வணக்கம் நண்பர்களே,
இது ஒரு தொடர் கட்டுரை, நண்பர் மெட்ராஸ்பவன் சிவக்குமார், ரயில்வே பற்றி உங்கள் அனுபவங்களையும், தகவல்களையும் எழுதுங்கள் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் எனக்கிருந்த தயக்கம் காரணமாகவும், எனக்கு தெரிந்தது ஒன்றுமே இல்லை என்பதாலும் எழுதாமலே இருந்து வந்தேன்.
இன்று தோன்றியது, வரலாற்று தகவல்கள் என்று இல்லாமல் எனது அனுபவங்களையும், கலாட்டாக்களையும், சர்ச்சைகளையும் எனக்கு தெரிந்த அளவில் மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே என்று.
தகவல்களில் தவறு உள்ளது என்று தெரிந்தால் நறுக்கென குட்டுங்கள், அது என் அறியாமையே, ஒரே ஒரு வாக்குறுதி மட்டும் தருகிறேன், விக்கிபீடியாவில் இருந்து எந்த பத்தியையும் ட்ரான்ஸ்லேட் பண்ணி இங்கு பகிர மாட்டேன்.
நன்றி.
--------------------------------------------------------------------------
தெற்கு ரயில்வேயின் தலைமை அலுலகம் சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அடுத்த பில்டிங்கில் அமைந்துள்ளது. தெற்கு ரயில்வேயின் முதன்மை அதிகாரி பொது மேலாளர் ஆவார். அவர் ஐஏஎஸ் அதிகாரி. தெற்கு ரயில்வேயில் ஆறு கோட்டங்கள் உள்ளன. அவை சென்னை, திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், சேலம், பாலக்காடு ஆகும்.
தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா சிலபகுதிகள், கர்நாடகத்தின் சிலபகுதிகள் இதன் கண்ட்ரோலில் வரும்.
இந்தியாவில் ஓடும் பெரும்பாலான ரயில்கள் சென்னையில் உள்ள இணைப்புப்பெட்டி தொழிற்சாலையில் தான் தயாராகின்றன. ஒரு ரயில்பெட்டியின் ஆயுள்காலம் 25 ஆண்டுகள் தான். அதன் பிறகு அந்த வண்டிகள் ஸ்கிராப் செய்யப்படும்.
தயாரானதிலிருந்து வண்டி ஓடிக் கொண்டே இருந்தால் இரண்டு வருடத்திலேயே போகி தனியாகவும் கோச் தனியாகவும் கழன்று போய் விடும். அதற்காக ஒவ்வொரு 18 மாதங்களுக்கு ஒரு முறை ஒவர் ஆயிலிங் செய்யப்படும்.
ஓவர்ஆயிலிங் செய்யப்படும் இடங்கள் சென்னையில் உள்ள பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் (இடைஞ்சலுக்கு மன்னிக்கவும், ஒரு சின்ன தகவல் நான் இங்கு தான் வேலை பார்க்கிறேன். ஹிஹி), பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ், திருச்சி பொன்மலை கோல்டன் ராக் ஆகியவை. சென்னையில் உள்ள எலக்ட்ரிக் ரயில்கள் ஆவடியை அடுத்த அன்னணூர் ஷெட்டில் ஓவர்ஆயிலிங் செய்யப்படுகிறது.
மீதியை அடுத்த பதிவில் பார்த்துக் கொள்ளலாம்.
-----------------------------------------------------------------------
நாலைந்து வருடங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ஒரு வேலையாக திருவனந்தபுரம் மெயிலில் போயிருந்தேன். 3அடுக்கு ஏசி கோச்சில் பயணம். எனக்கு எதிர் சீட்டில் ஒரு 20 வயது மதிக்கத்தக்க பெண். அழகென்றால் அழகு, அப்படி ஒரு அழகு, மிரண்டு போய் ஜொள்ளு விட்டுக் கொண்டு இருந்தேன்.
அந்த பெண் சென்னையை சேர்ந்த மலையாளி, அலைபேசியில் தெளிவாக தமிழில் உரையாடிக் கொண்டு இருந்தார். அவருடன் வந்த அவரது அம்மாவிடம் மட்டும் மலையாளத்தில் சம்சாரிச்சார்.
