ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதை 90 சதவீதம் சக்ஸஸ்புல்லாக நடத்திக்
காட்டுவது என்பது டீம் ஒர்க்காக இருந்தாலும் சாதாரண காரியமில்லை. நான்
இதற்கு முன் மிகப்பெரிய கட்டுமான நிறுவனத்தில் சென்னை மண்டல அலுவலகத்தில்
நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்தவன். எனக்கு தான் தெரியும், அதன் சிரமம். ஒரு
பெரிய ஹோட்டலில் கேம்பஸ் இன்டர்வியூ, மேனேஜ்மெண்ட் டிரேயினிங். ஆண்டுக்கு
ஒரு முறை ஊழியர்களுக்கான சந்திப்பு ஏற்பாடுகள். இதையெல்லாம் என்னுடன் 20
உதவியாளர்கள் இருந்தும் செய்து முடிப்பதற்குள் நாம் ஒரு முறை கூட அமர
முடியாது, எங்காவது தப்பு ஏற்பட்டு விடுமோ யாராவது ஒரு விஷயத்தை குறையாக
சொல்லி விடுவார்களோ என்று நாம் முழு டென்ஷனுடன் அலையவேண்டியிருக்கும்.
இவ்வளவையும் தாண்டி ஒரு சக்ஸஸ்புல்லான பதிவர் சந்திப்பை நடத்தி முடித்த இந்த குழுவுக்கு எந்தவித கருத்து மாறுபாடும் இன்றி தலைவணங்குகிறேன். ஒரு நிகழ்ச்சியை ஆர்கனைஸ் செய்து அதில் மூன்று வேளை உணவு அதில் அசைவமும் கூட, தங்குமிடம், அரங்க ஏற்பாடு, மைக், புரோஜக்டர் ஏற்பாடு, இடையில் கூல்டிரிங்க்ஸ், உற்சாகபான பிரியர்களுக்கு அதுவும், உ.பா வினால் எந்தவித தொல்லைகளும் ஏற்படாமல் காத்த விதம், வண்டிகள் பார்க்கிங் வசதி, இன்னும் பல பல பல.
இத்தனைக்கும் என்னைப்போல் முதல் முறையாக பதிவர்களை சந்திக்க வந்தவர்களையும் பிரபல பதிவர்களுக்கு நிகராக வரவேற்ற விதம், உபசரிப்பு, பதிவர்களில் அதிக ஹிட்ஸ் வாங்கியவர்கள் என்ற எண்ணமில்லாமல் கருத்து செறிவுள்ள பதிவர்களுக்கும் சமூக சேவையாளர்களுக்கும் அங்கீகாரம் வழங்கிய நேர்மை, அருமை. சிலருக்கு சிற்சில குறைகள் இருந்தாலும் ஒட்டு மொத்தமாக வெறும் 15 உறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டு செயல்படுத்திய விதம், ஆர்கனைசிங் குழுவை எத்தனை முறை பாராட்டினாலும் அதற்கு ஈடு இணையில்லை.
ஈரோட்டுக்கு போய் வந்த கதையை ஏற்கனவே 15க்கும் மேற்பட்ட பதிவர்கள் பத்தி பத்தியாக பிரித்து மேய்ந்து விட்டார்கள். அதனை தொடராகவும் வெளியிடும் எண்ணத்தில் இருப்பதால் சந்திப்பு எப்படியிருந்தது, யாரை சந்தித்தோம் என்ற விவரங்களுக்குள் நான் போகவில்லை. அதற்கு வேறு பதிவுகள் இருக்கின்றன.
ஆனால் முன்னின்று வெற்றிகரமாக நடத்திக் காட்டிய தாமோதர் சந்துரு, கதிர், ஆருரன், ஜாபர், பாலசி, லவ்டேல் மேடி, செல்வம், பாஸ் கார்த்தி, வால்பையன் அருண்ராஜ், வேலு, அகள்விளக்கு ராஜா, பவளசங்கரி, டாக்டர் ரோகிணி மற்றும் சங்கவி அடங்கிய குழுவுக்கு சிரம் தாழ்ந்த பாராட்டுக்கள்.
கடைசியாக தலைப்பின் விஷயத்திற்கு வருவோம்.
சங்கவியை இதற்கு முன் நேரில் பார்த்ததில்லை, ஓட்டு போட்டதில்லை, பின்னூட்டமிட்டதில்லை, தொலைபேசியில் பேசியதில்லை. அவருடைய பதிவுகளை நான் படித்துள்ளேன். அதுபோல் தான் அவரும் என் பதிவுகளை மட்டுமே படித்துள்ளார். ஆனால் வந்தவர்களை வரவேற்று இன்முகத்துடன் மனம்விட்டு பேசி நட்பு பாராட்டிய சங்கவி மற்ற ஏற்பாட்டாளர்களை விட மனதுக்கு சற்று நெருக்கமாக வருகிறார். ஒவ்வொரு முறையும் நம்மை சாப்பிட அழைத்து சென்ற விதம், மற்றவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட செயல், வந்தவர்களை தங்க ஏற்பாடு செய்து மட்டுமில்லாமல் தங்கும் அறைக்கே வந்து கவனித்தது, காலையில் அனைவரையும் ஆட்டோ பிடித்து அரங்கிற்கு அனுப்பிய செயல், விழா முடிந்து அனைவரையும் இன்முகத்துடன் வழியனுப்பி வைத்தது என என்னுடன் மிகுந்த நட்பு ஏற்படுத்திக் கொண்ட சங்கவிக்கு நன்றிகள் பல.
அதற்காக மற்றவர்களை குறைத்து மதிப்பிடுகிறேன் என்ற அர்த்தமல்ல.மற்றவர்கள் பின்இருந்து இயக்கினார்கள் என்றும் முன்நின்று செய்தினாலேயே சங்கவி எனக்கு நெருக்கமானார் என்று எனக்கும் தெரியும், விழா ஏற்பாட்டாளர்களான உங்களுக்கும் தெரியும்.
நன்றி ஈரோட்டு வலைப்பதிவர்களே, கூடுதல் நன்றி சங்கவி சதீஷ்க்கு.
ஆரூர் முனா

No comments:
Post a Comment