Sunday 29 March 2015

ஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 6

இதுவரை எழுதியதை விட்டு விடுங்கள். ஆனால் இந்த பதிவை மட்டும் மிகக் கவனமாக படியுங்கள். உங்களது பிள்ளைகளின் எதிர்காலம் சாதாரண கட்டுரையினால் மிகப் பிரகாசமாக மாற வாய்ப்புள்ளது.


IRS எனப்படும் இந்த பதவிக்கான தேர்வை எழுதி தேர்ச்சிப் பெற்றால் வாழ்வியல் முறையே மாறி விடும்.

இதில் இரண்டு வகைகளில் தேர்ச்சி முறைகள் உள்ளது. ஒன்று Engineering Services Exam எனப்படும் பொறியியல் படித்த பட்டதாரிகளுக்கான தேர்வு, இதில் தேர்ச்சியடைந்தவர்கள் பயிற்சி முடிந்ததும் இந்தியாவில் உள்ள தயாரிப்பு தொழிற்சாலைகள், பழுதுநீக்கும் தொழிற்சாலைகள் போன்றவற்றில் Assistant Workshop Manager நியமிக்கப் படுவார்கள்.

அடுத்தது Special Class Railway Apprentice எனப்படும் தேர்வு முறை. இதனை பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம். இந்த தேர்வில் தேர்ச்சியடைந்தால் அவர்களே இஞ்சினியரிங் படிக்க வைத்து முடித்ததும் நேரடியாக ரயில்வே அதிகாரி போஸ்டிங்கில் நியமித்து விடுவார்கள். இவர்களும் பயிற்சி முடிந்ததும் இந்தியாவில் உள்ள தயாரிப்பு தொழிற்சாலைகள், பழுதுநீக்கும் தொழிற்சாலைகள் போன்றவற்றில் அதிகாரிகளாக நியமிக்கப் படுவார்கள்.


பொதுவாக தொழிற்சாலை பதவிகள் கீழ்க்கண்டவாறு இருக்கும்

Kalassi
Technician  Gr III
Technician Gr II (நான் இந்த பதவியில் தான் இருக்கிறேன்)
Technician Gr I
Senior Technician
Junior Engineer
Section Engineer
Senior Section Engineer
Assistant Workshop Manager
Workshop Manager
Deputy Chief Mechanical  Engineer
Chief Workshop Manager

இது என் தொழிற்சாலையில் உள்ள பதவிகள் வரிசை. இந்த IRSME (Mechanical Engineering) முடித்தவர்கள் நேரடியாக Assistant Workshop Manager ஆக நியமிக்கப்படுவார்கள். இரண்டு வருடத்தில் Workshop Manager என படிப்படியாக உயர்ந்து சென்று கொண்டே இருப்பார்கள்.


வருடத்திற்கு 42 சீட்டுகள் மட்டுமே Special Class Railway Apprenticeல் இருக்கிறது. அதற்கு தோராயமாக 4 லட்சம் பேர் போட்டியிடுகின்றனர். நிறைய பேருக்கு, இல்லை இல்லை 98 சதவீதம் மக்களுக்கு இப்படி ஒரு படிப்பு இருப்பதே தெரியாது. 

Special Class Railway Apprenticeக்கான அறிவிப்பும் சிலபஸ் ம் ஒவ்வொரு வருடமும் June - July மாதங்களில் UPSC வலைத்தளத்தில் வெளியிடப்படும்.

நுழைவுத் தேர்வு Mathematics, Physics, Chemistry, English Language, General Knowledge, and Psychological Test (Mental Ability) சப்ஜெக்ட் சார்ந்து இருக்கும். இதில் தேர்ச்சியடைந்தவர்கள், அடுத்த கட்டமாக இன்டர்வியூ மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதில் தேர்ச்சியடைந்தவர்கள் Indian Railways Institute of Mechanical and Electrical Engineering, Jamalpur இல் பயிற்றுவிக்கப்படுவார்கள். 

ஐஆர்எஸ் மட்டுமில்லாமல் கீழ்க்கண்ட பதவிகளுக்கான தேர்வுகளும் UPSC ஆல் நடத்தப்படுகின்றன.
Indian Railway Traffic Service (IRTS)
This branch of the Indian Railways looks after transportation and commercial matters pertaining to transportation. The branch is further divided into two divisions:
  • The commercial division: This division deals with all commercial responsibilities like ticket checking, catering, administration and management of stations, reservation, platform announcements etc.
  • The operations division: This division deals with controlling movement of the trains, keeping a check on incoming and outgoing trains.
A career with the IRTS begins with 3 years of probationary training. The training is carried out for 2 years at Lal Bahadur Shastri Academy of Administration in Mussourie, zonal training centres and incorporates on the job training.
Indian Railway Accounts Service (IRAS)
This branch of the Railways deals with the accounting and finance operations of the Indian Railway. Appointed officers of the IRAS begin their careers with two years of probationary service.
Indian Railway Personnel Service (IRPS)
This division handles all matters relating to recruitment, promotions, training and even staff welfare, staff welfare activities, transfers, disciplinary actions and so on. The officers of the personnel department also undergo a 3-year probation period.
Railway Protection Service/ Railway Protection Force
This branch of the Indian Railway Services operates as other para-military forces. They are responsible for the maintenance of law and order on trains and on premises owned and used by the Indian Railways. On recruitment a RPF officer undergoes training for 3 years at Baroda, Lucknow and Police training establishments.
Indian Railway Engineering Service
It is the technical side of the Indian Railways and is engaged in activities like installation, maintenance, construction and planning of railway tracks, bridges and buildings.
Indian Railway Stores Service
An engineering service which assists other departments in their material procurementents,their storage, and scrap disposal.

 இந்தியாவில் கீழ்க்கண்டவை தயாரிப்பு தொழிற்சாலைகள்.
  • Diesel Locomotive Works, Varanasi
  • Chittaranjan Locomotive Works, Chittaranjan
  • Diesel-Loco Modernisation Works, Patiala
  • Integral Coach Factory, Chennai
  • Rail Coach Factory, Kapurthala
  • Wheel & Axle Plant, Bangalore
  • Rail Spring Karkhana, Gwalior
  • Rail coach Factory, Rae Bareli
நான் பார்த்தவரை இந்த அளவுக்கு பொறியியல் முடித்தவர்களுக்கும், இளநிலை பட்டம் பெற்றவர்களுக்கும் இந்த அளவுக்கு உயர் பதவிகளுக்கான வேலை வாய்ப்புகள் இருக்கும் போது கடைநிலை பதவியான, பத்தாம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாக வைத்துள்ள கலாசி பதவிக்கு லட்சக்கணக்கான பட்டதாரிகள் தேர்வு எழுதிக் கொண்டிருப்பது தான் காலத்தின் கோலம்.

எனக்கும் கூட இதையெல்லாம் சொல்ல யாருமில்லை. நான் விபத்தாக இந்த துறைக்கு வந்த பின்பே இவற்றைப் பற்றி அறிந்து கொண்டேன். என்னுடைய உறவினர்களின் பிள்ளைகளுக்கு இந்த மாதிரி படிப்புகள் இருக்கிறது, முயற்சியுங்கள் என்று சொன்னால் அடப்போய்யா, என் பிள்ளை சாப்ட்வேர் இஞ்சினியர் தான் ஆகவேண்டும் என்று சொல்கிறார்கள். என்னத்த சொல்ல.

ஆரூர் மூனா

டிஸ்கி : இந்த கட்டுரையில் சில தகவல்கள் விக்கிபீடியாவில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.

Friday 27 March 2015

ஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 5

ரயில்வே ஊழியர்களுக்கு ரயில்வேயில் உள்ள புறசலுகைகள் என்பது ரயில்வே பாஸ், ரயில்வே மருத்துவமனை, அப்புறம் ரயில்வே குவார்ட்டர்ஸ். இதில் வெளியில் இருப்பவர்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் ஏகப்பட்ட மித் வைத்துள்ளார்கள். அதில் ரயில்வே பாஸ் பற்றிய விளக்கங்களை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.


அடுத்தது மெடிக்கல் கார்டு. ரயில்வேயில் வேலை பார்ப்பவர்களை எந்த மெடிக்கல் இன்சூரன்ஸ் ஏஜெண்ட்டுகளும் நெருங்கவே முடியாது. அந்த கவரேஜ், இந்த கவரேஜ் என்று சொல்லி உங்களிடம் மெடிக்கல் இன்சூரன்ஸ் போட வைக்கவே முடியாது.

எல்லா விதமான பிணிகளுக்கும் ரயில்வே மருத்துவமனையில் இலவச வைத்தியம் தான். வேலையில் சேர்ந்ததும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஐடி கார்டு வழங்கிவிடுவார்கள். அதில் உங்கள் குடும்ப புகைப்படம் இணைக்கப்பட்டு இருக்கும். 


நமது இருப்பிடத்திற்கு அருகே உள்ள ரயில்வே மருத்துவமனையின் பெயர் அதில் குறிப்பிடப் பட்டு இருக்கும். உதாரணத்திற்கு எனது வீட்டிற்கு அருகே அயனாவரம் தெற்கு ரயில்வே தலைமை மருத்துவமனை உள்ளதால் அந்த மருத்துவமனையின் கோட் எண் என் மெடிக்கல் பாஸ்ஸில் குறிப்பிடப்பட்டு இருக்கும். நான் அங்கு தான் ஒபி சீட்டு (OP) போட முடியும். ஒரு முறை போட்டு விட்டால் அது ஒரு வருடம் வரை செல்லும். மறுவருடம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

காலை எட்டு மணிக்கு ஓபி துவங்கும். ஓபி பல பிரிவுகளாக உள்ளது. மேல் ஓபி (Male), பீமேல் ஓபி (Female), ஆர்த்தோ ஓபி, சர்ஜிக்கல் ஓபி என பல உள்ளது. அந்தந்த அறைகளின் வாசலில் நமது ஓபி சீட்டை வைத்து விட்டு காத்திருந்தால் வரிசைப்படி நமது பெயரை சொல்லி அழைப்பார்கள். 

சாதாரண பிணியாக இருந்தால் அங்கேயே பரிசோதிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்படும். தீவிர சிகிச்சை தேவைப்பட்டால் வல்லுனர்களின் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும். அங்கேயே சில குறிப்பிட்ட நேரங்களில் வல்லுனர்கள் வருகை இருக்கும். சாதாரண காய்ச்சல் முதல் முற்றிய வியாதிகள் வரை அனைத்துக்கும் மருத்துவம் இலவசம். தரமானதானவே சிகிச்சைகள் இருக்கும்.


வெளியே லட்சங்களில் பிரசவத்திற்கு கட்டணமாக வாங்கி ஆபரேசன் செய்து குழந்தையை எடுப்பார்கள். இங்கு 90 சதவீதம் சுகப்பிரசவமாகத்தான் அமையும். தவிர்க்கவே முடியாத காலக்கட்டங்களில் தான் ஆபரேசனுக்கு பரிந்துரைப்பார்கள். 

இங்கு பார்க்க முடியாத சிகிச்சைகளுக்கு மட்டும் வெளி மருத்துவமனைக்கு பரிந்துரைப்பார்கள். அந்த சிகிச்சைக்கு கூட அவர்களே பில் செட்டில் செய்து விடுவார்கள்.

யார் யாரை மெடிக்கல் பாஸ்ஸில் சேர்க்கலாம்.

மனைவி குழந்தைகள் சேர்க்கலாம். தந்தை காலமாகியிருந்தால் தாய்க்கு அனுமதி உண்டு. அது போல் தான் தங்கைக்கும்.

அடுத்தாக குவார்ட்டர்ஸ், சென்னையின் பிரதான ரயில்வே குடியிருப்பு அயனாவரத்தில் உள்ளது. ஒரு காலத்தில் 10,000க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்த காலனி இது. பெரும்பாலானவை சிதிலமடைந்து இப்போ 3000க்கும் குறைவான வீடுகளே பயன்பாட்டில் உள்ளது.

இது போக சென்னையில் ரயில்வே ஸ்டேசன்களில் சில குவார்ட்டர்ஸ்கள் இருக்கும். அது ஸ்டேசன் ஊழியர்களுக்கானது. 

சென்னையில் உள்ள பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ், சென்ட்ரல், தலைமை அலுவலகம் போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் அயனாவரம் குடியிருப்பில் தான் உள்ளனர். 

பெரம்பூர், அயனாவரம், வில்லிவாக்கம் பகுதிகளில் 10,000த்துக்கும் மேல் வாடகை உள்ள வீடுகளை விட குவார்ட்டர்ஸ் பெரிது. ஆனால் குறைவான வீடுகளே இப்போது இருப்பதால் குவார்ட்டர்ஸில் வீடு அலாட்மெண்ட் வாங்க பெரும் போட்டியே நிலவுகிறது. நானே ரெண்டு வருசமா முயற்சிக்கிறேன், ஒன்னும் முடியலை. பார்ப்போம் இந்த வருசமாவது குவார்ட்டர்ஸ் வாங்க முடிகிறதா என்று.

குவார்ட்டர்ஸ் வந்தால் HRA 2300 ரூபாய் கட்டாகும். அவ்வளவு தான் அதற்கான வாடகை. இன்றைய நிலையில் இந்த பகுதிகளில் ஒற்றை அறை கூட இந்த வாடகைக்கு கிடைக்காது.

