Monday, 9 November 2015

வேதாளம் - சினிமா விமர்சனம்

எல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட்ட தலைமை, நகர தலைமை என்று இருப்பார்கள். எங்கள் ஊரில் மட்டும் ரெண்டு மாவட்ட தலைமை ரசிகர் மன்றங்கள் இருக்கு. புதுசா வந்து பார்ப்பவனுக்கு எது ஒரிஜினல் எது நியு ஒரிஜினல் என்று வித்தியாசம் தெரிஞ்சிக்க முடியாது.


அது மாதிரி தான் அஜித் ரசிகர்கள் நிலைமையும். அவரே அதிகாரப்பூர்வமாக மன்றங்களை கலைத்து விட்டார். இவனுங்களோ சொரணையே இல்லாம நகர தலைமை, மாவட்ட தலைமை ரசிகர் மன்றங்கள் என்று ப்ளெக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். ஏண்டா கொஞ்சமாவது மானம் ரோசம் வேணாம். சோத்துல உப்பு தான போட்டு துன்றீங்க. 

இது எதுக்கு இப்பவா, நான் பார்த்த காட்சிக்கான டிக்கெட் மாவட்ட தலைமை அஜித் ரசிகர் மன்றத்தின் சார்பாக அச்சிடப்பட்டு இருந்தது. 

சரி படத்துக்கு வருவோம். 

நான் ஒரு படத்தின் கதையை சொல்றேன். கவனமா படிங்க. பத்து வருடத்துக்கு முன்பு சரத்குமார் நமீதா (ஸ்ஸ்ஸ்ஆஆஆஆ) நடித்த ஏய்ன்னு ஒரு படம். வடிவேலு காமெடி கூட செமயா இருக்கும்.


பழனியில் சரத் டியுப் லைட் விற்பவராக வருவார். அவருடன் இணைந்து வடிவேலு தொழில் பண்ணுவார். அவருக்கு ஒரு தங்கச்சி, தங்கச்சிக்காக உயிரையே கொடுப்பார். தங்கச்சி கலெக்டருக்கு படிக்க வைக்க வேண்டுமென்பதற்காக சிரமப்பட்டு படிக்க வைப்பார். கோவமே படாமல் சிரித்த முகத்துடன் வடிவேலுவை இணையாக வைத்து காமெடி செய்து வருவார்.

தங்கச்சிக்கு பிரச்சனை கொடுப்பதால் வின்சென்ட் அசோகனை போட்டு பெரட்டி எடுத்து தான் பயங்கர பலசாலி என்பதை பார்வையாளர்களுக்கு நிரூபிப்பார். இடைவேளையில் நமீதா ஒரு உண்மையை கண்டுபிடிக்க சரத்துக்கு தங்கச்சியே கிடையாது, அவர் வளர்ப்பு தங்கச்சி என்று ட்விஸ்ட் வைப்பார்கள்.


இப்போ வேதாளம் படத்தின் கதை. அஜித் கொல்கத்தாவில் டாக்ஸி ஓட்டும் அப்பாவி, சூரி டாக்ஸியின் ஓனர். கோவமே வராத சாது, அப்பாவி, தங்கையான லட்சுமிமேனனை படிக்க வைக்க சிரமப்படும், தங்கை மேல் உயிரையே வைத்து இருக்கும் ஒரு அன்பு அண்ணன். 

ஒரு கெட்டவனை போலீஸில் காட்டி கொடுத்து விட்டு அதற்காக வில்லன்களிடம் சாக இருக்கும் போது எல்லாரையும் போட்டு பெரட்டி எடுத்து தான் பயங்கர பலசாலி என்பதை பார்வையாளர்களுக்கு நிரூபிப்பார். ஸ்ருதி அஜித் பயங்கர கொலைகாரன் என்பதை கண்டு பிடிக்க அஜித்துக்கு தங்கச்சியே கிடையாது, அவர் வளர்ப்பு தங்கச்சி என்று ட்விஸ்ட் வைப்பார்கள்.


