சென்ற வாரத்தில் 10 வருடங்களுக்கு முன் வந்த பத்திரிக்கையை புரட்ட நேர்ந்தது. அந்த கட்டுரையும் உடன் நமது சரக்கும் கலந்து நான்கு பகுதிகளாக உங்களுக்கு. தமிழ் சினிமா வில்லன்கள் பற்றி 90களின் வரையான கட்டுரையை நீட்சி செய்தால் எந்த காலத்திற்கும் அவற்றினை கொண்டு செல்லலாம் என்று மட்டும் புரிந்தது.
எழுபதுகளில்தான்முதன்முறையாகவில்லன்களுக்குகோட்டுபோடும்உரிமையேவந்தது. அதுவரைபெரும்பாலும்கட்டம்போட்டலுங்கி, கர்ச்சீப், கன்னத்தில்பெருமாள்கோயில்உருண்டைசைசில்மச்சம்எனவில்லத்தனத்தோடுஉபகாரியமாய்பூச்சாண்டிகாட்டுவதையும்செய்துவந்தனர். அதிலும்எம்.ஜி.ஆர்., சிவாஜிகாலத்தில்சொல்லவேண்டாம். அவர்கள்திரையில்தோன்றினாலேகரிச்சுகொட்டஆரம்பித்தனர். பாவம்நம்பியார்தான்அதிகமானதிட்டுவாங்கியிருப்பார். ராமதாஸ், பி.எஸ். வீரப்பாவுக்குகூடஅப்படிகிடைத்திருக்காது.
ஒருபக்கம்எம்.ஜி.ஆரிடம்அடிஇன்னொருபக்கம்பார்வையாளர்களின்வசவுஎனஇரண்டுபக்கமும்கும்மாங்குத்துவாங்கிஅவதிப்பட்டனர். இந்தசூழலில்தான்அசோகன்வந்தார். கொஞ்சநாள்அவரும்எம்.ஜி.ஆரிடம்அடிவாங்கிகளைத்துபோய்கடைசியாகஜெய்சங்கர், ரவிச்சந்திரன்காலம்வந்ததும்அப்படியேஷிப்ட்ஆகினார். ""வாங்கோ...உக்காருங்கோ...'' எனகுரலைநீட்டிமக்கள்கைதட்டிரசிக்கத்தக்கவில்லனாகமாறினார். இக்காலத்தில்தான்வில்லன்களின்முகம்கொஞ்சம்கொஞ்சமாகமறையத்துவங்கியது.

அதுவரைநேரடியாகஅடிதடியில்இறங்கியவில்லன்களுக்குபின்கொஞ்சம்கொஞ்சமாககூட்டம்சேரஆரம்பித்ததுஉடன்அவர்களும்ஒதுங்கிபோய்ஒருமேசைமேல்இருட்டில்உட்கார்ந்துகொண்டுபலகலர்பல்புகளுடன்மிஷின்ஆபரேட்டர்போல்தோற்றம்தரஆரம்பித்தனர்
எழுபதுகளில்சினிமாவுக்குயாராவதுசென்றுவந்தால்சிறுவர்கள்அவர்களிடம்கேட்கும்முதல்கேள்விஇந்தபடத்தில்பாஸ்யாரு
பாஸ்என்றால்ஏதோபெரியமல்டிநேஷ்னல்கம்பெனியின்அதிபர்எனநினைக்கவேண்டாம்இவர்கள்கேட்பதுகொள்ளைகூட்டபாஸ்அதுவும்புரியாதவர்களுக்குஇன்றையபாஷையில்சொல்வதானால்வில்லன்

