தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள ஒரு சிறு நகரத்தில் படத்தை பார்த்தேன். சி சென்டரின் பல்ஸ் சட்டென தெரிந்து விடும் இடம் இது. இந்த ஊரில் விஜய் படமே ஆனாலும் ஃபுல் ஆகாது. காட்சி நேரத்திற்க்கு போய் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இன்று காக்கிசட்டை படம் ஹவுஸ்புல். சிவகார்த்திகேயனின் மார்கெட் வேல்யூ என்னவென்பதை விவரிக்க இதை விட சிறந்த உதாரணம் தேவை இல்லை.
ஆர்கன் திருத்து செய்யும் மிகப் பெரிய அந்தஸ்தில் உள்ள கும்பலை ஒரு கான்ஸ்டபிள் ஒழித்துக் காட்டுவது தான் படத்தின் கதை. அதை இயல்பு மாறாமல், வரம்பு மீறாமல் சொன்ன விதத்தில் தான் படம் ஜெயிக்கிறது. சந்தேகமே இல்லாமல் படம் ஹிட் தான்.
ஒரு கமிஷனர் இடம் ஒரு கான்ஸ்டபிள் இப்படி கேள்வி கேக்க முடியுமா என்று எல்லாம் கேள்வி கேக்காமல் பார்த்தால் படத்தை அணு அணுவாக ரசிக்க முடியும்.
ஒரு படத்தின் திரைக்கதை கட்டுமானத்தை எப்படி கட்டுவது என்பதற்கு இந்த படத்தை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். ஒரு காட்சி கூட, ஒரு நொடிக்கு கூட அலுப்பாக தெரியவில்லை. காமெடியோ, ஆக்ஷனோ சட்சட்டென காட்சிகள் அடுத்தடுத்து நகர்ந்து கொண்டே இருக்கிறது. அதற்கு நேர் மார் பாடல்கள், பாட்டு காட்சில ஆப்பரேட்டர் கூட வெளில வந்து தம் அடிக்கிறான்.
சிவகார்த்திகேயன், ஏற்கனவே நம்ம வீட்டு பிள்ளையாக இருந்தவர். அடுத்தடுத்த படங்களில் முன்னேறி செல்வது நமக்கு சந்தோஷத்தையே கொடுக்கிறது. பார்த்து ஜாக்கிரதையாக அடுத்தடுத்த படி முன்னேறி செல் ராசா. வாழ்த்துக்கள்.
அறிமுக காட்சியில் இவரும் இப்படி ஆகிட்டாரே என்று பதைபதைத்தாலும் அது கனவு என்று தெரிந்து ஆசுவாசப்படுகிறது மனசு. இயல்பாக காமெடியில் துவங்கி அப்படியே ஆக்ஷனுக்கும் பொருந்தி போகிறார். நடிப்பில் பல படிகள் முன்னேறி இருக்கிறார். இந்த ஊரில் மாவட்ட தலைமை, நகர தலைமை தொடங்கி ஏகப்பட்ட ராசிகள் மன்றங்கள் இவருக்கு இருக்கிறது. அடுத்த டார்கெட் விஜய் தான் போல.
ஸ்ரீ திவ்யா அழகு பதுமையா வந்து செல்கிறார். மேக்அப்பை கொஞ்சம் குறைத்துக் கொள்ளவும் மேடம். இவருக்கு கட்டவுட் எல்லாம் பார்த்தேன். ப்பா.
இமான் அண்ணாச்சி நடிக்கவும் செய்கிறார். அடுத்தடுத்து நல்ல படங்கள் அமைந்தால் பெரிய ஸோலோ காமெடியன் ஆகி விடுவார். பல காட்சிகளில் வாய்விட்டு சிரித்தேன்.
படத்தில் பிரபு, ராமதாஸ் முதல் கடைசி காமெடியன் சிங்கப்பூர் தீபன் வரை ரசிக்க வைக்கிறார்கள்.
படம் துவங்கி காமெடியில் சிரிக்க வைத்து அப்படியே ஒரு வழக்குக்குள் நுழைந்து பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லராக மாறி ரசிக்க வைக்கிறது. இந்த படத்தை பற்றி ரொம்ப பேசவேண்டாம். படத்தை தியேட்டரில் பார்த்து ரசியுங்கள்.
சூப்பர் ஹிட் படம் சிவகார்த்திகேயனுக்கு. நமக்கு சிறந்த பொழுதுபோக்கு படம்.
ஆரூர் மூனா
சூப்பர்
ReplyDeleteநன்றி விஷ்வா
Deleteசூப்பர்
ReplyDeleteநச
ReplyDeleteநன்றி சேது
Deleteஎந்த ஊர்ல பார்த்தீங்க அதை சொல்லுங்க நண்பா
ReplyDeleteநம்ம ஊராச்சேன்னு ஒரு பில்டப் கொடுத்தேன் சார்.
Deleteபடத்தைப் பற்றிய அவரது பேட்டியில்... அந்த பணிவு தொடர்ந்தால்...
ReplyDeleteஎன்றும் வெற்றிப்படம் தான்...
சூப்பர் சார்
ReplyDeleteஆக்ஷன் கலக்காத நகைச்சுவை படங்களை மட்டுமே
ReplyDeleteஇவரிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கிறார்கள்...
இப்படம் வெற்றி படமாக ஆனதில் மகிழ்ச்சியே
நான் இன்றுதான் படம் பார்த்தேன்.. சிவகார்த்திகேயனின் உடல் மொழியை பார்த்தல் விஜயை வீழ்த்திவிடுவார்போல்தான் தோன்றுகின்றது..
ReplyDelete