Friday 20 March 2015

மௌனகுரு / Mission Impossible 4 - இரண்டு பட விமர்சனங்கள் - பழசு 2011

நான் முதலில் செல்ல வேண்டிய சினிமா என்று நினைத்தது உச்சிதனை முகர்ந்தால் என்ற படத்துக்கு தான் ஆனால் எங்கள் பகுதியில் அந்த படம் வரவில்லை. எனவே காலையிலேயே இரண்டு படங்களையும் பார்த்து விட்டு விமர்சம் எழுதலாம் என்று முருகன் சினிமாசுக்கு சென்றேன் . நான்கு மணிக்கு விமர்சனம் எழுதலாம் என்று சிஸ்டம் முன் அமர்ந்தால் கரண்ட் பொய் விட்டது. செம கடுப்பாகி விட்டேன். இப்பொழுது தான் கரண்ட் வந்தது. எனவே தான் லேட்

சரி படங்களின் விமர்சனங்களுக்கு போவோமா?


ஏற்கனவே அருள்நிதி நடித்து வெளியான உதயன் ஓடவில்லை என்பதால் இந்தப்படத்திற்கு கூட்டமில்லை, எதிர்பார்ப்புமில்லை. சரி படத்தின் கதைக்கு வருவோம். ஹீரோ உதயநிதி தன் அம்மாவுடன் மதுரையில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறார். அங்கு ஒரு போலீஸ்காரருடன் ஏற்பட்ட தகறாறு காரணமாக அண்ணன் சென்னையில் இருப்பதால் அம்மாவுடன் சென்னை வருகிறார். அங்கு அண்ணியின் தங்கையான இனியாவுடன் காதல், பிறகு ஹாஸ்டலில் தங்குகிறார். அங்குள்ள மற்றொரு மாணவன் மூலம் போலீஸ் உயரதிகாரியான ஜான் விஜய்யுடன் மோதல் ஏற்படுகிறது. மற்றொரு தகராறுக்கு அருள்நிதி தான் காரணம் என்று தவறாக அறியும் ஜான் விஜய் அவரை எண்கவுன்டரில் போட்டு தள்ள ஏற்பாடு செய்கிறார். அருள்நிதி அவரிடமிருந்து தப்பினாரா காதலியுடன் சேர்ந்தாரா என்பதே படத்தின் கதை.

ஒன்றும் சொல்வது போல் இல்லை. அருள்நிதி நடிப்பு எனக்கு வம்சத்தில் பிடித்த அளவுக்கு மற்ற இரண்டு படங்களிலும் பிடிக்கவில்லை. வருகிறார். மெளனமாக இருக்கிறார். (அதனால் தான் படத்தின் பெயர் மெளனகுருவோ எனக்கு தெரியவில்லை) கோவப்படுகிறார். அவ்வளவே. இதே நிலை நீடித்தால் அடுத்த படத்திற்கு கூட்டம் சேர்ப்பது கஷ்டம் தான்.

படத்தில் நகைச்சுவைக்கென்று தனியாக பெரிய நடிகர்கள் யாரும் இல்லை. படத்தின் ஓட்டத்தில் சில இடங்களில் நகைச்சுவை இருக்கிறது. அவ்வளவு தான். ஹீரோயின் இனியா. வாகை சூடவா அளவுக்கு இந்த படத்தில் வாய்ப்பில்லை. அந்தப்படத்தில் கருப்பாக தெரிந்தாலும் எனக்கு பிடித்திருந்தது. இந்த படத்தில் ம்ஹூம்.

படத்தின் பெரிய பலம் ஜான் விஜய். அடுத்தடுத் படங்களில் வில்லனாகவே வளருவார் என நினைக்கிறேன். அடுத்தது உமா ரியாஸ். அவருக்கும் ஸ்கோப் உள்ள கேரக்டர் தான்.

முதல்பாதி படம் விறுவிறுப்பாக செல்கிறது. இரண்டாம் பாதி கடுப்பேத்துகிறது. இன்னும் என்னன்னவோ சொல்லலாம் என்றால், ஒன்றும் பிடிபடவில்லை. அவ்வளவுதான்.

ஒரு வாரம் மட்டுமே ஒடும்.

*************************

அடுத்த படம் Mission Impossible ன் நான்காவது பாகமான Ghost Protocol படம். வழக்கம் போல அமெரிக்க உளவுப்பிரிவில் உள்ள டீமின் ஒரு மிஷன் தான் Ghost Protocol.

