Friday, 19 February 2016

சேதுபதி - சினிமா விமர்சனம்

பண்ணையாரும் பத்மினியும் வந்த போதே இயக்குனர் கவனம் பெற்றார். வசூலில் பின் தங்கினாலும் விமர்சகர்கள் மத்தியில் கவனம் பெற்றார் இயக்குனர். அந்த லெவலை இந்த படத்தில் தக்க வைத்துள்ளாரா என்பதை விமர்சனத்தில் பார்ப்போம்.


நேர்மையான போலீஸ் டைரியின் ஒரு பத்தி தான் சேதுபதி படம். மேலூர் பகுதி இன்ஸ்பெக்டர் அவரது எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப் படுகிறார். அந்த குற்றத்தை துப்பு துலக்கும் போது படிப்படியாக நெருங்கி ஊரில் மிக முக்கிய மனிதர் வாத்தியார் தான் குற்றவாளி என்று தெரிய வருகிறது.

சேதுபதி வாத்தியாரை கைது செய்கிறார். இருவருக்குமான பகை ஆடுபுலி ஆட்டமாக இறுதியில் யார் வென்றார் என்பதே படத்தின் கதை.

படத்தின் பலம் நாயகனின் இயல்பான பாத்திரப் படைப்பு தான். சூப்பர்மேன் ரேஞ்சுக்கு பலம் காட்டாமல் ஒரு ஆண்மகனுக்கு என்ன பலம் இருக்குமோ அதை வைத்து சண்டை போடுகிறார். வீட்டை விட்டு வெகுதூரம் இருக்கும் போது வில்லன்கள் வீட்டை சூழ்ந்து விட் நாலு பாய்ச்சலில் வீட்டுக்கு வராமல் போனிலேயே யோசனை கூறுகிறார். 

சேதுபதி நன்றாகவே நடித்து இருக்கிறார். ஈகோ பார்க்காமல் நாயகி காலில் விழும் காட்சியில் பாராட்டு வாங்குகிறார். குழந்தைகளுடன் விளையாடும் போது நல்ல தந்தையாக, மனைவியுடன் கொஞ்சலில் பெண்களின் ஆதர்ச கணவனாக, இன்னும் என்னவாகவோ அத்தனையாகவும் அசத்தியிருக்கிறார்.

மேலும் விமர்சனத்திற்குகாலையிலேயே படம் பார்த்து விட்டு வந்து விமர்சனம் தட்டி விட்டு இருந்தால் சரசரவென்று வந்து இருக்கும். இப்போ மைண்ட் லேக் ஆகி வார்த்தைகள் விரல் வழியே வர யோசிக்கிறது. அதனால் தான் இவ்வளவு சின்ன விமர்சனம். 

ஆரூர் மூனா

Friday, 12 February 2016

ஜில் ஜங்க் ஜக் - சினிமா விமர்சனம்

படத்தின் ட்ரெய்லர் பார்த்தப்புறம் படம் பார்க்கனும் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் ஜில்மோர் சிவா இந்த படத்தின் ட்ரெய்லர் பார்க்கும் போது மலையாளத்தில் வந்த டபுள் பேரல் என்ற மொக்கப் படத்தின் சாயல் இருக்கிறது. அதனால் பார்த்து போகவும் என்று பயமுறுத்தி வைத்தார். இரண்டு தினங்களுக்கு முன் வந்த புரோமோ போய் பார்க்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருந்தது.


படத்தின் கதை, தெய்வா என்னும் பெரிய டான், கொகெய்ன் ஸ்மக்லர், ஒரு கொகெய்ன் பார்சலை நெருக்கடியான நிலையில் ஐதராபாத் கொண்டு போக வேண்டிய சூழல். அப்போ தன் குழுவிற்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஜில் ஜங்க் ஜக் என்னும் மூவரை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைக்கிறார். 

மருந்து என்னும் அரைகுறை விஞ்ஞானி கொகெய்னை பெயிண்ட்டில் கலந்து ஒரு காரில் பூசி கொடுத்து அனுப்புகிறார். போகும் வழியில் ஒரு அசந்தர்ப்ப சூழ்நிலையில் கார் சினிமா படபிடிப்பில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படுகிறது. 

விவரம் தெய்வாவுக்கு தெரிந்தால் கொன்று விடுவார் என்பதால் ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் செய்து தப்பிக்க நினைக்கிறார்கள், நடந்ததா என்பதே ஜில் ஜங்க் ஜக் படத்தின் கதை.

பை எனும் பாத்திரத்தில் வருபவர் ஹரஹரமகாதேவகி டோனில் பேச அரங்கமே அதிர்கிறது. செம ஐடியா, அதே சிணுங்கல் அதே கிரக்கம் என பின்னி பெடலெடுக்கிறார்கள்.

