Thursday 18 October 2018

சண்டைக்கோழி 2 - சினிமா விமர்சனம்

ட்ரெண்ட் எனப்படுவது பத்து வருசத்துக்கு ஒரு முறை மாறிக்கிட்டே இருப்பது. ட்ரெண்டுக்கு ஏத்த மசாலாப் படங்களின் லாவகம் 80களில் எஸ்.பி. முத்துராமனுக்கு வசப்பட்டது, 90களில் கே.எஸ். ரவிக்குமாருக்கு வசப்பட்டது. 2000த்தில் லிங்குசாமிக்கு கைவந்த கலையானது.


80களில் சாதித்த எஸ்.பி. முத்துராமன் 90களில் தடுமாறினார். கே.எஸ். ரவிக்குமாரும் அவர் சாதிச்ச காலம் முடியும் நேரத்தில் தடுமாறினார். இப்போ லிங்குசாமிக்கு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. தடுமாற்றம்னா ட்ரெண்ட் மாறிடுச்சினு அர்த்தம். அப்டேட் பண்ணாலும் பழைய வேகம் இருக்காது. 

இப்போ சண்டைக்கோழி 2க்கும் அது தான் நடந்துள்ளது. கரெக்ட்டான மசாலா பேக்கேஜ். ஆனால் 2000த்தின் ட்ரெண்ட். இப்போ பார்க்கும் போது எதுவும் குறையா தெரியல. ஆனால் சிலாகிக்க ஒன்னுமில்லை. அதுவும் வடசென்னை பார்த்து அவனவன் அடுத்த கட்டத்துல டியுன் ஆகி நிக்கும் போது போது இரண்டு படி கீழே நிற்கிறது சண்டைக்கோழி 2.


படத்தின் கதைனா மதுரைக்கு மேற்கே இருக்கும் பகுதிகளின் பெரும்பான்மை சாதியின் அதிகாரமிக்க தலைவரான ராஜ்கிரண் வரலட்சுமி குடும்பத்திடம் இருந்து ஹரிகிருஷ்ணனை காப்பாற்றுவதாக வாக்கு கொடுக்கிறார். அவரால் செயல்பட முடியாத சூழ்நிலையில் அவரது மகன் விஷால் அந்த வாக்கை காப்பாற்றினாரா என்பது தான். 

சண்டைக்கோழி 1 படத்தின் பலமே அந்த பேருந்தின் சண்டைக்காட்சியும் விஷாலின் பின்புலம் லாலுக்கு தெரிய வருவதும் தான். அதுவரை விஷால் ஆக்சன் நாயகன் என்பதை அறியாத நாம் இந்த மேஜிக்கை ஏற்றுக் கொண்டதுடன் பெரும் வெற்றியையும் கொடுத்தோம். ரன் படத்துல ஷட்டர் இறக்கி அடிக்கும் காட்சியும் இதே மாதிரி யான விளைவை ஏற்படுத்தியது. 


ஆனால் இது சண்டைக்கோழியின் 2ம் பாகம் என்பதால் விஷாலின் பின்புலம் படம் தொடங்கும் முன்பே தெரிந்து போவதும் அதன் பிறகான காட்சிகள் நாமே அரங்கில் அமர்ந்து யூகிக்கும் அளவு இருப்பதும் தான் நமக்கு அயர்ச்சியை கொடுக்கிறது. 

விஷால் நாற்பத்தி ஐந்து வயசுலயும் பிட்டா நரம்பு புடைக்க வலுவை காட்டும் போது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார். சண்டைக்காட்சிகளில் கடும் உழைப்பை கொடுத்துள்ளார். இதுக்கு மேல எதுனா சொல்லலாமான்னு யோசிச்சிப் பாக்குறேன் ஒன்னும் நினைவுக்கு வர மாட்டேங்குது. ஏற்கனவே துப்பறிவாளன், இரும்புத்திரை னு இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்ததால் இந்த படம் எந்த விளைவையும் அவர் மார்க்கெட் நிலவரத்தில் ஏற்படுத்தாது.

ஜெனிலியா டைப் லூசுப் பெண் கதாபாத்திரம் கீர்த்தி சுரேஷுக்கு. தொடரி படத்துலயும் இதே மாதிரி தான். ஆனால் இதில் புல் மேக்கப்புடன் லூசா குறும்பா நடிக்க முயற்சித்து இருக்கிறார். அவ்வப்போது இவர் குறும்பாய் புன்னகைக்கும் போது வாய்  ஒரு விளைவை காட்டி டரியலாக்குகிறது.

ராஜ்கிரண் அதே டெய்லர், அதே வாடகை. ஒரு மாற்றமும் இல்லை. ராமதாஸ் சில சமயம் வியக்க வைக்கிறார். பல சமயம் சுளிக்க வைக்கிறார். ஹரீஷ் பெராடி போன்ற பெர்பார்மர்களை வீணடித்து இருக்கிறார்கள்.

பிரமாதமா சொல்லும் அளவுக்கு ஒன்னுமில்லை. அதுபோல் பயங்கர கடியுமில்லை. வடசென்னை படத்துக்கு குடும்பத்தோடு போக முடியாத சூழ்நிலையில் இந்த படத்துக்கு நம்பி போகலாம். பக்கா பேமிலி எண்டர்டெயினர்.

வரலட்சுமி சரத்குமார் நெகட்டிவ் ஷேட் உள்ள கதாபாத்திரம் வித்தியாசமாக எதாவது செய்வார் என்று எதிர்பார்த்தால் காஞ்சனா லாரன்ஸ் மாதிரி எப்பவும் சிகப்பு புடவையில் ஆய் ஊய்னு கத்திப் போகிறார். க்ளைமாக்ஸ்ல விஷாலுடன் மல்லுக்கு நிற்கிறார். அவ்வளவு தான், 

நல்லா மொழு மொழுன்னு செம ஆண்ட்டிடா என்னும் கமெண்ட்டு தான் சரியா இருக்கும். டேய் அக்காவுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைடான்னு கால்ல விழுந்தாலும் ஒரு பய நம்பப் போறதில்லை. என்னா உடம்புடா இது. 

படம் பத்து வருசத்துக்கு முன்பு வந்திருந்தா ஒரு வேளை ப்ளாக்பஸ்டர் ஆகியிருக்கலாம். இப்போதைய ட்ரெண்ட்டுக்கு ரொம்பவே பழசா தெரியுது. கதை சொல்லும் முறை மாறி விட்டது என்பதை இப்போதாவது லிங்குசாமி புரிந்து கொண்டால் சரி.

கடும் வீழ்ச்சிக்கு பின் எழுந்து தடுமாறும் இந்த சமயத்தில் லிங்குசாமிக்கு தேவை ஒரு சூப்பர் ஹிட் படம். ஆனால் இது ஆவரேஜ் என்பது தான் சோகம். ட்ரெண்ட்டு மாறிடுச்சி, நீங்களும் மாறுங்க இயக்குனரே.

ஆரூர் மூனா

4 comments:

  1. நாமும் மாறி விட வேண்டியது தான்...!

    ReplyDelete
  2. அருமையான அலசல் அண்ணா.
    இயக்குனர் ??? Or இயக்குநர்?

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் அண்ணா..

    ReplyDelete