இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு செல்லவில்லை, சென்னையில் இருந்தால் எப்படியும் போக வேண்டி வரும் என ஊரிலேயே இருந்து விட்டேன். இருந்தாலும் பதிவு போடாமல் இருக்க முடியுமா, அதான் இந்த மீள் பதிவு
/////////////////////////////////////////////////////
2014 புத்தக கண்காட்சி
புத்தக கண்காட்சிக்கு போயிட்டு வந்து பதிவு போடலன்னா சாமி கண்ணை குத்திடும்
என்று எல்லோரும் பயமுறுத்துவதாலும் நேற்று வாங்கிய புத்தகங்களை
பட்டியலிடவும் என்று பிலாசபி பிரபா கேட்டதாலும் தான் இந்த பதிவு.
நேற்று முன்தினமே சிவா போன் செய்து சனியன்று மாலை புத்தக கண்காட்சிக்கு
வந்து விட வேண்டுமென்றும் பிரபாவையும் செல்வினையும் கூப்பிடுவதாகவும்
சொன்னார்.
அதன் படி நேற்று மதியம் வீட்டு வேலைகளை முடித்து விட்டு புத்தக
கண்காட்சிக்கு கிளம்ப தயாராக இருந்தேன். தனியாக செல்ல யோசனையாக இருந்தது.
நண்பர் போலி பன்னிக்குட்டிக்கு போனடித்தேன். பேச்சுத் துணைக்கு அவரையும்
அழைத்துக் கொண்டு கிளம்பினேன்.
வழியில் ஸ்கூல் பையன் போன் செய்து அரங்கினுள் காத்திருப்பதாகவும் வந்து இணைந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
கண்காட்சி வளாகம் உள்ளே நுழைந்ததும் பிரபாவும் சிவாவும் டீக்கடையில்
இருந்தார்கள். அவர்களுடன் சிறிது நேரம் அளவளாவி விட்டு எல்லோரும்
அரங்கினுள் நுழைந்தேன்.
--------------------------------------------------
வாங்கிய புத்தகங்கள்
1, வெள்ளையானை - ஜெயமோகன்
2, கொசு - பா.ராகவன்
3, ஓநாய் குலசின்னம் - ஜியாங்ரோங்
4, பிலோமி டீச்சர் - வா.மு.கோமு
5, நாயுருவி - வா.மு.கோமு
6, திப்புசுல்தான் முதல் விடுதலைப் புலி - மருதன்
7, காங்கிரஸ் முதல் கழகங்கள் வரை - ராவ்
8, தலைகீழ்விகிதங்கள் - நாஞ்சில் நாடன்
9, முசோலினி ஒரு சர்வாதிகாரியின் கதை - ஜனனி ரமேஷ்
10, மாவோ என் பின்னால் வா - மருதன்
11, கர்ணனின் கவசம் - கே.என். சிவராமன்
12, உப்புநாய்கள் - லக்ஷ்மி சரவணகுமார்
13, எம்,கே. தியாகராஜ பாகவதர் - இரா.செழியன்
14, மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள் - மம்முட்டி
15, அண்டார்டிகா மர்மக் கண்டத்தின் வரலாறு - முகில்
16, மார்டின் லுதர் கிங் கருப்பு வெள்ளை - பாலு சத்யா
17, சர்வம் ஸ்டாலின் மயம் - மருதன்
18, கலைவாணி ஒரு பாலியல் தொழிலாளியின் கதை - ஜோதி நரசிம்மன்
19, என் வானம் நான் மேகம் - மா. அன்பழகன்
20, கலைந்த பொய்கள் - சுஜாதா
21, விழுந்த நட்சத்திரம் - சுஜாதா
22, கம்ப்யூட்டர் கிராமம் - சுஜாதா
23, படிப்பது எப்படி - சுஜாதா
24, 57 ஸ்னேகிதிகள் ஸ்னேகித்த புதினம் - வா.மு.கோமு
25, 100 நாற்காலிகள் - ஜெயமோகன்
26, லிண்ட்சேலோஹன் - வா.மணிகண்டன்
27, ராஜீவ்காந்தி சாலை - விநாயக முருகன்
28, அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்
29, எட்றா வண்டிய - வா.மு.கோமு
30, எரியும் பனிக்காடு - பி.எச். டேனியல்
31, மரப்பல்லி - வா.மு.கோமு
32, நளினி ஜமீலா - குளச்சல் மு.யூசுப்-------------------------------------------------------
எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. புத்தகம் வாங்கத் தொடங்கினால் கண்ணு மண்ணு
தெரியாமல் அளவுக்கு அதிகமாக புத்தகங்களை வாங்கி விடுவேன். அதனால் இந்த
முறை நிறைய வாங்கக் கூடாது என்பதற்காகவே வெறும் ஆயிரம் ரூபாயை மட்டும்
கைவசம் வைத்திருந்தேன்.
பிரபாவிடம் இந்த வருடம் வாங்க வேண்டிய புத்தகங்கள் பட்டியல் கேட்டுப்
பெற்றுக் கொண்டேன். உள்ளே நுழைந்து வெறும் 5 நிமிடத்தில் ஆயிரம் ரூபாயும்
காலி. இனனும் வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் நிறையவே இருந்தது. வேற
என்ன பண்றது.
பிறகு எங்கெல்லாம் டெபிட்கார்டு அனுமதியிருக்கிறதோ அங்கெல்லாம் தான்
புத்தகங்கள் வாங்கினேன். கிழக்கு பதிப்பகம் மற்றும் டிஸ்கவரி ஸ்டால்களில்
ஏகப்பட்ட புத்தகங்களை அள்ளி விட்டேன்.
கிழக்கு பதிப்பகத்தில் வாங்கிக் கொண்டு இருக்கும் போது ரூபக்ராம், கோவை
ஆவி, ஸ்கூல் பையன் ஆகியோர் எங்களுடன் இணைந்து கொண்டனர். பிறகு கலாட்டாவுடன்
தான் அரங்கஉலா நகர்ந்தது.
நேற்று டிஸ்கவரி ஸ்டாலில் தான் முதன் முறையாக வா.மணிகண்டனை சந்தித்தேன்.
நான் கூட மற்றவர்களிடம் பேச சற்று தயக்கம் காட்டுவேன். நெருங்கி விட்டால்
தான் நம்மைப் பற்றி மற்றவர்களுக்கு புரியும். ஆனால் வா.மணிகண்டன் என்னை
கண்டதும் தானாகவே வந்து அறிமுகப்படுத்திக் கொண்டு நலம் விசாரித்தார். இந்த
பழக்கம் எனக்கு வரமாட்டேங்குதே என்று வருத்தமாக இருந்தது.
அவரிடம் சிறிது நேரம் பேசி விட்டு அகநாழிகை ஸ்டால் நோக்கி நகர்ந்தோம்.
வழியில் கேபிளை சந்தித்து விட்டு மணிஜியுடன் சிறிது நேரம் அளவளாவினோம்.
எட்டு மணிக்கு மேலானதால் சபையை கலைத்து விட்டு கிளம்பினோம்.
தினமும் வந்தால் என் பட்ஜெட் எகிறி விடும். அதனால் வரும் சனிக்கிழமை தான் அடுத்த புத்தக கண்காட்சி விசிட்.
------------------------------------------------------
சனிக்கிழமை சிவா, பிரபாவுடன் இணைந்து புத்தக கண்காட்சியில் வேறு எந்த வம்பு
தும்புக்கும் செல்லாமல் புத்தகங்களை வாங்கினோமா வீட்டுக்கு திரும்புவோமா
என்று இருந்தோம். அது போல் பதிவுலக நண்பர்களையும் அதிகம் பார்க்கவில்லை.
நாகராஜசோழனுடன் சிறிது நேரம் கலாய்த்து விட்டு பிறகு குடும்பத்தினருடன்
சிராஜை பார்த்து அளவளாவி விட்டு ஏரியாவை விட்டு கிளம்பினோம்.
ஞாயிறு அன்று பெரிய ஜமா கூடி விட்டது. நான், செல்வின், சிவா, பிரபா, புலவர்
ஐயா, கவியாழி, பாலகணேஷ், ஸ்கூல்பையன், சீனு, ரூபக்ராம், போலி
பன்னிக்குட்டி, ஆர்வி.சரவணன், செல்லப்பா மற்றும் பல பதிவுலக நண்பர்கள்
ஒன்று கூடி கலாய்த்துக் கலாய்த்து பொழுது நன்றாக கழிந்தது.
