Saturday, 21 March 2015

புத்தக கண்காட்சியில் பதிவர்களுடன் கலாட்டா சந்திப்பு - பழசு 2012

புத்தக கண்காட்சி துவங்கிய இரண்டாம் நாளே நான் ஒரளவுக்கு வாங்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த புத்தகங்களை வாங்கியாகி விட்டது. சனியன்று பதிவுலக நண்பர்கள், மெட்ராஸ்பவன் சிவா, பிலாசபி பிரபா, கேஆர்பி அண்ணன், ஓஆர்பி ராஜா அண்ணன், கேபிள் அண்ணன் ஆகியோர் புத்தக கண்காட்சியில் இருப்பதாக தெரிய வந்ததாலும் என் சித்தி மகன் சங்கர் புத்தகங்களை வாங்க வேண்டி என்னை அழைத்ததாலும் நான் சென்றேன். வெள்ளியன்று இருந்தது போல் இல்லாமல் சனியன்று கசகசவென்று ஒரே கூட்டம்.

சில புத்தகங்களை சங்கருக்கு வாங்கி கொடுத்து விட்டு டிஸ்கவரி ஸ்டால் பக்கம் வந்த போது பதிவுலக நண்பர்கள் அனைவரையும் சந்தித்து அளவளாவினேன். பாண்டிச்சேரியிலிருந்து பதிவு வாசகர் நண்பர் மனோகரனை முதன்முறையாக சந்தித்தேன். நானே சற்றும் எதிர்ப்பார்க்காத நான் படித்த பள்ளியை பற்றி எழுதிய பதிவை சிலாகித்து பேசினார். நண்பர்களுடன் சந்திப்பு மிகுந்த கலாட்டாவாக இருந்தது. அப்பொழுதே மணி இரவு 08.30 ஆகி விட்டிருந்ததால் நான் திருவாரூரைப் பற்றி குடவாயி்ல் பாலசுப்பிரமணியன் எழுதிய புத்தகங்களை வாங்க வேண்டியிருந்ததால் அப்பொழுதே அரட்டை குழுவிலிருந்து விலகி சென்றேன். அங்கு சென்றால் அண்ணன் வீடு திரும்பல் மோகன் குமார் வந்தார். அவரிடமும் அளவளாவி விட்டு மணி 9 ஆனதால் வளாகத்தை விட்டு வெளியேறினோம்.

இரண்டாம் முறையாக சென்ற போது நான் வாங்கிய நூல்கள் :
குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய திருவாரூர், தஞ்சாவூர் கோயில்கள், டாக்டர் காயத்ரி எழுதிய ரஜினி பேர கேட்டாலே, நல்ல தமிழ்ப் பெயர்கள், தியாகத்தின் பாதையில் திலீபனுடன் 12 நாட்கள், Kbb. நவீனின் நீங்களும் இயக்குனராகலாம், காந்தியும் காங்கிரசும் - ஒரு துரோக வரலாறு, கேபிள் அண்ணனின் தெர்மகோல் தேவதைகள், சினிமா வியாபாரம், மீண்டும் ஒரு காதல் கதை, முனைவர்.வெ.மு. ஷாஜகான் கனியின் சினிமா எடுக்கலாம் வாங்க, புலவர் மு.பசுமலையசுவின் செந்தமிழும் சித்த மருத்துவமும், அமரர் கல்கியின் தியாக பூமி, ஒரு யோகியின் சுயசரிதம், சிவசங்கரியின் நண்டு, ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஆதனூர் சோழனின் அமெரிக்க எதிர்ப்பின் சிற்பி பிடல் காஸ்ட்ரோ, யுவகிருஷ்ணாவின் அழிக்கப்பிறந்தவன், ஜெயகாந்தனின் யுக சந்தி, சுஜாதாவின் ஓலைப்பட்டாசு, சுஜாதாட்ஸ், பா. தீனதயாளனின் கமல், ஆர். முத்துக்குமாரின் வாத்யார் எம்ஜிஆர், ரகோத்தமனின் ராஜீவ் கொலை வழக்கு ஆகியவை.


இந்த ஆண்டு புத்தகங்கள் வாங்கிய வரை போதும் என்று நினைக்கிறேன். இனிமேல் அடுத்த ஆண்டு புத்தக திருவிழாவில் தான் வாங்க வேண்டும்.

ஆரூர் முனா

No comments:

Post a Comment