டாஸ்மாக்குகளில் கிடைக்கும் சைட்டிஷ்கள் எப்போதுமே சுமாராகவும் சுவையிலும் தரத்திலும் குறைந்ததாகவும் தான் இருக்கும் என்று நம் அனைவருக்கும் ஒரு எண்ணமுண்டு.
ஆனால் விதிவிலக்காக சில பார்களில் நாம் யோசித்து கூட பார்க்க முடியாத சுவையில் சைட்டிஷ்கள் பறிமாறப்படுவதுண்டு. அவற்றைப் பற்றி நான் அறிந்தவை உங்களுக்காக.
இந்த கட்டுரையில் பப்புகளும் ஏசி பார்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. எல்லாம் லோக்கல் டாஸ்மாக் பார்களில் கிடைக்கும் சைட்டிஷ்கள் மட்டும் தான்.
காசி தியேட்டர் எதிர்ப்புறம் பாலத்தின் அடியில் கார்டன் ஒயின்ஸ் என்று ஒரு ஒயின்ஷாப் இருந்தது. 2002 காலக்கட்டத்தில் செம கூட்டம் அம்மும் அங்கே, அப்போது ஒயின்ஷாப்புகள் தனியார் வசம் இருந்தன. அங்கே வெங்காய பஜ்ஜி செம டேஸ்ட்டாக இருக்கும்.
அதிக ஆயில் இல்லாமல் டிஷ்யு பேப்பரின் மேல் அடுக்கப்பட்ட சூடான வெங்காய பஜ்ஜி தொட்டுக்கொள்ள கார வெங்காய சட்னி கொடுப்பார்கள். சரக்குக்கு ஆன செலவை விட சைட்டிஷ்க்கு தான் அதிக செலவாகும் எனக்கு. நடுராத்திரி வரைக்கும் பஜ்ஜிக்காக சண்டைப் போட்டுக் கொண்டு இருப்போம்.
கழுத்தைப் புடிச்சி வெளிய தள்ளி தான் பாரை மூடுவார்கள். அந்த அளவுக்கு பழக்கமான பார் அது. டாஸ்மாக்காக மாற்றப்பட்டு பார் மட்டும் வேறொருவரிடம் சென்ற பிறகு நல்ல சைட்டிஷ் கிடைக்காததால் அங்கே செல்வதை கைவிட்டேன். காலம் செய்த கோலம் அந்த கட்டிடம் இடிக்கப்பட்டு விட்டது.
டிஸ்கவரி புக் பேலஸ் அருகில் ஒரு டாஸ்மாக் பாரில் மினி மசால் வடை நல்லாயிருக்கும். நல்லா மொறுமொறுன்று இருக்கும். பாதி கடித்து மிச்சம் வைப்பது எல்லாம் அதில் ஆகாது. ஒரு சிப் சரக்கு, ஒரு வடை என்பது தான் இதன் கான்செப்ட்.
ஆர்டர் செய்து விட்டு அரைமணிநேரமாவது காத்திருந்தால் தான் வடை வரும். மற்ற இடங்களில் சொல்வது போல் இப்ப பத்து வடை அப்புறம் பத்து வடை என்றெல்லாம் ஆர்டர் செய்தால் ஒன்னும் வேலைக்காகாது.
டிஸ்கவரியில் மீட்டிங் முடித்து விட்டு பதிவர்கள் குழு கடைக்கு போனதுமே ஐம்பது வடை என்று ஆர்டர் செய்து வடை வரும் வரை சரக்கு வாங்காமல் காத்திருப்போம். வடை வந்தால் தான் என்ன ப்ராண்ட் சொல்வது என்றே முடிவாகும்.