இன்றுஇருப்பதுபோலஅன்றையவில்லன்களுக்குஅரிவாளைதூக்கிகொண்டுஅங்குமிங்குமாகஓடவேண்டியதோசரியாகமீசைகூடமுளைக்காதகதாநாயகபயல்களின்அடிக்குபயந்துகடைசியில்மானம்கெட்டுகைகூப்பவேண்டியதோநாயகிகளின்அப்பாவாகஅண்ணனாகமாமனாகடாடாசுமோவில்வெள்ளைசட்டைமீசைசகிதம்ஆயுதங்களுடன்திரியவேண்டியஅவசியமோஅல்லதுமுகத்தைஅஷ்டகோணலாக்கிபக்கம்பக்கமாகவசனம்பேசவேண்டியஅவசியமோஇல்லைசிம்பிள்ஒரேஒருமொட்டைமட்டும்போட்டுகொண்டிருந்தால்போதும்கூடுதலாகவித்தியாசமாகசிரிக்கதெரிந்துகொண்டால்போனஸ்பாயிண்ட்பெரிதாகஅடிதடிஎல்லாம்தெரிந்திருக்கவேண்டியதில்லைஎல்லாம்மிலிட்டிரிடிரஸ்போட்டுதுப்பாக்கிசகிதம்நடமாடும்ஆட்கள்பார்த்துக்கொள்வார்கள்

எப்போதாவதுகற்பழிக்கவேண்டியதேவைமட்டும்ஏற்படும்அதிலும்பெரும்பாலும்நாயகியாகத்தான்இருக்கும்இல்லாவிட்டால்கிளப்பில்இரண்டுஅரைகுறைஆடையுடன்கூடியநங்கைகளின்தோளில்சரிந்துகொண்டுமதுஅருந்துவதுஅல்லதுமதுஅருந்திக்கொண்டேஃபோன்பேசுவதுஇதுதான்அவரதுமுக்கியபணிபேசாமல்அந்தகாலத்துவில்லனாகபிறந்திருந்தால்செமவாழ்க்கை
ம்
ண்டும்

ண்ணிராவதுளுக்கும்கன்கைந்துத்துக்களைமற்றபடி

ல்லதுபொறுப்பை

"மம்பட்டியானு'க்குப் பிறகு தியாகராஜன் கொஞ்சம் ஹீரோ பக்கமாக ஓரம் கட்டப்போக, ராதாரவி மட்டுமே ரொம்ப நாளைக்கு வேட்டி கட்டிய வில்லனாக வெற்றி வலம் வந்தார். அப்படியே அவர் பேண்ட் போட்டாலும் கோட்டு சூட்டுடன் தொழிலதிபர் வில்லனாகவே வந்தாரே ஒழிய, நகரத்து வில்லன் வேஷத்துக்கு அவரை யாரும் கூப்பிடவில்லை என்றே சொல்லலாம். இடைப்பட்ட காலத்தில், தமிழ் ரசிகர்களுக்கு உயரமான வில்லன்களைப் பார்க்கும் ஆசை வந்தது. மேலும் அவர்கள் ஒரே மாதிரி சுயமற்றவர்களாக க்ளைமாக்சில் கோழைகளைப்போல கதாநாயகனுக்கு பயந்து ஓடுபவர்களாக இல்லாமல் கொஞ்சம் விவரமானவர்களாகவும், சுயமரியாதை மிகுந்தவர்களாகவும் இருக்க வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்த்தனர். சத்யராஜும், ரகுவரனும் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய, பிற்பாடு இதே பாணியில் பிரகாஷ்ராஜும் அதே உடல் தகுதியுடன் வில்லனாக நெடுங்காலத்துக்கு வலம் வந்தார்.

தியாகராஜன் படத்தில் கூட எதுக்குடா சிலுக்கு என்று கேட்கிறீர்களா, ஹி ஹி ஹி பழைய பாசம் தான்.
இப்படி உயரமானவர்களை வில்லனாக்கி பார்க்கும் மனோபாவம் தமிழ் ரசிகர்களுக்கு வர காரணம் என்ன? என ஒரு கலாச்சார ஆராய்ச்சியே கூட செய்யலாம். இப்படியான வில்லன்கள் "வில்லர்' எனும் மரியாதையான இடத்துக்கு வந்தாலும் க்ளைமாக்சில் அவர்கள் தர்ம அடி வாங்குவது மட்டும் குறையவில்லை. என்ன சாகும்போது மட்டும் கொஞ்சம் விறைத்துக் கொண்டு அப்போதும் அதே திமிருடன் இறந்தார்கள். இடைப்பட்ட காலத்தில் சில படங்களில் எதிலுமே சேத்தி இல்லாமல் மன்சூர் அலிகான் வில்லனாக வலம் வந்தார்.

