Wednesday 1 April 2015

கொம்பன் - திரை விமர்சனம்

உண்மையிலேயே படம் சுமார் தான். அதை கண்ட கருமாந்திரங்கள் ஆட்சேபித்ததால் அதில் என்ன தான் இருக்கும் என நினைத்து போகப் போகிறவர்களால் படம் கண்டிப்பா ஹிட் தான். இல்லை, இல்லை சூப்பர் ஹிட்.


சாதாரண கதை தான்.

கொம்பன் ஒரு கிராமத்தின் நாயகன். ஊரே கொண்டாடுகிறது. ஒருத்தியின் காதலால் வீரத்தின் வேகம் தடைபடுகிறது. முந்தைய பகையால் மற்றவர்கள் நாயகனை வீழ்த்த நினைக்க வீழ்ந்தானா என்பதே கதை.

நாயகன் கார்த்தி. பழையபடி கம்பீரமாக நிற்கிறார். அவரின் பலமே கதையை தேர்வு செய்வது தான். இடையில் சரிவு ஏற்பட்டாலும் திரும்ப எழுந்து நிற்கிறார். வெல்டன் கார்த்தி.

என்ன கம்பீரம், என்ன ஆக்ரமிப்பு. இந்த மாதிரி கதை தான் கார்த்திக்கு தேவை. இன்னும் இரண்டு படங்கள் நடியுங்கள் இந்த மாதிரி.

எவ்வளவு கம்பீரமான நடிகன் ராஜ்கிரண். எல்லாத்தையும் பொத்தி வைத்து கதைக்கு ஏற்றாற் போல் நடித்து அசத்தியிருக்கிறார். நினைத்தால் 100 பேரை அடிக்கும் நிலையில் பொறுமையை கடைபிடித்து அசத்துகிறார்.

நாயகியாக லட்சுமி. ஆக்சன் நாயகனை தன் காதலால் வீழ்த்துகிறார். எல்லோரும் இப்படி ஒரு மனைவி வேண்டும் என வேண்டுவோம்.

கோவை சரளா, தம்பி ராமைய்யா, கருணாஸ், வேல. ராமமூர்த்தி, என எல்லோரும் சரியான நடிப்பை வழங்கியிருக்கின்றனர்.

ஒரு ஆக்சன் படத்தின் பலமே காட்சிகளின் கட்டமைப்பு தான். சரியான முறையில் வரிசையாக அடுக்கப்பட்டு இருக்கிறது. அது தான் படத்தை நிமிர்த்தி நிற்க வைக்கிறது.

இதில் என்ன மயிறுக்குடா சாதி வருது. சின்னகவுண்டர்ல நடிச்சா அவன் கவுண்டர். முதல் மரியாதையில் நடிச்சா அவன் தேவர். ஒன்பது ரூபாய் நோட்டுல நடிச்சா அவன் வன்னியர். யாரும் யாரையும் கீழ்ப்படுத்த முடியாது. என்னங்கடா உங்க அரசியல். போய் புடுங்குங்கடா.

விமர்சனம்ங்கிற பேர்ல உங்களை மொக்கை போட விரும்பல. பிகாஸ் ஐயம் இன் மப்பு. படத்தை பாருங்க. சரியான எண்டர்டெயின்மெயிண்ட் மூவி. பிடிக்காதுன்னு ஒருத்தன் சொல்ல முடியாது.

படத்தின் காட்சியமைப்புகளை நாளை விவரமாக படம் பார்த்த கதை பதிவில் விளக்குகிறேன்.

சரியான விமர்சனம் நாளை பாருங்கள், கொம்பன் படம் பார்த்த கதையில்.

ஆரூர் மூனா

6 comments:

  1. //பிகாஸ் ஐயம் இன் மப்பு.//
    உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு.. என்ன ஆச்சு பேலியோ டயட்?

    ReplyDelete
    Replies
    1. திங்கள் முதல் தொடங்குகிறேன்

      Delete
  2. பார்க்கிறேன் ஜி... எக்ஸ்பிரஸ் தொடர் செம ஸ்பீடா போய்க்கிட்டு இருக்கு.. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. Hair pudungkigalukku ellaam pathil sollanumaa. Ellaam. Kaasu pudunga than

    ReplyDelete
  4. எத்தனை திங்கள் பாா்த்தாச்சி

    ReplyDelete