Sunday 21 June 2015

ஆரூர்மூனா எக்ஸ்பிரஸ் - 9

ரயில்வேயில் அதிகாரிகள் லெவல் என்பது வேறு. அவர்கள் நல்ல சம்பளத்துடன் நல்ல செட்டில்மெண்ட் என அருமையான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.


பணிமனையில் பழுதுநீக்கும் டெக்னீசியன்கள், ஓப்பன் லைனில் ட்ராக் பழுது நீக்கும் டெக்னீசியன்கள், சிக்னல் ஆப்பரேட்டர்கள், ஸ்டேசன் பணியாளர்கள் என அளவான சம்பளத்தில் பணிபுரிபவர்கள் தான் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். இவர்களுக்கு தான் இப்போ ஆப்பு தயாராகிக் கொண்டு இருக்கிறது.

ரயில்வே ஊழியர்களுக்கு ரிட்டையர்மெண்ட் சமயத்தில் பணம் தராமல் 20 வருடத்திற்கு வட்டி போட்டு 20 வருடம் கழித்து கிடைப்பது போல் செட்டில்மெண்ட் வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு விவேக் தேவராய் கமிட்டி பரிந்துரைத்துள்ளதாம். இது அமலுக்கு வந்தால் அந்த இருபது வருடத்திற்கு அசலையோ வட்டியையோ எடுக்க முடியாதாம்.

இது மட்டும் நடைமுறைக்கு வந்தால் கண்டிப்பாக ஓய்வுபெறும் ரயில்வேகாரர்களில் பலர் மனஅழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்வார்கள். புல் செட்டில்மெண்ட் பணத்தோடு ரிட்டையர் ஆனவர்களையே மதிக்காம வாசல்ல நிறுத்துறானுங்க புள்ளைங்க. 


ரிட்டையர்மெண்ட் ஆகி ஒன்னுமே இல்லாம வர்ற தகப்பன், புள்ளைங்க கண்ணுக்கு செல்லாக்காசா தான் தெரியப் போறான். சம்பளம் வந்த வரைக்கும் பந்தாவா இருந்த குடும்பத் தலைவன் அது நின்னு போனதும் கம்பீரம் சுருங்கிப் போவதை கண்ணால் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

இந்த லட்சணத்தில் இது நடந்தால் அவ்வளவு தான்.

மேலும் இந்த கமிட்டியின் முக்கிய பரிந்துரைகள்

புறநகர் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் தனியாரிடம் ஒப்படைப்பது

ரயில் பயணிகள் கட்டணம், சரக்கு போக்குவரத்து கட்டணம் இரண்டையும் பெருமளவில் உயர்த்துவது

ரயில்வே பள்ளிகள், ரயில்வே மருத்துவமனைகள் தனியாரிடம் ஒப்படைப்பது

ஐசிஎப் உற்பத்தி பணிமனை, பெரம்பூர் லோகோ, பெரம்பூர் கேரேஜ், போத்தனுர், திருச்சி, அரக்கோணம் பராமரிப்பு பணிமனைகள் போன்றவற்றை தனியாரிடம் ஒப்படைப்பது

ரயில்வே காவல் பணிகளை தனியார்  செக்யூரிட்டி வசம் ஒப்படைப்பது

பணியில் இறக்கும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தற்காலிக வேலை மட்டுமே தருவது

மாணவர்கள், சீனியர் சிட்டிசன்கள், விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் கட்டண சலுகைகளை நிறுத்துவது

ரயில்வேயில் உள்ள 4 லட்சம் காலியிடங்களை நிரப்பாமல் அப்படியே தனியாரிடம் அந்தந்த வேலைகளை ஒப்படைப்பது

-----------------------------

நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்று தான் 

ஆப்கி பார் மோடி சர்க்கார். 

வௌங்கிடும்.

ஆரூர் மூனா

11 comments:

  1. நாசமாப் போகப் போதுன்னு சொல்றீங்க... நடக்காமல் இருக்கட்டும்...

    ReplyDelete
    Replies
    1. நடக்கட்டும், நடக்கட்டும், ஹிஹி

      Delete
  2. //ரயில்வே காவல் பணிகளை தனியார் செக்யூரிட்டி வசம் ஒப்படைப்பது
    //

    இது மிகச்சரியான பரிந்துரை. உண்மையில் வெகு காலமாகச் சொல்லப்படுவதொன்று. இரயில்வே தொழிலாளர் சங்கங்களுக்குப் பயந்து நிறைவேற்ற முடியவில்லை.

    மற்ற நிறுவனங்கள் செயல்படுத்தி விட்டன. தங்களிடமிருந்து காவல் பணியாளர்களை நீக்கிவிட்டுத் தனியாரிடம் கொடுப்பது (வங்கிகள்); அல்லது CSIF யிடம் கொடுப்பது (துறைமுகங்கள்)

    இரயில்வே கொண்டுவரும் பொருட்கள் வெகுவாக வழியில் திருடப்படுகின்றன. இரயில்வே சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இவையனைத்தும் ஆர் பி எஃப் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்கின்றது. வெளித்திருடர்கள் இரயில்வே குட்ஸ் வண்டிகளைக்கொள்ளையடிப்பதில்லை. உள்ளுக்குள்ளேயே எல்லாம் நடக்கிறது.