இப்படியாக பல "வில்லர்'கள் வலம் வந்தாலும் தனது யதார்த்தமான நடிப்பால் வில்லத்தனத்திற்கும் மரியாதை கொடுத்தவர் நாசர். கமல்ஹாசனுடன் அவர் வில்லனாக நடித்த பல படங்களில் குணச்சித்திரமும், ஹாஸ்யமும் களைக்கட்டின. இன்னும் சொல்லப்போனால் "தேவர் மகன்' படத்தில் அவரது நடிப்பு கமல் மற்றும் சிவாஜியின் நடிப்புக்கு இணையாக இருந்தது என்பது குறிப்பிடத் தகுந்தது. இதுவரையிலான வில்லன் நடிப்பில் நாசருடைய சிறந்த நடிப்பு வெளிப்பட்ட படம் எதுவென்று கேட்டால் "தேவர் மகன்'தான் என கண்ணை மூடி கூறிவிடலாம். அது பற்றி . . .
இதுவரையிலான வில்லன் நடிப்பில் நாசருடைய சிறந்த நடிப்பு வெளிப்பட்ட படம் எதுவென்று கேட்டால் "தேவர் மகன்'தான் என கண்ணை மூடி கூறிவிடலாம். அந்த அளவுக்கு அவரது நடிப்பு இன்னமும் நம் கண்முன்னால் நிற்கிறது.

ஒரு பக்கம் கமலுக்கு வில்லனாக நாசர் என்பதும், ரஜினிக்கு வில்லனாக ரகுவரன் என்பதும் எழுதப்படாத விதியாகவே இருந்தது. கமல், நாசர் இருவரும் "மெதட் ஆக்டிங்' எனப்படும் திட்ட நடிப்பில் ஒத்துப்போவதாலும் ரஜினி, ரகுவரன் இருவரும் "ஹைப்பர் ஆக்டிங்' எனப்படும் ஆற்றல் நடிப்பு வகையைச் சேர்ந்ததாலோ என்னவோ இந்த காம்பினேஷன் இயல்பாகவே ஒத்து போனது.
இதன் பிறகு அஜித், விஜய் ஆகியோர் காதல் கதைகளுடன் வந்தபோது வில்லனின் ரோல் கொஞ்சம் மாறத் துவங்கியது. அதுவரை உயரமாக இருந்த வில்லனுக்கு இப்போது மீசை காணாமல் போனது. கொஞ்சம் பணக்காரத் தன்மை அல்லது அமெரிக்க ரிட்டர்ன் ஆகியோர் வில்லன்களாக வந்தனர். இக்காலங்களில் கதாநாயகன் பெரும்பாலும் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவனாகவே இருந்து வந்ததால் அவர்களது வில்லன்கள் தவிர்க்க முடியாத பணக்கார இளைஞனாகவும், அமெரிக்க ரிட்டர்னாகவும் இருந்தார்கள். இக்காலத்தில் கரண்தான் பிஸியாக இருந்தார். அஜித்துடன் நண்பனாக, விஜய்யிடம் வில்லனாக அல்லது அஜித்திடம் வில்லனாக, விஜய்யிடம் நண்பனாக என மாறிமாறி பிஸி கால்ஷீட்டில் பறந்தார்.