ஏய் படத்தில் இடைவேளைக்கு பிறகு பெர்பார்மன்ஸில் பின்னி எடுத்து வில்லன்கள் கையால் சாவார் கலாபவன் மணி. அவரது தங்கையை  தான் பழனியில் சரத் தன் தங்கையாக தத்தெடுத்து வளர்த்து வருவார்.

இந்த படத்தில் இடைவேளைக்கு பிறகு பெர்பார்மன்ஸில் பின்னி எடுத்து வில்லன்கள் கையால் சாவார் தம்பி ராமையா. அவரது மகளை  தான் கொல்கத்தாவில் அஜித் தன் தங்கையாக தத்தெடுத்து வளர்த்து வருவார்.

இறுதியில் வில்லன்களை கொன்று படத்தை சுபமாக முடிக்கிறார்கள் சரத்தும் அஜித்தும்.

சாரி. கம்பேரிசன் கூடாதுல்ல. ஆனா அந்த படத்தை அப்பட்டமாக காப்பி அடித்தால் என்ன செய்வது. 

படத்தின் ஆகச் சிறந்த எரிச்சல் சூரி. அவருக்கு ஒரு பர்சென்ட் கூட காமெடி வரவில்லை. மொத்த படத்தின் காமெடியை அவருக்கு கொடுத்து நம்மையும் சாகடிச்சியிருக்கிறார்கள்.

முதல் பாதி செம அறுவை. உக்காரவே முடியலை. இரண்டாம் பாதி கொஞ்சம் தேவலாம் முன்பாதியுடன் ஒப்பிடுகையில்.

ஒரே ஒரு காட்சி விளக்குகிறேன், இந்த இயக்குனர்கள் ரசிகர்களை எவ்வளவு மடையன் என்று நினைத்து காட்சிகளை அமைக்கிறார்கள் என தெரிந்து கொள்ளுங்கள்.

தம்பியை கொன்றவன் யாரென தெரியாத வில்லன், 3 ஐடி வல்லுனர்களை வைத்து ரெண்டு ஆப்பிள் மேக் கம்ப்யுட்டர்கள் , ஒரு புரொஜக்டர். ஒரு ஜிபிஆர்எஸ் ட்ராக்கர், ஒரு கம்ப்யுட்டர் ஆபீஸ் வைத்து சிரமப்பட்டு ஜப்பானுக்கெல்லாம் போன் செய்து அது அஜித் தான் என கண்டு பிடிக்கும் ஒரு தருணத்தில் வெறும் பட்டன் உள்ள செல்போனை வைத்துக் கொண்டு அதை கூட யூஸ் செய்யாமல் வில்லன் இடத்தை கண்டு பிடித்து வந்து அவர்களை கூண்டோடு கொலை செய்வார். . . . த்தா எங்களையெல்லாம் பார்த்தா எப்படிடா தெரியுது உங்களுக்கு. 

அதை விட கொடுமை பத்து கிமீ தள்ளி யிருந்த ஸ்ருதி அடுத்த வினாடி அந்த கட்டிடத்தின் பதினைந்தாவது மாடியில் அஜித் செய்யும் கொலையை நேரில் பார்ப்பது.

ரெட்னு ஒரு சூர மொக்கை பார்த்து விட்டு வரும்போது எப்படி ஒரு எரிச்சல் தோன்றியதோ, அதை விட ஒரு மடங்கு அதிகமாகவே இப்போ எரிகிறது.

ஆரூர் மூனா

84 comments:

  1. அடடே நல்ல வேளை நான் தப்பிச்சிட்டேன்,..நன்றி

    ReplyDelete
    Replies
    1. நீங்க எஸ்கேப்பு, நான் தான் மாட்டிக்கிட்டேனா

      Delete
  2. I am not feel well for any ajith movie ! Sorry.

    ReplyDelete
  3. அட! அஜித்துக்கு மீண்டும் சறுக்கலா?

    ReplyDelete
  4. அதே பழைய முருங்கை மரம் தானா...?

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க டிடி, ஏறி விட்டது

      Delete
  5. நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க, நீங்கலாம் எஸ்ஸாகிட்டீங்க.

      Delete
  6. தூங்காவனம் பிழைத்தது. அஜித்துக்கு கமல் நன்றி சொல்லவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. சொல்லிடுவார்னு தான் நினைக்கிறேன்.