முக்கிய தகவல் : IRS எனப்படும்  ரயில்வே சர்வீஸ் தேர்வுக்காக விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. ரயில்வேயின் உயரதிகாரி வேலை இது. BE (Mech, Civil) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வாகி விட்டால் உங்கள் வாழ்க்கை முறையே மாறி விடும். மெக்கானிக்கல், சிவில் படித்த பொறியாளர்களே உங்களின் மாற்றத்திற்கு தயாராகுங்கள். ஐடி துறையை விட அதிக சம்பளம், அதிக சலுகை, அதிக செல்வாக்கு உள்ள பதவி இது. மாற்றம் உங்கள் கையில். மேலும் தகவலுக்கு UPSC வலைத்தளத்தை பார்க்கவும்.

இந்த ஐஆர்எஸ் படிப்பும் அதன் பலன்களையும் பற்றி அடுத்த பதிவில் விளக்கமாக சொல்கிறேன்.

ஆரூர் மூனா

Tuesday 24 March 2015

உருளைக்கிழங்கு வறுவல்

தலைப்பை பார்த்தவுடன், யாரும் பேப்பர் பேனாவெல்லாம் எடுத்துட்டு படிக்க உக்கார வேண்டாம். இது சமையல் குறிப்பு பதிவு அல்ல.


ஒருவரது சமையல் லட்சணம் பார்க்க அவர்களை கடினமான உணவு வகைகளையெல்லாம் சமைக்க சொல்ல வேண்டாம். வெறும் உருளைக்கிழங்கு வறுவல் போதும், அவர்களின் கைப்பக்குவத்தை அறிந்துக் கொள்ள.

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதால் என் வீட்டு வறுவலை மட்டும் இந்த விவாதத்தில் இருந்து தள்ளி வைத்து விடுகிறேன்.

வெகு காலம் தன் வீட்டுச் சாப்பாட்டு இல்லாமல், வெளியிலேயே சாப்பிடும் ஆண்களைக் கொண்ட குழுவில் நானும் ஒருவன். ஆனால் ஒரே ஊர், ஒரே டைப்பான உணவகம் என்பது மட்டும் தான் என்னை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தும்.


சென்னையில் பல இடங்கள், காஞ்சிபுரம், திருத்துறைப்பூண்டி, மதுரை, விருதுநகர், குண்டூர், ஐதராபாத், டெல்லி, திருவனந்தபுரம், நாகர்கோவில், போபால் என நான் பணிபுரிந்த இடங்களில் எல்லாம் மெஸ்களில் சாப்பிட்டே வளர்ந்தவன்.

எங்கு சென்றாலும் உணவில் மாறாமல் இடம் பெறும் அயிட்டம் உருளைக்கிழங்கு வறுவல் தான். அதை சாப்பிட்டே காலம் தள்ளியவன் நான். இன்று வரை என் ப்ரிட்ஜ் காய்கறிப் பெட்டியில் எந்நேரமும் உருளைக்கிழங்கு இருக்கும். 

வெறும் சோறு வடித்தால் கூட போதும், உருளைக்கிழங்கு வறுவலை வைத்து ரெண்டு நாளைக்கு சமாளித்துக் கொள்ளலாம்.


ஆனால் வறுவலை சமைக்கிறேன் என்று இவர்கள் செய்யும் அராஜகம் இருக்கே அப்பப்பா.

உருளைக்கிழங்கை இரு வகைகளில் வறுக்கலாம். ஒன்று முன்பே வேக வைத்து துண்டுகளாக்கி மசாலா கொதித்துக் கொண்டு இருக்கும் போது அதில் போட்டு பிரட்டுவது, அல்லது உருளையை சிறு துண்டுகளாக வெட்டி மசாலாவுடன் சேர்த்து அப்படியே வறுப்பது. அவரவர்கள் சேர்க்கும் மசாலாவில் தான் ருசி வித்தியாசப்படும்.


எங்கக்கா ஒன்னு புதுக்கோட்டையில் இருந்தது. நான் அவர்கள் வீட்டுக்கு போன அன்று அத்தானுடன் என்ன சண்டையோ தெரியவில்லை. உருளையை வேக வைத்து அப்படியே மிளகாய்த்தூளை கொட்டி எடுத்து தட்டில் வைத்து விட்டது போல. நாம வேற அன்னிக்கி மப்புல இருந்தோமா. வறுவலை எடுத்து வெளாசித் தள்ளிட்டேன். அப்புறம் ரெண்டு நாளைக்கு சொம்பும் கையுமா கொல்லைக்கு திரிஞ்சிக்கிட்டு இருந்ததெல்லாம் இப்ப இந்த கட்டுரைக்கு தேவையில்லைன்னு நினைக்கிறேன்.

என் சித்தி தஞ்சாவூர்ல இருக்காங்க, அவங்க செய்யும் வறுவலுக்கு இணையே கிடையாது. அவ்வளவு கச்சிதமா இருக்கும். சட்டியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு தாளிச்சி வெங்காயம் பதமா வதக்கி, தக்காளி சேர்த்து மசிஞ்சதும் மிளகாய்த்தூள், உப்பு, சிறுதுண்டு வெல்லம் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி அதனுடன் வேக வைத்த உருளையை சேர்த்து சில நிமிடங்களில் கொஞ்சமா நல்லெண்ணெய் சேர்த்து இறக்கி வைப்பார் பாருங்க. ரெண்டு வேளைக்கு சேர்த்து சாப்பிடச்  சொல்லி மனது கேட்கும். வயிற்றில் இடமில்லாததால் வருத்தத்துடன் இலையை விட்டு எழுவேன்.

விருதுநகர்ல இருந்தப்ப மெஸ் மாதிரியான ஒரு வீட்டில் கணக்கு வைத்து சாப்பிடுவேன். அசைவம் கூட பக்கத்தில் நிற்காது, அந்த வீட்டின் உருளைக்கிழங்கு வறுவலுக்கு முன்னால்.

சரியாக ஒரு சென்ட்டிமீட்டர் அளவு டைஸ் வடிவில்  வெட்டிய உருளைக்கிழங்கை, வெங்காயம், பூண்டு, கொஞ்சமா மிளகாய்த்தூள், கொஞ்சமா மிளகுத்தூள், உப்பு போட்டு வதக்கிய மசாலாவில் சேர்த்து சுருள சுருள வறுத்து வைப்பார்கள். அதன் ருசியே சுருள வறுப்பதில் தான் இருக்கிறது. செம்ம டேஸ்ட்டா இருக்கும்.

திருவனந்தபுரத்தில் கோராமையா இருக்கும். கன்னாபின்னா வடிவத்தில் வெட்டிய உருளையை அப்படியே, சரியாக வதக்கப்படாத மசாலாவில் சேர்த்து அரைவேக்காடாய் வறுத்து வைப்பார்கள். இலையில் வைத்தமாதிரியே எந்திரிக்கும் போதும் இருக்கும். வீணாப் போகுதேன்னு மனசு கெடந்து அடிச்சிக்கும்.

குண்டூரில் நான் சாப்பிட்ட இடத்தின் சிறப்பே மசாலா தான். அது அசைவ ஊறுகாய்கள் தயாரிக்கும் இடம். சிக்கன் ஊறுகாய், மட்டன் ஊறுகாய், மீன் ஊறுகாய் எல்லாம் தயாரித்து ஐதராபாத்துக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைப்பார்கள். 

உருளை வறுவலில் அப்படியே வாங்கிய மிளகாய்த்தூளை எல்லாம் சேர்க்க மாட்டார்கள். அன்னன்னைக்கு மசாலா அரைப்பார்கள். குண்டூர் மிளகாய், மல்லி, கடலைப்பருப்பு, ஜீரகம், மிளகு இன்ன பல பொருட்களை அளவாய் வறுத்து மைய அரைக்காமல் நறநறவென அரைத்து அதில் செய்யப்படும் உருளைக்கிழங்கு வறுவல் இருக்கே. சத்தியமாய் அந்த தெய்வீக ருசியை நான் எங்குமே அனுபவித்ததில்லை.

காஞ்சிபுரத்தில் இருந்த போது ஒரு வயதான அய்யங்கார் தம்பதிகளிடம் கேரியர் சாப்பாடு ஆர்டர் பண்ணி சாப்பிடுவோம். எங்களுக்கு மட்டும் சமைத்து தருவார்கள். அவர்கள் சமையலில் வெங்காயம், பூண்டு இருக்காது. காரம் கூட குறைவு தான். எதற்கும் தொட்டுக் கொள்ள வேண்டாம். அப்படியே சாப்பிடலாம். உடலுக்கும் எந்த கெடுதலையும் ஏற்படுத்தாது. பங்கு சந்தை பெரும் சரிவின் காரணமாக மூணு மாசத்திலேயே காஞ்சிபுரம் அலுவலகத்தை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பணம் போய் நஷ்டப்பட்டதை விட அவர்கள் சமையலை தொடர்ந்து சாப்பிட முடியாமல் போனதே என்று தான் அதிக வருத்தப்பட்டேன்.

இப்படி உணவுக்காகவும், ருசிக்காகவும் ஏங்கி ஏங்கியே இப்படி வீங்கிப் போய் விட்டேன். என்ன செய்ய நாவுக்கு மட்டும் சமாதானம் சொல்ல முடிய மாட்டேங்குதே.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு முறை திருப்பதியில் மாயவரம் செல்லும் ரயிலுக்காக காத்திருந்தோம். அந்த சமயம் ஒரு பெரும்தாடி வைத்த வட நாட்டு சாமியார் ஒருத்தர் ரயில் நிலைய ப்ளாட்பாரத்திலேயே சமைக்க ஆரம்பித்தார். மூணு கல்லை நட்டு பாத்திரம் வைத்து உருளையை நெய்யில் வதக்கி மசாலா சேர்த்து வறுத்து வைத்து தான் வைத்திருந்த ஈரத்துணியில் சுற்றப்பட்ட சப்பாத்தியை எடுத்து மசாலாவுடன் சாப்பிட ஆரம்பித்தார். 

மசாலா வாசம் என்னால் பொறுக்கவே முடியவில்லை. எழுந்து நேரே அவரிடம் போய் விட்டேன். 

அடுத்த அரைமணியில் அந்த சாமியார் என் செலவில் சிவபாணம் புகைத்துக் கொண்டு இருந்தார். நானோ அவர் சமைத்த நெய்யில் வறுத்த உருளைக்கிழங்கை சப்பாத்தியில் திணித்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன்.

ஆரூர் மூனா

Sunday 22 March 2015

பரபரப்பான சென்னையில் பரபரப்பில்லாத வாழ்க்கை

பரபரப்பான சென்னை லைப்ஸ்டைலை விட்டு விலகி அமைதியா சென்னையிலேயே வசிப்பது அதற்கு விடப்படும் சவால் தான். ஆனால் இப்போ அப்படித்தான் நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.


சென்னைக்கு வந்த 1997 முதல் 2013 வரை அதே பரபரப்பு, அதே டிராபிக் சிக்கல், அதே லேட் நைட் வாழ்க்கை என இருந்தாச்சி. இப்போ எல்லா பரபரப்புகளையும் விட்டு என் ஏரியாவின் பரப்பளவை நானே சுருக்கிக் கொண்டேன்.

தெற்கே ஐசிஎப், வடக்கே திருவிக நகர், கிழக்கே வியாசர்பாடி, மேற்கே வில்லிவாக்கம் நாதமுனி அவ்வளவு தான் என் சென்னை. இதை தாண்டி போவதே கிடையாது. ஊருக்கு செல்வதாக இருந்தால் பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் ரயில் நிலையத்தில் ஏறி எழும்பூர் சென்று காரைக்கால் எக்ஸ்பிரஸ் பிடித்து திருவாரூர் சென்றடைவேன்.

திரும்ப வருவது கூட அதே வழி தான். மாலை 6 மணிக்கு மேல் வாசப்படியை தாண்டுவதில்லை. சனி, ஞாயிறு சூரிய வெளிச்சம் கூட உடம்பில் பட அனுமதிப்பதில்லை. இந்த வாழ்க்கை கூட பிடித்திருக்கிறது.


முந்தைய காலக்கட்டத்தில் பணிநிமித்தம் ஒரு நாளைக்கு 150 கிமீ வரை சென்னை பரபரப்பான டிராபிக் இடையே டூவீலரில் சுற்றுவேன். நான் வேலை பார்த்த கட்டுமான நிறுவனம் ஆலந்தூர் பாதாள சாக்கடை திட்டம், சூளைமேடு குடிநீர் திட்டம், போரூர் பைபாஸ் டோல்கேட் கட்டுமானம், தாம்பரம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுதல் போன்ற வேலைகளை டெண்டர் எடுத்திருந்தது. 

நான் தான் நிர்வாக அதிகாரி. எல்லா ப்ராஜக்ட்டுக்கும் சென்று ரிப்போர்ட்கள் தயார் செய்து தருவது, சில திட்டங்களுக்கு ப்ரொக்யூர்மெண்ட் ஆபிசராகவும் இருந்ததால் பர்சேஸ் ஆர்டர் போடுதல், அப்ரூவல் வாங்குதல் என அலைந்து கொண்டே இருப்பேன். 


இரவானால் மகாதியானம், கையேந்திபவன் உணவு, ரெண்டாம் ஆட்டம் சினிமா என்றே பத்து வருடங்களுக்கு ஏன் ரொட்டீன் ஒர்க்காக இருந்தது. ஞாயிறன்று கூட வேலை இருக்கும்.

நள்ளிரவு உணவகங்கள் எங்கே இருக்கும், போலீஸ் எந்த இடத்தில் செக்கிங் நிற்கும், நள்ளிரவில் எங்கெங்கே சரக்கு கிடைக்கும் வரை எல்லாமே அத்துப்படியாக இருந்தது.

அது தான் சம்பாதிக்கும் வாழ்க்கை என ஏற்றுக் கொண்டு இருந்தேன்.

கல்யாணத்திற்கு அப்புறம் கூட ஊர் சுற்றுதல் குறையவில்லை. 

என் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இப்போ தான் எல்லாத்தையும் கட் பண்ணி விட்டு வீட்டுக்கு அடங்கி இருக்கிறேன். மாறியதற்கு அப்புறம் பெரிசாக வித்தியாசம் தெரியவில்லை.

ஆனால், அப்புறம் ஒரு நாள் திநகருக்கு போக வேண்டிய வேலை வந்ததால் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், திநகர் வழியில் சென்ற போது சென்னை இந்த ரெண்டு வருசத்தில் மாறிப் போன மாதிரியே இருந்தது. டிராபிக்கைப் பார்த்தால் எரிச்சலாக வந்தது.

அது போல இரவுகளில் சென்னை நகரின் சாலைகள் அனைத்துமே போலீஸின் கண்ட்ரோலில் இருப்பது போன்ற உணர்வு. எல்லா சாலைகளிலும்  செக்போஸ்ட்கள் அமைத்து வாகனங்களை கண்காணிக்கிறார்கள். 

இந்த லட்சணத்தில் கோடை வேறு வருகிறது. இந்த சமயத்தில் வெளியில் போற மாதிரி வேலை மாட்டினால் என்ன ஆவது என்ற கவலை தான் வருகிறது.

வெளியில் செல்வதாக இருக்கும் வேலைகள் தொழிற்சாலைக்கு பணிக்கு செல்லுதல், மார்க்கெட், துணி பர்சேஸ், சினிமா இப்போதைக்கு இவ்வளவு தான். 

தொழிற்சாலை வீட்டிலிருந்து ஒரு கிமீ தொலைவுக்குள் தான் இருக்கிறது. மார்க்கெட் திரு.வி.க நகர், துணி பர்சேஸ் பண்ண பெரம்பூர் ரேவதி ஸ்டோர், சினிமாவுக்கு வில்லிவாக்கம் ஏஜிஎஸ் அல்லது கொளத்தூர் கங்கா. அவ்வளவு தான் சோ சிம்பிள்.

இப்போதைய என் விருப்பம், இன்னும் ரெண்டு வருஷத்துக்குள் J.E (Junior Engineer) அல்லது சீனியர் டிடிஈ தேர்வெழுதி பாஸ் ஆகி டிரான்ஸ்பர் வாங்கி ஊர்பக்கமே செட்டிலாகி விட வேண்டும். பட்ட வரைக்கும் போதும் பரபரப்பான சென்னை வாழ்க்கை.

ஆரூர் மூனா

Saturday 21 March 2015

ஸ்பானிய பெண்ணுடன் பதினைந்து நாட்கள் நான்...- பழசு 2012



சத்தியமா பொய் சொல்லலீங்க. ஆனா அதுக்காக இது கில்மாவும் இல்லைங்க. நான் 2006ம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான ஒரு தனியார் நிறுவனத்தில் சென்னை மண்டல அலுவலகத்தின் நிர்வாக அதிகாரியாக இருந்தேன். அந்த ஆண்டு சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக அரசு டெண்டர் வெளியிட்டது. அந்த டெண்டரின் கட்டுப்பாடுகளில் ஒன்றாக ஏற்கனவே இது போன்ற கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செய்திருக்க வேண்டும் என்று இருந்தது.

எங்கள் நிறுவனத்திற்கு அதற்கு முன் அது போன்ற வேலைகளில் முன் அனுபவம் இல்லாததால் அதற்குரிய அனுபவம் ஏற்கனவே பெற்றிருந்த ஒரு ஸ்பெயின் கம்பெனியுடன் ஜாயின்ட் வென்ச்சர் போட்டு இந்த டெண்டரை பெற எங்கள் கம்பெனி முனைந்தது. டெண்டர் போட்டு அந்த புராஜெக்ட் எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்தது.

புராஜெக்ட் கிடைத்ததும் Project Analysis Report தயார் செய்வதற்காக அந்த ஸ்பெயின் நிறுவனத்தின் Planning Head ஆக இருந்த அலெக்ஸான்ரியா செ கார்லெ என்பவர் சென்னை வந்தார். எங்கள் பாஸ் என்னை அந்த அம்மிணிக்கு Co-Ordinator ஆக என்னை நியமித்தார். அதன் பணி என்னவென்றால் அந்த அம்மிணி சென்னை வந்ததும் விமான நிலையத்தில் வரவேற்பது முதல் அந்த அம்மிணி Prepare செய்யும் Project Analysis Report ஐ முடித்து திரும்பி அனுப்பி வைப்பது வரை நான் உடனிருக்க வேண்டும்.

ஆஹா நமக்குள் கற்பனை பறக்கிறது. அவளுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொள்வது முதல் வரும் அம்மிணி நன்றாக இருந்தால் பிக்அப் செய்து ஸ்பெயினில் செட்டிலாகி விட வேண்டும் என்பது வரை யோசித்து பார்த்து விட்டேன். நம்மால் முடிந்தது யோசிக்க மட்டும் தானே. அந்த நாளும வந்தது. விமான நிலையத்தில் காத்திருந்தேன். சில மணித்துளிகளுக்கு பிறகு அவர் வந்தார். அடடடா என்னா கலரு என்னா பிகரு. பார்த்ததும் கொஞ்ச நேரம் மெய்மறந்து நின்றேன். மிகக்கொஞ்ச நேரமே. என்னிடம் வந்து ஆர் யூ மிஸ்டர் செந்தில் என்றாள். ஆஹா என்ன குரல். குயில் ஆங்கிலத்தை ஸ்டெயிலாக பயன்படுத்தியது போல் இருந்தது.

கொஞ்சம் நில்லுங்கள். ஒவர் பில்ட் அப்பாக இருக்குது. ஜொள்ளு கதையா இது என்று நினைக்க வேண்டாம். அந்த அம்மிணியை பற்றிய நல்ல நினைப்பெல்லாம் சில மணிநேரங்களுக்கு மட்டுமே. அதன் பிறகு நடந்ததெல்லாம் டெரர் தான்.

வந்து காருக்குள் நுழைந்ததும் சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். டமால் டுஸ் டகீர். என்னடா புரியாத சப்தம் என்று பார்க்காதீர்கள். என் இதயம் வாய் வழியாக வெளி வந்து உடைந்து நொறுங்கி விட்டிருந்தது. என் எதிர்பார்ப்பெல்லாம் காலி.

அவர் வருதற்கு முதல் நாள் இரவு ஒரு அழகான வெள்ளைக்காரப் பெண் புடவை கட்டி நல்ல பொட்டிட்டு பூச்சூடி வந்து என்னிடம் சொன்னாள் "அத்தான் காபி சாப்பிடுங்க".

நல்ல கனவு, கனவுடனே சென்று விட்டது. அந்த சமயத்தில் என் கற்பனையில் அதே பெண் அதே போல் புடவை கட்டி நல்ல பொட்டிட்டு பூச்சூடி வந்து என்னிடம் சொன்னாள் "மச்சி நெருப்பு இருக்கா".

கல்யாண கனவு கலைந்து சும்மா குஜாலுக்காவது முயற்சி பண்ணுவோமே, எதிர்பார்ப்பு அடுத்த கட்டமாக இறங்கி வந்தது. அவர் வந்து என் நிறுவனத்தின் மேலதிகாரிகளை சந்தித்த பின் அவருக்கென்று ஒதுக்கப்பட்ட கெஸ்ட் அவுஸில் தங்க வைக்க அழைத்து சென்றேன். இரண்டு நாள் ஒய்வு தேவை, டிரைவர் மட்டும் போதும், இரண்டு நாள் கழித்து பணியை துவங்குவோம் என்றார். நான் எங்கள் டிரைவர் அண்ணாதுரையை விட்டு விட்டு சென்றேன். நாமும் உடனடியாக முயற்சித்து விடக்கூடாது பொறுமை காக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.

இரண்டு நாள் கழித்து காலையில் அவரை அழைக்க சென்றேன். காலையிலேயே வின்டெஜ் கட்டிங் அடித்துக் கொண்டிருந்தார். மிச்சமிருந்த நம்பிக்கையும் கரைந்து ஒடி விட்டது. இனிமேல் இவரை ஒண்ணும் பண்ண முடியாது. நமக்கு நீடாமங்கலம் பக்கத்தில் உள்ள குக்கிராமங்களில் இருந்து மாமா இது தான் அண்ணா சமாதியா என்று கேட்டு வியக்கும பெண்ணே சிறந்தது என்று முடிவு செய்து விட்டேன்.

மீதமிருந்த நாட்களும் எந்த எதிர்ப்பார்ப்புமில்லாமல் சென்றது. ஒரு நாளைக்கு 3 பாக்கெட் தம்மடிப்பார். ஒரு புல் பாட்டில் அடிப்பார். ஆனால் ஆள் போதையில் இருப்பது போலவே தெரியாது. நானெல்லாம் ஆப் தாண்டிவிட்டால் நடுரோட்டில் குட்டிக்கரணம் அடிப்பேன். நாம இன்னும் வளரணும் என்பது மட்டும் தெரிந்தது.

இதையெல்லாம் விடுங்க. எங்களுக்குள் பேச்சுவார்த்தைகள் எந்தளவுக்கு நடந்தது என்பதை சொன்னால் நான் ஜோக்கராகி விடுவேன். தமிழோடு கலந்து பேசும் தமிங்கிலீஷ் தெரியும், மலையாளி பேசும் மங்கிலீஷ் தெரியும், அது போலவே தெங்கிலீஷ், ஹிங்கிலீஷ் எல்லாம் கேட்டு விட்டேன். எனவே நான் மிகப்பெரிய இங்கிலீஷ்மேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் வந்து பேசிய இங்கிலீஷ் இருக்கே அப்பப்பப்பா, அது ஸ்பெங்கிலீஷ். இங்கிலாந்துகாரன் பேசும் இங்கிலீஷே புரியாது ஸ்பெயினை தாய்மொழியாக கொண்டவள் பேசும் இங்கிலீஷ் எப்படியிருக்கும். அவள் பேசுவதை கேட்டால் விவேகானந்தா கல்வி நிலையத்தின் ஓனரே பின்னங்கால் பிடறியில் அடிக்க ஒடுவார். நானெல்லாம் எம்மாத்திரம். சிக்கிட்டேன். பேசிப்பேசியே என்னை சிதைச்சிட்டார்.

கெஸ்ட் அவுஸ் சர்வீஸ் பையனிடம் இவர் ஒன்று கேட்க அவன் என்னைப் பார்க்க நான் ஒன்று சொல்ல அவன் வந்து கொடுத்த பிறகு தான் தெரியும் அவர் கேட்டது வேறு என்று. பலமுறை நடந்த இந்த கூத்தை என் பாஸ் ஒரு முறை பார்த்து விட்டார். பிறகென்ன என்னை கிழிகிழி என்று கிழித்து விட்டார். வெக்கம், மானத்தை விட்டு எப்படியெல்லாம் வேலைப் பார்க்க வேண்டியிருக்கு. துடைச்சிக்கிட்டு வந்துட்டேன்.

ஒரு வழியாக அவர் கேட்ட பொருட்களின் ரேட்களை எல்லாம் நான் மார்க்கெட்டில் விசாரித்து கொடுக்க ஒரு வழியாக புராஜெக்ட் ரெடி செய்து விட்டு புறப்பட்டார். ஏர்ப்போர்ட்டில் வழியனுப்பும் போது தாங்க்யூ பார் எவரிதிங் என்று சொல்லி ஒரு அழுத்தமான முத்தம் கொடுத்து விட்டு புறப்பட்டார். கடைசி வரையில் என்னன்னமோ எதிர்பார்த்து காத்திருந்த எனக்கு கிடைத்தது சிகரெட் வாசத்துடன் கூடிய ஒரு உதட்டு முத்தம் தான். நல்லவேளை தப்பித்தேன்.

அன்றிரவு மீண்டும் கனவு அதே வெள்ளைக்காரப் பெண் அதே போல் புடவை கட்டி நல்ல பொட்டிட்டு பூச்சூடி வந்து என்னிடம் கேட்டாள் "மச்சி நெருப்பு இருக்கா".

அன்றிலிருந்து ஒரு வருடத்திற்கு தினமும் மட்டையாகும் அளவுக்கு சரக்கடிக்காமல் நான் தூங்கியதில்லை.

ஆரூர் மூனா

நிஜ மம்பட்டியானின் கடைசி நாட்கள் - பழசு 2012



மம்பட்டியான் விவகாரம் தமிழக சட்டசபை வரை எதிரொலித்தது. எம்.எல்.ஏ.க்கள் கேள்விக்கணைகளை வீசினார்கள். இதனால், "தேடுதல் வேட்டை" முடுக்கிவிடப்பட்டது. காடுகளில் சென்று தேடும் விசேஷ பயிற்சியைப்பெற்ற மலபார் சிறப்பு போலீஸ் படை வரவழைக்கப்பட்டது. கோவை, சேலம் ஆகிய நகரங்களில் இருந்து சிறப்பு ஆயுதப்படை போலீசார் விரைந்தனர்.

மைசூர் போலீஸ் உதவியும் கேட்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கிரி தலைமையில் இந்த அதிரடிப்படை செயல் பட தொடங்கியது. மம்பட்டியான் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5 ஆயிரம் பரிசு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பெண்ணாகரம் காட்டுப்பகுதிக்குள் மம்பட்டியான் சுற்றித்திரிந்து கொண்டிருந்தான். அப்போது சிக்கல்ராம்பட்டியைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவன் மம்பட் டியானின் நண்பன் ஆனான். அவன் கள்ளச்சாராயம் விற்பவன். சில சமயம் அவனைத்தேடி அவன் வீட்டிற்கே மம்பட்டியான் சென்றான்.

