Monday 6 April 2015

கொம்பன் படம் பார்த்த கதை

கொம்பன் படம் டிக்கெட் புக்கிங் ஆரம்பித்ததுமே அவசரப்பட்டு 2ம் தேதிக்கு புக் செய்து விட்டேன். எப்படியும் பார்த்து விடலாம் என்று இருக்கும் போது 1ம் தேதியே ரிலீஸ் என்று 31ம் தேதி அறிவித்தார்கள். பிறகு 2ம்தேதி டிக்கெட்டை கான்சல் செய்து விட்டு 1ம் தேதிக்கு புக் செய்தேன்.


31ம் தேதி இரவு மெட்ராஸ் பவன் சிவாக்கு போன் செய்து தடை பிரச்சனை முடிந்து விட்டதா போகலாமா என்று கேட்டால் சிரித்துக் கொண்டே இல்லை, இல்லை என சொன்னார். காலைக்காட்சி படம் ரிலீஸ் கிடையாது. மாலை தான் காட்சி இருக்கிறது. அதுவும் தடை இல்லை என கோர்ட்டு அறிவித்தால் தான் காட்சி என சொன்னார்.

1ம் தேதி நிலவரம் புரியாமல் உக்கார்ந்திருக்க ஏஜிஎஸ்ஸில் இருந்து மெசேஜ் வந்தது. உங்கள் டிக்கெட் கன்பார்ம் என. குழம்பிப் போய் மேல் விவரங்கள் அறிய தியேட்டருக்கு கிளம்பினேன்.


கவுண்ட்டரில் கேட்டால் மாலை தான் காட்சி என சொல்லி, அந்த காட்சிக்கான டிக்கெட்டை மாற்றிக் கொடுத்து அனுப்பினார்கள். வேலைக்கு சென்று விட்டு அவசர அவசரமாக தியேட்டருக்கு போனால் வண்டியை நிறுத்தவே அரைமணிநேரமானது. உள்ளே நுழைந்தால் அரங்கு நிறைந்திருந்தது. 

இத்தனைக்கும் எங்கள் ஏரியாவில் பத்து காட்சிகளுக்கு மேல் போய்க் கொண்டு இருந்தது. சமீபகாலமாக முதல் காட்சியில் பத்து பதினைந்து பேர்களுடன் படம் பார்த்துக் கொண்டு இருந்த எனக்கு இது வித்தியாசமாகவே பட்டது.

படம் தொடங்கும் முன்பே தெரிந்து விட்டது, தயாரிப்பாளர் போட்ட காசை விட இரண்டு மடங்கு அதிகம் பணம் எடுத்து விடுவார் என. எல்லாவற்றிற்கும் காரணமான கிருஷ்ணசாமிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். கண்டிப்பாக படம் தொடங்குவதற்கு முன்பு நன்றி கார்டில் கிருஷ்ணசாமி பெயரைப் போட்டிருக்க வேண்டும்.


சிறு பட்ஜெட் படங்கள் எல்லாம் நல்ல கலெக்சன் பெற்று வெற்றிப் பெற தலைப்புகளில் சாதிப் பெயரை சேர்த்து கொண்டால் போதும் என உண்மை இதனால் புலப்பட்டு இருக்கிறது.

அதிக விலை சொல்வதால் நான் படத்தின் இடைவேளையில் எதுவும் வாங்கி சாப்பிடுவதில்லை. வேலை முடிந்து அப்படியே படம் பார்க்க போய் விட்டதால் உள்ளே சென்ற கொஞ்ச நேரத்தில் பசித்தது. கவுண்ட்டரில் போய்ப் பார்த்தேன். எல்லாம் எப்பவும் சாப்பிடும் அயிட்டமாக இருந்தது. 

இதுவரை சாப்பிடாத அயிட்டமாக இருந்தது. கேரமல் பாப்கார்ன் தான். 120 ரூவாய்ன்னு போட்டிருந்தது. அதையும் கூட எனக்கு பிடித்த கோல்ட் காபியும் வாங்கி அரங்கில் அமர்ந்து கொறிக்க ஆரம்பித்தேன். 

ரெண்டுக்குமான காம்பினேசன் கன்றாவியாக இருந்தது. பாப்கார்ன் இனிப்பாக இருந்ததால் காபியின் இனிப்பு எடுபடவே இல்லை. யோசித்துப் பார்த்தேன் ரெண்டும் 200 ரூவாய். சாப்ட்டே ஆகனும்னு முடிவு செய்து பாப்கார்னை வைத்து விட்டு முதலில் கோல்டு காபி ஒரே கல்ப்பில் அடித்தேன். பிறகு கேரமல் பாப்கார்னை சாப்பிட்டு பசியை ஓரங்கட்டி படத்தில் கவனத்தை செலுத்தினேன். 

படம் முடிந்து விமர்சனம் எழுதனுமே என்ற ஆர்வத்தில் அவசர அவசரமாக வீடு நோக்கி விரைந்து கொண்டிருந்தேன். என் வீட்டின் அருகே இருக்கும் நண்பன் போலிப் பன்னிக்குட்டி வெங்கடேஷின் டெய்லர் கடையில் நண்பர்கள் குழுவினர், அப்படியே ஒரு செக் போஸ்ட்டைப் போட்டு நிறுத்தினார்கள்.

மறுநாள் மகாவீர் ஜெயந்தி, கடை கிடையாது. அதனால் மகாதியானத்தை போட்ரலாம் என்று நண்பன் வெங்கடேஷ் சொன்னான். அதுவரை நார்மலாக இருந்த நான் நடுக்கத்திற்கு ஆளானேன். வலது கை கிடுகிடுவென ஆடியது. 

விமர்சனமா, மகாதியானமா என்று மனதிற்குள் பட்டிமன்றம் ஓடியது. கடைசியில் மகாதியானமே ஜெயித்தது. சரவென கடைக்குள் நுழைந்தோம். தியானம் தொடஙகியது. அதன் பின் நடந்ததெல்லாம் இந்த கட்டுரைக்கு வேண்டாம்.

பிறகு வீட்டுக்கு வந்து மகாதியானத்தை மீறி இருக்கும் நினைவுகளை வைத்து ஒரு விமர்சனத்தை ஒப்பேற்றினேன்.

ஆரூர் மூனா

6 comments:

  1. தாடியோட நீங்க இருக்கும் படம் சேகுவேரா மாதிரியே இருக்குண்ணே !! சூப்பாரோ............. சூப்பர்..................... [இது பதிவைப் பத்திய பின்னூட்டம் தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்].

    ReplyDelete
    Replies
    1. தலைவா, நீங்க எங்கேயோ போயிட்டீங்க

      Delete
  2. படம் பற்றிய உங்கள் விமர்சனம் பார்த்தேன் -
    “ரெண்டுக்குமான காம்பினேசன் கன்றாவியாக இருந்தது. பாப்கார்ன் இனிப்பாக இருந்ததால் காபியின் இனிப்பு எடுபடவே இல்லை. யோசித்துப் பார்த்தேன் ரெண்டும் 200 ரூவாய். சாப்ட்டே ஆகனும்னு முடிவு செய்து பாப்கார்னை வைத்து விட்டு முதலில் கோல்டு காபி ஒரே கல்ப்பில் அடித்தேன்.“ பல விஷயங்கள் புரிந்தது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி அய்யா.

      Delete