பல மணிநேரங்கள் நடந்து விட்டு ஓய்வெடுக்க ஜீவா சிற்றரங்கு அருகில் அமர்ந்து
கொண்டு இருந்த போது 6174வை விட மிக அற்புதமாக அறிவியலையும் நடைமுறை கால
இயல்பு வாழ்க்கையையும் இணைத்து ஒரு நாவலை எழுதி வருவதாக செல்வின்
தெரிவித்தார்.
அதனைப் பற்றிய விவரங்களை அவரது வாயில் இருந்து பிடுங்க நானும் சிவாவும்
ஏகப்பட்ட வார்த்தை ஜாலங்களை காட்டி முயற்சித்தது தோல்வியில் தான்
முடிந்தது.
பிறகு காலச்சுவடு அரங்கிற்கு சென்று கிருஷ்ணபிரபுவை சந்தித்து புத்தங்களைப்
பற்றி கேட்டோம். பெருமாள் முருகனின் நிழல் முற்றம் வாங்குங்கள் என்று
சொன்னார். "யாரு பெருமாள் முருகன்" என்று கேட்டது தான் தாமதம். மனிதர்
காய்ச்சி எடுத்து விட்டார். பெருமாள் முருகன் யாரென்று தெரியாதது ஒரு
குற்றமா. அடங்கப்பா.
ஐந்து மணிக்கு புத்தக வெளியீட்டு விழாவுக்கு சென்று கூடி கும்மாளமிட்டு
நிறைவு வேளையில் எல்லோரும் சேர்ந்து குல்ப்பி ஐஸ் வாங்கி சப்பினோம்.
வாங்கித் தந்த ஆர்.வி. சரவணன் அவர்களுக்கு நன்றிகள் உரித்தாகுக.
2014 புத்தக திருவிழாவுக்கு டாட்டா காண்பித்து விட்டு சபையை கலைத்து புறப்பட்டோம்.
வாங்கிய புத்தகங்கள்
1, அர்த்தமற்ற இந்துமதம் பாகம் 1 - மஞ்சை வசந்தன்
2, அர்த்தமற்ற இந்துமதம் பாகம் 2 - மஞ்சை வசந்தன்
3, கடவுளும் மதமும் ஒழிய வேண்டும் ஏன் - தந்தை பெரியார்
4, சோளகர் தொட்டி - ச. பாலமுருகன்
5, பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை
6, ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள் - தந்தை பெரியார்
7, தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை (மரண சாசனம்)
8, புரோகிதர் ஆட்சி - ந.சி.கந்தையா பிள்ளை
9, சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்ததேன் - தந்தை பெரியார்
10, கருஞ்சட்டைப் படை - புலவர். பு.செல்வராஜ்
11, இராமாயண பாத்திரங்கள் - தந்தை பெரியார்
12, எழுத்துச் சீர்திருத்தம் - தந்தை பெரியார்
13, தமிழா நீ ஓர் இந்துவா - மஞ்சை வசந்தன்
14, கரையோர முதலைகள் - பாலகுமாரன்
15, கண்ணாடி கோபுரங்கள் - பாலகுமாரன்
16, அறைகள் நிறை உள்ள வீடு - குட்டிரேவதி
17, நிழல் முற்றம் - பெருமாள் முருகன்
18, ஆயிரத்தில் இருவர் - சுஜாதா
19, பெண் இயந்திரம் - சுஜாதா
20, தண்ணீர் - அசோகமித்திரன்
21, ஆதலினால் காதல் செய்வீர் - சுஜாதா
22, அனிதா இளம் மனைவி - சுஜாதா
23, வெல்லிங்டன் - சுகுமாரன்
24, அனிதாவின் காதல்கள் - சுஜாதா
25, பாதி ராஜ்யம் - சுஜாதா
26, ஒரு விபத்தின் அனாடமி - சுஜாதா
27, மாயா - சுஜாதா
28, காயத்ரி - சுஜாதா
29, விதி - சுஜாதா
30, மேற்கே ஒரு குற்றம் - சுஜாதா
31, மேலும் ஒரு குற்றம் - சுஜாதா
32, உன்னைக் கண்ட நேரமெல்லாம் - சுஜாதா
33, மீண்டும் ஒரு குற்றம் - சுஜாதா
34, அம்மன் பதக்கம் - சுஜாதா
35, மெரீனா - சுஜாதா
36, புகார்... புகார்... புகார்... - சுஜாதா
37, ஐந்தாவது அத்தியாயம் - சுஜாதா
38, தமிழ் சினிமாவின் பொக்கிஷம் - பிலிம் நியுஸ் ஆனந்தன்
39, பேரறிவாளனின் உயிர்வலி சக்கியடிக்கும் சத்தம் - டிவிடி
40, அடைக்கப்பட்ட கதவுகளின் முன்னால் - அனுஸ்ரீ
41, இலக்கியம் மாறுமா - அ.ஞா. பேரறிவாளன்
2013 புத்தக கண்காட்சி
இந்துவா பொறந்தவன் கோயிலுக்கு போகலைனா தெய்வகுத்தம்னு சொல்றது போல
பதிவெழுதுறவங்கன்னா புத்தக கண்காட்சிக்கு போயிட்டு வந்து பதிவா போடனும்.
