Sunday 1 February 2015

வெடி படம் விமர்சனம் - பழசு

இன்று மூன்று படம் ரிலீஸ் ஆகியிருப்பதால் எதாவது ஒரு படம் பார்க்கலாம் என்று அம்பத்துர் ராக்கி தியேட்டருக்கு நானும் என் நண்பர்களும் சென்றோம். வாகை சூடவா ஞாயிறு அன்று என் மனைவியுடன் செல்லும் திட்டம் இருப்பதால் அதை தவிர்த்து வெடி அல்லது முரண் பார்க்கலாம் என்று சென்று டிக்கெட் கவுண்டரில் கேட்டால் முரண் மதிய காட்சி இல்லை என்று கூறியதால் வெடி படம் பார்க்கலாம் என்று டிக்கெட் எடுத்தேன். டிக்கெட் விலை நூறு ரூபாய்னு சொன்னானுங்க. நாலு டிக்கெட் நானூறு ரூவாயாயம். முழுசா நாலு நாளைக்கு நாலு குவாட்டர் அடிச்சிருக்கலாம், ம்ஹூம்,என் நண்பன் வேணாம்டா டிரெய்லரே பயமுறுத்துகிறது, என்றான் அப்படி என்னதான் என்று பார்க்கலாம் வாடா என்று கூறி உள்ளே சென்றோம், அதுதான் நாங்கள் செய்த தப்பு. அதைப்பற்றி பிறகு பார்ப்போம், முதலில் படத்துக்கு வருவோம்,

படத்தின் கதை என்ன? அதுக்கு முன்னால் ஒரு விஷயம். இரண்டு நாட்களுக்கு ஒரு தெலுங்கு படம் ஜெமினி டிவியில் வந்தது, படத்தின் பெயர் செளர்யம் என்று நினைக்கிறேன். முன்பே அந்த படத்தின் ரீமேக் தான் இது என்று தெரியாது தெரிந்திருந்தால் போயிருக்க மாட்டேன், அங்கு தான் விதி விளையாடியிருக்கிறது.

விஷால் கொல்கத்தாவுக்கு வருகிறார், அங்கு பூனம்மை சந்தித்து நட்பாகி அவரால் சமீரா ரெட்டி வீட்டில் பேயிங் கெஸ்டாக தங்குகிறார். பூனம்மிற்கு உதவிகள் செய்து அவரது பாதுகாவலராக இருக்கிறார், அப்பொழுது வில்லன் ஷாயாஜி ஷிண்டேவி்ன் கும்பல் தூத்துக்குடியிலிருந்து அவர்களை தேடி கொல்கத்தா வருகிறது. அங்கு அவர்களை கணடுபிடித்து பூனம்மை கடத்தி செல்கிறது. போகும் வழியில் விஷால் வழிமறி்த்து அவர்களை தாக்குகிறார். அப்பொழுது தான் சொல்கிறார், பூனம் தனது தங்கை என்று கூடவே வில்லனின் மகனை கொலை செய்கிறார், இன்டர்வெல் வருகிறது.

என் நண்பன் என்னை போட்டு அடித்தான், நான் தான் அப்பவே சொன்னேன்ல. ஏண்டா டிக்கெட் எடுத்த என்று, அதற்கு தண்டனையாக பாப்கார்ன், கூல்டிரிங்ஸ் செலவு என் தலையில் கட்டப்பட்டது. வெளியில் சென்றால் பல குமபல் பல பேரை போட்டு அடித்துக் கொண்டு இருந்தார்கள், அப்போது தான் எனக்கு உயிரே வந்தது, அப்படா தியேட்டரில் கம்பெனிக்கு பலர் உள்ளனர் என்று ஆறுதல் அடைந்து கொண்டேன். என்னடா படத்தை விட்டு விட்டேன் என்று பார்க்கிறீர்களா? சரி உங்க தலையெழுத்து படத்துக்கு வருவோம்.

அடிபட்ட பூனம் ஆஸ்பத்திரியில் இருக்கிறார். சமீரா ரெட்டி அவரது பெற்றோர்களிடம் முன்கதை சுருக்கத்(1)தை சொல்கிறார். அவரது அப்பா பெரிய ரெளடியாக இருந்து செத்துப் போகிறார். சிறுவயது விஷாலும் பூனமும் சாப்பிட கூட வழியில்லாமல் பசியில் தவிக்கின்றனர், அப்பொழுது ஒரு கிறிஸ்துவ பாதிரியார் அனாதை பெண்குழந்தை என்று பூனம்மை அழைத்துச் செல்வதாக கூறுகிறார். தங்கைக்கு சாப்பாடு கிடைக்கும் என்பதால் அவரை யாரென்று தெரியாது என்று கூறுகிறார். அதனால் தங்கை அவரை வெறுக்கிறார், முன்கதை சுருக்கம் (1) ஓவர். வில்லனின் மகனை கொன்றதால் வில்லன் கும்பல் மீண்டும் அவரையும் சமீராவையும் துரத்துகிறது. அவர்களையெல்லாம் சும்மா சுளுக்கெடுத்து விட்டு முன்கதைசுருக்கத்(2)தை சமீராவுக்கு சொல்கிறார். அவர் ஒரு போலீஸ் ஐபிஎஸ் ஆபீசர். தூத்துக்குடியில் அராஜகம் பண்ணும் ஷாயாஜி ஷிண்டேவை அடக்குகிறார். அவரை ரவுடியிசம் செய்ய விடாமல் தடுக்கிறார்.ஜெயிலுக்கு அனுப்புகிறார். தங்கை பற்றிய விவரம் தெரிந்ததால் வேலைக்கு லீவு போட்டு விட்டு கல்கத்தா புறப்படுகிறார், முன்கதை சுருக்கம் (2) ஓவர், அப்புறம் என்ன வில்லன் தங்கையை கடத்தினாரா? தங்கைக்காக விஷால் அடி வாங்கினாரா? வில்லனை அடித்து படத்தை முடித்தாரா? என்பதை காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பார்த்து ஜென்ம சாபல்யம் அடைந்து கொள்ளவும். ஏனென்றால் பிளாஷ்பேக் முடிந்ததும் நாங்கள் வெளியில் வந்து விட்டோம். நாங்கள் மட்டுமல்ல திரையரங்கில் இருந்த பாதிக்கூட்டம் வந்து விட்டது

ஸ்ஸ்ஸ் அப்ப்ப்பா இதை டைப் பண்ணும் போதே கண்ண கட்டுதே.

படத்தில் விவேக்கும் இருக்கிறார். படம் பார்க்கும் நமக்கு தான் சிரிப்பு வர மாட்டேங்குது. சமீரா ரெட்டியும் இருக்கிறார், ஆனால் ஒன்னும் சொல்லிக் கொள்வது போல் இல்லை. உடம்பும் தளர்ந்து போய் இருக்கிறது.

ஆந்திராவில் படம் ஓடினால் தமிழ்நாட்டிலும் படம் ஓட வேண்டுமா என்ன?

வெடி - நூறு ரூவா டமார்.

அண்ணே இவ்வளவு பேர் படிக்கிறீங்க. சும்மா சீ போ அப்படினாவது யாராவது கமெண்ட் போடுங்கப்பா.

ஆரூர் முனா

No comments:

Post a Comment