இந்தியா முழுவதும் உள்ள மீட்டர்கேஜ் ரயில்பாதைகள் ப்ராட்கேஜாக மாற்றப்பட்டு
வருகின்றன. கிட்டத்த அனைத்து பாதைகளும் மாற்றப்பட்டு விட்ட நிலையில்
திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டைக்கு இந்தியாவின் கடைசி மீட்டர்கேஜ்
ரயில்கள் சென்று கொண்டிருந்தன.
கடந்த மாதம் அவையும் நிறுத்தப்பட்டு ப்ராட்கேஜாக மாற்ற வேலைகள்
ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இதுநாள் வரை ஒடிக் கொண்டு இருந்த ரயில்
பெட்டிகள் மற்றும் இன்ஜின்கள் மற்றொரு ரயிலில் ஏற்றப்பட்டு திருச்சிக்கு
கொண்டு செல்லப்பட்டன.
இந்தியாவின் கட்டேக்கடேசியான உபயோகத்தில் இருந்த மீட்டர்கேஜ் இன்ஜின்கள் இவை தான். திருவாரூரில் இருந்த தம்பி தியாகேசன் செல்லும் வழியில் நின்று கொண்டிருந்த இன்ஜின்களை போட்டோ எடுத்து அனுப்பினார். அனுப்பிய தியாகேசனுக்கு நன்றிகள் பல.
---
நீங்களும் பார்த்து வழியனுப்பி வையுங்கள். இனி மீட்டர்கேஜ் இன்ஜினை எங்கும் பார்க்க முடியாது.
ஆரூர் மூனா
This comment has been removed by the author.
ReplyDeleteநன்றாக இருக்கிறது, Ithalaium naama thaan kadasiyaa.. :)
ReplyDeleteThis is not thd Last meter gauge. There are still meter gauges operational in india in, Lucknow, udaipur, Ittaznagar, Gonda, Gorakhpur, Nepalgaunj, Mhow. In tamilnadu Mettupalayam to ooty is Meter gauge.don't misguide others by wrong info.
ReplyDelete