Friday, 4 September 2015

பாயும் புலி - சினிமா விமர்சனம்

படத்தின் கதையை விட படம் பார்க்க அலைந்த கதையே பெரும் கதையாகப் போனதால் அதை முதலில் பார்ப்போம்.

வழக்கமாக முதல் காட்சி பார்க்கும் திரையரங்கங்களான ஏஜிஎஸ் மற்றும் கங்கா இரண்டின் வெப்சைட்டிலும் புதன் முதல் பார்த்துக் கொண்டே இருந்தேன். ரிசர்வேசன் ஓப்பன் ஆகவே இல்லை. குழப்பமாகவே இருந்தது. இன்று காலை எழுந்து ஏழு மணிவாக்கில் மறுபடியும் புக்மை ஷோ மற்றும் டிக்கெட் நியூ இணையதளங்களை பார்த்தால் பக்கத்தில் உள்ள அரங்கங்கள் எதிலும் படத்தின் முன்பதிவு இல்லை. ஆனால் ஒன்பதரை மணிக்கு மகாராணி அரங்கில் காட்சி இருப்பதாக தளம் காட்டியது.


ரெண்டு டிக்கெட்டை ரிசர்வ் பண்ணிக் கொண்டு சிவாவுக்கு  போன் செய்து வருகிறீர்களா என்று கேட்டால் அவர் ரொம்ப தொலைவாக இருக்கிறது. என்னால் வர முடியாது என்று சொல்லி விட்டார். பிறகு நண்பன் போலி பன்னிக்குட்டி வீட்டுக்கு போய் விவரமே சொல்லாமல் அள்ளிப் போட்டுக் கொண்டு அரங்கிற்கு விரைந்தோம். 9.20 வரை அரங்கின் நுழைவாயில் திறக்கப்படவேயில்லை. கூட இருந்த பயபுள்ள பசிக்குது, பசிக்குதுன்னு புலம்பிக் கொண்டே இருந்தான். 

9.30க்கு கதவை திறந்து காட்சிகள் ரத்து, ரீபண்ட் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவித்தார்கள். பிறகு வழியில் சாப்பிட்டு வீட்டுக்கு வந்து முல்லையுடன் விளையாடிக் கொண்டு இருந்தேன். 12 மணிக்கு போன் செய்த சிவா, சைதை ராஜ் திரையரங்கில் காட்சிகளுக்கான டிக்கெட் வழங்கப்படுகிறது, என்று நக்கல் செய்த படியே காட்சிக்கு சென்றார். ஜாக்கியும் ஆல்பர்ட் அரங்கில் காட்சி தொடங்கியதாக தெரிவித்தார். 


மணி 12.30 ஆனது. நமக்கு கை பரபரக்க தொடங்கியது. ஏஜிஎஸ்க்கு போன் செய்து விசாரித்தால் 12,20க்கு முதல் காட்சி தொடங்கி விட்டதாக தெரிவித்தார்கள். அருகில் உள்ள வேறு என்ன அரங்கில் அந்த நேரத்திற்கு காட்சி இருக்கும் என பார்த்தால் எஸ்2வில் 1 மணிக்காட்சி இருந்தது. உடனே படம் பார்க்க கிளம்பி விட்டேன். 


சத்தியமாக இந்த படம் பார்த்தே ஆகவேண்டும் என்ற பேராவல் எல்லாம் கிடையாது. ஒரு விஷயம் மறுதலிக்கப்படும் போது அதை அடைந்தே தீர வேண்டும் என்று மனம் விரும்பும் அல்லவா. அந்த கான்செப்ட் தான் இந்த படத்தை இப்படி துரத்தி துரத்தி பார்க்க வைத்தது. 

--------------------------------------------------------

மதுரையில் பணக்காரர்களை மிரட்டி ஒரு கும்பல் கோடிகளில் பணம் பறிக்கிறது. தராத தொழிலதிபர்களை கடத்தி கொல்கிறது. அதை தடுக்க முயன்ற ஒரு எஸ்ஐ வெட்டிக் கொல்லப் படுகிறார். அந்த கும்பலை வீழ்த்த அந்த ஏரியாவுக்கு ஏசியாக நியமிக்கப்படுகிறார். 

விஷாலின் குடும்பமோ பாரம்பரியமிக்கது. கக்கன் போன்ற நற்பெயரைப் பெற்ற தாத்தாவின் வாரிசு அவர். விஷால் மதுரைக்குள் வந்ததும் படிப்படியாக அந்த கடத்தல் கும்பலை என்கவுண்ட்டர் செய்து வீழ்த்துகிறார். ஆனாலும் கடத்தல் தொடர்கிறது. 


பிறகு தான் இந்த பிரச்சனையின் ஆணிவேர் தெரிகிறது. அதில் விஷால் குடும்பத்தின் ஒரு ஆள் சம்பந்தப்பட்டு இருப்பதும் தெரிகிறது. குடும்பமே என்ன முடிவு எடுக்கிறது என்பதே பாயும் புலி படத்தின் கதை. 