படத்தின் கதைக்கு வருவோம். ரஷ்யாவில் உள்ள சிறையிலிருந்து ஹீரோ டாம் குரூஸ் அவரது குழுவினரின் உதவியுடன் தப்பிக்கிறார். தலைமையிட கட்டளைப்படி மாஸ்கோவில் உள்ள ராணுவ தலைமையகத்திற்கு மாறுவேடத்தில் சென்று ஒரு பைலை கைப்பற்ற முயற்சிக்கும் போது அவருக்கு முன் வில்லன்கள் குழு அவற்றை எடுத்து அந்த பில்டிங்கையும் வெடிக்க வைத்து அதன் பழியை டாம் குரூஸ் மீது போடுகின்றனர். டாம் குரூஸ் ரஷ்யாவிலிருந்து தப்பித்து தன் குழுவினருடன் துபாய் வருகிறார். அங்கு துபாய் டவரில் நடக்கும் ஒரு சம்பவத்தின் மூலம் ஒரு ஏவுகணையை ஏவி அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் மோதலை ஏற்படுத்த வில்லன்கள் குழு முயற்சிப்பதை கண்டுபிடிக்கிறார். அந்த ஏவுகணையை செலுத்துவதற்காக வில்லன்கள் மும்பை வருவது அறிந்து டாம் குரூஸ் குழுவினருடன் மும்பை வந்து வில்லன்களை கொன்று ஏவப்பட்ட ஏவுகணையை தடுத்து போரிலிருந்து நாட்டினை காப்பாற்றுவது தான் கதை.

டாம் குரூஸ் வயதானது முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது. ஒரு காலத்தில் என்னுடன் கல்லூரியி்ல் படித்த சீனியர் பெண்கள் டாம் குரூஸ் பெயரில் பித்து பிடித்து அலைந்த கதையெல்லாம் எனக்கு தெரியும். ஆனால் படத்தில் ஹீரோயிசத்திற்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் நடித்துள்ளார். அதுவும் துபாய் டவரில் டாம் தொங்கிக் கொண்டு வரும் காட்சி உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைக்கிறது. மும்பையில் கார் ஓட்டும் காட்சியும் அருமை.

நான் மிகவும் எதிர்பார்த்த அனில்கபூரை துக்கடா பாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளனர். இதற்கு நடிக்காமலே இருந்திருக்கலாம். இடைவேளைக்கு பிறகு வருகிறார். கதாநாயகியை பார்த்து ஜொள் விடுகிறார். கதாநாயகியிடமே அடிவாங்கி மயக்கமாகிறார். வேஸ்ட்.

ஹீரோயின் பெயர் தெரியவில்லை. அமெரிக்க உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். கதாநாயகி மும்பை ஹோட்டலில் நடக்கும் காட்சி துவங்கும் வரை எனக்கு பெரிய ஈர்ப்பில்லை. அந்த ஹோட்டலில் அவரது பரரரரரரரரந்த மனதைப் பார்த்த பிறகு என் கண் முழுவதும் விரிந்து அவரையே நிலை குத்தி நின்றது. அப்பப்ப்ப்பா.

அந்த ரஷ்ய ராணுவ அலுவலகத்தில் இவர்கள் திரையில் சுவர் இருப்பது போல் ஒரு பிம்பம் ஏற்படுத்தி பைல்ரூம் உள் நுழையும் காட்சி அருமையாக இருக்கிறது. படத்தில் அட்வான்ஸ் டெக்னாலஜி எவ்வாறு இருக்கிறது என்பதை அதிகப்படுத்தி சுவாரஸ்யமாய் எடுத்திருக்கிறார்கள். படம் இந்தியாவுக்குள் வருகிறது என்று தெரிந்ததுமே இந்தியாவை கேவலமாக குடிசைப் பகுதிகளை காட்டி கடுப்பேத்த போகிறார்கள் என்று நினைத்தேன். நல்ல வேளை அப்படியெல்லாம் நடகக்கவில்லை.

படம் முடியும் போது அடுத்த பாகத்திற்காக துவக்கத்துடனேயே முடிகிறது, நாமும் எதிர்பார்க்கலாம்.

ஆரூர் முனா

No comments:

Post a Comment