கூடவே வாங்கின புத்தகங்களின் லிஸ்ட்டையும் விலையுடன் பகிரனும். இல்லைனா
பிரபல(?) பதிவர்னு ஒத்துக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.
ஆனா எல்லாப் பதிவர்களின் புத்தக கண்காட்சி பதிவையும் படித்துப் பார்த்தால் ஒரே டெம்ப்ளேட் தான். நானும் அதே போல் எழுவில்லையென்றால் ஆடையில்லாதவன் ஊர்ல கோவணம் கட்டுனவன் பைத்தியக்காரன்கிற மாதிரி என்னையும் ஒதுக்கிடுவாங்களோன்னு பயத்துல தான் இந்த பதிவு.
என்னடா தலைப்புல என்னன்னவோ விஷயங்கள் இருக்கிற மாதிரி இருக்கு, ஆனா பதிவுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமுமில்லையேன்னு நினைக்கிறவங்க புத்திசாலிகள், வருங்காலத்தில் பிலாசபி பிரபாகரன் அளவுக்கு வம்பு வளர்க்கும் பதிவரா வளர வாய்ப்பிருக்கிறது. இப்பதிவின் தலைப்பு உங்களுக்கு வீடுதிரும்பல் ப்ளாக்கை நினைவுபடுத்தினால் நிர்வாகம் பொறுப்பல்ல.
தமிழ் டைப்பிங், பதிவை படிக்கிறது, பதிவை சுவைபட எழுதுவது போன்ற விஷயமெல்லாம் இரண்டு வருடத்திற்குள் தெரிந்த விஷயம். ஆனால் எனக்கு படிப்பது என்பது சிறுவயதில் இருந்தே ஊறிய விஷயம். எனக்கு தெரிந்து 2002ம் ஆண்டிலிருந்தே புத்தக கண்காட்சிக்கு வந்து கொண்டு இருக்கிறேன். அப்பொழுது காயிதே மில்லத் கல்லூரியில் நடந்து கொண்டு இருந்தது.
அப்பொதெல்லாம் எனக்கு கண்காட்சிக்கு வருபவர்களில் நிறைய பேரை தெரியாது. ஆனால் இன்றோ ஒரு வரிசைக்கு ஒருவர் தெரிந்தவராக மாட்டுகிறார்கள். அதிலும் முக்கால்வாசி பேர் பதிவர்களாக இருப்பது கொடுமையிலும் கொடுமை.
இதற்கு முன்பு நடந்த கண்காட்சிகளில் எல்லாம் என்னுடைய அக்காமார்கள், மற்றும் தமிழாசிரியர்கள் எனக்கு நல்ல புத்தகம் என்று அறிமுகப்படுத்திய புத்தகங்களையெல்லாம் வாங்கி விட்டேன், பிறகு சிறந்த நாவலாசிரியர்கள் என்று நான் நினைக்கும் எழுத்தாளர்களின் புத்தகங்களையும் வாங்கியாகி விட்டது.
இந்த வருடம் வாங்குவதற்கு எந்த எதிர்ப்பார்ப்புமில்லை. விமலாதித்த மாமல்லன் எழுதிய சின்மயி விவகாரம் மற்றும் நண்பர் பாலகணேஷின் சரிதாயணம் மட்டும் வாங்கினால் போதும் பர்சை அவிழ்க்கவே கூடாது என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் கண்காட்சி உள்ளே நுழைந்ததும் காஞ்சமாடு கம்புல புகுந்தது போல நிறையவே புத்தகங்களை வாங்கி விட்டேன். எல்லாவற்றிற்கும் காரணம் கவர்ச்சிகரமான தலைப்பு மட்டுமே.