கருப்பண்ணனுக்கு 2 தங்கைகள். மூத்த தங்கை, கணவனை இழந்த விதவை. அடிக்கடி ஏற்பட்ட சந்திப்பில் மம்பட்டியானுக்கும், அவளுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் ரகசியமாக சந்தித்து வந்தார்கள். இந்த சந்தர்ப்பத்தில் கருப்பண்ணனின் 2வது தங்கை நல்லம்மாள் ஒரு நாள் மம்பட்டியானின் கண்ணில் பட்டுவிட்டாள். அவள் நல்ல அழகி. அவளையும் அடைந்துவிட வேண்டும் என்று மம்பட்டியான் ஆசைப்பட்டான்.

போலீசாரின் வேட்டை தீவிரம் அடைந்ததை உணர்ந்த மம்பட்டி யான், தன்னுடைய இருப்பிடத்தை மாற்றத் திட்டமிட்டான். நல்லம்மாளையும் தன்னுடன் அழைத்துச்சென்று விடவேண்டும் என்று நினைத்தான். தன்னுடைய இந்த விருப்பத்தை கருப்பண்ணனிடமும், அவரது தந்தை பொன்னப்ப கவுண்டரிடமும் கூறினான். ஆனால் அவர்கள் சம்மதிக்கவில்லை.

"ஏற்கனவே விதவைத் தங்கையுடன் தொடர்பு வைத்திருக்கிறாயே! அவளையே கல்யாணம் செய்து அழைத்துக்கொண்டு போ! 2வது தங்கையை தரமாட்டேன்" என்று கருப்பண்ணன் அடித்துச் சொல்லிவிட்டான். இதனால் மம்பட்டியானுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. "நல்லம்மாளைதான் திருமணம் செய்வேன். அவளை என்னுடன் அனுப்பு. ரூ.1,000 தருகிறேன். நீ சம்மதிக்காவிட்டால் அவளைத் தூக்கிக் கொண்டு போய்விடுவேன்" என்று கூறிவிட்டு மம்பட்டியான் காட்டுக்குள் சென்று விட்டான்.

தங்கைகளின் பிரச்சினையால் மனக்குழப்பம் அடைந்த கருப்பண்ணன், போலீஸ் உதவியை நாடினான். பெண் ணாகரம் போலீஸ் நிலையத்துக்குச் சென்று சப் இன்ஸ்பெக்டரிடம் நடந்த விவரத்தை தெரிவித்தான். அவர் மூத்த அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உதவி செய்வதாக உறுதி அளித்து அனுப்பி வைத்தார். அதன் பிறகு கருப்பண்ணனை சந்தித்த ஒரு அதிகாரி, "மம்பட்டியானுடன் மோதி உன்னால் ஜெயிக்க முடியாது. விஷத்தைக் கொடுத்து அவனைக் கொல்ல முயற்சி செய்" என்று ஆலோசனை கூறினார்.

27.03.1964 அன்று கருப்பண்ணன் கையில் துப்பாக்கியுடன் காட்டிற்குள் சென்று கொண்டிருந்தான். அப்போது திடீரென்று மம்பட்டியான் அவன் முன் வந்து நின்றான். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. "நீ என்னை போலீசில் காட்டிக் கொடுக்கப்போவதாக சொன்னாயாமே! எங்கே காட்டிக்கொடு பார்ப்போம்" என்று கூறிக்கொண்டே, மம்பட்டியான் கருப்பண்ணனை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். ஆனால், குறி தவறியது.

உடனே கருப்பண்ணன் தனது கையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து மம்பட்டியானை நோக்கி 2 முறை சுட்டான். மம்பட்டியான் வயிற்றில் ஒரு குண்டும் இடுப்பில் ஒரு குண்டும் பாய்ந்தன. மம்பட்டியான் கீழே விழுந்தான். கருப்பண்ணன் ஓடிப்போய் மம்பட்டியான் கையில் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கிக்கொண்டு மீண்டும் ஒரு முறை சுட்டான். மம்பட்டியான் அதே இடத்தில் செத்தான். இதுவே அதிகாரபூர்வ தகவலாகும்.

இது தவிர அதிகாரபூர்வமற்ற முறையில் மற்றொரு தகவல் உலவியது. நல்லம்மாளை கூப்பிடுவதற்காக மம்பட்டியான் சம்பவ தினத்தன்று கருப்பண்ணன் வீட்டிற்கு சென்றான். மம்பட்டியானுக்கு வீட்டில் விருந்து கொடுத்தான். அந்த சமயத்தில் தர்பூசணியில் விஷத்தை ஏற்றி கொடுத்தான். அதை சாப்பிட்ட மம்பட்டியான் சிறிது நேரத்தில் மயக்கம் போட்டு விழுந்தான். உடனே மம்பட்டியானை கருப்பண்ணன் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டான். இவ்வாறு பரவலாக பேசப்பட்டது.

எது எப்படியோ, மம்பட்டியானை கருப்பண்ணன் தீர்த்து கட்டிவிட்டான்.

தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் அதிகாரி கிருஷ்ணராஜ், உதவி சூப்பிரண்டு வி.பொன்னையா, பெண்ணாகரம் சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

மம்பட்டியானுக்கு வயது சுமார் 30 இருக்கும். 5 அடி உயரத்தில் கம்பீரமான தோற்றத்துடன் இருந்தான். முறுக்கு மீசை வைத்திருந்தான். ராணுவ வீரரை போல உடை அணிந்திருந்தான். இடுப்பில் பெரிய `பெல்டு' கட்டியிருந்தான். அதில் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன. அவன் கையில் 2 அடி நீள பெரிய கத்தி இருந்தது. கையில் கெடிகாரம் கட்டியிருந்தான். கழுத்தில் தங்கச் சங்கிலி அணிந்திருந்தான். அதில் புலி நகம் கோர்க்கப்பட்டிருந்தது.

ஒரு கட்டுச்சோறு மூட்டையும் வைத்திருந்தான். அதில் மான் கறி குழம்பும், சோறும் கலந்த சாப்பாடு இருந்தது. மம்பட்டியானின் உடல் பரி சோதனைக்காக தர்மபுரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மம்பட்டியான் உடலைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியது.

பிரேத பரிசோதனைக்குப்பிறகு மம்பட்டியான் உடல் பொதுமக்கள் பார்வைக்காக ஆஸ்பத்திரியில் ஒரு மணி நேரம் வைக்கப்பட்டது. மம்பட்டியான் உடலை வாங்க உறவினர்கள் யாராவது வருவார்கள் என்று போலீசார் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் வரவில்லை.

இதனால் உடலை போலீஸ் லாரியில் ஏற்றி தர்மபுரி குமாரசாமிபேட்டை சுடுகாட்டுக்கு கொண்டுபோய் தகனம் செய்தனர். அங்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கூடியிருந்தார்கள். மம்பட்டியான் பற்றி துப்பு கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி மம்பட்டியானை கொன்ற கருப்பண்ணனுக்கு பரிசு வழங்க போலீஸ் அதிகாரிகள் சிபாரிசு செய்தனர். இதனை தொடர்ந்து கருப்பண்ணனுக்கு ரொக்கப்பணம் 2 ஆயிரமும், 5 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது. அதோடு தற்காப்பிற்காக அவனுக்கு லைசென்சு (அனுமதி) பெற்ற துப்பாக்கியும் கொடுக்கப்பட்டது.

மம்பட்டியான் கோஷ்டியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். 3 பேர், கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த 5 பேர்களில், சுப்பிர மணி, சாமியண்ணன், சின்னண்ணன், நல்லப்ப கவுண்டர் என்ற 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவன் சிறுவனாக இருந்ததால், சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டான்.


ஆரூர் மூனா

ப்ளாக் ஹாக் டவுன் (Black Hawk Down) - சினிமா விமர்சனம் - பழசு 2012



நேற்று ஆங்கிலப்படம் ஒன்று நண்பனின் வீட்டில் டிவிடியில் பார்க்க நேர்ந்தது. துவங்கிய சில நிமிடங்களிலேயே படத்துடன் நான் ஒன்றி விட்டேன். ஒரு போரின் உண்மை சம்பவம். இந்தப்படம் 2001ல் வந்தது. பிலடெல்பியா என்கொயரர் கட்டுரைகள் மற்றும் மார்க் பெளடன் எழுதிய புத்தகத்தின் ஒரு தொடரை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு அமெரி்க்க ராணுவ நடவடிக்கையின் உண்மை சம்பவம் பற்றிய படம் இது.

சோமாலியா நாட்டில் நடந்த உள்நாட்டுப்போரை கட்டுப்படுத்த சென்ற ஐநா அமைதிகுழுவில் அமெரிக்க ராணுவம் ஒரு ஆபரேஷனை அக்டோபர் 3, 1993 அன்று 100க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர், ராணுவ வண்டிகள் ஆகியவற்றுடன் செய்ய திட்டமிடுகிறது. அதாவது தீவிரவாத குழுவின் இரண்டு அரசியல் தலைவர்கள் ஒரிடத்தில் சந்திக்க வருகிறார்கள் என்ற தகவல் ரகசியமாக கிடைக்கிறது. அவர்கள் இருவரையும் பிடிக்க ராணுவ தலைவர் மற்ற நாட்டு படையினருக்கு தெரியாமல் திட்டமிடுகிறார்.

சரியான நேரத்தில் படைகள் கிளம்புகின்றன. ஆனால் அவர்கள் நகரை வந்தடையும் முன் சோமாலிய போராளிகளுக்கு தகவல் சென்று சேர்ந்து விடுகிறது. எனவே அவர்களும் ஊர் முழுவதும் படையை திரட்டி அமெரிக்க ராணுவதத்தினரை எதிர்க்க ஆயத்தமாகின்றார்கள். அமெரிக்கப்படை இலக்கிற்கு வந்து சேர்ந்தவுடன் சண்டை துவங்குகிறது. அரசியல் கைதிகளை ஏற்றிய வண்டி தப்பித்து நகரைத் தாண்டி அமெரிக்கன் கேம்ப்புக்கு வந்து சேர்ந்து விடுகிறது.

சண்டை தீவிரமடையும் போது அமெரிக்காவின் இரண்டு பிளாக் ஹாக் உலங்கு வானூர்திகள் சோமாலிய போராளிகளால் சுட்டு வீழ்த்தப்படுகிறது. சண்டை இரவு வரை நீடிக்கிறது. அமெரிக்க ராணுவத்தினர் பலர் கொல்லப்படுகின்றனர். அமெரிக்க ராணுவம் வேறு வழியில்லாமல் பக்கத்தில் இருக்கும் பாகிஸ்தான் ராணுவ படைகளிடம் உதவி கேட்கிறது. அவர்கள் வந்து மீதமுள்ள அமெரிக்க ராணுவத்தினரை காப்பாற்றி செல்வதே கதை. படத்தின் முடிவில் இந்த போரின் இறுதியாக 1000 சோமாலியர்களும் 19 அமெரிக்க ராணுவத்தினரும் இறந்ததாக சொல்லப்படுகிறது. மனதை கனக்க வைக்கிற போர் இது.

இது போல் நடக்கக்கூடாது என்று என் மனமும் நினைவும் சொல்கிறது. கண்டிப்பாக இது வரை யாரும் பார்க்காமல் இருந்தால் பார்க்க வேண்டிய படம் இது.

அந்த போர்க்காட்சி இப்பொழுது வரை என் நினைவில் நிற்கிறது. முதல் உலங்கு வானூர்தி வீழ்த்தப்படும் போது மனது பதபதைப்பாகிறது. இரண்டாவது உலங்கு வானூர்தி வீழ்த்தப்பட்டதும் இன்னும் கனக்கிறது. நாம் இந்தியன் என்ற போதிலும் படத்தில் கொத்து கொத்தாய் செத்து மடியும் எதிரிகள் சோமாலியர்கள் என்றாலும் செத்து விழும் ஒவ்வொரு அமெரிக்க ராணுவ வீரர்களை பார்க்கும் போதும் கனக்கிறது.

இப்படித்தானே சோமாலியர்களைப் போல ஒவ்வொரு ஈழத்தமிழர்களும் வீழ்ந்திருப்பார்கள். கண்டிப்பாக படத்தைப் பாருங்கள். உங்களுக்கும் வலிக்கும். படம் அமெரிக்கனின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதுதான் வருத்தம்.

இதுபோல் தமிழீழப்போரை படமாக எடுத்தால் தான் ஈழப்போரின் வலி நமக்கு புரியும் என்று நினைக்கிறேன். இந்தப்படத்தைப் பாருங்கள். தம் நிலத்தை வீழ்த்தக்கூடாது என்ற சோமாலியர்களின் பதபதைப்பு புரியும்.

ஆரூர் முனா

இந்திரா காந்தியின் கடைசி நாட்கள் - பழசு 2012




மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, இந்தியாவில் நடந்த மிகக் கொடூரமான நிகழச்சி பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சியாகும். 16 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்திரா காந்தி அவருடைய வீட்டில் பாதுகாவலர்களாலேயே (சீக்கியர்கள்) சுட்டுக் கொல்லப்பட்டார்.

சீக்கியர் பொற்கோவிலில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த போருக்குப்பிறகு, இந்திரா மீது சீக்கியர்களில் பலர் ஆத்திரம் கொண்டிருந்தனர். அதன் காரணமா, இந்திரா காந்தியின் வீட்டில் காவல் பணியில் சீக்கியர்களை அமர்த்தக் கூடாது என்று ரகசியத்துறை டைரக்டர் கருத்து தெரிவித்தார்.

