ரயில்வே ஊழியர்களைப் பற்றி வெளியே தவறாக நம்பப்படும் தகவல்களில் ஒன்று ரயில்வே பாஸ் மூலம் இந்தியாவெங்கும் எந்த ஊருக்கும் எப்ப வேணும்னாலும் பயணிக்கலாம் என்பது தான். அது சரியான புரிதல் இல்லாமை.
ஒரு ரூட்டுக்கு மட்டுமே ஒரு சமயத்தில் பாஸ் எழுத முடியும். அப்புறம் ஒரு பாஸ்ஸின் வேலிடிட்டி நாலு மாசம். அதுவும் வேலைக்கு 5 வருடங்களுக்கு மேல் ஆனவர்களுக்கு மட்டும் தான் அது. முதல் 5 வருடம் வரை வருடத்திற்கு ஒரு பாஸ் அதுவும் 5 மாதத்திற்கு மட்டும் தான்.
உதாரணத்திற்கு என்னுடைய வழக்கமான பாஸ் ரூட் திருச்செந்துர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், சென்னை, ரேணிகுண்டா, பெங்களூரு, ஷீரடி, மும்பை.
எனக்கு இந்த ரூட்டில் எழுதினால் எங்க ஊருக்கும் சென்னைக்கும் எப்போதும் சென்று வர வசதியாக இருக்கும் மற்றும் திருச்சி, மதுரை கவர் ஆகும் என்பதால் இப்படி தலையை சுற்றி மூக்கை தொடுவது போல் ஒரு ரூட் போட்டு வைத்துள்ளேன்.
எல்லோருமே இப்படித்தான் அவர்கள் வசதிக்கு ஏற்ப ஒரு ரூட் போட்டு பாஸ் வாங்குவார்கள். ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் இந்த ரூட்டைத் தவிர வேறு ரூட்டில் பயணம் பண்ண முடியாது. டெல்லிக்கோ, கொல்கத்தாவிற்கோ இந்த பாஸில் நான் பயணிக்க முடியாது. அப்படி பயணிக்க வேண்டுமென்றால் இந்த பாஸ் வேலிடிட்டி முடிந்ததும் எனக்கு தேவையான ரூட்டை போட்டு பாஸ் வாங்கி பயணம் செய்ய முடியும்.
அதிலும் ரிசர்வ் பயணம் செய்ய வேண்டுமென்றால் ஒரு பாஸை வைத்து ஒரு முறை தான் ரிசர்வ் செய்ய முடியும். அன்ரிசர்வ்வில் பயணிப்பது கணக்கில் வராது.
அது போல் கிரேடு பே கணக்கை வைத்து தான் பயணிக்கும் வகுப்பு ஒதுக்கப்படும். ரூ1800 கிரேடு பே வாங்கும் கலாசிகளுக்கு எப்போதுமே இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பாஸ் தான்.
ரூ1900 மற்றும் ரூ2400 கிரேடு பே வாங்கும் டெக்னிசியன்களுக்கு வருடத்தில் ஒரு பாஸ் மூன்றாம் வகுப்பு ஏசி, மற்ற இரண்டு பாஸ்கள் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி உள்ளது.
ரூ2800 கிரேடு பே வாங்கும் டெக்னிசியன்களுக்கு எல்லாப் பாஸ்களும் மூன்றாம் வகுப்பு ஏசி பாஸ் தான். அதற்கு மேல் 4200க்கு முதல் வகுப்பு, அப்புறம் இரண்டடுக்கு ஏசி பாஸ் என ஏறிக் கொண்டே போகும்.
அப்புறம் பிடிஓ (Privilege Ticket Order) எனப்படும் கட்டண சலுகை சீட்டு, வருடத்திற்கு மூன்று முறை பிடிஓ போட்டுக்கலாம். டிக்கெட் காசில் மூன்றில் ஒரு பங்கு கட்டணம் தான்.
பொதுமக்களுக்கும் பாஸ் அல்லது பிடிஓ வைத்து ரிசர்வ் செய்பவர்களுக்கும் வித்தியாசம் என்னவென்றால் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தான். பாஸ் அல்லது பிடிஓ என்றால் கவுண்ட்டரில் சென்று நேரடியாகத்தான் புக்கிங் செய்ய முடியும். ஆன்லைனில் டிக்கெட் வாங்க முடியாது. தட்கல் சலுகையும் கிடையாது.
ஆனால் ஈக்யூ (Emergency Quota) வைத்து திடீர் பயணங்களை சமாளிக்கலாம். அதாவது வெயிட்டிங் லிஸ்டில் இருந்தாலும் டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு ரயில்வே உயர்அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் வசம் பரிந்துரை வாங்கி ஈக்யூவில் பெர்த் அலாட்மெண்ட் வாங்க முடியும்.
ஆர்சி பாஸ் என்பது ரெசிடென்சியல் கார்டு பாஸ். தினமும் வீட்டிலிருந்து தொழிற்சாலைக்கும் திரும்ப வீட்டுக்கும் செல்ல இலவச பாஸ். இதில் இரண்டு ரகம் தான். கிரேடு பே 2800 ரூபாய் வரை வாங்குபவர்களுக்கு செகண்ட் கிளாஸ் பாஸ், 4200 ரூபாய்க்கு மேல் கிரேடு பே வாங்குபவர்களுக்கு பர்ஸ்ட் கிளாஸ் பாஸ்.
ரயில்வே பாஸில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. அதனால் பொதுவாக ரயில்வே ஒர்க்கர் என்றாலே ரயிலில் எங்கும் எப்போதும் இலவசமாக சுற்றி வருவார்கள் என்று நினைக்க வேண்டாம்.
இதில் சில மாறுபடலாம். அது என் கவனக்குறைவால் இருக்கும். சோ அப்படி இருந்தால் மன்னிச்சூ.
ஆரூர் மூனா
கிரேட்.... உனக்கென்னப்பா, ரயில்வே பாஸ் என்று அங்கலாய்ப்பவர்களுக்கு ஒரு குட்டு.....
ReplyDeleteநன்றி சரவணர்ர்ர்ர்ர்ரு......
Deleteஒருவழியாக இத்தொடரை தொடங்கியதற்கு நன்றி. பேருக்கு ஏற்றார்போல எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் பயணிக்க வேண்டும். சொல்லிட்டேன்.
ReplyDeleteவாரம் ஒரு முறை என்ற கணக்கு வைத்துள்ளேன். முடிந்தவரை தங்களின் கணக்கை நேர் செய்கிறேன், நன்றி சிவா.
Deleteஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - புதுசா இருக்கு எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் பயணிக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி செந்தில்
Deleteஉங்க site la எதோ script run ஆகுது தல அத கவனிங்க , பேஜ் எப்பா பார்த்தாலும் ஆட்டோவா ரெப்ரெஷ் ஆகுது.
ReplyDeleteதகவலுக்கு நன்றி. வல்லுனர்களிடம் ஆலோசித்து சரி செய்கிறேன்.
Deleteபிடிஓ தகவல் உட்பட அனைத்திற்கும் நன்றி பாஸ்...
ReplyDeleteநன்றி டிடி
Delete