Sunday 24 May 2015

பஞ்சேந்திரியா - வெறும் காலு வைக்கக் காலு - பழசு 2012

சில நாட்களுக்கு முன்பாக என் நண்பனின் தாத்தாவை சந்திக்க நேர்ந்தது. அவர் வெள்ளைக்காரன் காலத்தில் ராணுவத்தில் பணிபுரிந்தவர். நமது அறிவு குறித்த பேச்சு வந்த போது அவர் சொன்ன விஷயம் என்னை ரொம்பவே கவர்ந்தது. அது என்னவென்றால் சுதந்திரத்திற்கு முன்பு படிக்காதவர்களையும் ராணுவத்தில் சேர்த்தார்களாம். அவர்களை மார்ச்ஃபாஸ்ட் செய்வதற்கு லெப்ட் ரைட்டு என்று சொன்னால் நம்மவர்களுக்கு தெரியாதாம்.

அவர்களுக்கு புரிவ வைப்பதற்காக ரொம்ப நாள் தலையைப்பிச்சிக் கொண்டிருந்த வெள்ளைக்காரன் ஒரு நாள் திடீரென்று ஒரு யோசனையை கண்டுபிடித்தானாம். அது வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்துள்ளது. அது என்னவெனில் அனைவரின் இடது காலிலும் சிறிது வைக்கோலை கட்டிவிட்டானாம். பிறகு லெப்ட்டு ரைட்டு என்பதற்கு பதிலாக அவன் என்ன கூறினானாம் தெரியுமா?

வெறும் காலு, வைக்கக் காலு, வெறும் காலு, வைக்கக் காலு.

எப்பூடி.

-------------------------------

இந்த ஆண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு


-------------------------------------

நேற்று ஸ்டெர்லிங் ரோடு வழியாக செல்லும் போது யதேச்சையாக என் அப்ரெண்டிஸ் காலத்து தோழியை சந்திக் நேர்ந்தது. அதிர்ந்து விட்டேன். படிக்கும் போது சிக்கென்று இருந்த காலேஜ் குயின் இப்போது என்னை விட குண்டாக பீப்பாய் போன்று இருக்கிறாள். எனக்கும் அது தான் புரியமாட்டேன் என்கிறது.

படிக்கும் போது அவள் முகத்தில் இருந்த ஒரு பருவைப் போற்றி செய்யுள் இயற்றிய கவிஞர்களெல்லாம் இப்போது பார்த்தால் என்ன நினைப்பார்கள். அவளை காதலிக்க நடந்த போட்டியில் ஏழெட்டு பேர் இருந்தார்கள். வெட்டு குத்து வரை போயும் அவள் யாரையும் காதலிக்கவில்லை.

வீட்டில் இருந்தவர்கள் பார்த்து வைத்த மாப்பிள்ளையையே திருமணம் செய்திருக்கிறாள். அதன் பிறகு ரெண்டு பிள்ளைகளை பெற்றுக் கொண்டு உடல் நலம் பற்றிய சிரத்தையை விட்டு இப்படியாகி விட்டிருக்கிறாள். பெண்களுக்கு மட்டும் தான் வாழ்க்கை இரண்டு விதமாக அமைகிறது.

பருவத்தில் பொற்சிலையாக இருக்கும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு வீங்கின மலையாகி விடுகிறார்கள். அது போலவே இளம்வயதில் மிகச்சுமாராக ஒல்லியாக இருக்கும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு மெருகேறி ஏரியா போற்றும் ஆண்ட்டியாகி விடுகிறார்கள். சிலர் மட்டுமே விதிவிலக்காக இருக்கிறார்கள். என்ன உலகமடா இது.

--------------------------------------

நிகரில்லா தமிழினத் தலைவன்


--------------------------------------

முன்பெல்லாம் தினமும் பதிவெழுதா விட்டால் ஏதோ குற்றம் செய்து விட்டதாகவே மனதை உறுத்தும். இப்பொழுது வாரம் ஒருமுறை பதிவெழுதவே மிகவும் யோசிக்க வேண்டியிருக்கிறது. தினம் எழுதுபவர்களை கண்டால் இப்போதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு சிலர் மிக முன்யோசனையாக பத்து இருபது பதிவுகளை முன்பே தட்டச்சு செய்து வைத்து விட்டு தினம் வெளியிட்டு அசத்துகிறார்கள். நமக்கு எல்லாம் ஒரு பதிவை தட்டி வெளியிடுவதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது.

பதிவெழுதுவது கூட புதிதாக திருமணமானதைப் போல தான் என்று நினைக்கிறேன். பதிவெழுதும் புதிதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறது. தினமும் பதிவெழுதுவது பிடிக்கிறது. பிறகு மோகம் குறைந்து வாரம் ஒரு முறையோ அல்லது இருமுறையோ தான் எழுத முடிகிறது. சத்தியமா டபுள் மீனிங்ல பேசலண்ணா.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment