Saturday 14 February 2015

இந்தியா பாகிஸ்தான் - பாதி கட்டுரை

கிரிக்கெட் விளையாடும் டிவியில் பரபரப்புடன் மாட்ச் பார்ப்பதும் எனக்கு பழக்கமானது 1990ல் தான். அந்த காலகட்டத்திற்கு முந்தைய மாட்சுகள் பற்றி அண்ணன்மார்கள் எங்களுக்கு போதித்துக் கொண்டு இருப்பார்கள். 


அதில் முக்கியமானது ஒரு சார்ஜா கோப்பையில் கடைசி பந்தில் 4 ரன் எடுக்க வேண்டி இருந்த நிலையில் மியான்தத் ஆறு அடித்து வெற்றியை வசப்படுத்தியது. வெற்றியை எக்காளமாக கொண்டாடியது, அதை கேட்கும் போது ரத்தம் கொப்புளிக்கும். நரம்பு புடைத்துக் கொண்டு இருக்கும். இது போன்றதொரு தோல்வியை பாகிஸ்தானுக்கு பரிசளிக்கனும் என்று மனது துள்ளும்.

அந்த நேரம் தான் உலக கோப்பை தொடங்கியது. இந்தியாவுக்கு முதல் போட்டி ஆஸ்திரேலியாவுடன் நடந்தது. அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே நாங்கள் போட்டியை காண தயாரானோம். தினமலரில் ஒவ்வொரு அணியின் வீரர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டு இருந்தது. வெறி கொண்டு படித்து அனைத்து அணி வீரர்களின் பெயரை மனப்பாடம் செய்து வைத்தேன். யாராவது அணியின் பெயரை சொன்னால் போதும் கடகடவென ஒப்பிப்பேன். அந்த நேரம் நடந்த ஏழாவது அரையிறுதி தேர்வில் நிறைய பாடங்களில் நான் பெயில்.


ஆஸ்திரேலியாவுடனான ஆட்டத்தில் இந்தியா ஒரு ரன்னில் தோற்றது. அந்த கடைசி பந்து இன்னும் நினைவில் இருக்கிறது. ஸ்ரீநாத் உயரே அடிக்க தேவையான ரன் எடுக்க ஓடி முடியாமல் போய் இந்தியா தோற்றது.

அடுத்த ஆட்டம் இலங்கையுடன், மழையின் காரணமாக கைவிடப்பட்டது. அதற்கடுத்த ஆட்டம் பாகிஸ்தானுடன் என்று நினைக்கிறேன், அல்லது அதற்கடுத்த ஆட்டமாகவும் இருக்கலாம், மேட்சுக்கு முதல் நாளே தயாராகி விட்டோம். எங்கள் வீட்டில் அப்போ ப்ளாக் அண்ட் ஒயிட் டிவி தான் இருந்தது. பார்க்க நல்லாயிருக்காது என்று இன்னொரு நண்பன் வீட்டில் ஜமாவை போட்டோம். 

ஆட்டம் தொடங்கியது, விசில்கள் பறந்தன. ஸ்ரீகாந்த் பந்துகளை வீணடித்து சராமாரியாக திட்டுகளை வாங்கினார். சச்சின் ஷாட்டுகளுக்கு கைதட்டல்கள் அதிர்ந்தன. மியான்தத் தவக்களை மாதிரி குதித்தபோது அந்த மவனே, இந்த மவனே என்று வசவுகள் வந்தது. 

ஆட்டம் முடிந்து கொண்டாட்டம் இரவு வரை தொடர்ந்தது. அந்த வயசுக்கு கொண்டாட்டம் என்பது தேன்மிட்டாயும், முறுக்கும், நிறைய அரட்டையும் தானே.

--------------------------------------

அடச்சே, நிறைய எழுதனும் என்று உட்கார்ந்தேன். முல்லை துக்கத்திலிருந்து எழ வீட்டம்மிணி என் கையில் கொடுத்து விட்டு சென்று விட்டார். அவளோ கீபோட்டு மவுஸ் எல்லாத்தையும் தள்ளி விட்டு மானிட்டரை எட்டி உதைத்து டெபிளை சுத்தம் செய்தாள். அரை மணி நேர  போராட்டத்திற்கு பிறகு அம்மிணி முல்லையை அழைத்து செல்ல, நான் தட்டச்ச அமர்ந்தால், ஙே, மைண்டு ப்ளாங்க் ஆகி விட்டது. 


எழுத எதுவும் வரவில்லை. சரி பதிவையே கைவிட்டு விடலாம் என்ற நினைத்தால், நாளை என்ன நாள் என்ற நினைப்பு வந்தது. இதனால் சொல்ல வருவது என்னவென்றால் நாளை நடக்க இருக்கும் இந்தியா பாகிஸ்தான் மேட்ச்சைப் பார்க்க இப்பவே தயார் ஆகிட்டேன். 1992, 1996, 1999, 2003, 2011 ஆண்டு உலகக் கோப்பையைப் போல் இந்த ஆண்டும் இந்தியா ஜெயிக்க வேண்டும்.

தேசியக் கொடியுடன், இந்தியா சீருடை டீசர்ட்டையும் தயார் செய்து வைத்து விட்டேன். நாளைக்கு ஒரு பீல் இருக்க வேண்டாமா, நீங்களும் ஆட்டத்தை அனுபவிக்க தயாராகுங்கள்.

சக்தே இந்தியா

ஆரூர் மூனா

2 comments:

  1. அப்போதெல்லாம் டாஸ் போடுவது முதல் மேன் ஆப் தெ மேட்ச் அறிவித்த முடிந்த பின்னாலும் வர்ணனையாளர்கள் பேசுவதையும் விடாமல் கேட்டு அதையே எல்லா செய்திகலுளும் பார்ப்பதோடு வெளியே நண்பர்களுடன் அதைப் பற்றியே அடுத்த மேட்ச் வரை பேசிக்கொண்டிருப்பதும் ஒரு அலாதி இன்பம்தான்.சமீப காலங்களில் ஒரு மேட்சையும் முழுமையாக பார்ப்பதில்லை.அவ்வப்போது ஸ்கோர் தெரிந்து கொள்வதோடு சரி

    ReplyDelete