      Delete
  7. Poda suuu vimarchanam pandra mogaraye paru ttthhhhhhaaa......

    ReplyDelete
    Replies
    1. கண்ணாடில பார்தேனுங்க. நல்லா தான் இருக்கு

      Delete
    2. Hello mind ur words brother whoever bought ticket has the right to express their's . so shut the **** up

      Delete
  8. Dai sunni ne vijay rasigan thane

    ReplyDelete
    Replies
    1. Hello ungaluku ajith teriyuma elati neenga avaruku finance pana poringala he just wrote his review. If u are ajith fan u are bringing disgrace for his name by using abusive words. Boss abuse case kuda unga mela podalam teriyuma ??. Thevalam punnakikathinga

      Delete
    2. ஸ்ரீராம், கூல் கூல், அன்பே சிவம்

      Delete
  9. நிச்சயமாக இது நியாயமான விமர்சனம் இல்லை. படம் அவ்வளவு மோசமில்லை. நிச்சயமாக ஹிட்தான்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா, இது உங்கள் கருத்து, அது போல் என் கருத்து தான் இந்த விமர்சனமும்

      Delete
  10. Thala cinema agarathiye veramathiri
    Sara sir cinema rsaigar - final output

    Sumar - super
    Super-superb
    Superb-supeduberhit
    Superduberhitna -blockbuster

    Suramokkainalum - producer and distributors mugat hula sirippu

    Thala nadunilai vimarsanathukku orupadimela thala nitharsana unmai

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், தல எப்பவும் ஒரு படி மேல தான்.

      Delete
  11. I'm not Ajith fan. Part of Diwali celebration I saw this movie and movie is really good. Please avoid this kind of false reviews

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேணா அஜித் ரசிகனா இல்லாம இருக்கலாம். ஆனா நான் அஜித் ரசிகன். எனக்கு பிடிக்கலைனா பிடிக்கலைன்னு தான் சொல்லுவேன். பொய்யா எதுக்குங்க புகழனும்

      Delete
  12. ஜி ஏய் படம் ரீமேக் கா? சொல்லவே இல்ல!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க, அப்படியே ஏய் படத்தின் உல்டா

      Delete
  13. இன்னும் நிறைய அனானிகள் வருவாங்க ஜி..கவனம் பொறுமை

    ReplyDelete
    Replies
    1. நன்றி அன்பழகன். நான் நிதானத்தில் தான் இருக்கிறேன்.

      Delete
  14. சரி விடுங்க ஜி...ரசிகர்கள் படத்தை ஓட்டிருவாங்க..குற்றம் கடிதல் நல்லாருக்கு னு சொன்னப்ப எவன் பாத்தான்!?!?

    ReplyDelete
    Replies
    1. மாஸ் படத்துக்கும் க்ளாஸ் படத்துக்கும் எதற்கு கம்பேரிசன். நான் இந்த மாதிரி டெம்ப்ளேட் தெலுகு படங்கள் நிறைய பார்த்தவன், அதனால் எனக்கு படம் ரொம்ப சலிக்க ஆரம்பிச்சிடுச்சி. நான் மாஸ் பட ரசிகன் சார்.

      Delete
  15. Anne vedalam padathukkum red padathukkum yennanne sambantham.. Oh rendum mottai getup ah? Aanalum arivalinne nee.. By the way both the films you mentioned are not that much bad you projected.. Neenga ennathan try pannalum unga Vijay kondai ajith film reviewla veliya therinjiruthu.. And you always stomach burning for ajith films ten y u get tickets for fdfs and damage your stomach.. Am pure thala fan but never watch Vijay films on theatre.. Lot of thala fans not able to get tickets, you may give it up to them in future.. Its better

    ReplyDelete
    Replies
    1. Boss this is ur review and this is his review. So he bought 120+30 for this movie, so he gave his view. Inga enga vijay vantharunu terila. summa ajith vs vijay sanda podama padatha pathaoma enjoy panunga

      Delete
    2. நான் விஜய் ரசிகன் கிடையாதுப்பா, நான் ரஜினி ரசிகன், அப்படியே வழியாய் அஜித் ரசிகன். அவ்வளவு தான். விமர்சனம் என்பது என் கருத்து தான். அஜித் வளர்ச்சியை பார்த்து வயிறெரிய நான் என்ன விஜய்யா.