பார்ட்டி முடியும் தருணத்தில் ஒரு வடைக்காக உலகப் போர் மூளும் அபாயம் கூட ஏற்படுவதுண்டு. ஒரு முறை இப்படி தான் நம்ம அரசப் பதிவர் கடைசி வடையை எடுக்கப் போக அஞ்சா சிங்கம் வடையை எடுத்த வெட்டிபுடுவேன் என்று மிரட்ட, மிரட்சியுடன் வடையை பார்த்துக் கொண்டே குடித்த கதையும், டீடோட்லர் சென்னைப் பதிவர் வடையை சாப்பிட மட்டுமே எங்களுடன் அந்த கடைக்கு வருவதும் அந்த வடையின் சுவைக்கு சான்று.
கேகேநகர் டபுள் வாட்டர் டேங்க் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் பணியாரம் செம டேஸ்ட்டாக இருக்கும். மாலை வேளையில் மட்டும் தான் கிடைக்கும். இதே பதிவர்கள் குழு இங்கும் அடிக்கடி செல்வதுண்டு.
பணியாரமும் அதற்கு என்றே ஸ்பெசலாக வைக்கப்பட்டு தரப்படும் காரக்குழம்பும் எங்குமே கிடைக்காது. சுவையும் அடிச்சிக்க முடியாது. ஆர்டர் செய்து கொண்டே இருப்போம் வந்து கொண்டே இருக்கும். நல்லா மெத்து மெத்துன்னு பணியாரம் குழம்பில் முக்கி எடுத்து சுவைக்கும் போது காரம் கபாலத்தில் தெரியும். அடடா இது போன்ற சுவையை எங்குமே கண்டதில்லை.
கேரளாவில் இருந்த சமயம் அதாவது 2005ல் எப்பவுமே ரெகுலர் சைட்டிஷ் கப்பாவும் பீப் கறியும் தான். சில நாட்கள் மட்டும் மத்தி மீன். அங்கே ஒயின்ஷாப்பில் பார் இருக்காது. நாங்க பேச்சிலர்கள் ஒரு வீடாக எடுத்து தங்கியிருந்ததால் அங்கே தான் சங்கமம் அரங்கேறும்.
அங்கு உள்ள கள்ளுக்கடையில் நமக்கு தெரிந்தவர் வேலை பார்த்து வந்ததால் ரெகுலராக கப்பாவும் பீப் கறியும் கொண்டு வந்து கொடுத்து விடுவார். பலா இலையில் வேயப்பட்ட தொன்னையில் கப்பாவை வைத்து அதன் மீது கறியை ஊற்றி பனை மர ஓலையை மடக்கி ஸ்பூனாக்கி சாப்பிடும் சுவை இனி எங்கும் கிடைக்காது. மனதில் பசுமையாக நினைவுகளை அடக்கி வைத்து இருக்கிறேன்.
ஒரு நண்பர் வீட்டு கல்யாணத்திற்காக தூத்துக்குடிக்கு போயிருந்தோம். திருமணம் முடிந்து பார்ட்டிக்காக மதிய உணவுக்கு முன் ஒரு மொட்டக் காட்டுக்குள்ள அழைச்சிக்கிட்டு போனாங்க. பக்கு பக்குன்னு தான் இருந்தது. ஒரு இடம் வந்தது. உள்ளே நுழைந்தால் அழகான மூங்கில் காடு. அதில் சாராயம் சமைக்க ஒரு பெண்மணி என செட்டப்பே அமர்க்களம்.
கயித்துக் கட்டில்ல உட்கார்ந்து ஒரு பாட்டிலை கையில் கொடுத்தார்கள், மடக்கென கவிழ்த்து காலி செய்ததும் வயிறு பகபகவென எரிந்தது. பனை ஓலையை குழிவாக முடிந்து அதில் சுடுசோத்தைப் போட்டு அதில் திக்கான மட்டன் குழம்பு, சோத்துக்கு நிகரான அளவுக்கு மட்டனையும் போட்டு சடுதியில் பிசைந்து உள்ளே தள்ளினால் கிடைத்த கிளர்ச்சியை எதனுடனும் ஒப்பிட முடியாது. செம காரம். எரிச்சலை காரம் அடக்கும் என்பதை அங்கே தான் தெரிந்து கொண்டேன்.