    இதைத்தடுக்க RPF ஐ ஒரேயடியாகக் கழட்டிவிட வேண்டியதுதான். ப்ரவேட் செக்யூரிட்டியின் காவல்.பொருட்கள் காணாமல் போனால், அவர்களின் உத்திரவாதம்.

    இதைப்போலவே டி டி இ, டி சி போன்ற பதவிகள் தனியாரிடம் கொடுக்கப்படவேண்டும். இவர்கள் அடிக்கும் கொள்ளையும் அதிகம். பார்சலை புக் பண்ணும்போதும் டெலிவரி எடுக்கும்போதும் கையூட்டு கொடுக்கவேண்டும்.

    தற்போது ஒரு பெரிய ஊழல் விசாரிக்கப்படுகிறது. பார்சல் ட்ராஃபிக்கில் வடமாநிலங்களை மையமாகக்கொண்டு இயங்கி வந்தது. கோடிக்கணக்கான வருமானத்தை இரயில்வே இழந்தது.

    டெக்னீசியன் பணி போக மற்ற பணிகள் தனியார்மயமாக்காப்பட்டால் இரயில்வே வருங்காலத்தை எதிர்நோக்கும். .

    இரயில்வே சம்பாதிப்பதை இரயில்வேயில் வேலைபார்ப்பவகளே கொள்ளையடித்துக்கொண்டிருப்பதை எப்படிப்பார்த்துக்கொண்டிருக்க முடியும்? எவ்வளவு காலம் யூனியன்களுக்குப் பயந்து கொண்டு கொள்ளையடிப்பதை அனுமதிக்க முடியும்?-

    ReplyDelete
    Replies
    1. அய்யா தவிர்க்க முடியாத காரணத்தினால் காயம் ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளிப்பது தானே சரியாகும், அந்த உறுப்பையே வெட்டி எறிந்து விடலாம் என்பது சரியான கருத்தாகுமா.

      Delete
  3. //இரயில்வே சம்பாதிப்பதை இரயில்வேயில் வேலைபார்ப்பவகளே கொள்ளையடித்துக்கொண்டிருப்பதை எப்படிப்பார்த்துக்கொண்டிருக்க முடியும்? எவ்வளவு காலம் யூனியன்களுக்குப் பயந்து கொண்டு கொள்ளையடிப்பதை அனுமதிக்க முடியும்?-//
    உண்மை தான். இப்படியே போய்கிட்டிருந்தா மத்தவன் எப்படி கொள்ளை அடிக்கறது?

    கொள்ளை நடப்பது உண்மை.. ஆனால் அதற்க்கு பயந்து தனியார் மாயம் என்று சென்றால் அடுப்புக்கு பயந்து நெருப்பில் விழுந்தது போலத்தான்!

    அரசு வேலை தரும் மிகப் பெரிய பாதுகாப்பு ரிடையர் ஆனவுடன் வரும் செட்டில்மெண்ட் மற்றும் பென்ஷன் தான். இந்த பாதுகாப்புகள் எத்தனை தனியார் நிறுவனத்திடம் இருக்கிறது?

    அரசு / தனியார் என்றெல்லாம் யோசிக்காமல் பொதுவாக யோசித்தால் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக பாதுகாப்பின்மைக்கு தள்ளும் இந்த தனியார் மயம் கொடுமை! எதிர்த்தே ஆக வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் ஆதரவிற்கும் புரிந்துணர்விற்கும் நன்றி,

      Delete
  4. மயம் என்று எழுத நினைத்தது மாயம் என்று எழுதிவிட்டேன்.. ஆனால் இதுவும் சரியாகத்தான் இருக்கிறது!

    ReplyDelete
  5. கேட்பதற்கு சில விசயங்கள் கஷ்டமாக இருந்தாலும், பெரும்பாலான விசயங்களில் தனியார் மயமாவதே சிறப்பானதாக இருக்கும்.
    அரசு வேலை ஒன்று கிடைத்து விட்டால் நம்மை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது, வேலைக்கு ஆப்பு வைக்க முடியாது என்பதால் தான், லஞ்சம் தலை விரித்தாடுகிறது.
    கேட்பார் யாரும் இல்லையென்று தான் அன்றைய வேலையை அன்றே முடிக்காமல் பயில்கள் தேங்குகிறது.........
    ஐயா சொல்லிக்கிட்டே போகலாமுங்க..............

    ReplyDelete
    Replies
    1. எல்லாத் தொழிலாளர்களுமே லஞ்சம் வாங்குகிறார் என்ற உங்கள் கூற்று சரியா என்பதை நீங்கள் ஒன்றுக்கு பலமுறை யோசித்து பதிவிட்டு இருக்கலாம். எடுத்தேன் கவிழ்த்தேன் என எல்லாரையும் குற்றம் சொல்வது சரியா

      Delete
  6. தனியார் மயமாக்கி விட்டால் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்கும் என்று எதை வைத்து நம்புகிறார்கள். அரசாங்கத்துக்கு வேண்டுமானால் அரசின் நஷ்த்தை குறைக்கலாம். ஆனால் பொதுமக்களுக்கு பயன் ஏதும் விளையாது

    ReplyDelete