்தில், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் - அவர்களுக்கு நல்வாழ்வு அளிக்க முன்வாருங்கள் என்று கேட்கிற அந்த விளக்கம்தான் இந்த கருணாநிதிக்கு இன்றைக்கும் உண்டு.
இதைச்சொல்வதற்கு காரணம், திராவிட முன்னேற்ற கழகம் இன்று நேற்றல்ல - உலகத்திலே எந்த ஒரு மாநிலத்திலும், எந்த ஒரு நாட்டிலும் அன்னியப்பட்டு கிடக்கிற அடித்தளத்து மக்களை சாதாரண - சாமான்ய மக்களை, விடுதலை முழக்கமிடுகின்ற மக்களை ஆதரிக்கின்ற இயல்பு கொண்டது என்பதும், வரலாறு கொண்டது என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்று. அப்படிப்பட்ட வரலாற்றுக்குரிய தி.மு.. அதன் தலைவர் என்ற முறையில், நான் இந்த போராட்டத்திலே எத்தகைய முடிவு எடுக்க வேண்டியிருந்தது என்பதையும், எத்தகைய குழப்பங்களையெல்லாம் அப்போதிருந்த .தி.மு.. ஆட்சி விளைவித்தது என்பதையும், தயவு செய்து எண்ணிப்பார்க்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன். உண்மையான தமிழன், தமிழன் அழிகிறானே என்று கவலைப்பட்ட தமிழன் கருணாநிதி.
தி.மு..வில் உள்ள தமிழர்கள் - இலங்கையிலே இருக்கின்ற தமிழர்களுக்காக என்றைக்கும் கண்ணீர் விடுபவர்கள் - என்றைக்கும் பரிந்து பேசக்கூடியவர்கள் - என்றைக்கும் போராடக் கூடியவர்கள் என்பதை உணர்ந்து அப்படிப்பட்ட தமிழர்களால் நடத்தப்படுகின்ற இந்தப் பேரியக்கத்தின் பிள்ளைகளாக உள்ள ஜனநாயக முற்போக்குக் கூட்டணியினுடைய வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெறச் செய்தால் நான் சொன்ன இந்த வார்த்தைகளுக்கு மதிப்பு," என்றார் முதல்வர் கருணாநிதி.
இந்த ஒரு பொய் பிரசாரத்திற் காகவே கலைஞர் ஆப்படிக்கப்படவேண்டியவர்.

ஈழ மக்கள் விஷயத்தில் ஏற்கனவே உண்ணாவிரதம் என்ற பெயரில் நம்மை நம்ப வைத்து கழுத்தறுத்தவர் கலைஞர்.

ஆரூர் மூனா

சபலப்பட்ட நாட்கள் - அம்பிகாவை

பழைய சாதம், பொக்கிஷம் என்ற லேபிளில் இருப்பது எல்லாம் பழைய தோத்தவண்டா வலைத்தளத்தில் இருந்து எடுத்து வைக்கப்படுபவை, புதிதாக பதிந்தது கிடையாது.
 
