பேய்ப்படங்களில் காமெடியை நுழைத்து புது ட்ரெண்டு உருவாக்கி வெற்றிகரமாக பேய்க்காமெடி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் சீரியஸ் பேய்ப்படமாக வந்திருக்கிறது டிமாண்ட்டி காலனி.
படத்தில் பெரிய கருத்து வெங்காயமெல்லாம் இல்லை. ஒரு பேய்ப்படம், கேள்வி கேட்காமல் பார்த்தால் நன்றாக பயந்து அனுபவித்து விட்டு வரக்கூடிய அளவுக்கு நல்ல பொழுது போக்கு சித்திரம்.
ஒரே வீட்டில் தங்கியிருக்கும் நான்கு பேச்சிலர் நண்பர்கள். ஒரு நாள் இரவு குடித்து விட்டு போதையில் ஒரு பாழடைந்த வீட்டுக்கு செல்கிறார்கள். அந்த வீடு 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த டிமாண்ட்டி என்ற ஆங்கிலேயனின் வீடு.
நால்வரில் மிகவும் பயந்த சுபாவம் கொண்ட சஜித் என்பவனை பயமுறுத்தி விளையாடுகின்றனர் மற்ற நண்பர்கள். அந்த வீட்டினைப் பற்றி ஏற்கனவே விவரம் அறிந்த நண்பர்களில் ஒருவனான உதவி இயக்குனர் ஒரு நகையை களவாடி விடுகிறார்.
மறுநாள் இரவு கடும்மழையால் அனைவரும் வீட்டிலேயே இருந்து சரக்கடித்து டிவி பார்க்கிறார்கள். அந்த நேரத்தில் அந்த டிமாண்ட்டி ஆவி நகைக்காக அந்த வீட்டினுள் நுழைய யார் யார் பிழைத்தார்கள், யார் செத்தார்கள், அந்த நகை என்னவானது என்பதே மாண்ட்டி காலனி படத்தின் கதை.
படத்தில் நாயகனின் கேரக்டரைசேசனே வெகு சுவாரஸ்யம். இந்த பாத்திரத்திற்கு ஒத்துக் கொண்ட அருள்நிதியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
அடுத்தவன் பொண்டாட்டியை உஷார் பண்ணி அவளை சந்தோஷப்படுத்தி அவளிடம் பணம் பெற்று அந்த பணத்தில் நண்பர்களுக்கு செலவு பண்ணும் கதாபாத்திரம். கொஞ்சம் நடிக்கவும் ஆரம்பித்து இருக்கிறார். முகத்தில் ஒரளவுக்கு எக்ஸ்பிரசன்கள் வருகிறது. வாழ்த்துக்கள்.
நாயகன் என்பதற்காக அவருக்கென கூடுதல் காட்சிகள் இல்லை. நால்வருக்குமே சமமாகத்தான் காட்சிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
படத்தில் நாயகி இல்லை என்பதே வித்தியாசம் தான். அந்த கள்ளக்காதலியாக வரும் தேனடை கிடைத்த வாய்ப்பில் எல்லாம் பெர்பார்மன்ஸில் பட்டைய கிளப்பியிருக்கிறார்.
படத்தின் இரண்டாம் பாதி முழுக்கவே ஒரே அறையில் நடப்பது போல் காட்டியிருப்பதற்கு துணிச்சல் வேண்டும். அதையும் சுவாஸ்யமாக காட்டியிருப்பதற்கு நிறையவே தில் வேண்டும். இயக்குனருக்கு நிறையவே திறமை இருக்கிறது.
எம்.எஸ். பாஸ்கரின் போன் காலில் உள்ள ரகசியத்தை அவர்கள் அறிந்து திடுக்கிடும் காட்சியில் நாமும் திடுக்கிடுகிறோம்.நல்லாவே சஸ்பென்ஸை மெயிண்டெயின் செய்து இருக்கிறார்கள்.
ரமேஷ் திலக் அறிமுக காட்சியில் பிரவுசிங் சென்ட்டரில் பன்னி மூஞ்சி வாயன் லைவ்ஜாஸ்மின் இணையதளத்தில் பெண்ணுடன் செக்ஸ் சாட் செய்து கொண்டிருக்கும் காட்சியில் தியேட்டரில் சிரிப்பு அள்ளுகிறது. நல்லாத்தான்யா சீன்ஸ் யோசிக்கிறீங்க.
இடைவேளைக்கு பிறகு படம் போனதே தெரியவில்லை. நல்ல சுவாரஸ்யமாக இருக்கிறது. சஜித் மட்டும் உறங்க மற்றவர்கள் ஜப்பானிய பேய்ப்படம் பார்க்கத் தொடங்குகிறார்கள். திரையில் இவர்கள் இருக்கும் காட்சி வர திகில் தொடங்குகிறது. அதனை கொஞ்சம் கூட குறைக்காமல் இறுதி வரை கொண்டு சென்றிருக்கிறார்கள்.
நகைச்சுவையை குறைத்து பயமுறுத்தனும் என்று முடிவு செய்திருக்கிறார்கள், அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
ஆரூர் மூனா
தங்களின் புறம்போக்கு சினிமா விமர்சனம் பார்த்து என்னவரிடம் சொல்லி படம் பார்க்கச்சொன்னேன். மனுசன் பார்த்து விட்டு வந்து நல்லா என்னைத் திட்டீனார் பாருங்கள். அப்ப உணர்ந்தேன் தங்கள் விமர்சனம் சரி என்று. ஆம் படம் முடிந்து வெளியில் வரும் போது கலங்கிய கண்கள் சொல்லும் இந்த படத்தின் வெற்றியை என்று தாங்கள் சொல்லிய படி, மனம் கனத்துப் போனது என்ற அவரின் பதில். சரி
ReplyDeleteஇதிலிருந்து தங்களை நம்பி நாலு பேருக்கு சொல்லாம் என்று,
என் தளமும் வந்து போங்கள்.
balaamagi.blogspot.com
நன்றி.
தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. நான் தங்கள் தளத்திற்கு கண்டிப்பாக அவ்வப்போது வந்து போகிறேன்.
DeleteBoss watch poltergeist movie
ReplyDeleteசுவாரஸ்யம்... ரைட்டு...!
ReplyDelete