நான் படம் பார்க்க போனதையே ஒரு படமா எடுக்கலாம் போல. இன்னைக்கு பாத்து என்னை படம் பாக்க விடாம விதி இடைஞ்சல் செய்ய அதை தாண்டி வந்து சிறிது குறைபாடோட படத்தை பார்த்தேன்.
காலையிலேயே சினிமாவுக்கு போகனும் என்று முடிவு செய்து இன்றைய வேலைகளை சீக்கிரம் செய்ய வேண்டி செக்சனுக்கு வந்தால் வண்டி வேலைகளை ரன்னர் (ரயில்வே ஒர்க்கர்களுக்கு வேலையை பிரித்து தருபவர்) எங்கள் குழுவிற்கு ஆறு ரயில்பெட்டிகளை தள்ளி விட்டார்.
சரசரவென்று வேலையை முடித்து நிமிர்ந்தால் 11 ஆகி விட்டது. வெளியில் வந்தால் நேரமாகி விட்டது என கேட்டில் ஆர்பிஎப் நிறுத்தி விட்டார். 11.30 வரை காத்திருந்து வெளியில் வரும் போது என் சக ஊழியர் போன் செய்து "அவசரமாக பணம் தேவைப்படுகிறது. சம்பளம் வாங்கியதும் தருகிறேன்" என்று கேட்டார். அவருக்கு ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொடுத்து கிளம்பினால் 11.50 ஆகி விட்டது.
அம்பத்தூரும் போக முடியாது, வில்லிவாக்கம் நாதமுனியிலும் படம் போட்டிருப்பான். பொதுவாக ஏஜிஎஸ்ஸில் 12 மணிக்கு காட்சி துவங்கும் என அங்கு சென்றால் அவர்களும் 11.30க்கே படத்தை போட்டு விட்டனர். படம் போட்டு 20 நிமிடம் சென்ற பிறகே படத்தை பார்க்கத் தொடங்கினேன். எனக்கு படம் போட்ட பின் பார்ப்பது என்பது ஆப்பாயில் இல்லாமல் சரக்கு சாப்பிடுவது போல. சாப்பிட்ட திருப்தி இருக்காது.
படத்திற்குள் வருவோம். இந்தப் படமும் சுப்ரமணியபுரம், நாடோடிகள், போராளி வரிசையில் நண்பர்களைப் பற்றியது தான். இந்த ஆண்டு இதுவரை காமெடி படங்கள் ஹிட்டாகி வந்த போது நல்ல பரபரப்பான இந்தபடம் சிறந்த என்டர்டெயின்மண்ட் படமாக அமைந்துள்ளது. விளம்பரம் குறைவு என்பது திரையரங்கிலேயே தெரிந்தது. வில்லிவாக்கம் ஏஜிஎஸ் திரையரங்கு பாதி அளவே நிறைந்திருந்தது.
எல்லோரையும் எல்லாத்தையும் பாசிட்டிவாகவே நினைக்கும், நண்பர்களுக்காக எதுவும் செய்யத் துணிந்த ஹீரோவின் கதை இது. நண்பனின் காதலுக்காக ஹீரோயினிடம் தூது போகிறார் சசிகுமார். போன இடத்தில் ஹீரோயின் சசியையே காதலிப்பதாக சொல்ல அவரும் ஏற்றுக் கொள்கிறார்.
ஹீரோயினுக்காக சண்டை போடப் போய் விபத்தாக ஒரு கொலை நடந்து விடுகிறது. கொலைப்பழி சசியின் மேல். காதல் விவகாரம் ஹீரோயின் வீட்டுக்கு தெரிந்து அவசர அவசரமாக மற்றொருவருடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. இவ்வளவையும் சமாளித்து ஹீரோவும் ஹீரோயினும் இணைந்தார்களா என்பதே படத்தின் தோராயமான கதை.
ஏற்கனவே எனக்கு மிகவும் பிடித்த சசிகுமார் இந்தப் படத்தில் பட்டையை கிளப்பி இருக்கிறார். நண்பனின் காதலுக்கு ஜடியா கொடுத்து அதற்காக விதவிதமான முறையில் பேருந்தில் ஏறும் போது தியேட்டர் கலகலக்கிறது.
ஹீரோயின் கும்கி படத்திற்கான ஆடியோ வெளியீட்டில் பார்த்த போது சுமாரான பெண்ணாகவே தெரிந்தார். ஆனால் ஸ்கிரீன் பிரசன்ஸ் அருமையாக இருக்கிறது. அந்த அம்மை தழும்பை இயல்பாக விட்டிருப்பதும் ரசிக்க வைக்கிறது. நல்ல எதிர்காலம் இருக்கிறது. பக்கத்து வீட்டு பெண்ணைப் போன்ற அழகு தான் கவர்கிறது.
சூரி படத்தில் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். இடைவேளைக்கு பிறகு திரைக்கதையின் தேவை கருதி இவரின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது. ஆனால் முன்பாதியை குத்தகைக்கு எடுத்து கலாய்க்கிறார்.
விஜய் சேதுபதி தனியாக பல படங்களில் கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கும் போது இதில் எப்படி ஒரு சாதாரண கதாபாத்திரத்தில் நடித்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.
படத்தின் வெற்றி முக்கியமான விஷயங்களில் ஒன்று படத்தின் வசனம் தான். இறுதியில் நண்பன் குத்தினால் சாகும் போது கூட காட்டி கொடுக்காதது தான் நட்பு, இது போல் பல.
பாடல்களில் ஏற்கனவே கேட்காததால் வரிகள் நினைவுக்கு வரவில்லை. ஆனால் படத்தில் வரும் இரண்டு மாண்டேஜ் பாடல்கள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இனிமேல் தான் ஹிட்டாகும் என்று நினைக்கிறேன்.
சுப்ரமணியபுரத்திலிருந்து நண்பனின் துரோகம், நாடோடிகளில் இருந்து நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே என்ற கான்செப்ட், தூங்கா நகரத்திலிருந்து கிளைமாக்ஸ் என பல படங்களிலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும் பார்ப்பதற்கு வலிந்து திணித்தது போல் இல்லாமல் இயல்பாக இருக்கிறது.
படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என்ன சிபி செந்தில் மாதிரி மனப்பாடம் செய்து வசனம் போடும் அளவுக்கு எல்லாம் என் ஞாபக சக்தி கிடையாது. இந்த விமர்சனத்தில் கூட ஹீரோயின் என்றே போட்டு இருக்கிறேன். படத்தில் ஹீரோயினி்ன் பெயர் கூட ஞாபகம் இல்லை. இது தான் நம்ம லட்சணம்.
குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம். நானே இன்னொரு முறை வீட்டம்மாவையும் அழைத்து சென்று பார்க்க இருக்கிறேன். சில குறைகள் படத்தில் இருந்தாலும் அவற்றை குறிப்பிட்டு சொல்வது எல்லாம் தேவையில்லாத ஒன்று.
சுந்தர பாண்டியன் - குடும்பத்துடன் பார்க்கக் கூடிய சிறந்த பொழுதுபோக்கு படம்
ஆரூர் மூனா

No comments:
Post a Comment