Saturday 3 January 2015

கடுப்பேத்திய ஆன்மீக பயணம்


போன திங்களன்று தஞ்சாவூர் மாரியம்மன் கோயிலுக்கு குடும்பத்துடன் போயிருந்தேன். நான் பிறந்து 2 மாதத்திலேயே கோயிலுக்கு தூக்கிட்டு வந்தார்களாம். எனது 12 வயது வரை மாதம் ஒரு முறை கோயிலுக்கு குடும்பத்துடன் செல்வது வழக்கமாக இருந்தது. அப்புறம் நான் போவதை தவிர்த்து விட்டேன். அப்பா சொல்லிப் பார்த்து நான் கோயிலுக்கு போவதேயில்லை என்பதால் விட்டு விட்டார்.


இந்த முறை 80 வயதான எங்க மாமா ஒருத்தர் ரயிலில் இருந்து தவறி விழுந்து தொடை எலும்பு முறிந்து விட்டது. மருத்துவமனையில் இருக்கும் அவரை பார்க்க செல்ல முடிவெடுத்த போது போகும் வழியில் கத்திரிநத்தம் கிராமத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்கும், மாரியம்மன் கோயிலுக்கும் செல்வதாக குடும்பத்தார் பெரும் திட்டம் தீட்டினர்.

அம்மா நான் பிறந்தவுடன் மாரியம்மன் கோயிலுக்கு அழைத்து சென்றதால் முல்லையையும் அழைத்து செல்ல வேண்டும் என உறுதியாக சொல்லி விட்டார். போனோம். எனக்கு தான் நிம்மதி போச்சு.

அது என் ஏரியா கோயில். சிறு வயது முதல் பிரகாரங்களில் விளையாடி இருக்கிறேன். கடவுள் நம்பிக்கை என்பது வேறு. பழகிய கோயில் என்பது, சொந்த ஊருக்கும் வீட்டுக்கும் சமம். ஆனால் அது இன்று பணம் பிடுங்கி கோயிலாக மாறி விட்டது.


வக்காளி எல்லாத்துலயும் ப்ராடுத்தனம். திருட்டு, வெளங்குமாடா இது. உள்ளே நுழைந்தவுடன் அர்ச்சனை சீட்டுக்கு 5 ரூவா கேட்டானுங்க. சீட்டை வாங்கிப் பாத்தா இரண்டு நாளுக்கு முன் தேதியிட்ட பழைய சீட்டு, என்னாங்கடா பழைய சீட்டை கொடுத்து ஏமாத்துறீங்கன்னு சண்டைக்கு போனா எங்கப்பா என்கிட்ட சண்டைக்கு வர்றாரு, கோயிலுக்கு உன் கூட வந்தாலே ப்ரச்சனை தானான்னு.

அதை அப்படியே விட்டுட்டு உள்ளே போனா ஒரு பூணூல் போட்ட அய்யர் பையன் ஒருத்தன் என் குடும்பத்தை ஒரு பிள்ளையார் முன் நிறுத்தி பெரிய அர்ச்சனை பண்ணான். எனக்கு புரியலை. அப்புறம் பார்த்தா இது போல் மாதாமாதம் அர்ச்சனை பண்ணி உங்கள் வீட்டுக்கு பார்சல் அனுப்புகிறோம். ஐயாயிரம் கொடுங்கள் என்று மார்க்கெட்டிங் பண்ணினான்.

அவனுக்கு ஏகப்பட்ட வசவுகளை கொடுத்து யோசித்துக் கொண்டே வந்தேன். கண்டிப்பா லோக்கல் ஆளுகளுக்கு இந்த அர்ச்சனை மேட்டரை சொல்ல மாட்டான். என்னைப் பாத்தா வெளியூர்க்காரன் மாதிரியா தெரியுது. நம்ம மூஞ்சி பக்கா திராவிட முகமாச்சேன்னு.