இது மார்ச் 2011 மாதத்தின் பதிவு
 
முத்தம்மாவை செய்த கணக்கு
அது புதுகோட்டை மாவட்டம் கறம்பக்குடி எனது பெரியம்மா வீடு. நான் கோடை விடுமுறைக்காக செல்லும் வீடு. அங்கு என்னுடன் வயதையொத்த என் பெரியம்மா வீட்டின் பக்கத்து வீட்டு பையன் முத்துவீறு. நான் எப்பொழுதும் கறம்பக்குடி சென்றால் முத்துவீறுவுடன் தான் பொழுதைக்கழிப்பேன். அங்குள்ள கருப்பையா சுவாமி கோயில் திருவிழா மிகப்பிரசித்தம். சிறு வயதில் அங்கு கலர்கலராக கோபுரம் போல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இனிப்பு வகைகள் பார்க்கவே மிகப்பிரமாதமாக இருக்கும். அதை இரண்டு ரூபாய்க்கு வாங்கி இரவு முழுவதும் வள்ளித்திருமணம் நாடகத்தை பார்த்துக்கொண்டே தின்போம். பிறகு அங்கிருக்கும் குளத்தில் குளிப்பது. வயலில் ஓணான் பிடித்து அதன் வாயிலில் நாராயணன் கடையில் வாங்கிய சுருட்டை பற்ற வைத்து அதன் வாயில் சொருகி அதை மயக்கமுற செய்வது என அங்கிருக்கும் நாட்களில் நாங்கள் செய்த சேட்டைகள் ஏராளம்.
அப்பொழுது எனக்கு வயது 19. அவனுக்கும் தான். நாங்கள் அருகில் இருக்கும் கிராமத்தில் கரகாட்டம் நடைபெறுவதால் அங்கு செல்லலாம் என்று முடிவு செய்து என் பெரியம்மாவிடம் செலவுக்கு பணம் வாங்கிக்கொண்டு அந்த ஊருக்கு சென்ற மாட்டு வண்டியில் தொற்றிக் கொண்டோம்..
அந்த பக்கம் நடைபெறும் கரகாட்டத்தில் கவர்ச்சி மிகத்தாராளமாக வே இருக்கும். அப்பொழுது தான் விடலைப்பருவம் என்பதால் அதைப் போன்ற கரகாட்டகங்ககளை கான்பதர்ர்காகவே செல்வோம்..
அந்த சிற்றூரில் திருவிழா நாங்கள் கரகாட்டத்தை கண்டு ரசித்துக் கொண்டிருந்தோம். அங்கு என் கண்ணில் எதச்சையாக அவள் பட்டாள். பார்க்கவே நமக்கு தலையில் மயிர் நட்டுக்கொண்டது. சரி அவளை உக்ஷார்பத்தினி ரெய்டு (அது சென்னையில் எங்கள் பகுதியில் உள்ள சகேகத வார்த்தை) செய்யலாம் என்று பார்த்து அவளை சரி செய்யலாம் என்று அங்ககிருந்து சிக்னல் பாஸ் செய்தால் அந்த பக்கம் இருந்தும் வந்தது. சரி என்று அருகில் சென்று தயங்கி கொண்டே மிக மெல்லிய குரலில் உன் பெயர் என்ன என்று கேட்டேன். அவள் அம்பிகா என்று கூறினாள். முத்துவீறுவுக்கு இந்த செயல்களை எல்லாம் பார்த்தவுடன் நடுக்கம் ஏற்பட்டது. என்னிடம் வந்து வாடா நாம் வீட்டிற்கு செல்வோம் என்று கூறினான். நான் அவனை சமாதானப்படுத்தினேன். இருடா நாம் அவளை கொஞ்சம் தயார் செய்து இருட்டில் வயல்காட்டிற்கு கொண்டு சென்றால் முதலில் நான், பிறகு நீ என்றேன். முத்துவீறு சபலப்பட்டான் கூடவே பயமும் அவனுக்கு ஏற்பட்டது. பிறகு ஒரு வழியாக அவனை சமாதானம் செய்து கரகாட்டத்தின் இடையே அவ்வப்பொழுது யாருக்கும் தெரியாமல் அம்பிகாவுக்கு தின்பண்டம் வாங்கிக் கொடுப்பது கையால் சைகை செய்வது இடையில் கரகாட்டத்தையும் ரசிப்பது என நள்ளிரவு வரை காத்திருந்தோம்.
கரகாட்டம் முடிந்து அடுத்தது கிளப் டான்ஸ் குழுவின் ஆட்டம் ஆரம்பித்தது. அந்த சமயம் தான் சரி யென்று அம்பிகாவிடம் கிளம்பலாம் என்று சைகை செய்தேன். முத்துவீறுவுக்கு வியர்க்க ஆரம்பித்தது.