விஷால் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நன்றாக செய்திருக்கிறார். அவரின் தற்போதைய அவதாரத்திற்கு ஏகப்பட்ட பில்ட்அப்புகள் இருக்கும் என்றே எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி எதுவும் இல்லை என்பதே பெரிய ஆறுதல்.

இன்டர்வெல் சண்டைக் காட்சியை தவிர மற்ற இடங்களில் முக்கியமாக க்ளைமாக்ஸில் எகிறி அடிக்காமல் இயல்பாகவே சண்டை போட்டு இருக்கிறார். முதல் பாதியில் சூரியுடன் சேர்ந்து சில காட்சிகள் சிரிக்க வைக்கிறார். 

காஜல் இந்த படத்திற்கு எதற்கு என்றே தெரியவில்லை. ஒரு ஹீரோயின் வேண்டுமே என்ற காரணத்திற்காக மட்டுமே காஜல். இரண்டு டூயட் ஆடிப் போகிறார். முதல் காட்சியிலும் அப்புக்குட்டியுடனான ஆக்சிடெண்ட் காட்சியிலும் மப்படித்து தெளியாத முகத்துடன் அரைகுறை மேக்கப்புடன் பயமுறுத்துகிறார்.

சூரி முதல் பாதியில் அரை மணிநேரம் காட்சிகளை நகர்த்த மட்டுமே பயன்படுத்தப் பட்டு இருக்கிறார். அந்த ஹெல்மெட் போட்டு குளிக்கப் போகும் காட்சியில் நகைக்க வைக்கிறார். பள்ளி மாணவனுக்கு அண்ணனனாக போய் அடி வெளுக்குமிடத்தில் நன்றாக சிரிக்க வைக்கிறார். 

சமுத்திரக்கனி கிட்டத்தட்ட விஷாலுக்கு இணையாக படம் முழுக்க வரும் பாத்திரம். போலீசுக்கு பயந்து தெருத்தெருவாய் ஒடும் இடத்திலும் அப்பாவின் தலையில் கம்பியை கொண்டு அடிக்குமிடத்திலும் கொஞ்சமாய் க்ளைமாக்ஸிலும் கவனிக்க வைக்கிறார். 

பாண்டிய நாடு படத்தில் எப்படி பாரதிராஜாவுக்கு கனமான பாத்திரமோ அதே போல் இந்த படத்தில் வேல. ராமமூர்த்திக்கு. ஆனால் குருவித் தலையில் பனங்காயாய் ஆகிப் போகிறது நிலைமை. சற்று மெனக்கெட்டு அந்த பாத்திரத்திற்கு நல்ல நடிகரை போட்டு இருக்கலாம்.  

முதல் மான்டேஜ் பாடல் மட்டும் கவனிக்க வைக்கிறது.

சுசீந்திரன் என்ற இயக்குனருக்காக மட்டுமே இந்த படம் பார்க்கனும் என்று நினைத்தேன். ஆனால் மனிதர் பாய வேண்டிய புலியை பம்மிய புலியாக்கி விட்டு இருக்கிறார். 

பெரிய அளவுக்கு ஹிட் இல்லாவிடினும் சுமாரான வெற்றி அடையும் என்றே தோணுகிறது. தனிஒருவனுக்கு டிக்கெட் கிடைக்காவிடில் கண்டிப்பாக எடுக்கலாம் டிக்கெட் பாயும் புலிக்கு.

ஆரூர் மூனா

9 comments:


  1. க்ரேட் எஸ்கேப். இல்லாவிட்டால் மகாராணி வரை வந்து சென்று கடுப்பாகி இருப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. எல்லாத்துலயும் நானே பர்ஸ்ட்டா இருக்கேனே ஏன்.

      Delete
    2. சிறுத்தை [[சிவா]] சிக்கினது நம்மகிட்டேதான்ய்யா பழவேற்காடு வரை கதறக் கதற இழுத்துட்டுப் போனோமே...என்ன...நம்ம பிரபா எஸ்கேப் ஆகிட்டாரு அவ்வவ்...

      Delete
    3. பிரபா எப்பவுமே உஷார் பார்ட்டி. இந்த மாதிரி விஷயங்களில் எல்லாம் அவன் நழுவுற மீன்.

      Delete
  2. ஆக இதுவும் மசாலா படம்தான் போல...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மாம்ஸ். ஆனால் ருசி கொஞ்சம் குறைச்சல் தான்.

      Delete
  3. Replies
    1. நீர் அதிபுத்திசாலி ஆகிக் கொண்டே வருகிறீர்.

      Delete
  4. அண்ணே உங்க விமர்சனமே படம் பார்த்த மாறி இருக்கு அண்ணே ஒரு வேலயா திருவாரூர் வந்தேன் அப்போ பஸ் ஸ்டான்ட் கிட்ட வேகமா ஸ்கூடில போனிங்க அதான் பேச முடியல

    ReplyDelete