ஆனால் அந்த யோசனையை இந்திரா ஏற்கவில்லை. டெல்லியில் பிரதமர் இந்திரா காந்தியின் வீடு ஒரே காம்பவுண்டுக்குள் அமைந்த இரு கட்டிடங்களைக் கொண்டதாகும். இவற்றில் பிரதமர் வசிக்கும் இல்லத்தின் வாசல், சப்தர்ஜங் ரோட்டில் உள்ளது. இந்த இல்லத்தை அடுத்த கட்டிடம், பிரதமரின் அலுவலகமாகும். இதன் வாசல் அக்பர் ரோட்டில் உள்ளது.

ஒரு கட்டிடத்திலிருந்து மற்றொரு கட்டிடத்துக்குள்ள தூரம் சுமார் 300 அடியாகும். இரண்டுக்கும் இடையில் உள்ள பாதை வழியே கார் செல்ல முடியும் என்றாலும், இந்திரா நடந்தே செல்வது வழக்கம். 1984 அக்டோபர் 31ந்தேதி காலை 8 மணிக்கு, இந்திரா காந்தி பற்றி டெலிவிஷன் படம் ஒன்றை எடுப்பதற்காக, வெளிநாட்டுப் படப்பிடிப்பாளர் ஒருவர் வந்து, பிரதமரின் அலுவலகத்தில் காத்திருந்தார். அவருக்குப் பேட்டியளிக்க இந்திரா காந்தி தன் இல்லத்திலிருந்து அலுவலகத்துக்கு நடந்து சென்றார்.

இரண்டு கட்டிடங்களுக்கும் இடையே ஒரு நடைபாதை உள்ளது. அதில் அவர் நடந்து செல்ல, அவருக்கு சுமார் 7, 8 அடி தூரத்தில் பாதுகாப்பு அதிகாரி தினேஷ் பட் மற்றும் 5 மெய்க்காப்பாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பின்னால், பிரதமரின் அந்தரங்கச் செயலாளர் ஆர்.கே.தவான் வந்து கொண்டிருந்தார். பாதையின் வலது புறத்தில் புதர் போன் செடிகளுக்குப் பின்னால் பிரதமரின் இல்ல பாதுகாவலர்கள் பியாந்த்சிங் (சப் இன்ஸ்பெக்டர்), சத்வந்த்சிங் (கான்ஸ்டபிள்) ஆகியோர் நின்றிருந்தனர்.

இந்திரா காந்தி நடந்து வந்து கொண்டிருந்தபோது, பியாந்த்சிங் (வயது 33) தன் கைத்துப் பாக்கியை உருவி எடுத்து, இந்திரா காந்தியை நோக்கி ஐந்து முறை சுட்டான். அதே சமயம் சத்வந்த்சிங் (26) இயந்திரத் துப்பாக்கியால் (ஸ்டேன்கன்) சரமாரியாகச் சுட்டான். கண்மூடிக் கண் திறப்பதற்குள் இவ்வளவும் நடந்து விட்டன. இந்திரா காந்தியின் நெஞ்சிலும், வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்தன. ரத்தம் பீறிட அவர் கீழே சாய்ந்தார். (இந்திரா காந்தியை நோக்கி பியாந்த்சிங்கும், சத்வந்த்சிங்கும் திரும்பிய போது, இந்திராவின் பின்னால் வந்த மெய்க்காப்பாளர்கள் அதை கவனிக்கவே செய்தனர். ஆனால் அந்த இருவரும் இந்திரா காந்தியை நோக்கி வணங்குவதாகவே அவர்கள் நினைத்துவிட்டனர்.) இந்திரா காந்தி சுடப்பட்டு விட்டார் என்பதை தெரிந்து கொண்டதும், கொலையாளிகளை நோக்கி கமாண்டோ படையினர் சுட்டனர். இதில் பியாந்த்சிங் மரணம் அடைந்தான். சத்வந்த்சிங் படுகாயம் அடைந்தான்.

வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்த சோனியா, துப்பாக்கி சத்தம் கேட்டு அலறியடித்துக்கொண்டு ஓடிவந்தார். இந்திரா காந்தி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக்கண்டு "அம்மா!" என்று கதறினார். இந்திரா காந்தியை ஆஸ்பத்திரிக்கு காரில் கொண்டு சென்றார்கள். பின் இருக்கையில் இந்திரா படுக்க வைக்கப்பட்டார். அவர் தலையை, தன் மடி மீது வைத்துக்கொண்டார் சோனியா. ஆஸ்பத்திரியில் இந்திராவுக்கு அவசர "ஆபரேஷன்" நடந்தது.

இந்திரா உடலில் 22 குண்டுகள் பாய்ந்திருந்தன. அவற்றில் 8 குண்டுகள் உடம்பைத் துளைத்துக்கொண்டு வெளியே சென்றிருந்தன. இந்திராவைக் காப்பாற்ற டாக்டர்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர். ஆனால் பலன் இல்லை. 2.25 மணிக்கு இந்திரா இறந்து விட்டார்" என்று டாக்டர்கள் அறிவித்தனர். எனினும் அகில இந்திய ரேடியோ மாலை 6 மணிக்குத்தான் இந்திராவின் மரணச்செய்தியை அறிவித்தது.

இந்திரா கொல்லப்பட்ட போது, ஜனாதிபதி ஜெயில்சிங் வெளிநாட்டில் இருந்தார். ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக, மேற்கு வங்காளத்துக்குச் சென்றிருந்தார். மூத்த மந்திரியான பிரணாப் முகர்ஜியும் அவருடன் இருந்தார். அவர்கள் சென்று கொண்டிருந்த காரை, ஒரு போலீஸ் ஜீப் வழி மறித்தது. "பிரதமர் வீëட்டில் ஒரு விபத்து நடந்துள்ளது. சுற்றுப் பயணத்தை நிறுத்திவிட்டு, உடனே டெல்லிக்குத் திரும்புங்கள்" என்ற செய்தி ராஜீவ் காந்திக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே ராஜீவ் காந்தியும், பிரணாப் முகர்ஜியும் ஒரு ஹெலிகாப்டர் மூலம் கல்கத்தாவுக்குச் சென்றனர்.

அங்கு "இந்தியன் ஏர்லைன்ஸ்" விமானம் ஒன்று தயாராக காத்துக்கொண்டிருந்தது. அதில் இருவரும் டெல்லிக்குப் பயணமானார்கள். மரணத்தை தொடர்ந்து டில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கடும் கலவரம் மூண்டது. இந்தியா முழுவதும் அசாதாரண நிலை நிலவியது. ராஜீவ் காந்தி டில்லிக்கு வந்ததும் இறுதி சடங்குகள் துவங்கின. இறுதி சடங்குகள் முடிந்து சிதைக்கு தீ முட்டப்பட்டது.

ஆரூர் மூனா

மசாஜ் சென்ட்டரில் ஏமாந்த அறிவாளி - பழசு 2012



என் நண்பன் ஒருவன் சில நாட்களுக்கு முன் சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்தான். கல்லூரி படிப்பு முடித்ததும் சிங்கப்பூருக்கு சென்று தற்போது அங்கு நிரந்தர குடியுரிமை வாங்கி விட்டான். மற்ற ஊர்களெல்லாம் சுற்றி விட்டு மீண்டும் நேற்று சென்னை வந்தான். உடல் மிகவும் சோர்வாக இருப்பதாகவும் மசாஜ் பார்லர் சென்று உடலை ரீசார்ஜ் செய்தால் தான், மீண்டும் ஊர் சுற்ற முடியும் என்றான். முகவரியும் கேட்டான். எனக்கு எந்த பாரில் எந்த சரக்கு கிடைக்கும். எவன் பப்பில் அதிக சைட்டிஷ் கொடுப்பான் என்று கேட்டால் சொல்லுவேன்.

இந்த மசாஜ் சென்டரைப் பற்றி கேட்டால் எனக்கு என்ன தெரியும். அவனிடம் டெக்கான் குரோனிக்கல் பேப்பரில் விளம்பரம் பார்த்திருக்கிறேன். வாங்கிப் பார் தெரியும் என்றேன். அவனும் பார்தது ஒரு மசாஜ் நிலையத்திற்கு போன் செய்யவே அவர்கள் இடம் பற்றி கூறி விட்டு பேஜ் மசாஜ், ஹெட்மசாஜ், புல்பாடி மசாஜ், ஸ்டீம் பாத், ஹாட் வாட்டர் பாத் எல்லாம் சேர்த்து ஒருவர் செய்தால் 1000ரூபாய் எனவும், இருவர் என்றால் 1500ரூபாய் எனவும் கூறியுள்ளனர்.

அவன் இதை என்னிடம் கூறி விட்டு செல்லும் வழி கேட்டான். உடனே எனக்குள் அலாரம் அடித்தது. ஏதோ வில்லங்கமான இடம் அது என்று நினைத்து ஜொள் விட்டபடி நானும் வருகிறேன் என்று அவனுடன் கிளம்பினேன். இந்த பார்லர் அரும்பாக்கத்திலிருந்து MMDA காலனி போகும் வழியில் இருந்தது. பெரிதாக பெயர் பலகையெல்லாம் வைத்து ஒரு பெரிய அப்பார்ட்மெண்டின் மூன்றாவது மாடியிலிருந்தது. உள்ளே சென்றால் நிஜ பார்லர் போலவே இருந்தது. ஏற்கவே அங்கு ஆறு பேருக்கு பியூட்டி பார்லர் சேரில் அமர வைத்து பேஸ் மசாஜ் செய்து கொண்டிருந்தனர். எனக்கு சப்பென்று ஆகிவிட்டது. நான் நினைத்து வந்தது வேறு. இது உண்மையான பார்லர் போல, நமக்கு இதெல்லாம் சரிவராது என்று நினைத்து அவனை மட்டும் மசாஜூக்கு செல்ல சொல்லிவிட்டு எனக்கு வேலையிருந்ததால் இரண்டுமணி நேரம் கழித்து வந்து பிக்அப் செய்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டேன்.

என் வேலையெல்லாம் முடித்து விட்டு அவனுக்கு போன் செய்தால் இன்னும் இரண்டு மணிநேரம் கழித்து வந்து பிக்அப் பண்ணிக் கொள் என்றான். எனக்கு கடுப்பாகி விட்டது. எனக்கு வேலையிருக்கிறது, நான் புறப்படுகிறேன். நீ ஆட்டோ பிடித்து வந்துக் கொள் என்று சொல்லி விட்டு புறப்பட்டு விட்டேன். அத்துடன் இதனை மறந்து விட்டு நான் ஐசிஎப் சென்று பிறகு வீட்டிற்கு வந்து விட்டேன்.

நேற்று இரவு அவன் எனக்கு போன் செய்து பாருக்கு வரும்படியும் கூறினான். நானும் சென்றேன். சில ரவுண்டுகள் உள்ளே போன பிறகு தான் அவனிடமிருந்து பகலில் நடந்த சம்பவங்கள் எல்லாம் வெளிவந்தன. பார்லரில் இரண்டு பெண்கள் அதுவும் சூப்பர் பிகர்கள், ஒன்று தமிழ்நாட்டுப் பொண்ணு, மற்றொன்று மிசோரம் பொண்ணு. இருவரும் அவனுக்கு சாதாரணமாக பேஸ் மசாஜ் மற்றும் ஹெட்மசாஜ் செய்துள்ளனர். அதன் பிறகு பாடி மசாஜ் என்று சொல்லி தனியறைக்கு கூட்டி சென்றுள்ளனர். அங்கிருந்து தான் வில்லங்கம் ஆரம்பிக்கிறது.

அவனை எல்லா உடைகளையும் கழற்ற சொல்லிவிட்டு ஒரு கோவணத்தை அந்த பெண்களே கட்டி விட்டிருக்கின்றனர். அதன் பிறகு எல்லாவற்றையும் இங்கு சொல்வது சபை நாகரீகமாக இருக்காது. எல்லாம் சென்சார் தான், ஒரு மணிநேரம் கழித்து ஸ்டீம்பாத் எடுத்ததும் பாத்ரூமில் வெந்நீரை ஊற்றி அவர்களே குளிப்பாட்டியிருக்கின்றனர். அங்கு கட்டணமாக 1500ம் அந்த பெண்களுக்கு டிப்ஸாக ஆளுக்கு 2000ரூபாயும் கொடுத்திருக்கின்றான். வெளியில் வந்தவனுக்கு ஆசை அடங்காமல் மீண்டும் சென்று இரண்டாவது முறையாக மசாஜ் செய்து விட்டு திரும்பி வந்திருக்கிறான்.ஆக அன்று அவனுக்கு ஆன செலவு மொத்தமாக 11000 ரூபாய். அவனிடம் ஏண்டா வெறும் மசாஜூக்கு இத்தனை ரூபாய் செலவு பண்ண முட்டாள் நீதான்டா என்று திட்டி விட்டு வந்தேன்.

இவனையெல்லாம் என்னங்க பண்ணுறது, நம்ம சென்னையில் மசாஜூக்கு 11000 ரூபாய் செலவு பண்ணிட்டு சும்மா வந்தால் அவன் இளிச்சவாயன் தானே.

ஆரூர் மூனா

ஜான் எப் கென்னடியின் கடைசி நாட்கள் - பழசு 2012




அமெரிக்க மக்களை மட்டுல்ல, உலக மக்கள் அனைவரையும் கவர்ந்தவர், அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் எப் கென்னடி. புகழின் உச்சியிலிருந்தபோது அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அகில உலகத்தையும் திடுக்கிடச் செய்தது. கம்பீரமான தோற்றமும், நல்ல பேச்சாற்றலும் கொண்ட கென்னடி, அமெரிக்கர்களால் மட்டுமல்ல; உலக மக்களாலும் நேசிக்கப்பட்டார். அவர் ஆட்சியின்போதுதான் வானவெளி ஆராய்ச்சிகளில் அமெரிக்கா வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது.