      இருந்தாலும் பதிவிட்டதற்கு நன்றி நண்பா.

      Delete
    3. நன்றி ஸ்ரீராம். ஆனால் பொதுவில் எதற்கு இந்த உணர்ச்சிப்பொங்கல் .அன்பே சிவம்.

      Delete
  16. I am one of the Silent reader for his Reviews..Last month i searched for PULI review(but he didnt reviewed)I thought may be he stoped reviewing or busy with some other things..But today he reviewed Vedalam in very badly(First time he is using abusing words) about Ajith Fans.(may be he paid More for the Ticket price)..

    Like ThaniOruvan Movie dialogue(He didn't reviewed Puli (every one knows no need in details) but he reviewed very fast & badly Vedalam.
    I believe He want to Revenge Ajith fans for Trolling Puli..

    Good Try....................but Failed......

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் தான் என் பலம். நான் இன்னும் எழுதனும் என்று ஆசைப்படுவதற்கு காரணம் உங்களைப் போன்ற சைலண்ட் வியுவர்ஸ் தான். சிரம் வணங்கி நன்றி நண்பா.

      புலி படத்தின் கதையே வேறு. நான் முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் வாங்கிப் போய் அரங்கில் காத்திருந்து படம் திரையிடப்படாமல், அதற்கு அடுத்த காட்சிக்கும் டிக்கெட் வாங்கி அந்த காட்சியும் திரையிடப் படாமல் ச்சீ இந்த பழம் புளிக்கும் என்று புலி படத்தை பார்க்காமல் வந்து விட்டேன். நீ சொன்ன காட்சி நேரத்திற்கு நான் வருகிறேன். உன்னால் காட்சியை போட முடியவில்லை, ஒரு முறை தானே என்று மன்னித்து விட்டு அடுத்த காட்சிக்கும் முயற்சி செய்தேன். அந்த காட்சியும் திரையிடப்படவில்லை. நான் பார்க்க நினைக்கும் போது நீ திரையிட வில்லை, இனி இந்த படம் வேண்டாம் என்று வந்து விட்டேன். இது சுயமரியாதை என்று நினைக்கிறேன். இதை தான் அஜித் ரசிகர்களிடம் எதிர்பார்த்தேன். இன்னும் சொல்லப் போனால் நானும் அஜித் ரசிகன் தான். மன்றத்தை கலைத்த போது அவர் நம்மை அவமானப்படுத்தி விட்டதாக உணர்ந்தேன். படம் பார்ப்பதிலோ கட் அவுட்கள் வைப்பதிலோ நான் எந்த தப்பும் சொல்ல வில்லை. அவரே கலைத்த பிறகு நாம் வெட்கமில்லாமல் மாவட்ட தலைமை என்று போட்டு போஸ்டரடிப்பது சுயமரியாதைக்கு இழுக்கு அல்லவா. அவ்வளவு தான் விஷயம். படத்தைப் பற்றி சொல்லப் போனால் எனக்கு பிடிக்கலை. நான் என் கருத்தை தான் விமர்சனமாக சொல்ல முடியும், பத்து பேரை கலந்தாலோசித்து கூட்டு விமர்சனம் எழுதி அதற்கு என் பெயரை போட்டால் நல்லாவா இருக்கும்.

      இருந்தாலும் உங்கள் உணர்வை மதிக்கிறேன். கருத்து பதிவிட்டதற்கு மிக்க நன்றி அப்சல்.

      Delete
    2. continue your Writing...Don't Stop it..

      But try to control the abusing Words.......I am Big Fan of Rajini..
      I become a fan of Ajith after he dismantled the Fans Club.

      Delete
    3. நன்றி அப்சல். தங்களின் நிதானத்திற்கு

      Delete
  17. அஜித் ரசிகர்கள் பாவம் உங்களை சும்மாவிடாது.!

