இதனால் சகல வலைப்பதிவர்களுக்கும்
சொல்லிக் கொள்வது என்னவென்றால் ஆடு தானாகவே வந்து என்னை வெட்டு வெட்டு
என்கிறது. இதை நான் சொல்லலப்பா, அந்த ஆடே சொல்லுச்சு. அந்த ஆட்டை நாம
என்னவேணாலும் செய்யலாம். ஆனா அந்த ஆட்டின் வலைப்பூவின் லிங்க்கை கொடுத்து
விட்டால் அனைத்து வசையையும் ஏற்றுக் கொள்ளுமாம். வாருங்கள் நாம எல்லாரும்
கழுவி கழுவி ஊத்துவோம்.

அந்த ஆட்டோட பெயர் நக்கீரன், ஆட்டின் வலைப்பூ பெயர் நாய்-நக்ஸ். ஈரோட்டில் நடந்த வலைப்பதிவர்கள் சந்திப்பில் அவரே சொல்லி விட்டார். இதை நான் மட்டும் கேட்கவில்லை. சுற்றி என்னுடன் இருந்த வலைப்பதிவு நண்பர்களே சாட்சி. அவர்கள் யாரென்றால் மெட்ராஸ் பவன் சிவக்குமார், பிலாசபி பிரபாகரன், தமிழ்வாசி பிரகாஷ் வீடு சுரேஸ் குமார், தமிழ்பேரண்ட்ஸ் சம்பத் குமார், மோகன்குமார், கேஆர்பி செந்தில் அண்ணன் மற்றும் பலர். நக்கீரனே சொல்லி விட்டார். பரபர செய்திகளில் அடிபட்டால் மட்டுமே அவரால் பிரபல பதிவராக முடியுமாம்.
இது ஒரு தொடர் பதிவு, மேற்குறிப்பிட்டவர்கள் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் அவரை கிண்டல் செய்தும், கழுவி கழுவியும் ஊற்றலாம். ஆனால் ஒரே நிபந்தனை. கடைசியில் அவரது புகைப்படம் போட்டு அவரது வலைப்பக்கத்திற்கு லிங்க் கொடுத்து விடவேண்டும்.
நானும் மற்றுமொரு பிரபல பதிவரும் (பேரை சொல்லக் கூடாது, அவரை பிரபல பதிவருன்னு தான் போடனுமாம்) முதல் நாள் இரவு மண்டபத்தில் சாப்பிட்டு வந்து பிறகு அறையில் தமிழ்வாசி பிரகாஷ் மற்றும் நாய் நக்ஸ் நக்கீரன் ஆகியோருடன் நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்து ஏற்கனவே சென்னையிலிருந்து வாங்கி சென்ற மீதமிருந்த மார்பியஸை காலி செய்து கொண்டிருந்தோம். தமிழ்வாசி பிரகாஷ் வேண்டாமென்று கூறி விட்டார். நக்கீரனை சரக்கடிக்கிறீர்களா என்று கேட்டோம். மனுஷனுக்கு ஆசை ஒரு புறம் இருந்தாலும் தயக்கமும் இருந்தது. யப்பா என்னை கட்டாயப்படுத்தாதீர்கள், நான் நிறைய செலவு செய்து குடியை மறப்பதற்கான சிகிச்சையை மேற்கொண்டு இப்பொழுது தான் மீண்டு வந்திருக்கிறேன் என்று கூறி விட்டார். அப்படி ஒரு மிக மிக நல்லவர் நம்முடைய ஹீரோ.

ஆரூர் முனா
No comments:
Post a Comment