இக்காலத்தில் க்ளைமாக்சில் வில்லன்கள் அடி வாங்குவது குறைந்து மிக நல்லவர்களாக மாறி நாயகியையும், நாயகனையும் சேர்த்து வைப்பது ஒன்றை மட்டுமே செய்து வந்தனர். க்ளைமாக்சில் நாயகன் கருத்து சொல்வது அல்லது அதிர்ச்சி அடைய வைப்பது போன்றவை இக்காலத்தில் துவங்கியது.
வில்லன்கள் என்பது ஆட்கள் என்பதிலிருந்து விலகி சமய, சந்தர்ப்பங்கள் வில்லன் ரோலில் முக்கிய பங்கு வகித்தன. வில்லன்கள் இல்லாத அல்லது அவர்களது ஆதிக்கம் குறைய குறைய தமிழில் மெல்ல நல்ல சினிமாக்கள் உதயமாகத் துவங்கின. அதன் முதல் துவக்க புள்ளியாக வந்த திரைப்படம் "சேது'.
1999-ன் இறுதியில் டிசம்பர் மாதம் வெளியான "சேது' திரைப்படத்தினால் மக்கள் மாறினார்கள். ஆனால், கோடம்பாக்கம் மாறவில்லை. அதன் பிறகும் வில்லன்கள் வந்தனர். ஆனந்தராஜ், நாசர், ரகுவரன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் அதீத பணக்கார பின்புலத்துடன் வில்லனாக வலம் வந்தனர். "சேது'வுக்கு பிறகு, தொடர்ந்து பல திரைப்படங்கள் தோல்வியுற்றபோதும் மக்களின் ரசனை மாற்றத்தை கோடம்பாக்கம் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.

தயாரிப்பாளர்கள் மீண்டும் க்ளைமாக்ஸ் கருத்து சொல்லும் படங்களையும், பணக்கார வில்லன்களையும் எதிர்பார்த்தனர். இக்கால கட்டத்தில்தான் பல இந்திக்கார வில்லன்கள் கஷ்டப்பட்டு தமிழ் பேசி விஜயகாந்த், அர்ஜுன் மற்றும் விஜய், அஜித், சூர்யா, விக்ரமோடு சண்டை போட்டனர். பிரகாஷ்ராஜ் அவர்களை தன் அனாயசமான வசன உச்சரிப்பால் ஓரம் கட்டி ஆதிக்கம் செலுத்தினார். இக்காலத்தில் தங்கர்பச்சான் "அழகி' எனும் மாறுபட்ட ஒரு திரைப்படத்தை மக்கள் முன் வைத்தார். பச்சையான மரம் செடிகொடிகளைபோல தங்கர்பச்சானின் செம்பட்டை முடி மனிதர்களும் பச்சையான வாசத்துடன் திரைப்படங்களில் அறிமுகமானார்கள். இவர் படத்தில் வில்லன் வாழ்க்கையின் விதியும், காலமுமாக இருந்தது.

"சேது'வில் மன நலம் குன்றியவர்களை காண்பிக்கும் காட்சியும், "அழகி'யில் சிறுவயது பருவ காட்சிகளிலும் இயக்குநர்கள் தங்களது தனித்தன்மையை நிரூபித்திருந்தனர்.
இக்காலத்தில் தமிழில் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடும் அதன் காரணமாக இயக்குநர்களின் கதை சொல்லல் போக்கும் நிறையவே மாறத் துவங்கியிருந்தது. கெளதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் போன்ற தொழில்நுட்ப தேர்ச்சி கொண்ட, அதே சமயம் புதிய தலைமுறைக்கான ரசனைகளை அறிந்த இயக்குனர்கள் இளைஞர்களை கவர்ந்தனர். செல்வராகவனின் "துள்ளுவதோ இளமை' இக்கால இளைஞர்கள் மற்றும் சமூகத்தின் உளவியலை அப்பட்டமாக சித்தரித்திருந்தது. அதன் பிறகு, வெளியான இவரது படங்களில் செக்ஸூம், வன்முறையும் இடம் பிடித்ததே தவிர, அந்த யதார்த்தம் காணாமல் போனது ஒரு இழப்பு.

