Sunday, 1 February 2015

காப்பியடிக்கும் பதிவர்களிடம் விசாரணை - பழசு

காப்பியடிக்கும் பதிவர்களிடம் விசாரணை என்று இப்போது ஒரு புது டிரெண்ட் துவங்கியுள்ளது. யார் ஏதாவது ஒரு புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டி பதிவிட்டிருந்தாலோ அல்லது நாளிதழில் உள்ள கார்டூனை அதிலுள்ள குறைகளையோ அல்லது நமது கருத்தை பதிவிட்டாலோ சரி. உடனடியாக நீ காப்பியடிப்பவன். இந்த பதிவில் உள்ளது இந்த நாளிதழில் வந்துள்ளது என்று கூறி அனானிமஸ்ஸாக பின்னூட்டமிடுகிறார்கள். அடுத்தவர் குறையை சுட்டிக்காட்டும் அளவுக்கு சமூக பொறுப்புள்ளவன் என்றால் பெயரைப்போடு. இத்தனைக்கும் நான் எல்லாப்பதிவுகளையும் காப்பியடித்து போடுபவன் அல்ல. பத்தில் ஒன்று தான் இருக்கும். ஆனாலும் அதன் கீழ் நன்றி என்று எந்த பத்திரிக்கையோ அல்லது எழுதியவரின் பெயரைப் போட்டு விடுவேன்.

என்னால் ஒரு கவிதையை எழுத முடியாது. ஆனால் ரசிக்கத் தெரியும். ரசித்த கவிதையை என்னுடைய வலைப்பூவில் எழுதியவரின் பெயருடன் வெளியிட்டால் அது எப்படி காப்பி பேஸ்ட் ஆகும். அதற்கென்று வேறு நபர்கள் இருக்கிறார்கள். என்னுடைய விமர்சனத்தையே அப்படியே காப்பியடித்து தன்னுடைய வலைப்பூவில் வெளியிட்ட பதிவரையும் நான் அறிவேன். இது அதற்காக எழுதப்பட்டது அல்ல, குறைகளை சுட்டுக்காட்டும் கோமகன்கள் தன்னுடைய பெயரைப்போடவே தைரியமில்லாதவர்கள் எப்படி சரியானவர்களாக இருக்க முடியும்.


ஆரூர் முனா

1 comment:

  1. நேற்று ஆனந்தவிகடனைப் பற்றி ஒரு பதிவூ எழுதி பேஸ்புக்கில் போட்ட சில நிமிடங்களிலேயே நாமக்கல்லில் இருந்து ஒரு நபர் அதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து தான் எழுதியது போல பேஸ்புக்கில் போட்டுக்கொண்டதுடன் உடனேயே எனக்கு பேஸ்புக்கில் ஃப்ரன்ட் ரிக்வெஸ்ட்டும் கொடுத்திருந்தார்.அவரை தொடர்பு கொண்டு ஏம்பா இப்படி என் பதிவை காப்பிடியச்சி உங்க பெயர்ல போட்டு இருக்கிங்கன்னு கேட்டதுக்கு அந்த பதிவூ முக்கியமான நல்ல பதிவூ.அதனாலதான் காப்பியடிச்சேங்கறார் அந்தாள்.
    இது மாதிரி ஆளுங்களை என்ன பண்றது?

    ReplyDelete