நைட்டு முழுக்க நான் தூங்கவேயில்லை. வாரணம் ஆயிரம் சூர்யா போல ஜொள்ளிட்டே இருந்தேன். காலையில் வண்டி எர்ணாகுளம் நெருங்கும் சமயம் பாத்ரூம் போன அந்த அம்மா படிப்பக்கம் நின்றுக் கொண்டே குஞ்சுமோளே என்று கூப்பிட்டர். இந்த பெண்ணோ அதை கவனிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்.
அங்கிருந்த படி சத்தம் வந்துக் கொண்டே இருந்தது குஞ்சுமோளே, குஞ்சுமோளே என்று.
நான் நகைச்சுவை செய்வதாக நினைத்துக் கொண்டு "ஏம்மா குஞ்சி (அழுத்தமாகவே) உன்னை கூப்பிடுறாங்க" என்று சத்தமாக சொன்னேன். பிற பயணிகள் சிரித்துத் தொலைக்க அந்த குஞ்சுமோள் கோவம் வந்து என்னை பார்க்க நான் பேந்த பேந்த முழிக்க அதன் பிறகு அவர் "..த்தா, ..ம்மால, பாடு, தூம ..க்கி" என்று தொடர்ச்சியாக அவர் பேசிய பேச்சு அச்சில் ஏற்ற முடியாது. நயன்தாரா உருவில் சொர்ணாக்காவை அன்று தான் கண்டேன்.
அதன் பிறகு நான் எப்போது திருவனந்தபுரம் போனாலும் பேருந்தில் தான் என் பயணம் இருந்தது.
ஆரூர் மூனா
தொடர் சுவையாக உள்ளது தொடருங்கள் தொடர்வேன்!
ReplyDeleteமிக்க நன்றி அய்யா
Deleteபோகி தனியாகவும்//
ReplyDeleteபோகி அப்படின்னா?
முதல் போட்டோவுல பாருங்க, ட்ராக்ல ரயில் வீல் செட்டு தனியா இருக்கு இல்லையா அது தான் போகி (Bogie)
Deleteபுரிந்தது
ReplyDeleteநன்றி
DeleteRailway GMs are from Indian Railway Administrative Service. IAS is different
ReplyDeleteNamakkal Venkatachalam
அப்படிங்களா, அவங்க கூட ஐஏஎஸ் னு தான் போட்டுக்குவாங்களா
DeleteGM can be IAS, IRS or Indian Railway Accounts Service (IRAS). IRAS are selected for various top level bureaucratic services for GOI including IAS. Each of the Railway divisions, is headed by a Divisional Railway Manager (DRM) who reports to the General Manager (GM) of the zone. A DRM can be appointed from any services of Indian Railway, IAS and IRS. Trichy is first HQ of Southern Railway. - Based on Wikipedia விக்கியில் இருந்து துணுக்கு செய்திகளை கொடுங்கள்.
Deleteதொடர் தொடர வாழ்த்துக்கள்
ReplyDeletenandri ganesh
Deleteரயில்வே பற்றி எனக்கு ஏராளமான ஐயங்கள் உண்டு. அவற்றை எல்லாம் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
ReplyDeleteமத்திய அரசு சார்ந்த துறையில் இருப்பவர்கள் பணியில் இருப்பவர்கள் தன துறை சார்ந்தும் பிரதமர் அமைச்சர்கள் உள்ளிட்டவரகளையும் விமர்சித்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள். மோடியாக இருந்தாலும் சரி மன்மோகனாக இருந்தாலும் கழுவி ஊற்றலாம் ஆனால் தமிழக அரசு பணியில் இருப்பவர்கள் எந்தக் குறையும் கூறிவிட முடியாது.
கேளுங்கள், எனக்கு தெரிந்த வரை நான் உங்களுக்கு விளக்கம் அளிக்கிறேன்.
Delete/// நயன்தாரா உருவில் சொர்ணாக்காவை /// ஹா... ஹா...
ReplyDeleteட்ரான்ஸ்லேட் செய்ய வேண்டாம்... மேலும் தகவலுக்கு என்று இணைப்பு கொடுக்கலாம்...
தொடர் சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
முயல்கிறேன், நன்றி டிடி
DeleteThaliavare,
ReplyDeleteUngalai pazhaya blogla thedikittu irundha, neenga silenta indha perila innoru blog arambhichuttenga any way thanks to madras bhavan sivakumar