இவர்களின் வரவுக்குப் பிறகு தமிழின் மிகச் சிறந்த மாறுதல் 2004-ல் தான். இதற்கு முன் பாலா, தங்கர்பச்சான் ஆகியோரது பாதையில் சேரன் மற்றும் பாலாஜி சக்திவேல் பயணத்தை துவங்கினார்கள். "ஆட்டோகிராஃப்', "காதல்' இந்த இரண்டு படங்கள்தான் முதன் முதலாக திரைக்கதை வசனத்தை சினிமாவாக பிரதி எடுக்கும் வழமையான போக்கை மாற்றின. அதுவரை காட்சி ரீதியாக கதை நகர்த்தும் தன்மை விலகி ஷாட் பை ஷாட்டாக கதை நகர்த்தும் உலக சினிமாவின் அடிப்படை தகுதியை தமிழ் சினிமா இப்படங்களின் மூலமாகத்தான் எட்டத் துவங்கியது. இதில் "காதல்' படத்தில் வில்லன் இருந்தாலும் அக்காலகட்டத்தில் மண் சார்ந்த அல்லது இனவரவியல் கூறுகளுடன் கூடிய பாத்திரப்படைப்புகளின் துவக்கமாக இந்த படத்தின் வில்லன்களின் தன்மை மாறியிருந்தது. இந்த இரு படங்களும் தமிழில் தர அடிப்படையில் முதன் முதலாக வெளிநாடுகளில் நடக்கும் உலக பட விழாக்களில் பங்கேற்கும் தகுதியைப் பெற்றிருந்தன.
"காதல்' லண்டன் திரைப்பட விழாவிலும், "ஆட்டோகிராஃப்' டொராண்டோ திரைப்பட விழாவிலும் பங்கேற்கும் தகுதியை அடைந்து, தமிழர்களின் நீண்ட நாள் கனவை பூர்த்தி செய்தன. அதிலும் "ஆட்டோகிராஃப்' முதல் காட்சியில் நாயகன் ஊரில் கால் அடி வைக்கும்போது ஞாபக அடுக்குகளிலிருந்து சரிந்து விழுவதாக காட்டப்படும் நூற்றுக்கணக்கான வாழ்க்கைத் துணுக்குகள் தமிழ் சினிமா அதுவரை காணாதது. மேலும், படத்தின் துவக்கத்தில் வரும் பள்ளி பருவ காதல் காட்சி உலக சினிமாவின் தரத்திற்கு மிகச் சரியான உதாரணம். இதனை தொடர்ந்து வந்த அடுத்தடுத்த பருவங்கள் அந்த தரத்திலிருந்து தன்னை குறைத்துகொண்டே வந்தன. என்றாலும் தமிழில் கடந்த பத்தாண்டுகளில் உலக தர மதிப்பீட்டில் முன்னணியில் இருக்கும் படமாக "ஆட்டோகிராஃப்' படத்தைதான் சொல்ல முடியும்.

அதேபோல "காதல்' படத்தில் கையாளப்பட்ட சில அரிதான நுட்பங்கள் அதன் நம்பகத்தன்மையையும், கலைதரத்தையும் கூட்டித் தந்திருந்தன. இறுதிக் காட்சியின் மிகைத்தன்மை மற்றும் செயற்கையான முடிவு ஆகியவை மட்டும் சரிசெய்யப்பட்டிருந்ததால் இதுவும் தமிழின் உன்னதத்தை உலக சினிமாவின் பட்டியலில் இடம் பெற வைத்திருக்கும். சேரனின் "தவமாய் தவமிருந்து' இதே வரிசையில் வந்திருந்த தரமான மற்றொரு திரைப்படம். கடின உழைப்பும், கலை நயமும் சிறப்பாக வடிவம் கொண்டிருந்த இப்படம் பொது அனுபவமாக மாறாமல் தனி மனித அனுபவமாக, அதாவது நாவல் வாசிப்பது போன்ற அனுபவத்தோடு தங்கிப் போனதால் "ஆட்டோகிராஃப்" அடைந்த உயரத்தை இப்படம் அடைய முடியாமல் போனது.
இனவரைவு படங்களின் வருகை!
இப்படி, "காதல்' உருவாக்கிய இனவரைவு வில்லன்கள் மெல்ல தமிழில் பல திரைப்படங்களில் பிரவேசிக்கத் துவங்கினர். இச்சமயத்தில் வெளியான பல சென்னை நகர் சார்ந்த குறிப்பாக வட சென்னையைப் பின்புலனாக கொண்ட பல படங்களில் இத்தகைய இனவரைவு வில்லன்கள் அதிகமாக தோற்றமளித்தனர். பலர் கழுத்துவரை நீளமாக முடியை வளர்த்துக் கொண்டு பயமுறுத்தினர். "காக்க காக்க' படத்தில் வில்லனாகத் தோன்றிய ஜீவன் இந்த ஃபேஷனைத் துவக்கினார். இப்படியாக முடியை இரண்டு பக்கமும் பரப்பிக் கொண்டு தோற்றமளிக்கும் வில்லன்களின் ஆதிக்கம் இன்றுவரை குறையவில்லை.