1962 அக்டோபர் மாதம், அமெரிக்கா அருகில் உள்ள கியூபாவில் ஏவுகணை தளம் அமைக்க ரஷியா முயன்ற போது, கியூபாவைச் சுற்றிப் போர்க்கப்பல்களை நிறுத்தி, "கடல் முற்றுகை"யிட்டு ரஷியாவின் முயற்சியை முறியடித்தார், கென்னடி. அதே மாதத்தில், இந்தியா மீது சீனா படை யெடுத்தபோது, இந்தியாவுக்கு ஆயுதங்களை அனுப்பி உதவினார்.

உலகப் பெருந்தலைவர்களில் ஒருவராக விளங்கிய கென்னடி 1964ல் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், 1963 நவம்பர் 22ந்தேதி, டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகருக்குச் சென்றார். மனைவி ஜாக்குலினுடன் காரில் ஊர்வலமாகச் சென்றபோது, ரோட்டின் இருபுறமும் திரளான மக்கள் கூடி நின்று வரவேற்றனர். மக்களைப் பார்த்து கை அசைத்தபடி சென்று கொண்டிருந்தார், கென்னடி.

திடீரென்று, ஒரு கட்டிடத்தின் 6வது மாடியிலிருந்து சீறி வந்த மூன்று துப்பாக்கிக் குண்டுகள் கென்னடியின் தலையிலும், கழுத்திலும் பாய்ந்தன. காருக்குள் சுருண்டு விழுந்தார், கென்னடி. அவரை ஜாக் குலின் தாங்கிக் கொண்டு கதறினார். கண்மூடிக் கண் திறப்பதற்குள் இந்தச் சம்பவம் நடந்து விட்டது. என்ன நடந்தது என்பது கூடப் பொது மக்களில் பலருக்குத் தெரியவில்லை. காரிலிருந்த மெய்க்காவலர்கள், காரை அருகில் இருந்த ஆஸ்பத்திரியை நோக்கித் திருப்பினார்கள். அங்கு கென்னடிக்கு ஆபரேஷன் நடந்தது. அவர் உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் பெருமுயற்சி செய்தனர். ஆனால் பலனில்லை. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அரை மணி நேரத்தில் கென்னடியின் உயிர் பிரிந்தது.

கென்னடி கொல்லப்பட்ட சில மணி நேரத்திற்குள் ஆஸ்வால்டு (வயது 24) என்ற இளைஞன் கைது செய்யப்பட்டான். அவன் முன்பு கடற்படையில் பணியாற்றியவன். சிறையில் வைக்கப்பட்டிருந்த அவனைக் கோர்ட்டில் ஆஜர் படுத்துவதற்காக 1963 நவம்பர் 24ந்தேதியன்று போலீசார் வெளியே அழைத்து வந்தனர். ஜெயிலுக்கு முன்னால் பெரும் கூட்டம் கூடியிருந்தது. கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஜாக் ரூபி (வயது 42) என்பவன், ஆஸ்வால்டை வெகு அருகிலிருந்து சுட்டான். குண்டு குறி தவறாமல் நெஞ்சில் பாய்ந்தது. ஆஸ்வால்டு அதே இடத்தில் செத்து விழுந்தான். ஆஸ்வால்டு கொல்லப்பட்டதால், கென்னடியை அவன் எதற்காகச் சுட்டுக்கொன்றான், அதன் பின்னணி என்ன, அவனை யாரும் தூண்டிவிட்டார்களா என்பதே தெரியாமல் போய் விட்டது.

ஆஸ்வால்டை சுட்டுக்கொன்ற ரூபியை உடனே போலீசார் கைது செய்தனர். ரூபி "இரவு விடுதி" ஒன்றின் சொந்தக்காரன். அவன் மீது வழக்குத் தொடரப்பட்டது. அவனுக்கு 1964 மார்ச் 14ந்தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவன் மனநோயாளி என்று டாக்டர்கள் கூறியதால் தூக்கில் போடப்படாமல் காவலில் வைக்கப் பட்டிருந்தான். சிறையிலேயே 1967 ஜனவரி 3ந்தேதி மரணம் அடைந்தான்.

ஆரூர் மூனா

மர்லின் மன்றோவின் கடைசி நாட்கள் - பழசு 2012




உலகப் புகழ் பெற்ற கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோ, அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். "மர்லின் மன்றோ" உலகப்புகழ் பெற்ற ஆலிவுட் நடிகை. மரணத்தின்போது கோடீசுவரியாக இருந்த மர்லின் மன்றோவின் இளம் பருவ வாழ்க்கை, மிகவும் வறுமையும், சோதனைகளும், துன்பங்களும் நிறைந்ததாக இருந்தது. ஏராளமான ஆங்கிலப் படங்களில் நடித்தவர். மர்லின் மன்றோவின் நடை அழகு மிகவும் புகழ் பெற்றது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் "கனவுக்கன்னி"யாக விளங்கி வந்தார். ஆங்கிலப் பட உலக புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்த மர்லின் மன்றோவுக்கு திடீரென்று மனநிலை பாதிக்கப்பட்டது. பேய் பிடித்தவர் போல இருந்து வந்தார்.

பெரிய டாக்டர்கள் சிகிச்சை அளித்து, அவரை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தார்கள். அதன் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்தார். மர்லின் மன்றோ கடைசியாக நடித்துக்கொண்டு இருந்த படத்தின் பெயர் "நான் கொடுப்பதற்கு இன்னும் சில உண்டு" என்பதாகும். அந்த படத்தில்தான் குளிக்கும் காட்சியில் அவர் நிர்வாணமாக நடித்தார். ஆனால் படப்பிடிப்புக்கு மர்லின் மன்றோ ஒழுங்காக வருவது இல்லை என்று கூறி அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள்.

சரிவர நடிக்கத் தவறியதற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும் என்று மர்லின் மன்றோ மீது வழக்குத் தொடரப்பட்டது. அதுமுதல் மர்லின் மன்றோ உற்சாகம் குன்றி இருந்தார். ஆனால் அதன் பிறகு அவரையே தொடர்ந்து நடிக்க வைக்க ஏற்பாடு நடந்தது. மர்லின் மன்றோவுக்கும், படத்தயாரிப்பாளருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருந்தார்கள்.

இந்த நிலையில் 05.08.1962ல் மர்லின் மன்றோ தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி, உலகம் முழுவதும் இருந்த சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. மர்லின் மன்றோ திராவகம் (ஆசிட்) குடித்து தற்கொலை செய்து கொண்டதாக முதலில் செய்தி பரவியது. அவரது உடலை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, அளவுக்கு மீறி தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மரணம் ஏற்பட்டதாக அறிவித்தனர்.

அமெரிக்காவில் சினிமா நகரமான ஆலிவுட்டில் ஒரு மாளிகையில் மர்லின் மன்றோ வசித்து வந்தார். அதிகாலை 3 மணிக்கு மர்லின் மன்றோ கட்டிலில் மயங்கிக் கிடந்ததை வீட்டு வேலைக்காரர் பார்த்து விட்டு டாக்டர்களுக்கு தகவல் கொடுத்தார். டாக்டர்கள் விரைந்து சென்றார்கள். மன்றோவின் படுக்கை அறைக் கதவு உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்தது. டாக்டர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார்கள்.

ஒரு கையில் டெலிபோனுடன் மன்றோ படுக்கையில் கிடந்தார். உடலில் ஆடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாகக் கிடந்தார். டாக்டர்கள் சோதித்துப் பார்த்ததில் அவர் இறந்து வெகு நேரம் ஆகி இருப்பது தெரிந்தது. அளவுக்கு மீறி தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மரணம் அடைந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். தற்கொலை செய்து கொண்ட மர்லின் மன்றோ, கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது புரியாத புதிராக இருந்தது. இதுபற்றி விசாரணை நடத்தி மர்மத்தை கண்டுபிடிக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி மர்லின் மன்றோவின் கடைசி கால வாழ்க்கை பற்றி துருவி ஆராய்ந்தது. இருப்பினும் கிணற்றில் போடப்பட்ட கல் போல அது அமிழ்ந்து போனது.

தற்கொலை செய்து கொண்ட மர்லின் மன்றோவுக்கு வயது 36. சினிமா உலகத்திலேயே அதிக பணம் சம்பாதித்த நடிகையாக திகழ்ந்தார். மர்லின் மன்றோவின் மறைவு ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, பிரபல நடிகைகளுக்கும் கூட பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அமெரிக்காவில் எங்கு திரும்பினாலும் மர்லின் மன்றோ பற்றிய பேச்சாகவே இருந்தது.

ஆரூர் மூனா

என்டி ராமாராவ் கடைசி நாட்கள் - பழசு 2012

ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்குப் பட உலகின் முடிசூடா மன்னருமான என்.டி.ராமராவ், மாரடைப்பால் காலமானார். என்.டி.ராமராவ், தெலுங்கு பட உலகில் வெற்றிக்கொடி நாட்டியபின், அரசியலில் புகுந்து பல சாதனைகளை படைத்தார். இரண்டாம் மனைவி லட்சுமி சிவபார்வதியின் தலையீட்டால் ஆட்சியை இழந்து தனிமைப்படுத்தப்பட்டார். மருமகன் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரி ஆனார்.

ஐதராபாத் நகரில் பஞ்சாராஹில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் மனைவி லட்சுமி சிவபார்வதியுடன் வசித்து வந்தார். 76 வயது ஆனபோதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்காக ராமராவ் தினசரி உடற்பயிற்சி செய்வது வழக்கம். அதுபோல 18.1.1996 அன்று காலையிலும் அவர் உடற்பயிற்சிக்கு தயார் ஆனார்.

அந்த சமயத்தில் என்.டி.ராமராவுக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. நெஞ்சு வலிப்பதாக தெரிவித்தார். அவரை படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று ஓய்வெடுக்க வைத்தனர். டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே டாக்டர்கள் விரைந்து வந்து படுக்கையில் இருந்த என்.டி.ராமராவை பரிசோதித்துப் பார்த்துவிட்டு, அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் சிவபார்வதி கதறி அழுதார். என்.டி.ராமராவின் உடல் வீட்டின் தாழ்வாரத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டது.

ராமராவின் மரணச் செய்தி கிடைத்ததும் மருமகனும், முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். மூத்த மருமகன் வெங்கடேசுவரராவ் மற்றும் மகன்கள், மகள்கள் குடும்பத்தினரும் விரைந்து சென்றனர். என்.டி.ராமராவ் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டனர். ஆந்திர கவர்னர் கிருஷ்ணகாந்த், அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர் நடிகைகள் என்.டி.ராமராவ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ராமராவ் உடல் அருகே சிவபார்வதி கண்ணீர் சிந்தியபடி சோகமே உருவாக அமர்ந்திருந்தார்.

என்.டி.ராமராவ் மரணச் செய்தி ஐதராபாத் நகரில் காட்டுத்தீ போல பரவியது. ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் சாரை சாரையாக என்.டி.ராமராவ் வீட்டிற்கு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவர்களில் பலர் துக்கம் தாங்காமல் கதறி அழுதனர். பெண்கள் தரையில் விழுந்து அழுது புரண்டனர். ஐதராபாத் நகர் மட்டுமின்றி ஆந்திர மாநிலமே சோகத்தில் மூழ்கியது.

பின்னர் என்.டி.ராமராவ் உடல் வீட்டில் இருந்து ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக லால்பகதூர் ஸ்டேடியத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. தொண்டர்களும், ரசிகர்களும் பின்தொடர்ந்து சென்றனர். அங்கு விசேஷ மேடை அமைத்து என்.டி.ராமராவ் உடல் வைக்கப்பட்டது. ஏராளமான ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

என்.டி.ராமராவ் மறைவு செய்தியை கேட்டு பிரதமர் நரசிம்மராவ் அதிர்ச்சி அடைந்தார். விசேஷ விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டு வந்து அஞ்சலி செலுத்தினார். சிவபார்வதிக்கும், ராமராவின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். ராமராவின் மகனும், போக்குவரத்து மந்திரியுமாக இருந்த ஹரிகிருஷ்ணா வெளிநாட்டில் இருந்தார். ராமராவ் மரண செய்தி கிடைத்ததும் அவர் தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு, ஐதராபாத் திரும்பினார்.

தமிழக கவர்னர் சென்னா ரெட்டி, பாராளுமன்ற சபாநாயகர் சிவராஜ் பட்டீல், முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங், சந்திர சேகர், முதல் மந்திரிகள் தேவேகவுடா, ஜோதிபாசு, லல்லுபிரசாத் யாதவ், மனோகர் ஜோஷி, பா.ஜனதா தலைவர் எல்.கே.அத்வானி, வ.கம்ï னிஸ்டு தலைவர் இந்திர ஜித்குப்தா, ஜனதா தள தலைவர் எஸ்.ஆர்.பொம்மை, பிஜ× பட்நாயக், நடிகர்கள் சசிகபூர், நாகார்ஜ×னா, கிருஷ்ணா, டைரக்டர்கள் டி.ராமா நாயுடு, தாசரி நாராயணராவ் உள்பட திரளானபேர் அஞ்சலி செலுத்தினார்கள்.

மறுநாள் (19ந்தேதி) பிற்பகல் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ராமராவின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் வைக்கப்பட்டது. தலைப்பகுதியில் அவருடைய படமும், முதல் மனைவியின் படமும் வைக்கப்பட்டு இருந்தன.

