Monday 1 December 2014

பஞ்சேந்திரியா - வீரவன்னியர், வீரதேவர், வீரகவுண்டர் தேவையா?

ரெண்டு நாளைக்கு முன்னாள் நான் பகிர்ந்திருந்த பேஸ்புக்  ஸ்டேட்டஸ் இது.

அது என்னங்கடா வீர வன்னியன், முரட்டு தேவன், வீர கவுண்டன், தெறி வீர மறவன்னு அடைமொழி, அதுவும் பேஸ்புக்ல. நீங்கள்லாம் அரிவாள்ல பல்லு தேய்ச்சி கத்தியால காலை டிபன் சாப்பிடுறவனுங்களா. 

ஏன், நான் வீரன்டான்னு சொல்லி ஒரு அய்யர் ஓட்டல்ல போய் காசு கொடுக்காம சாப்பிட்டு பாரு. நிஜமாவே ஒரு வீர அய்யரை அங்க பாப்ப.
நிஜத்துக்கு பக்கத்துல வாழப் பழகுங்கடா வெங்காயங்களா. 

# அடச்சே நம்மளை காலையிலேயே டென்சனாக்கி உட்டுட்டாய்ங்களே

அந்த பொங்கலுக்கு காரணம்
ஒரு நாள் காலையில் ஊர்ப்பக்கத்தை சேர்ந்த ஒருத்தர் உள்டப்பியில் வந்து நீங்க எங்க சாதி தானே, அதனால் பின்னாடி வீர .............................. அப்படின்னு போட்டுக்கங்க. அப்பத்தான் கெத்தா இருக்கும்ன்னார். அவரை அப்படியே நட்பு வட்டத்துல இருந்து அலேக்கா நகர்த்திட்டேன். இவனுங்க சகவாசம் தான் ஆபத்து.

--------------------------------------------------------

குழல் இனிது, யாழ் இனிது என்போர் மழலைச் சொல் கேளாதவர்

எல்லையில்லாமல் அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன்.

--------------------------------------------------------

சரோஜா தேவி டைப் புத்தகங்களில் கில்மா டைப் கதைகளுக்கென்றே சில டெம்ப்ளேட்கள் இருக்கும். மழைக்கு மரத்தில் ஒதுங்கிய போது, பேருந்தில் இரவுப் பயணத்தில், எதிர்த்த வீட்டு ஆண்ட்டி என. அதில் ஒரு டெம்ப்ளேட் லிப்டில் பயணத்தில் அப்படியே... . நானும் யோசிப்பது உண்டு, எப்படி சாத்தியம் இது, எழுதுவது கற்பனை கதை என்றாலும் ரியாலிட்டிக்கு பக்கத்தில் இருக்க வேண்டாமா என.

அயனாவரம் ரயில்வே ஜாயிண்ட் ஆபீஸில் ஒரு லிப்ட் இருக்கிறது. வெறும் இரண்டு மாடிக்கு மட்டும் தான் லிப்ட். அதன் வேகம் இருக்கே. அந்த நினைப்புடன் இருவர் தரைத்தளத்தில் ஏறினால் இரண்டாம் மாடி போவதற்குள் எல்லாத்தையும்..... ம். அப்புறம் சாவகாசமாகவே லிப்ட்டை விட்டு வெளிவரலாம்.

மங்கள்யானை விட படுவேகம். நடத்துங்கடா டேய்.

-------------------------------------------------------

ஒரு ப்ளாஷ்பேக்


-------------------------------------------------------------

இன்று பேப்பரில் ஐ படத்தின் விளம்பரத்தை பார்த்தேன். சென்னையின் மிகப் பெரும்பான்மையான அரங்குகளில் ஐ படம் தான் வெளியாகப் போகுது போல. சத்யம்ல 3 அரங்கு, எஸ்கேப்ல 8 அரங்கு, ஐநாக்ஸ்ல 4 அரங்கு, பெரம்பூர்ல எஸ்2ல 4 அரங்கு, தேவில 3 அரங்கு, சாந்தில 2 அரங்கு, ஆல்பர்ட்ல 2 அரங்கு, அபிராமில 3 அரங்கு, பிவிஆர்ல 3 அரங்கு, ஈகாவுல 2 அரங்கு, உதயம்ல 2 அரங்கு, லக்ஸ்ல 6 அரங்கு, இன்னும் மிச்சம் மீதி இருக்கும் அரங்குலயும் ஐ படம் தான் வரப்போகுதாம்.

அப்ப அஜித்தின் என்னை அறிந்தால் படத்துக்கு குறைவான அரங்குகளே கிடைக்கப் போகிறது. அதையும் தாண்டி விஷாலின் ஆம்பள படத்துக்கு டூரிங் டாக்கீஸ் கூட கிடைக்காது போல இருக்கே.

அப்ப இந்த வருட பொங்கலுக்கு டாப் ஸ்டார் ச்சீயான் விக்ரம் தானா

வெள்ளியன்று  ஏகப்பட்ட படங்கள் வெளியாகின்றன. அதுவும் லோ பட்ஜெட் படங்கள். அதுக்கு அப்புறம் கிறிஸ்துமஸ்க்கு தான் மற்ற படங்கள் வெளியாகும் போல. இடைப்பட்ட அனைத்து நாட்களையும் லிங்கா எடுத்துக் கொள்ளப் போகின்றது.

தலைவர் ராக்ஸ்.

ஆரூர் மூனா

12 comments:

  1. மழலைச் செல்வம் கண்டு மகிழ்வுற்றேன்! வாழ்க!வளமுடன் வளர்க! நலமுடன்

    ReplyDelete
  2. அறிய அரிய புகைப்படம்

    ReplyDelete
    Replies
    1. என்னா கண்டுபிடிப்பு, பலே

      Delete
  3. வசந்தமுல்லை- அழகு

    ReplyDelete
  4. குழல் இனிது, யாழ் இனிது என்போர் மழலைச் சொல் கேளாதவர்--
    பரந்த உள்ளதுடன் இதை எழுதினீரர்கள் என்று தெரியும்.

    உண்மையில்..

    குழல் இனிது, யாழ் இனிது என்போர்--தம் மக்கள்--மழலைச் சொல் கேளாதவர். அதுவும், தங்கள் முதல் குழந்தை பேசும் மழலை இனிமையிலும் இனிமை!

    ReplyDelete
  5. மீண்டு(ம்) வந்ததற்கு வாழ்த்துக்கள். thothavanda is still online though.

    ReplyDelete
    Replies
    1. நன்றி, நேற்று சைபர் க்ரைமில் கம்ப்ளைன்ட் கொடுத்து வந்துள்ளேன். பத்து நாட்களில் திரும்ப பெற்று விடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள், பார்ப்போம்.

      Delete
  6. இனி மேல் தான் வாழ்க்கையின் உண்மையான சந்தோசமே... பொறுப்புடன் இருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete