Saturday 12 March 2016

ஆட்டு ரத்தப் பொறியலும், ஆத்தாவின் மரணமும்

நான் எப்படிப்பட்ட ஆளுங்கிறதுக்கு ஒரு உதாரணம் சொல்றேன். ஒரு நண்பனின் வீட்டில் கறி விருந்து நடந்து கொண்டு இருந்தது. இலையை போட்டாச்சி. நான் லைட்டா ஒரு கட்டிங் போட்டு பந்தியில் உக்கார்ந்து விட்டேன். பிரியாணி பக்கத்து இலையில் போட்டுக்கிட்டு இருக்காங்க. அடுத்தது எனக்கு தான், அப்ப பார்த்து எனக்கு போன் வந்தது.

ஆட்டு ரத்தப் பொறியல் செய்முறை


போனை எடுத்து பார்த்தேன், அப்பாவின் கால். எடுத்து பேசுகிறேன். அப்பா கதறி அழுகிறார். ஒரு நிமிடம் படபடப்பாகி விட்டது. ஆத்தா செத்துட்டாங்கடான்னு அழுகிறார். 

அதாவது என் அப்பாவின் அம்மா இறந்து விட்டார். துக்கம் தொண்டையை அடைக்கிறது. உடனே தஞ்சாவூர் கிளம்ப வேண்டும். நான் தான் நெய் பந்தம் எடுக்க வேண்டிய ஆள். அந்த நிமிடம் . . . . . 

என் இலையில் பிரியாணி பறிமாறப்பட்டது. இறப்பு நடந்தால் 16ம் நாள் வரை அசைவம் சாப்பிடக் கூடாது என்பது குடும்ப நடைமுறை. வாசனை மூக்கை துளைத்தது. அடுத்த போன் வந்தது. 

மட்டன் கோலா உருண்டை குழம்பு செய்முறை


பெரியப்பா கூடுவாஞ்சேரியில் இருந்து பேசினார். ஆத்தாவின் மூத்த மகன். நீ அனிதாவை அழைச்சிக்கிட்டு இங்க வந்துடு. எல்லோரும் சேர்ந்தே போயிடுவோம் என்றார். இலையில் சிக்கன் 65 வைத்தார்கள். அடுத்த போன் வந்தது. 

தங்கமணி தான் அழைத்தார். துணிமணி எல்லாம் எடுத்து வச்சாச்சி. இன்னும் வரலையா என்றார். அவருக்கு பதிலளித்து இலையை நோக்கினால் வஞ்சிரம் மீன் துண்டு என்னைப் பார்த்து கண்ணடித்தது. 

என்னுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் எல்லோரும் பால்ய நண்பர்கள். விவரம் சொன்னால் உடனே அனுப்பி வைத்து விடுவார்கள். போன் வேறு தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. மனசை கல்லாக்கிக் கொண்டு. . . . 

செல்லை ஆப் பண்ணி வைத்தேன். ஆத்தாவை நினைவில் மட்டும் நிறுத்தி விட்டு பிரியாணியுடன் கோதாவில் குதித்து ஏப்பம் வரும் வரை மல்லுகட்டி வீழ்த்தினேன். 

பிறகு நண்பர்களிடம் விவரம் சொன்னால் கலாய்த்து தள்ளி விட்டார்கள். வெக்கப்பட்டுக் கொண்டே போனை ஆன் செய்து பெரியப்பாவிடம் மேல் விவரம் விசாரிக்க போன் செய்தேன். அவர் எடுத்து பேசும் போது கூடவே டிங்கு டிங்குனு சத்தம் கேட்டது. 

என்ன பெரியப்பா என்று கேட்டால் சிரித்துக் கொண்டே சொன்னார். இன்னும் 16 நாளைக்கு கறிகஞ்சி அடிக்க முடியாது. அதான். . . . . ஹிஹி னு.

அப்படியாப்பட்ட பரம்பரையாக்கும் நான். 

இதில் கொடுக்கப்பட்டு இருக்கும் ஆட்டு ரத்தப் பொறியல்  எனக்கு மிகவும் பிடித்த சைட்டிஷ்ஷாகும். இந்த சுவை எந்த ஹோட்டலிலும் அனுபவித்ததில்லை. கால் கிலோ கறியும், ரத்தமும் வாங்கி வந்து அம்மாவிடம் கொடுத்தால் போதும். கோலா உருண்டை குழம்பும் ரத்தப் பொறியலும் செய்து 40 பேருக்கு கூட பறிமாறுவார். 

நீங்கள் கூட முயற்சித்து பாருங்கள். அந்த அனுபவத்தை அனுபவியுங்கள்.

ஆரூர் மூனா

9 comments:

  1. அடப்பாவி மக்கா... என்னவொரு தைரியம்...! இதில் முயற்சி வேறா...? ஹா... ஹா...

    ReplyDelete
  2. வந்தாச்சு பழைய பன்னீர் செல்வம் வந்தாச்சு!! வீடியோகார அய்யா போயாச்சு!! Please write hereafter. Your writing has a unique style!

    ReplyDelete
    Replies
    1. வீடியோவுக்காக ப்ளாக் நிற்கலை. என் பொண்ணு என்னை சிஸ்டம் முன் அமரவே விடுவதில்லை. இனி வழக்கம் போல எழுதுகிறேன். தங்களின் ஆதரவுக்கு நன்றி.

      Delete
  3. கட்டுரைக்காக காணொளியா
    காணொளிக்காக கட்டுரையா
    எதுவாக இருந்தாலும் இயல்பாக இருக்க சிறப்பாக தந்ததில் வாழ்த்துகள்

    ReplyDelete
  4. Hi pls continue make video in YouTube

    ReplyDelete