அம்பிகா அவளது வீட்டிலிருந்து வந்திருந்தவர்களிடம் தான் ஒதுக்குப்புறம் போய்விட்டு வருவதாக கூறிவிட்டு கூட்டத்திலிருந்து வெளிஏறினாள்.. முத்துவீறுவுக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. அவனை கூட்டிக்கொண்டு நானும் கூட்டத்திலிருந்து வெளியேறினேன். வெளிச்சமெல்லாம் குறைந்து இருள் சூழ்ந்த பகுதிக்கு வந்தோம். அவளிடம் வயல்காட்டிற்குள் செல்லலாம் என்று கூறினன். அவள் நன்கு விளைந்திருந்த நெல்வயல்காட்டிற்குள் சுற்றும் முற்றும் பார்த்தபடி நுழைந்தாள். அவளை பின் தொடர்ந்தன். முத்துவீறு என்னை பின்தொடர்ந்தான். அந்த இடத்தில என்னைப்பற்றியும் முத்துவீறுவைப்பற்றியும் கூறிவிட்டு நடுக்கத்துடன் அவளை முத்தமிட்டன். அவளும் என்னை . . . . . . . பிறகு அவளது இடுப்பில் கை வைத்தன்.
ரோட்டில் இருந்து அம்பிகா என்று குரல் வந்தது. நாங்கள் மூவரும் அலறி அடித்துக் கொண்டு ஆளுக்கொரு திசைக்கு ஓடினோம் . அவளது அம்மா அவளை காணும் என்று தேடி வந்திருந்தார்கள். அவள் கரையறினாள். அந்த சமயம் பார்த்து ஆவென்று முத்துவீறு அலறினான். அம்பிகாவின் தாயார் சட்டென்று உக்ஷராகி அவர்களது உறவினர்களை அழைக்க ஆரம்பித்தார். நான் முத்துவீறு குரல் வந்த டேம் நோக்கி நகர்ந்தன். அவன் ஒரு பாம்பை மிதித்து விட்டு அது சீறியதால் அலறியதாக கூறினான். அதற்குள் ரோட்டில் கூட்டம் கூட ஆரம்பித்தது. அந்த அம்மா அம்பிகாவிடம் என்வென்று அடித்து கேட்டார்கள். அவள் நாங்கள் கணக்கு செய்ய துவங்கியதிலிருந்து வயல்காட்டிற்குள் உள்ளதுவரை அழுது கொண்டே கூறினாள். முத்துவீறுவைப்போல் எனக்கும் நடுங்க ஆரம்பித்தது.
அவர்கள் எல்லாம் ரோட்டில் இருந்து டார்ச் லைட் அடித்து தேட ஆரம்பித்தார்கள். நாங்கள் நெல் கதிருக்குள் மண்டியிட்டு அமர்ந்திருந்தோம். நேரம் ஆக ஆக அவர்களும் ரோட்டை விட்டு நகர்வது போல் தெரியவில்லை. நாங்கள் வேறு வழியில்லாமல் நெல் கதிருக்குல்லேயே மண்டி போட்டு செல்ல ஆரம்பித்தோம் . விடியற்காலை வரை நகர்ந்ததில் நாங்கள் கறம்பக்குடி செல்லும் பாதை வரை வந்திருந்தோம் . பிறகு அங்கிருந்து நடந்து வீட்டிற்கு சென்றோம் . இருவருக்கும் கால் முட்டி பாளம் பாளமாக வெடித்திருந்தது. இருவரது வீட்டிலும் என்னவென்று கேட்டார்கள். நாங்கள் ஏற்கனவே பேசி வைத்தது போல் மாட்டு வண்டி குடை சாய்ந்து விட்டதால் அடிபட்டதாக கூறினோம். விடுமுறை முடிந்து நான் எனது ஊரான திருவாரூருக்கு வந்து விட்டேன் .
அடுத்த வருடம், அதேபோல் விடுமுறை, அதே முத்துவீர்று, அதேபோல் திருவிழா ஆனால் வேறொரு சிற்றூர், அதே போல் ஒரு பெண் அவளிடம் சைகைலேயே பெயர் என்னவென்று கேட்டேன் . அவள் முத்தம்மா என்றாள். ‘என்னடா முத்துவீறு ரெடியா’ என்று கேட்டு திரும்பிப் பார்த்தன். அவன் தலைதெறிக்க கறம்பக்குடி நோக்கி ஓடிக்கொண்டிருந்தான்.
 