    ReplyDelete
    Replies
    1. ஏன் மாம்ஸ், எனக்கு சேதாரம் கம்மியான மாதிரி தெரியுதா, எல்லா க்ளாஸ்லயும் போட்டு தாளிச்சிட்டு இருக்கானுங்க. நீங்க வேற. ஆனா உங்க மாதிரி ஆட்களெல்லாம் மறுபடியும் ப்ளாக்ல வந்து கமெண்ட் போட்டு இருக்கீங்க பாருங்க, அதுவே பெரிய வெற்றி தான்

      Delete
  18. Replies
    1. அப்படிங்களா, நன்றிங்க

      Delete
    2. கெட்ட வார்த்தை கமென்ட் டெலிட் பண்ணுங்க பாஸ்.
      நம்ம மூஞ்சில நாமளே துப்புற மாதிரி பீல்.
      நீங்க நாலு நாள் அப்புறம் கூட விமர்சனம் பண்ணிருக்கலாம்னு ஒரு யோசனை
      பட் உங்கள மாதிரிதான் நானும் ரஜினி ரசிகன் கொஞ்சம் தல ரசிகன்.
      கண்டிப்பா நான் படம் பார்த்துருவேன்.
      நன்றி.

      Delete
  19. Dai sunni ne vijay rasigan thane

    ReplyDelete
    Replies
    1. யோக நந்தன், உங்க பேருக்கும் நீங்க பேசுறதுக்கும் சம்பந்தமே இல்லை. பொதுவில் இப்படியா பேசுறது.. கருத்துரிமை னு ஒண்ணு இருக்கு கேள்வி பட்டு இருக்கீங்களா?.. கொஞ்சம் நாகரீகத்தோட உங்க எதிர்ப்ப காட்ட கத்துக்குங்க..

      Delete
    2. இந்த ஐடி எல்லாம் திட்டுவதெற்கென்றே உருவாக்கப்பட்டது. நம்ம திருப்பி திட்டி மனஉளைச்சல் தான் அடையனும். நமக்காக வந்து கண்டனத்தை சொன்னதற்கு நன்றி நண்பா

      Delete
  20. அன்னே பாஸா இல்ல பெய்லா மார்க் சொல்லுங்க,?

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு பெருசா ஒரு கட்டுரை எழுதி வச்சிருக்கேன். இங்க வந்து பாஸா பெயிலான்னு கேக்குறீங்களே

      Delete
    2. பரவால்ல சொல்லுங்க

      Delete
    3. சத்தியமா பெயில் தான்

      Delete
  21. அப்படியே புலி படத்துக்கும் விமர்சனம் போடலாமே

    ReplyDelete
    Replies
    1. அந்த படம் பார்க்க கூடி லாயக்கற்றது அய்யா.

      Delete
  22. வேதாளம் படத்தை விட இங்கே நடக்கிற பின்னூட்ட சண்டை சுவாரசியம்...நீங்க கலக்குங்க சித்தப்பு

    ReplyDelete
    Replies
    1. ஏங்க பதில் சொல்ல முடியாத அளவுக்கு எதிர் விமர்சனங்களை எதிர் கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு சுவாரஸ்யமா இருக்கா, பலே பலே.

      Delete
  23. Yenda...villanuku yaru nu theriyathu athanala high tech support vachi thedaran...ajith ku than yaru villanu theriyume athanala poitan...ithu kooda theriyala sappa pasangala...

    ReplyDelete
    Replies
    1. அய்யா, நான் சப்பை எல்லாம் இல்லைங்க அய்யா. புட்டத்துல ஒரு பக்கத்துக்கு பத்து கிலோ குறையாம கறி கிடக்குங்க அய்யா.

      Delete
  24. உங்கள படம் பாக்க சொல்லி யாரும் சொல்லல் ஆனா முதல் ஷோ பாக்கணும் சொல்லி நீங்க எப்படி எல்லாம் வெயிட் பண்ணி டிக்கெட் எடுக்குறீங்க உங்களுக்கே நல்லா தெரியும்....