அகரம் காமராஜர் சிலையில் இருந்து ரெட்டேரி செல்லும் பேப்பர் மில்ஸ் சாலையில் கொளத்தூரில் முதல் பெட்ரோல் பங்கிற்கு முன்னால் இருக்கும் பாரில் தந்தூரி சிக்கன் லெக் பீஸ் மட்டும் ஒரு பிளேட் கிடைக்கும். நல்லா முறுகலாக தந்தூர் செய்யப்பட்ட சிக்கன் மேல் மசாலாப் பொடி தூவப்பட்டு, புதினா கொத்தமல்லி தேங்காய் சேர்த்து அரைக்கப்பட்ட சட்னியுடன் கொடுப்பார்கள்.
சிக்கனை எடுத்து நன்றாக சட்னியில் தோய்த்து சூட்டுனே சுவைக்கும் போது கிடைப்பது ஆனந்தம் பேரானந்தம். கிச்சன்லயே போய் விசாரித்தேன். தந்தூரி சிக்கன் மேல் தூவப்படும் மசாலாவில் என்னென்ன சேர்க்கிறீர்கள் என. கம்பெனி சீக்ரெட் என்று கடைசி வரை சொல்ல மறுத்து விட்டார்கள். எப்ப இந்த கடைக்கு போனாலும் ரெண்டு மூணு லெக் பீஸ் ஆர்டர் செய்து மொக்கினால் தான் திருப்தி கிடைக்கும்.
ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஒடத்தில் ஏறும் என்ற பழமொழிக்கேற்ப ஒரு விடாத மழைப் பொழுதில் மிலிட்டரி சரக்குக்கு துணையாக எதுவும் கிடைக்காமல் திடீரென ஐடியா செய்து ஒரு கிளாஸில் சரக்கும், மற்றொரு டம்ளரில் பக்கத்து வீட்டில் கடன் வாங்கிய ரசத்தையும் வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி குடித்தது எல்லாம் நம்ம வரலாற்றுல வரும்.
ஆரூர் மூனா
//டிஸ்கவரியில் மீட்டிங் முடித்து விட்டு பதிவர்கள் குழு///
ReplyDeleteஇப்படி மொட்டையா பதிவர் குழுன்னா எப்படி லிஸ்ட் லிஸ்ட்டு வேணும்
அந்த உண்மைய சொன்னா ஏகப்பட்ட தலை உருளுமே
Deleteஎனக்கு இந்த பழக்கம் எல்லாம் கிடையாது. எனினும், உங்கள் பதிவை வழக்கம் போல ரசித்தேன். படித்து முடிந்ததும் நினைவிற்கு வந்த வசனம் “பத்த வச்சிட்டியே பரட்டை (படம்: பதினாறு வயதினிலே)
ReplyDeleteமிக்க நன்றி அய்யா
Deleteஒரு கேள்வி கேட்டா தப்பா நெனச்சிக்க மாட்டீங்கதானே?. ஆமா மெட்ராசில பயங்கர மழையாமே? அப்படியா?
ReplyDeleteஅப்படியா, இருங்க கேட்டு சொல்றேன்
Deletesuper , enjoyed very much brother.
ReplyDeleteமிக்க நன்றி
Delete////டிஸ்கவரியில் மீட்டிங் முடித்து விட்டு பதிவர்கள் குழு///
ReplyDeleteஇப்படி மொட்டையா பதிவர் குழுன்னா எப்படி லிஸ்ட் லிஸ்ட்டு வேணும்//
(அதானே)
Hi anna tandoori chicken mel chat masala thoovuvaargal athu origional TC taste tharathu
ReplyDeleteKonjam kaaram pulippu kalanthu irukkum