ஆரூர் மூனா

பத்தாயிரம் ஹிட்டுகள்

பழைய சாதம், பொக்கிஷம் என்ற லேபிளில் பதியப்படும் பதிவுகள் எல்லாம் அங்கிருந்து இங்கு எடுத்து வைக்கப்படுகின்றன. இவை புதிதாக பதிந்தவை அல்ல.

இது பிப்ரவரி 2011 மாதத்து பதிவு

a
a

a
a
a

a
a
a
ப்ளாக் எழுத ஆரம்பித்து இன்றுடன் 48 நாட்கள் ஆகிறது. அதற்குள் ப்ளாக்ஐ பார்வையிட்டவர்கள் எண்ணிக்கை 10000 தை தொட்டு விட்டது. யாரும் நமக்கு பாராட்டு தெரிவிக்கவில்லை என்றாலும் நம்மளை நாமே பாராட்டுவது தான் சால சிறந்தது. (வேற யாருமே சொல்லலைனா நம்ம லட்சணம் அப்படி ).
என்னடா வெறும் 10000 ஹிட்டுக்கெல்லாம் உனக்கு பாராட்டு கேக்குதா என்று நீங்கள் திட்டுவது கேட்கிறது. (நமக்கும் பூஸ்ட் தேவைப்படுதுல )

இருந்தாலும் நம்ம ப்ளாக் ஹிட்டு, ஹிட்டு, ஹிட்டு.

வாழ்க நம்ம ப்ளாக்.djdjddiddodkdkdkdkdkdkdkdk வளர்க விசிட்டர் எண்ணிக்கை.
a
ஆரூர் மூனா
l
 

ரயில்வே தேர்வின் லட்சணம்

பழைய சாதம் பொக்கிஷம் என்ற லேபிளில் இருக்கும் பதிவுகள் எல்லாது பழைய பதிவுகள் அவை அந்த பதிவிலிருந்து எடுத்து வைப்பதற்காக மட்டுமே இங்கு பதியப்படுகிறது.

இது ஜனவரி 2011 மாதத்தின் பதிவு
நான் 12 வருடங்களுக்கு முன்பு ரயில்வேயில் அப்பரன்டிஸ் முடித்து அங்கு வேலை கிடைக்காமல் வேறு துறைக்கு சென்று விட்டேன். நீண்ட நாட்களுக்கு பிறகு இப்பொழுது தான் நுழைவு தேர்விற்கான அனுமதி சீட்டு வந்தது. சரி என்று என்று எழுத சென்றேன். ஆனால் என்ன கொடுமை பாருங்கள். நான் முடித்தது ரயில் கட்டுமான பயிற்சிக்கு. ஆனால் எனக்கு கேள்வித்தாளில் இருந்தது அதற்கு சம்மந்த மில்லாத கேள்விகள். மொத்தம் 90 கேள்விகள். அதில் பொது அறிவு சம்மந்தமாக 30 கேள்விகள், கணக்கு சம்மந்தமாக 30 கேள்விகள், மின்துறை சம்மந்தமாக 30 கேள்விகள். அவ்வளவு தான். எனக்கு பரவாஇல்லை. ஆனால் என்னுடன் என்னுடன் படித்த நண்பர்கள் ஒன்றுமே எழுதவில்லை, அவர்களுக்கு எழுதியதும் தெரிந்து விட்டது, தேர்வில் தோல்வி தான் என்று. நான் கணக்கு மற்றும் பொது அறிவு கேவிகள் அனைத்தும் சரியாக எழுதி விட்டேன். மின்துறை சம்மந்தமான கேள்விகளில் 20 சரியாக இருக்கும். இந்த லட்சணத்தில் கேள்வியை கேட்டால் மற்றவர்கள் எப்படி எழுதுவார்கள். இவர்களில் தேர்வானவர்கள் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் எப்படி ரயில் பெட்டி செய்வார்கள். அவர்களுக்கே வெளிச்சம். அரசு துறை இப்படி உள்ளது.
வாழ்க கேள்வி தயார் செய்தவர்கள்.
 
ஆரூர் மூனா

சென்னை பயங்கரம் உஷார்

பழைய சாதம் பொக்கிஷம் என்ற லேபிளில் இருக்கும் பதிவுகள் எல்லாது பழைய பதிவுகள் அவை அந்த பதிவிலிருந்து எடுத்து வைப்பதற்காக மட்டுமே இங்கு பதியப்படுகிறது.