ராமராவின் தலைப்பகுதியில் மூத்த மருமகன் வெங்கடேசுவரராவும், கால் பகுதியில் சந்திரபாபு நாயுடுவும் அமர்ந்து இருந்தனர். லட்சுமி சிவபார்வதியும் அலங்கார வண்டியில் ஏறி, ராமராவ் உடல் அருகே அமர்ந்தார். இதை பார்த்ததும் அருகில் நின்று கொண்டிருந்த ராமராவின் மகன்களான ஹரிகிருஷ்ணாவும், நடிகர் பாலகிருஷ்ணாவும் ஆவேசத்துடன் சென்றனர். சிவபார்வதிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஹரிகிருஷ்ணாவின் ஆதரவாளர்கள் சிவபார்வதியை பிடித்து கீழே தள்ளினார்கள். இதனால் அவமானமும், துயரமும் அடைந்த சிவபார்வதி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

இறுதி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று புத்த பூர்ணிமா வளாகத்தை அடைந்தது. அங்கு ராமராவின் உடல், "சிதை"யின் மீது வைக்கப்பட்டு இறுதிச்சடங்குகள் நடந்தன. பின்னர் சிதைக்கு ராமராவின் மூத்த மகன் ஜெயகிருஷ்ணா தீமூட்டினார். ஆந்திர மாநில போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் 21 குண்டுகளை சுட்டு அஞ்சலி செலுத்தினர்.

ராமராவ் மறைவுக்கு பிறகு லட்சுமி சிவபார்வதி "என்.டி.ஆர். தெலுங்கு தேசம்" Linkஎன்ற கட்சியைத் தொடங்கி தேர்தலில் குதித்தார். ஆனால் அரசியலில் அவரால் காலூன்றி நிற்க முடியவில்லை. தேர்தலில் அவருடைய கட்சி தோல்வி அடைந்தது. சமீபத்தில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு சிவபார்வதி "டெபாசிட்" இழந்தார்.

வேட்டை - பழசு 2012

அய்யா எல்லாருக்கும் வணக்கம்,

சத்தியமா சொல்றேன், நான் வேணும்னு நண்பன் விமர்சனம் போடல. எங்க ஏரியாவுல ரிலீசாகல, அத யாராவது கேட்டீங்களா, நான் பாக்காம போட்டேன்னு இவ்வளவு பேர் சொல்றீங்களே, நான் மட்டும் சொல்லாட்டி யாராலயாவது கண்டுபிடிக்கமுடிஞ்சதா, மனசாட்சிக்கு உண்மையா இருக்கனும்னு தான் உண்மைய சொன்னேன். அத வுடுங்க, இன்னக்கி போடுறது உண்மையான வேட்டை பட விமர்சனம் தான்.

----------------------------------------------------

அதுக்கு முன்னாடி ஒரு பர்சனல், நான் சும்மா எழுதுறேன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். நேற்று இரவு ஒரு போன் வந்தது. சார் நான் காளையார் கோவிலில் இருந்து பேசறேன். நான் உங்க பிளாக்கின் ரசிகன், நான் மட்டுமல்ல என் கூட நான்கு பேர் உள்ளனர். அவர்களும் உங்கள் எழுத்தின் ரசிகர்கள், நாங்க உங்களை நேரில் பார்க்க வருகிறோம் என்று போன் வந்தது. நான் சத்தியமா நினைச்சேன். யாரோ நம்மளை நல்லா கலாய்க்கிறாங்கன்னு. ஆனால் இன்று காலையில் ஒரு போன் வந்தது. சார் நாங்கள் உங்களை பார்கக திருவாரூர் வந்துள்ளோம் என்று. எனக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் வந்தது. வீட்டிற்கு வந்தார்கள். என் பிளாக்கைப் பற்றி ஒரு மணிநேரம் ரசித்து பேசினார்கள். எனக்கு தாங்க முடியாத ஆச்சரியம், என்னையும் என் பிளாக்கையும் மதித்து சிலர் நேரில் வந்து பேசுகிறார்களே என்று. ஆனால் நான் அவர்களை நன்றாக உபசரித்து அனுப்பினேன். என்ன கொடுமைடா சாமி.

------------------------------------------------------

படத்திற்கு வருவோம், சில பிளாக் ரசிகர்கள் வந்ததால் சினிமாவுக்கு செல்ல 10 நிமிட்ம் லேட்டாகி விட்டது. முதல் பாட்டு ஓடும் போது தான் தியேட்டருக்குள் சென்றேன். ஒன்னும் பிரச்சனையில்லை, அப்போதிலிருந்து பார்த்தாலும் படம் புரிந்தது.

படத்தின் கதைக்கு வருவோம். மாதவனும் ஆர்யாவும் அண்ணன் தம்பி. அவர்களது அப்பாவாக சிரஞ்சீவியின் அண்ணன் ராம்பாபு. மாதவன் பயந்த சுபாவம் உள்ளவர். அவருக்கு ஏதாவது பிரச்சனை எனறால் தம்பி ஆர்யா அடிதடியில் இறங்கி காப்பாற்றுகிறார். ராம்பாபு போலீசாக இருந்து இறந்து விடுகிறார். அவர் இறந்ததால் அவரது போலீஸ் வேலை மாதவனுக்கு கிடைக்கிறது. போஸ்டிங் தூத்துக்குடியில் கிடைக்கிறது.

அங்கு ஏற்கனவே ஏகப்பட்ட ரவுடிகள் இருப்பதனால் அவர்களை வேட்டையாடும் வேலை மாதவனிடம் உயரதிகாரியால் தள்ளிவிடப்படுகிறது. அவருக்கு துணையாக ஆர்யா நின்று வில்லன்களை பந்தாடி மாதவன் பெரிய முரட்டு போலீஸ் என்று அனைவரையும் நம்ப வைக்கிறார். அந்த சமயத்தில் அண்ணன் ச்சே. அக்காவான (முகத்தைப் பார்த்தால் அண்ணன் போல தான் தெரிகிறது) சமீரா ரெட்டியை மாதவன் மணமுடிக்கிறார். தங்கச்சி அமலா பாலை ஆர்யா காதலிக்கிறார். மாதவன் பயந்தாங்கொள்ளி என்று வில்லன் குரூப்களுக்கு தெரிய வருகிறது. அவரை தனியாக ஒரு இடத்திற்கு கொண்டு வந்து அடித்து விடுகறார்கள். ஆர்யா மாதவனுக்குள் உள்ள ஆண்மைத்தனத்தை வெளிக்கொண்டு வந்து அவருடன் சேர்ந்து வில்லன்களை கொன்று தூத்துக்குடியை காப்பாற்றுகிறார். இது தான் படத்தின் கதை.

இரண்டு நாட்களுக்கு முன்பு சிபி அண்ணன் படத்தின் நாட்டை சொல்லியிருந்தார். என்னே சிபி அண்ணனின் புத்திசாலித்தனம்.

ஆர்யா தான் படத்தின் நாயகன். தற்போதைய மார்க்கெட்டின் அடிப்படையில் அவருக்கு படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நன்றாக செய்கிறார். நன்றாக அடிக்கிறார். அடுத்தது மாதவன், முதல் பாதியில் பயந்த சுபாவம் உள்ளவராகவும் அதன் பின் வீரத்தில் வில்லன்களை அடித்து துவைப்பதுமாக நன்றாக நடித்துள்ளார்.

சமீரா ரெட்டி என்ற ரெண்டும் கெட்டான். அதனை பெண்ணாகவும் ரசிக்க முடியவில்லை ஆணாகவும் நினைக்க முடியவில்லை. அமலா பால் நச்சுன்னு உள்ளார். லிப் கிஸ்ஸில் அசத்துகிறார்.

வழக்கம் போல் வில்லன்கள் தூத்துக்குடியை ஆளுகிறார்கள். கதாநாயகனிடம் தோற்கிறார்கள். ஏண்டா நான் நேரில் பார்த்த தூத்துக்குடி நன்றாக உள்ளது. சினிமாவில் மட்டும் ஏன் இவ்வளவு மோசமாக காண்பிக்கிறீர்கள்.

பப்பரப்பா பாடலை நான் நன்றாக எதி்ர்பார்த்தேன். ஆனால் பார்க்க சுமாராக உள்ளது, நால்வரும் சேர்ந்து பாடுவது போல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ம்ச்சே அதுவு்ம் போச்சு.

லிங்குசாமி ஒரே டெம்ப்ளேட்டில் படம் எடுக்கிறார். இது தொடர்ந்தால் சில நாட்களில் ஓரம் கட்டப்படுவார். டெம்ப்ளேட்டில் இருந்து விலகி எடுத்த பீமாவும் சரி ஜியும் சரி ஓடவில்லையென்றால் அவர் என்ன செய்வார் பாவம்.

படம் நன்றாக உள்ளது. ஆனால் திரும்ப பார்த்த லிங்குசாமி படம் போலவே உள்ளது.

நன்றி வணக்கம்.

ஆரூர் மூனா

நண்பன் சினிமா விமர்சனத்தில் நடந்த தில்லுமுல்லு - பழசு 2012

அய்யா எல்லாருக்கும் வணக்கமுங்க.

எல்லாரும் என்னை மன்னிக்கனுமுங்க. நானா வேணும்னு செய்யலீங்க. நான் நேர்மையாத்தான் செய்யனும்னு நெனச்சேனுங்க. ஆனா நேத்து அது என்னகடுப்பேத்திச்சிங்க. அதனால நான் பதிலுக்கு விமர்சனத்தை போட்டுப்புட்டேங்க. உண்மையா உழைச்ச சிபிகிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்கறேனுங்க. போன் செய்து பேசியும் வாய் வரைக்கும் வந்த உண்மைய கஷ்டப்பட்டு மறைச்ச மோகன் குமார் அண்ணன் கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்கிறேனுங்க.

நடந்தது என்னன்னா எங்க ஏரியாவுல நேத்து நண்பன் படம் ரிலீசாகல. அம்பத்தூர், ஆவடி, பாடி எங்கேயும் படம் நேத்து வெளியாகல. நேத்து காலையில 7 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பிட்டு ராக்கி வந்தேன், படம் இல்லை. அடுத்ததா முருகன் வந்தேன், அங்கேயும் இல்லை. அப்புறம் 8 மணிக்கு கொளத்தூர் கங்காவுல ஷோவுன்னு கேள்விப்பட்டு அங்கே போனேன். டிக்கெட் கிடைக்கவில்லை. என்னடா கடுப்பேத்துதேன்னு மற்றொரு நண்பன் கிட்ட போன் பண்ணி வேற நம்ம பக்கம் எங்க ஒடுதுன்னு கேட்டேன். மூலக்கடை சண்முகான்னு சொன்னான். அங்கே போனேன். அங்கேயும் டிக்கெட் இல்லை.

பொறுமை இழக்க ஆரம்பித்தேன். அப்புறம் 9 மணிக்கு கோயம்பேடு ரோகிணில பாக்கலாம்னு வந்தேன். அங்கேயும் ஹவுஸ்புல். கொலைவெறியாகிட்டு வீட்டுக்கு வந்தேன். ஏன்னா அதுக்கு மேல படம் பார்த்திட்டு வந்து விமர்சனம் எழுதினா வேஸ்ட் ஆகிடும்.

ஒயின்ஷாப்ல ப்ளாக்ல ஆப் சரக்கு வாங்கினேன். வந்து ஆப்பையும் அடிச்சேன். த்ரீ இடியட்ஸ் மனசுல ஒட்டிக்கிட்டேன். கேரக்டர் பேரு வேணும்ல அதுக்காக யூடியூப்ல டிரைலர் டவுன்லோட் பண்ணேன். விவரங்கள் எடுத்துக்கிட்டேன். த்ரீ இடியட்ஸை அப்படியே நானே தமிழ்பெயர்களுடன் விமர்சனம் எழுதினேன். மட்டையாகிட்டேன். மதியம் மோகன் குமார் அண்ணன் போன் செய்து என்னுடைய விமர்சனத்தை யாரோ காப்பியடி்த்து போட்டிருக்கிறதா சொன்னார். நானே பொய்யான விமர்சனம் போட்டேன். அதையும் ஒரு நாதேரி காப்பியடிச்சிருக்கு. அதை அவர்கிட்ட சொல்ல முடியல. முழுங்கிட்டேன. சாரி மோகன் குமார் அண்ணா.

ஆனால் நாளைக்கு சத்தியமா வேட்டை படம் பார்த்திட்டு தான் விமர்சனம் எழுதுவேன். ஏன்னா இப்ப நான் இருக்கிறது என் ஊர்ல. இப்ப உண்மையிலேயே நண்பன் படத்துக்கு போறேன். நன்றி


ஆரூர் மூனா

நண்பன் சினிமா - பழசு 2012



ஏற்கனவே பலமுறை த்ரீ இடியட்ஸ் பார்த்து விட்டதால் நமக்கு ஒவ்வொரு காட்சியும் மனப்பாடமாக தெரியுமென்பதால் அடுத்தடுத்து என்ன வரும் என்பது தெரியுமென்பதால் சுவாரஸ்யம் குறைவது போல் தோன்றுவது நிஜமே. இருந்தாலும் ஷங்கர் படத்துடனே நம்மை கட்டிப் போடுகிறார். பொங்கலுக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் போதே படத்தை வெளியிட்டது என்ன காரணமோ தெரியவில்லை. எதிர்பார்ப்பு வேறு கன்னாபின்னாவென்று எகிறியிருப்பதால் திரையரங்கில் கூட்டம் தாங்க முடியவில்லை. பொங்கல் பண்டிகைக்காக இன்று இரவு திருவாரூர் செல்லவிருப்பதால் பொங்கலுக்கு வெளியாகும் மற்றபடங்களின் விமர்சனங்கள் திருவாரூரிலிருந்து.