ஒரு கட்டத்தில் இனவரைவை அடிப்படையாகக் கொண்ட கமர்ஷியல் ஆக்ஷன் படங்கள் அதிகமாக வரத் துவங்கின. இதற்கு அப்போது சக்கை போடு போட்ட உலக சினிமாவான "சிட்டி ஆஃப் காட்' மூல காரணமாக இருந்து, நம் இயக்குநர்களை அதன் கவர்ச்சியில் விழ வைத்தது. இதுபோன்ற படங்களில் குறிப்பிடத் தகுந்த படமாகவும் வடசென்னை வாழ்வின் ஒரு பகுதியாக "கானா' வை சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி பெற்ற படம் "சித்திரம் பேசுதடி'. இதில் நானே ஒரு அங்கமாக இனவரைவு பாத்திரமாக நடிக்க நேர்ந்தது.

இப்படத்தில் வில்லன் ஒரு மண்டி வியாபாரியாக பேரம் பேசிக் கொண்டே தன் அடியாட்களுக்கு கட்டளையிடுவது வேடிக்கையாகவும், புதுமையாகவும் இருந்தது. இப்படியாக பல படங்கள் இக்காலத்தில் வந்தாலும் பிற்பாடு வந்த "பொல்லாதவன்' சென்னை இனவரைவியலைத் துல்லியமாக சித்தரித்த படமாக வெளியானது. ஆனால், இதில் வில்லன் ஆதிக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் அக்காலகட்டத்துக்கான புதிய மசாலாப் படமாக மாறிப்போனது விபத்து.
தொடர்ந்து வெளியான படங்களில் "பருத்திவீரன்', "வெயில்' போன்ற படங்கள் மட்டுமே மேற்சொன்ன "ஆட்டோகிராஃப்' மற்றும் "காதல்' திரைப்படத்திற்கு இணையான தாக்கத்தை பார்வையாளர்கள் மத்தியில் உண்டாக்கின.

"பருத்திவீரன்' திரைப்படம் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் கத்ரினா புயல் என்றுதான் சொல்ல வேண்டும். தொழில்நுட்ப ரீதியாக தன் அசாத்திய புலமையை இயக்குநர் இத்திரைப்படத்தில் அழுத்த பதித்திருந்தார். இரண்டும் இனவரைவு படங்களாகவும் "காதல்' படத்தைத் தொடர்ந்து மதுரை சார்ந்த இனவரைவு படங்களின் நீட்சியாகவும் இருந்தன. இரண்டு படங்களிலும் தென்பகுதி மக்களின் வாழ்வு உள்ளும் புறமுமாக தோலுரிக்கப்பட்டது. "வெயில்' திரைப்படம் மனித வாழ்வின் அவலம் ஆன்ம விசாரமாக ஒரு இலக்கியத் தகுதியுடன் படைப்பாக்கம் பெற்றிருந்தது. ஒழுங்கிற்குள் கட்டமைக்கப்படாத திரைக்கதை அதன் குறையாகிப்போனது. அதேபோல "பருத்திவீரன்' தமிழின் மிகச்சிறந்த காட்சிபடுத்துதலை தக்கவைத்துக் கொண்டிருப்பினும் அதன் உள்ளடக்கம் வணிக ரசனையைச் சார்ந்தே இயக்கம் கொண்டிருந்த காரணத்தாலும் பிற்போக்கு தனத்தை ஆதரிக்கும் இறுதிக் காட்சியின் வன்முறை காரணமாகவும் உலகத்தர மதிப்பீட்டை இதனால் எட்ட முடியாமல் போனது. ஆனாலும் "வெயில்' கேன்ஸ் திரைப்பட விழாவிலும் மற்றும் "பருத்திவீரன்' ஜெர்மன திரைப்பட விழாவிலும் கலந்து தமிழர்களுக்கு பெருமையை ஈட்டிதந்தன.
இந்த நான்கு படங்களுடன் இக்கால கட்டத்தில், "சென்னை 28', "மொழி', "சுப்ரமணியபுரம்', "பூ', "வெண்ணிலா கபடிக்குழு', "பசங்க', "நாடோடிகள்' போன்ற படங்கள் இதே வரிசையில் தொடர்ந்து வெளியாகி, வெற்றி பெற்று வருவதும் வணிகத் திரைப்படங்கள் தோல்வியடைந்து வருவதும் குறிப்பிடத் தகுந்தது. மேற்சொன்ன படங்களில் "சுப்ரமணியபுரம்' படம் மட்டுமே வில்லனை தக்கவைத்துக் கொண்டிருந்தது. ஏற்கெனவே இருந்த சென்னை இனவரைவு, மதுரை இனவரைவு ஆகிய இருகூறுகளுடன் "வெண்ணிலா கபடிக்குழு', "பசங்க' போன்றவை தமிழகத்தின் வன்முறை இல்லாத இதர சிறு நிலப்பரப்புகளை பின்புலனாகக் கொண்டு வெளியாகி இருந்தன.
என்னதான் நல்ல படமாக இருந்தாலும் வில்லனை தக்கவைக்கும்போது அந்தப் படம் தவிர்க்க முடியாமல் வன்முறை சார்ந்து இயங்க நேரிடுவதையும் யதார்த்தம் இழப்பதையும் நம்மால் உணர முடிகிறது.