இது ஜனவரி 2011 மாதத்தின் பதிவு

நேற்று என் பழைய அலுவலகத்தின் நண்பன் அங்கு அலுவலக உதவியாளராக பணிபுரியும் வட இந்தியாவை சேர்ந்த ரஞ்சன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 22. ஒரு வேலையாக சென்ட்ரல் வந்து வேலையை முடித்து மீண்டும் அலுவலகம் வர பார்க் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போதுஒரு பெண்மணி அவனை சைகை காட்டி அழைத்துள்ளார். அப்பொழுது மணி மாலை ஏழு. பையனும் சபலப்பட்டு அவரை நோக்கி சென்றுள்ளார். அந்த பெண்மணி அவரை ரயில்வே டிராக் பக்கம் அழைத்து சென்றுள்ளார். பையன் உணர்ச்சியில் இருக்க அந்த பெண்மணி நன்றாக இருட்டு பக்கம் அழைத்து அவனை மேலும் சிறிது உணர்ச்சிவசப்படுத்தி இருக்கிறார். அப்பொழுது அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் அவனை பிடித்து அடித்து பின் பக்கம் கையை கட்டி இருக்கிறார்கள். அந்த பெண்மணியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு அடித்துள்ளார். பிறகு அவனிடமிருந்த பர்ஸ், பணம், செல் மற்றும் அவனது செயின் ஆகியவற்றை பறித்துக்கொண்டு . . . . . . . . . முதலில் அவ்வளவு தான் சொன்னான். ஆனால் அவன் அழுது கொண்டு பாத்ரூமில் இருக்க அவனை கொஞ்சம் தாக சாந்தி யில் கொஞ்சம் மூழ்க விட்டு பிறகு கிளறி கேட்டால் சொன்னான் பாருங்கள் - அய்யய்யோ இது சென்னை தானா.
இத்துடன் அவர்கள் விட்டிருந்தால் எந்த ப்ளாக் கிற்கே அவசியமில்லை. இது சாதாரண விஷயம் நகரத்தில் சபலத்தின் விலை என்று விட்டிருக்கலாம். ஆனால் அந்த வாலிபர்கள் அவனை . . . .
ஏங்க இது என்ன சரோஜா தேவி கதை புத்தகமா. . . இருங்க. . . டீன் எஜர்களே நீங்கள் கொஞ்சம் உஷாராக இருங்கள்.
உண்மை என்னவெனில் அவன் வடஇந்திய பையன் அல்லவா. நல்லா சிகப்பு. அவனை பிடித்து வாயை கட்டி பேண்டை கழட்டி இருவரும் அவன் ஆசன வாயில் . . . . வேண்டாம் இதற்கு மேல் சொல்ல வேண்டாம். நீங்களே யூகித்து கொள்ளுங்கள். எல்லாம் முடிந்த பிறகு அவனை அங்கேயே அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளார்கள். அதற்க்கு பிறகு அவன் கையில் காசில்லாமல் வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்து ஆபீஸ் வந்து பணம் வாங்கி கொடுத்து ரூமிற்கு வந்து எனக்கு போன் செய்தான். பிறகு தான் எல்லாம் நடந்தது.
அவனை அழைத்துக்கொண்டு டாக்டரிடம் சென்று ஒரு செக் அப் செய்த பின் டாக்டர் தான் சொன்னார். அவன் பின்புறம் இருந்து ரத்தம் வருகிறது என்று. பிறகு எல்லாம் முடிந்த பிறகு அவனை அவன் ரூமில் விட்டு விட்டு வந்தேன்.
இது நடந்தது சென்னையில் எங்களால் யாரிடமும் புகார் செய்ய முடிய வில்லை. அவன் வேண்டாம் எனக்கு அசிங்கம் என்று கூறி விட்டான். நான் என் மனதுக்கு கேட்காமல் ப்ளாகில் எழுதுகிறேன். மக்களே உஷார் இது யாருக்கும் நடக்கலாம். அதனால் நீங்கள் உஷாராக இருங்கள். மீண்டும் அதே ரயில் நிலையத்தில் யாரையும் அதே போல் ஒரு பெண் அழைக்கலாம்.
யப்பா இது சென்னை வந்தாரை வாழ வைக்கும் சென்னை. சிறிது சபலப்பட்டால் விளைவு இது தான்.
 
ஆரூர் மூனா