சரி படத்தின் கதைக்கு வருவோம்.

ஸ்ரீகாந்த்(வெங்கட்ராம கிருஷ்ணன்) மற்றும் ஜீவா(சேவற்கொடி செந்தில்) நண்பர்கள். மற்றொரு நண்பனான சத்யன் (ஸ்ரீவத்சன் (அ) சைலன்சர்)போன் செய்து அவர்களின் மிக முக்கிய நண்பனா விஜய்(பஞ்சமன் பாரிவேந்தன்) வந்திருப்பதாக அழைத்ததால் அவசரஅவசரமா அவர்கள் படித்த பழைய கல்லூரிக்கு வருகிறார்கள். ஆனால் அங்கு விஜய் வரவில்லை, விஜயின் இருப்பிடம் மட்டுமே தெரியுமென சத்யன் சொன்னதால் அங்கு நோக்கி செல்கிறார்கள். பிளாஷ்பேக் துவங்குகிறது. சென்னையின் நம்பர் ஒன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்க வருகிறார்கள் மேற்சொன்ன நண்பர்கள் எல்லாம்.

அந்த கல்லூரியின் முதல்வர் சத்யராஜ் (விருமாண்டி சந்தனம்). அவரின் சித்தாந்தம் விஜய்க்கு பிடிக்கவில்லை. ஸ்ரீகாந்த்தும் ஜீவாவும் படிப்பில் பிலோ ஆவரேஜ் மாணவர்கள். விஜய் கல்லூரியிலயே முதலாக வரும் மாணவர். சத்யன் குறுக்குவழியில் முதலிடத்தை கைப்பற் நினைப்பவர். சத்யராஜூக்கும் விஜய்க்கும் ஏற்படும் கருத்து மோதலால் சத்யராஜூக்கு விஜயை பிடிக்கவில்லை. சத்யராஜின் மகள் இலியானா (ரியா)வுடன் முதலில் மோதலில் ஈடுபடும் விஜய் பிறகு காதலிக்கிறார். இலியானாவும் தான். ஸ்ரீகாந்த் விலங்குகளை புகைப்படமெடுப்பதில் ஆர்வமிருக்க பெற்றோரின் கட்டாயத்தினால் இஞ்சினியரிங் படிக்க வந்திருப்பதை அறிகிறார் விஜய். ஜீவாவுக்கும் படிப்பில் ஆர்வமில்லாததை அறிகிறார்.

அவர்கள் இருவரையும் அவர்கள் விரும்பும் துறைக்கு பல மோதல்கள், ஜீவாவின் தற்கொலை முயற்சி, இலியானா அக்காவின் பிரசவம், சத்யனின் தில்லுமுல்லுகள் ஆகியவைகளை தாண்டி அனுப்பி வைத்து வெற்றி பெறவும் வைக்கிறார். ஸ்ரீகாந்த் ஒரு புகழ் பெற்ற விலங்குகள் புகைப்படக்காரர் ஆகிறார். ஜீவாவுக்கு கேம்பஸ் இன்டர்வியூவிலேயே வேலையும் கிடைக்கிறது. சத்யராஜூம் திருந்தி விடுகிறார். இவ்வளவும் செய்யும் விஜய் படிப்புக்காலம் முடிந்ததும் இவர்களை விட்டு விலகி விடுகிறார். பிளாஷ்பேக் ஓவர். சத்யனின் உதவியால் ஸ்ரீகாந்தும் ஜீவாவும் விஜயின் இருப்பிடம் அறிந்து அங்கு செல்கின்றனர்.

ஆனால் அந்த இடத்தில் பஞ்சமன் பாரிவேந்தன் பெயரில் இருப்பவர் S.J.சூர்யா. இவர்கள் அதிர்கின்றனர். பிறகு அவரை மிரட்டி விஜயின் உண்மையான இருப்பிடம அறிந்து அங்கு செல்லும் வழியில் இலியானாவுக்கு அன்று கல்யாணம் என்பதை அறிகின்றனர். அங்கு சென்று திருமணத்தை நிறுத்தி இலியானாவையும் அழைத்துக் கொண்டு விஜயின் இருப்பிடம் நோக்கி செல்கின்றனர். அங்கு விஜயை கண்டுபிடித்ததும் தான் தெரிகிறது, விஜய் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் என்று. அனைவரும் ஒன்று சேருகின்றனர். படம் நிறைவடைகிறது.


என்னடா படத்தின் முழுகதையும் சொல்லி விட்டேன் என்கிறீர்களா, அதான் தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் த்ரீஇடியட்ஸ் படத்தை பார்த்திருப்பார்களே. அதனால் தான் கதையில் சஸ்பென்ஸ் வைக்கவில்லை. படத்தை கொடுக்கும் முறையில் ஷங்கர் வெற்றிபெறுகிறார்.

விஜய் அடக்கி வாசித்திருக்கிறார். பழைய படங்களில் உள்ள படாபடா பில்ட்அப்புகள் போல் இல்லாமல் படத்தில் கதையை ஒட்டிய பிலட்அப்புடன் வலம்வருகிறார். கல்யாணத்தில் முதல்முறையாக இலியானாவை சந்தித்து அட்வைஸ்கள் கொடுத்து சத்யராஜிடம் மாட்டிக் கொள்ளும் போதும், ஜீவாவின் அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லாத போது அவரை ஸ்கூட்டியில் உட்கார வைத்து மருத்துவமனையின் உள் வரை ஓட்டி வரும் போதும், முதல் அறிமுக காட்சியில் காலேஜ் சீனியருக்கு சிறுநீர் போகும் போது கரண்ட் ஷாக் வைக்கும் போதும், இன்னும் பல பல காட்சிகளில் அசத்துகிறார். கண்டிப்பாக விஜய்க்கு இது சூப்பர்ஹிட் படம் தான்.

ஜீவா அவரது இன்னொசன்ட் நடிப்பில் அசத்துகிறார். படத்தில் விஜய்க்கு அடுத்த இடம் அவருக்கு தான். சரக்கடித்து விட்டு சத்யராஜ் வீட்டில் ஒன்னுக்கு அடித்து விட்டு மறுநாள் வகுப்பில் சத்யராஜிடம் மாட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொள்ள மாடியில் இருந்து குதிக்கும் போது நெகிழ வைக்கிறார்.

ஸ்ரீகாந்துக்கு இத்தனை நாளாக இறங்கிக் கொண்டிருந்த கிராப்பை ஏற்ற வந்திருக்கும் படம் இது. சத்யன் படம் முழுக்க வருகிறார். படமே அவரைச்சுற்றி தான் இயங்குகிறது. இனிமேல் கண்டிப்பாக அவருக்கு தமிழ்படங்களில் காமெடிக்கு முக்கய இடம் கிடைக்கும்.

படத்தில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் படத்தின் பாடல்கள் ஏற்கனவே பலமுறை கேட்டு விட்டு பார்க்கும் போது ரம்மியமாக இருக்கிறது.

இவ்வளவு சொல்லிவிட்டு ஹீரோயினை பற்றி சொல்லாமல் இருந்தால் எப்படி என்கிறீர்களா, என்ன செய்ய நானோ தமிழ்நாட்டுகாரனாகி விட்டேனே. நமக்கு கொழுகொழுவென்று இருந்தால் தான் பிடிக்கிறது. இவரைப் பார்த்தால் வத்தலும் தொத்தலுமாக பிடிக்கமாட்டேன் என்கிறது. எனவே என் விமர்சனத்தில் இலியானா கட்.

வைரஸ் என்ற பட்டப்பெயருடன் வரும் சத்யராஜூக்கு மிக முக்கியமான கேரக்டர். எல்லாவற்றையும் ஸ் ஸ் என்று பேசுவது அழகு. விளையாட்டுக்காக வேலையாளிடம் ஸ்ரீகாந்துக்கும் ஜீவாவுக்கும் வேலை கிடைத்தால் என் மீசையை எடுத்து விடு என்று விளையாட்டுக்கு சொல்ல அவர்களுக்கு வேலை கிடைத்ததும் அவர் மீசையை எடுத்து விட இவர் குதிப்பது சூப்பர் காமெடி.

படம் பார்த்து விட்டு அவரச அவசரமாக எழுதுவதால் இப்போதைக்கு போதும் என்று நினைக்கிறேன். திருத்தங்கள் இருந்தால் குறிப்பிடவும் பிறகு திருத்திக் கொள்கிறேன். அடப்பாவிங்களா ஹிட்டுக்காக எவ்வளவெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. காலங்கார்த்தால பல்லுகூட விளக்காமல் சினிமாவுக்கு போய் பசியோடு எழுதினால் தான் ஹிட்டு கிடைக்கிறது, என்ன செய்ய, வரவர முதல்நாள் படம் பார்த்து விமர்சனம் எழுத பதிவுலகில் பெரும் கூட்டமே உள்ளது. அதில் தனித்து தெரிய தான் இவ்வளவும்.

நண்பன் - All is Well

நன்றி ரசிகர்களே,


ஆரூர் மூனா

ஜவஹர்லால் நேருவின் கடைசி நாட்கள் - பழசு 2012

இந்தியா சீனா போர் மூளுகிறவரை நேருவின் தலைமைக்கு எதிராக யாரும் குரல் எழுப்பியதில்லை. சீனப்போரில் இந்திய படைகளுக்கு ஏற்பட்ட தோல்வி காரணமாக நேரு தன் வாழ்நாளில் முதல் தடவையாக பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை சந்திக்க நேர்ந்தது.

நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோற்று பதவியில் நேரு நீடித்தபோதிலும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 75 வயதைத் தாண்டியும் இளமையோடு இருந்த அவர் 1964ம் ஆண்டு ஜனவரி மாதம் புவனேசுவரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டபோது பக்கவாத நோயினால் தாக்கப்பட்டு படுக்கையில் வீழ்ந்தார்.

பின்னர் குணம் அடைந்து பிரதமருக்குரிய பொறுப்புகளை செவ்வனே கவனித்தார். எதிர் காலத்தில் இந்தியா மீது வெளிநாடுகள் படையெடுத்தால் சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக ராணுவத்தைப் பலப்படுத்தவும் நவீனப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டார். எனினும் அந்த மகத்தான தலைவரை எமன் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கினான்.

1964 மே 27ந்தேதி காலை 6.20 மணிக்கு அவருக்கு திடீரென்று ரத்த அழுத்தம் குறைந்தது. உணர்வு இழந்தார். டாக்டர்கள் எவ்வளவோ சிகிச்சை அளித்தும் பலனின்றி பிற்பகல் 2 மணிக்கு காலமானார். சுதந்திரத்துக்கு முன் 30 ஆண்டுகளும், சுதந்திரத்துக்குப்பின் 17 ஆண்டுகளும் தாய்நாட்டுக்கு உழைத்த நேரு மறைந்தார். உயிர் பிரியும்போது மகள் இந்திரா காந்தி மந்திரிகள் நந்தா, டி.டி.கிருஷ்ணமாச்சாரி, லால்பகதூர் சாஸ்திரி ஆகியோர் நேருவின் படுக்கை அருகே இருந்தனர்.

நேரு மரணம் அடைந்த செய்தியை பாராளுமன்றத்தில் மந்திரி சி.சுப்பிரமணியம் அறிவித்தார். "நேரு மறைந்துவிட்டார். இந்த தேசத்தின் ஒளி விளக்கு அணைந்து விட்டது" என்று அவர் குரல் தழுதழுக்க, கண்களில் கண்ணீருடன் கூறினார். சுப்பிரமணியத்தின் அறிவிப்பைக் கேட்டதும் பல "எம்.பி."க்கள் கதறி அழுதார்கள். உடனே பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. மந்திரிகளும், "எம்.பி."க்களும் நேரு வீட்டுக்கு விரைந்தனர். நேருவின் உடல் பொதுமக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து இறுதி மரியாதை செலுத்தினர். மாலை 5 மணிக்கு, நேருவின் வீட்டு முன் 2 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கூடிவிட்டனர். அவர்கள் வரிசையில் நின்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

நேரு மகள் இந்திரா தந்தையின் உடல் அருகிலேயே அமர்ந்திருந்தார். அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது. நேரு மந்திரிசபையில் மூத்த மந்திரியாக இருந்த குல்சாரிலால் நந்தா, இடைக்கால பிரதமராகப் பதவி ஏற்றார். விரைவில் பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி (எம்.பி.க்கள்) கூடி, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

நேருவின் இறுதி ஊர்வலம் மறுநாள் நடைபெற்றது. இங்கிலாந்து பிரதமர் டக்ளஸ் ஹோம், ரஷிய உதவிப்பிரதமர் கோசிஜின், இலங்கைப் பிரதமர் திருமதி பண்டாரநாயக், நேபாள மன்னர் மகேந்திரா, எகிப்து உதவி ஜனாதிபதி உசேன் சபி, அமெரிக்க வெளிநாட்டு இலாகா மந்திரி டீன் ரஸ்க் உள்பட உலகத் தலைவர்கள் பலர் வந்து இறுதி மரியாதை செலுத்தினர். ஊர்வலம் நேரு வீட்டில் இருந்து புறப்பட்டது. ஊர்வலத்தில் 20 லட்சம் பேருக்கு மேல் கலந்து கொண்டனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று யமுனை நதிக்கரையை அடைந்தது. யமுனை நதிக்கரையில், காந்தி சமாதி அருகே சந்தனக் கட்டைகளால் அமைக்கப்பட்ட "சிதை"யில் நேருவின் உடல் தகனம் செய்யப்பட்டது. "சிதை"க்கு நேருவின் பேரன் சஞ்சய் காந்தி தீ மூட்டினார்.

ஆரூர் மூனா