சதுரங்க வேட்டைக்கு அப்புறம் நடராஜ்க்கு என தனி ஸ்டைல் உண்டாகி விட்டது. அவருக்காகவே இந்த படம் பார்க்கனும் என்று தீர்மானம் பண்ணி விட்டேன். அந்த பெப்பை கொஞ்சம் கூட குறையாமல் காப்பாற்றி விட்டார்.
கதை
பொள்ளாச்சியில் நடராஜ் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். எல்லோரிடமும் லஞ்சம் வாங்கியே பிழைப்பை ஓட்டுகிறார். அந்த ஊர் எம்பி பெரியண்ணனின் கையாளாக இருந்து அவரது தப்புகளுக்கு துணை போகிறார். அதே ஸ்டேஷனுக்கு மாற்றலாகி வருகிறார் நேர்மையான சப் இன்ஸ்பெக்டர் நந்தா.
நடராஜின் அநியாயத்தை தட்டிக் கேட்க முடியாமல் உள்ளுக்குள்ளேயே குமைகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் வில்லனான பெரியண்ணனுக்கும் நடராஜ்க்கும் முட்டிக் கொள்கிறது. நடராஜை வில்லன் கொல்ல முயற்சிக்கிறார். அந்த சமயத்தில் நந்தா நடராஜை காப்பாற்றுகிறார்.
நடராஜ் அதன் பிறகு திருந்தினாரா, நந்தாவுக்கும் அவருக்குமான ஈகோ என்னானது என்பதே கதம் கதம்.
சந்தேகமேயில்லாமல் படத்தின் பலம் நடராஜ் தான். அவரது கவுண்ட்டர் வசனங்கள் அரங்கில் அப்ளாஸ் அள்ளுகின்றன. கெட்டவனாக இருக்கும் போது அவரின் அலட்சியமான நடிப்பில் மிளிர்கிறார்.
நந்தா படத்தின் நாயகன். நேர்மையான சப் இன்ஸ்பெக்டர். மேலதிகாரியான நட்டியின் அராஜகத்தை தட்டிக் கேட்க முடியாமல் தவிப்பதில் நடிப்பில் சீனியர் என்பதை நினைவுபடுத்துகிறார்.
பாடல்கள் சுமார் தான். படமாக்கப்பட்ட விதமும் அப்படித்தான் இருக்கிறது. தாரிகா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். அவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே (என்னையும் சேர்த்து தான்) இருக்கிறது என்பதை அரங்கில் அறிந்தேன்.
ஏற்கனவே நாம் அம்புலியில் நாயகியாக பார்த்த சனம்ஷெட்டி இதில் நந்தாவின் இணையாக வருகிறார். தமிழ்சினிமாவின் ட்ரேட்மார்க்கான லூசுப் பெண் பாத்திரம் போல் துவங்கினாலும் போகப் போக இயல்பான நாயகியாகவே நடித்துள்ளார்.
நிழல்கள் ரவி, சிங்கமுத்து, கிரேன்மனோகர் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். அந்த ஆண்களை கற்பழிக்கும் குற்றவாளியின் காட்சியில் சிரிப்பை வரவழைக்கிறார் சிங்கமுத்து.
படத்தின் டைட்டில் தான் 80களில் நெகட்டிவ் ஸ்டைலில் அமைந்துள்ளது என்றால் கதையும் காட்சியமைப்பும் கூட அந்த காலகட்டத்தை ஒத்தே இருக்கிறது என்பது தான் சற்று நெருடுகிறது.
வில்லன்கள் 80களின் சாயலிலேயே வசனம் பேசி அப்பாவி பெண்களை கற்பழிக்க முயல்கின்றனர். தமிழ்சினிமாவின் வில்லன்கள் எப்பவோ இயல்பாக வசனம் பேச ஆரம்பித்து விட்டனர் என்பதை படக்குழுவினர் உணரவில்லை.
மற்றபடி பி அண்ட் சி ரசிகர்கள் ரசிக்கும் படி காட்சிகளை அமைத்துள்ளனர். முதல்பாதி சற்று கூடுதல் விறுவிறுப்புடனே செல்கிறது.
படத்தின் டிரைலரே பயங்கர ஹிட்டடித்துள்ளதால் படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவே படத்திற்கு வசூலை கூட்டும் என்றே நினைக்கிறேன்.
நடராஜ் இருக்கும் வரை படத்தின் ஜெயத்திற்கு பயமில்லை.
ஆரூர் மூனா
நானும் இப்போது ரசிகரை அறிந்து கொண்டேன்...! ஹிஹி...
ReplyDeleteஹிஹி
Deleteதாரிகா யார்னே
ReplyDeleteபுதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் நாட்டு சரக்கு நச்சுன்னு தான் இருக்கு என்ற பக்திப் பாடலுக்கு நடனமாடுவாரே, அவர் தான்.
Deleteஅப்படி என்றால் பார்க்க வேண்டிய படம் ..என்கிறீர்கள் ...நன்றி :)
ReplyDeleteநன்றி
Deleteஅப்ப பாத்திடலாம் என்குறீங்க... சரி சரி..
ReplyDelete