உள்ளே போனால் அர்ச்சனை செய்யும் அய்யர் பூஜை முடித்ததும் கூச்சமேயில்லாமல் தட்சணை கொடுங்கள் என்று வாய் விட்டு கேட்கிறான். பிச்சையா என்று கேட்டேன். எங்கப்பா என்னை தள்ளிக் கொண்டு வெளியில் வந்தார். தலையில் அடித்துக் கொண்டு உனக்கு அறிவேயில்லையா, அது இதுன்னு திட்ட ஆரம்பித்து விட்டார்.

வாயை மூடிக்கிட்டு வண்டியை எடுத்தேன். அடுத்ததா போனது காளஹஸ்தீஸ்வரர் கோயில், மாரியம்மன் கோயில் ரயில் நிலையத்திலிருந்து 2 கிமீ தூரத்தில் இருக்கிறது கோயில். ஆயிரம் ஆண்டு பழமையான கோயில். ஆன்மீகவாதிகளுக்கு ஒரு தகவல். திருப்பதிக்கு அருகில் இருக்கும் காளஹஸ்திக்கு இணையான கோயிலாம் அது. அங்கு செய்யப்படும் பரிகாரங்களுக்கு இணையாக இங்கும் செய்யப்படுகிறது.

கூட்டமே இல்லை. நான் நிம்மதியாக சென்று வந்தேன். கோயில்னா நிம்மதி கொடுக்கனும், கெடுக்கக் கூடாது. வணிகமாகிப் போன ஆன்மீகம், கெடுக்கும் வேலையை தான் செய்து வருகிறது. திருவாரூர் கோயில் கூட புராதனமானது. அதன் முக்கிய கடவுள்கள் தியாகராஜரும், வன்மீகநாதரும் தான். ஆனால் இப்போது இந்து அறநிலையத்துறை இந்த கோயில் சர்வதோஷ பரிகார ஸ்தலம் என்பதை கையில் எடுத்து விளம்பரம் செய்து வருகிறது.

பிரச்சனைகளில் இருந்து எந்த கடவுள் விடுவிக்கிறதோ அதைத்தான் நாம் அதிகம் கும்பிடுகிறோம். இப்போது அதனை பயன்படுத்தி தான் இன்று ஆன்மீகம் வியாபாரமாகி வருகிறது.

உஷராகிக்கவும் மக்களே.

ஆரூர் மூனா

7 comments:

  1. பிரச்சனைகளில் இருந்து எந்த கடவுள் விடுவிக்கிறதோ அதைத்தான் நாம் அதிகம் கும்பிடுகிறோம். இப்போது அதனை பயன்படுத்தி தான் இன்று ஆன்மீகம் வியாபாரமாகி வருகிறது.

    உஷராகிக்கவும் மக்களே. சூப்பர் அப்பு

    ReplyDelete
  2. பிரச்சனைகளில் இருந்து எந்த கடவுள் விடுவிக்கிறதோ அதைத்தான் நாம் அதிகம் கும்பிடுகிறோம். இப்போது அதனை பயன்படுத்தி தான் இன்று ஆன்மீகம் வியாபாரமாகி வருகிறது.

    உஷராகிக்கவும் மக்களே. சூப்பர் அப்பு

    ReplyDelete
  3. ஹா... ஹா... கோயிலுக்கு போய் ரொம்ப காலம் ஆகி விட்டதோ...? வியாபாரம் எப்போதோ ஆரம்பித்து... ம்...

    ஒருமுறை பழனிக்கு சென்று வாருங்களேன்...!

    ReplyDelete
  4. கோவில் என்பது சந்தைப்படுத்தும் இடமாக மாறி எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் தான் கவனமாக இருக்கவேண்டும். தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  5. தங்கள் தளத்திற்கு முதல் முறையாக வருகிறேன். எங்கோ எதையோ தேடியதில் தங்கள் தளம் வந்தேன். வணிகமாகிப் போன ஆன்மீகம். உண்மைதான். இந்த கொடுமையை நான் பல முறை அனுபவித்து உள்ளேன். பணம் பிடுங்கும் இடமாக, வியாபாரமாகிவிட்டது. தங்கள் பதிவுக்கு நன்றி.

    ReplyDelete