கூடுதலாக இரண்டு சாப்ட்வேர் தமிழ்வழிக் கல்வி சிடிக்களை வாங்கினேன். போட்டோஷாப் மற்றும் வெப்டிசைனிங் தான் அவை. நேற்று போட்டோஷாப் சிடியை போட்டுப் பார்த்தேன், ஓரளவுக்கு புரிந்தது. இதை வைத்து இரண்டிலும் புகுந்து பார்த்து விட வேண்டியது தான்.
படித்து பார்த்தால் தான் இந்த புத்தகங்களின் தரம் புரியும். மீனாட்சி புத்தக நிலையத்தில் புகுந்து சுஜாதாவின் புத்தகங்களை கன்னாபின்னாவென்று வாங்கி விட்டேன், வீட்டிற்கு வந்து புரட்டிப் பார்த்தால் தான் தெரிகறது. ஏற்கனவே என்னிடம் இருந்த பல சுஜாதாவின் தொகுப்புகளில் இந்த நாவல்கள் இருக்கிறது என்று. எல்லாம் படித்த நாவல்கள்.
ராஜூ முருகனின் வட்டியும் முதலும் எனக்கு மிகவும் பிடித்த தொடராக இருந்தாலும் ஏற்கனவே எல்லா பகுதியையும் படித்து விட்டதால் வாங்க ஆர்வம் காட்டவில்லை. அடுத்த முறை கண்காட்சிக்கு செல்லும் போது படித்ததெல்லாம் மறந்திருக்கும், அப்பொழுது வாங்கி கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
இரண்டு நாட்கள் பதிவுலக நண்பர்களோடு அளவளாவி கூத்தடித்தது நல்ல அனுபவம். நட்புகளை மேலும் நெருக்கமாக்கியது. நேற்று நானும் மெட்ராஸ் பவன் சிவாவும் சென்று பார்த்தால் ஒரு பதிவரையும் காணவில்லை. போரடிக்கவே அங்கிருந்து காமராஜர் அரங்கிற்கு கிரேசி மோகனின் கிரேசி கிஷ்கிந்தா நாடகத்திற்கு ஜூட் விட்டோம்.
பைக்கை எடுத்து வெளியில் வருவதே பெரும்பாடாகி விட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் போக்குவரத்து காவலர்கள் கார்களை உள்ளே விட மறுத்து திருப்பி அனுப்பி விட்டனர். எப்படியும் ஆயிரம் கார்களுக்கு மேல் உள்ளே வரமுடியாமல் திரும்பி விட்டனர்.
நிர்வாகத்தினர் அடுத்த முறையாவது ஒழுங்கான இடத்தை தேர்வு செய்தால் வரும் மக்கள் நிம்மதியாக வந்து புத்தகங்களை பார்த்து வாங்கிச் செல்ல வசதியாக இருக்கும். போதும் ரொம்பவே பேசியாச்சு.
இனி பதிவர் மரபுப்படி நான் வாங்கிய புத்தகங்களின் லிஸ்ட்டை கொடுக்கிறேன். அதில் சிறந்த புத்தங்களாக நான் நினைப்பதின் விமர்சனங்களை பகிர்கிறேன்.