ஜக்காக வரும் சனத் ரெட்டி எக்ஸ்பிரசனின் பின்னுகிறார். அப்பாவியாக அவர் செய்யும் சேஷ்டைகள் பலே. இவரின் கலர் ப்ளைன்ட் பிரச்சனையால் கார் மாறிப் போவது தான் பிரச்சனைகளின் ஆதாரமாக இருக்கிறது. மேற்கொண்டு விமர்சனத்திற்கு இந்த வீடியோ விமர்சனத்தை பாருங்கள்.

அப்புறம் மறந்துடாம சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்.

நன்றி

ஆரூர் மூனா

Friday, 5 February 2016

பெங்களூர் நாட்கள் - சினிமா விமர்சனம்

படம் பார்க்க சுவாரயமில்லாமல் தான் கிளம்பினேன். உண்மைய சொல்லனும்னா நிறைய பதிவர்கள் விசாரணை படத்தை முன்னதாகவே பார்த்து விமர்சனம் செய்து விட்டார்கள். இனி அந்த படத்துக்கு போய் பயனில்லை. சாஹசம் படத்துக்கு போவதற்கு பதில் கேரளாவுக்கு அடிமாடா போகலாம். என்ன செய்வது என்று யோசித்த போது, கேஆர்பி தான் இந்த படத்தை சஜஸ்ட் செய்தார்.


ஏற்கனவே மலையாளத்தில் நான்கைந்து தடவை பார்த்த படம் என்றதால் யோசனையாக இருந்தது. அதுவும் பிவிபியின் படம் என்றால் கண்டிப்பாக மொக்கையாக தான் இருக்கும். எனவே இந்த வாரம் படத்துக்கு போவதை கேன்சல் செய்து விடலாம் என்று தான் நினைத்தேன். கேஆர்பியின் பரிந்துரையினால் இந்த படத்துக்கு போவது என்று முடிவு செய்து விட்டேன். 

அரங்கில் படம் துவங்கும் போது இருந்த ஆட்கள் 50க்கும் குறைவே. முதல் பாதி அசுவாரஸ்யமாக தான் சென்றது, ராணா டகுபதியுடன் ஸ்ரீதிவ்யாவை இணையாக பார்க்கும் போது கடாமாடு கழுத்தில் கனகாம்பர மாலையை சுத்தின மாதிரி இருந்தது. 

ஆனால் இரண்டாம் பாதி துவங்கிய சிறிது நேரத்திலேயே படத்துடன் ஒன்றி விட்டேன். இந்த பீல் படம் முடியும் வரை இருந்தது தான் இயக்குனரின் ஸ்பெஷாலிட்டி.

கண்டிப்பாக பெங்களூர் நாட்கள் பார்க்க வேண்டிய பீல் குட் மூவி.

மேலும் விரிவான விமர்சனத்திற்கு இந்த வீடியோவை பாருங்கள். ஆடியோ வால்யும் குறைவாக இருக்கும், குறையை பொறுத்துக் கொள்ளுங்கள். அடுத்த முறை இந்த குறை இல்லா வண்ணம் பார்த்துக் கொள்கிறேன்.

----------------------------------------------------

எப்பொழுதும் படம் பார்த்து விட்டு வந்து அரை மணிநேரத்திற்குள் ப்ளாக் போஸ்ட் செய்து விடுவேன். வீடியோ விமர்சனத்திற்கு முயற்சித்ததால் அது நிறைய நேரத்தை விழுங்கி விட்டது. 

யோசித்து வீடியோவில் பேச அரை மணிநேரம் ஷேர் இட் ல் கம்ப்யூட்டருக்கு ட்ரான்ஸ்பர் செய்ய அரைமணிநேரம், எடிட் பண்ண அரைமணிநேரம் யுடியுபில் சேர்க்க அரை மணிநேரம் என இரண்டு மணிநேரத்தை தாண்டி விட்டது.

அதற்குள் வேலைக்கு போக வேண்டிய நேரம் வந்து விட்டதால் யுடியுபில் மட்டும் போஸ்ட் செய்து விட்டு கிளம்பி விட்டேன். அதனால் தான் ப்ளாக் போட தாமதமாகி விட்டது. 

----------------------------------------------

என் போனில் ரெக்கார்டு செய்ய முயற்சித்த போது வால்யும் குறைவாக பதிவானது. நண்பர்கள் நிறைய பேர் அதை குறிப்பிட்டு சொன்னதால் ரிச்சி ஸ்ட்ரீட் போய் அலைந்து ஒரு மைக் வாங்கி வந்து பயன்படுத்தினால் அது நார்மல் ப்ளேயரில் ரெக்கார்டு ஆக மாட்டேங்குது. யாருக்காவது வேறு சாப்ட்வேர் வைத்து இந்த மைக்கை பயன்படுத்தி விடியோவுடன் ஆடியோவையும் துல்லியமாக பதிவுசெய்யும் விதம் தெரியுமா, தெரியுமெனில் தகவல் தெரிவியுங்கள் நன்றி.

ஆரூர் மூனா