இனவரைவு படங்களின் காரணமாக குறிப்பிட்ட பகுதி மக்களின் கலாச்சாரம் பொதுத் தன்மைக்குள் ஊடுருவுவது வரவேற்கத் தகுந்ததாகவும் பன்னாட்டு தொழில் முதலீடுகளின் காரணமாக மாறி வரும் கலாச்சார மாண்புகளுக்கு தக்க பதிலடியாகவும் இயங்கி வருவது ஒரு வரவேற்கத்தக்க விஷயமே! ஆனாலும் இதுபோன்ற படங்களில் கதாநாயகர்களாக சித்தரிக்கப்படும் லும்பர்கள் பராகிரமசாலிகளாகவும் பெண்களை தங்களது மோசமான வசனங்களால் இழிவுப்படுத்துபவர்களாகவும் இருக்கின்றனர். இளைஞர்களின் கைதட்டலையும் அதன் மூலம் கல்லா கட்டலையும் குறிவைத்து தரமான பின்புலத்துடன் உண்டாக்கப்படும் இது போன்ற திரைப்படங்களால் சமூகம் பெருத்த சீரழிவுக்கே அழைத்து செல்லபடுகின்றன. பெண்களை கொச்சைப்படுத்தும் ஒரு படம் அது. எத்தனை தரமாக எடுக்கப்பட்டிருந்தாலும் மோசமான படமே. மதுரை இனவரைவு சார்ந்து எடுக்கப்பட்ட பல படங்கள் தொழில் நுட்பத்தில் என்னதான் சிறந்து விளங்கினாலும் வன்முறை மற்றும் பெண்களை இழிவுப்படுத்தும் செயல்களில் அதிகமாக ஈடுபடுவதும் பிற்போக்கான கருத்துகளை ஆதரித்து வருவதும் வருந்தத் தக்கதாகவே இருக்கிறது.
பொதுவாக இக்கட்டுரையை காலம்தோறும் நிகழ்ந்துவரும் வில்லன்களின் மாறுபாட்டை தான் எழுத நினைத்தேன். ஆனால் தவிர்க்கவே முடியாமல் 2000-க்குப் பிறகான சினிமாக்களை அலசும் விதமாக மாறிப்போய்விட்டது. இப்படியெல்லாம் எழுதுவதால் இது ஏதோ வில்லன்களை ஒழித்துக்கட்ட நடக்கும் சதியாக யாரும் கருத வேண்டாம். இது ஒரு பார்வை அவ்வளவே. அதற்காக நான் சொல்வது மட்டுமே வேதவாக்கும் அல்ல!
ஆரூர் முனா
No comments:
Post a Comment