தூக்கு கயிற்றில் நிஜம் - திருச்சி வேலுச்சாமி - விலை ரூ.200/-
மரப்பசு - தி.ஜானகிராமன் - விலை ரூ.100/-
வீடு கனவு இல்லத்துக்கான கைடு - தாஸ் - விலை ரூ.125/-
சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரல் - விமலாதித்த மாமல்லன் - விலை ரூ.120/-
9/11 மாபெரும் சதியின் பின்னணி - பா.ராகவன் - விலை ரூ.150/-
தமிழர் உணவு - பக்தவத்சல பாரதி - விலை ரூ.250/-
வெளிச்சத்தின் நிறம் கருப்பு மர்மங்களின் சரித்திரம் - முகில் - விலை ரூ.200/-
மோஸாட் இஸ்ரேலிய உளவுத்துறை - என்.சொக்கன் - விலை ரூ.110/-
இந்தியாவின் முதல் விடுதலைப் போர் - எஸ்.ராமக்கிருஷ்ணன் - விலை ரூ.225/-
அரவாணிகள் - மகாராசன் - விலை ரூ.210/-
சம்பிரதாயங்கள் சரியா - மஞ்சை.வசந்தன் - விலை ரூ.40/-
உடலினை உறுதி செய் - சி.சைலேந்திரபாபு - விலை ரூ.120/-
தோல் - டி.செல்வராஜ் - விலை ரூ.400/-
பாகிஸ்தான் அரசியல் வரலாறு - பா.ராகவன் - விலை ரூ.110/-
அமெரிக்க உளவுத்துறை FBI ரகசியங்கள் - என்.சொக்கன் - விலை ரூ.110/-
ISI நிழல் அரசின் நிஜ முகம் - பா.ராகவன் - விலை ரூ.120/-
கொலம்பிய போதை மாபியா - பா.ராகவன் - விலை ரூ.140/-
கிழக்கிந்திய கம்பெனி ஒரு வரலாறு - ராமன் ராஜா - விலை ரூ.220/-
தரணிகண்ட தனிப்பிறவி எம்.ஜி.ஆர் - எ.சங்கர்ராவ் - விலை ரூ.150/-
பாட்ஷாவும் நானும் சுரேஷ்கிருஷ்ணா - விலை - ரூ.125/-
போட்டோஷாப் தமிழ்வழி சாப்ட்வேர் கல்வி - விலை ரூ.200/-
வெப்டிசைனிங் தமிழ்வழி சாப்ட்வேர் கல்வி - விலை ரூ.200/-
21ம் விளிம்பு - சுஜாதா - விலை ரூ.43/-
உயிராசை - சுஜாதா - விலை ரூ.22/-
24ரூபாய் தீவு - சுஜாதா - விலை ரூ.24/-
60 அமெரிக்க நாட்கள் - சுஜாதா - விலை ரூ.24/-
கமிஷனருக்கு கடிதம் - சுஜாதா - விலை ரூ.19/-
வடிவங்கள் - சுஜாதா - விலை ரூ.22/-
விபரீதக் கோட்பாடு - சுஜாதா - விலை ரூ.20/-
நீர்க்குமிழிகள் - சுஜாதா - விலை ரூ.11/-
ஓடாதே சுஜாதா - விலை - ரூ.24/-
சரிதாயணம் - பாலகணேஷ் - விலை ரூ.60/-
நோயினை கொண்டாடுவோம் - நம்மாழ்வார் - விலை ரூ.15/-
கடவுளும் மனிதனும் - தந்தை பெரியார் - விலை ரூ.10/-
இது தான் மகாமகம் - தந்தை பெரியார் - விலை ரூ.3/-
புரோகிதர் ஆட்சி - கந்தையா பிள்ளை - விலை ரூ.12/-
யார் இந்த இராமன்? - அறிவரசன் - விலை ரூ.12/-
அய்யப்ப பக்தர்களுக்கு சில கேள்விகள் - திக வெளியீடு - விலை ரூ.12/-
சிலப்பதிகாரமும் ஆரியக் கற்பனையும் - வெ.சு.சுப்பிரமணியாச்சாரியார் - விலை ரூ.15/-
காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு - திக வெளியீடு - விலை ரூ.10/-
சோதிட ஆராய்ச்சி - தந்தை பெரியார் - விலை ரூ.15/-
கடவளர் கதைகள் - சாமி - விலை ரூ.12/-
செயின்ட் கிட்ஸ் வழக்கும் பொது வாழ்க்கையும் - கி.வீரமணி - விலை ரூ.10/-
பலிபீடம் நோக்கி - கலைஞர் மு.கருணாநிதி -விலை ரூ.8/-
திராவிடர் ஆரியர் உண்மை - தந்தை பெரியார் - விலை ரூ.5/-
ஆர்.எஸ்.எஸ் பற்றி - கி.வீரமணி - விலை ரூ.8/-
பேய் பூதம் பிசாசு அல்லது ஆவிகள் - திக வெளியீடு - விலை ரூ.20/-
திருக்குர்ஆன் - திருக்குர்ஆன் அறக்கட்டளை - இலவசம்
அம்மா நீ வருவாயா - கவியாழி கண்ணதாசன் - இலவசம்
----------------------------
ஆரூர் மூனா

No comments:
Post a Comment