    நீங்க அறிவாளி காட்ட இப்படி எல்லாம் விமர்சனம்... சினிமாவிலே எல்லாமே பழைய கதை தான் இது கூட தெரியாம விமர்சனம் பண்றது எல்லாம் ... ரொம்ப ஓவர்... சினிமா கதை இதெல்லாம் தெரிஞ்சி விமர்சனம் பண்ணனும்... ஒரு கமர்சியல் படத்துல லாஜிக் பாக்க கூடாது ...

    நீங்க படம் பாக்காதீங்க first .... உங்க மாதரி ஆறிவாளிக்கு எல்லாம் உகல படம் தான் பிடிக்கும் .... முதல் ஷோ பாத்துட்டு விமர்சனம் சொல்லி ஏதோ ஏதோ கிறுக்கிறது ரொம்ப கேவலமா இருக்கு .....


    கேவலமான விமர்சனம்...

    ReplyDelete
    Replies
    1. அய்யா, நான் கூட ரசிகன் தானே. 120ரூவா காசு கொடுத்து தானே படம் பார்க்குறேன். நான் பார்க்க கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார் அய்யா. நான் உலகப் பட ரசிகன் என்று உங்களுக்கு யார் சொன்னது.

      Delete
  25. Honest Question : If you are a true ajith fan, then you should not publish this at the first day itself. You can able to publish after a week / month. Don't you think this will affect the film ? Any how, in future, i will not check for your review for any film(s)...Thank GOD. After seeing your blog also, I watched the movie and it's really superb...

    ReplyDelete
    Replies
    1. இது நாள் வரை என் விமர்சனத்தை படித்து அதன் பிறகு சினிமாவுக்கு போன உங்கள் செயலுக்கு மிக்க நன்றி அய்யா. இனி மேல் பார்க்காமல் போனால் பரவாயில்லை. இது வரை படித்ததற்கு மிக்க நன்றி.

      Delete
  26. Idhu oru technic yellarum pudichu iruku nu sollum bodhu namma waste nu sonna dhan reach avom Ana moona seriya seirapla

    ReplyDelete
    Replies
    1. எல்லாரும் நல்லாயிருக்கும் போது நான் நல்லாயில்லை என்று சொன்னேனா அய்யா, மறுபடியும் இது பப்ளிஷ் ஆன நேரத்தை பாருங்கள். முதன் முதலில் வெளி வந்த விமர்சனம் இது தான். அப்படி இருக்கும் போது எல்லாரும் நல்லாயிருப்பார்கள் என்று சொல்ல எனக்கு ஜோசியமா தெரியும். அதுவுமில்லாமல் எல்லா விமர்சனங்களும் படம் நல்லாயிருக்கிறது என்றா சொல்லியிருக்கிறது. மறுபடி இணையத்தை தேடுங்கள் அய்யா.

      Delete
  27. No no Ana moona neenga FDFS poi padam prthu fist ala review potinga I know ur a masala movie fan definetely movie will satisfy u Ana adhey apadiye sonna ungala oru nai kooda tirumbi parkadhu so that u speard negative reviews u want only the cheap publicity r ur ajith hater thtsall and last I chk all reviews u chk the reviews to open ur blind eye

    ReplyDelete
  28. Hi anna sariya vimarsanam panniyi irukeenga
    Ajith iniyaavathu yosikkattum

    ReplyDelete
  29. தெரியாம போட்டிங்களொ இல்ல வேணுமென்று போட்டிங்களோ என்று தெரியாது ஆனால் உண்மையை சொல்லுங்க கதை வேண்டாம் பாடல் வேண்டாம் அட கதாநாயகியே வேண்டாம் சும்மா சார் வந்து நின்னாலே போதும் அதைவிட அழகான வாயைத்திறந்தும் திறக்காமலும் சிரிச்சா ஆண்களுக்கும் காதல் வந்துடும் சார் மேல....என்ன சொன்னீங்க ஏய் படம் மாதிரி இருக்கா...? இனிமேல் தங்கச்சி கதாபாத்திரம் அவளுக்கு ஒரு பிரச்சினை அதனால ரவுடிகளை துவைச்சா அது பராசக்தி (சிவாஜி) படம் னு எல்லாத்தையும் சொல்லிவிடுவீங்க போலிருக்கே....நாங்க விஜய ஓட்டல... அதே சமயம் எங்களுக்கு தேவையும் இல்லை படம் பிடிச்சா ஒரு முறை பாருங்க இல்லனா விட்டுடுங்க நீங்க பினான்ஸியரோ இல்ல டைரக்டரோ கிடையாது.... உங்களுக்கு தெரியாதுங்க படம் இம்மியளவு பிசகியிருக்கட்டும் இன்னேரம் Facebook ல விஜய் சூர்யா ரசிகர்கள் கிழிச்சி எரியற அளவுக்க மீம்ஸ் போட்டுடுவாங்க... பயங்கர கஷ்டப்பட்டு பார்த்து பார்த்து சிவா வரைஞ்ச ஒவியம்.... நீங்க என்னான்னா அந்த பெயின்ட்டையும் பிரஸ்ஸையும் ஏற்கனவே மோனாலிசா படத்தில வரைஞ்சுட்டாய்ங்க அப்டின்னு கூசாம போடுறீங்க....எது என்ன நடந்தா என்ன தொப்பை தேய உழைச்சாதான் பூவா அதை மனசுல வச்சுங்க அப்பறம் தான் கூத்து எல்லாம்....நன்றி எதுவும் மனசுல வக்காதீங்க....

    ReplyDelete
  30. காசு கொடுத்து படம் பார்த்து உங்களுக்கு புடிக்கலனா இந்தப்படம் பிடிக்கவில்லைனு டைரில எழுதிக்கோங்க மொபைல்ல வந்து கஷ்டப்பட்டு சொல்லவேண்டாம்

    ReplyDelete
  31. Ellorum ayen ippati atichukiringa

    ReplyDelete
    Replies
    1. அதான, நீங்களாவது கேளுங்க

      Delete
  32. Enakkum film pudikala ore feelings sa irukku why??? Naanun Ajith rasikan thaaaan.. But still very disappointment..

    ReplyDelete
    Replies
    1. இதே நிலை தான் எனக்கும்

      Delete
  33. Pls rasikarkale namma thala nalla worth ulla storya act panna sollunga pls.appuram antha pepper salt hair stylum vendaam pls pls pls en paiyan theater LA film mudiyura varaikkum yaaru hero nu kettu enna konnutaan ... Ajith hair style LA paarthu hero nnu nampamaatraan.. Next generation Ku ajith expire aagiruvaarnu payamaaa irukku.... Varuthathutan thala rasikan...

    ReplyDelete
  34. பெரிய ஆக்டர்ஸ்க்கு விமர்சனம் எழுதும்போது சுமாரா இருந்தாலும் சூப்பர் னு எழுதுனா கொண்டாடுவாங்க பாஸ் ஃபேன்ஸ்..போங்க பாஸ்

    ReplyDelete
    Replies
    1. இது வெற்றிக்கான பார்முலாவா பாஸ்.

      Delete
  35. பிடித்த நடிகர்கள் படம் நல்லாருக்கு என்று நினைப்பவர்கள் தனியாக ப்ளாக் ஆரம்பித்து புகழ்ந்து எழுதிக்கொள்ளலாமே! ஏன் ஜி உங்களுக்கும் பிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள்? எனக்கு புரியவில்லை!. கருத்து சுதந்திரம் என்றால் என்ன என்ற அடிப்படை கூட தெரியாத அளவுக்கு ஆத்திரம் அவர்கள் கண்களை மறைக்கிறதே ஏன்???

    ReplyDelete
  36. பிடித்த நடிகர்கள் படம் நல்லாருக்கு என்று நினைப்பவர்கள் தனியாக ப்ளாக் ஆரம்பித்து புகழ்ந்து எழுதிக்கொள்ளலாமே! ஏன் ஜி உங்களுக்கும் பிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள்? எனக்கு புரியவில்லை!. கருத்து சுதந்திரம் என்றால் என்ன என்ற அடிப்படை கூட தெரியாத அளவுக்கு ஆத்திரம் அவர்கள் கண்களை மறைக்கிறதே ஏன்???

    ReplyDelete