Wednesday 26 November 2014

நமது தேசத்தின் சில அவலங்களைப் பட்டியலிட்டுள்ளேன். படித்துப்பாருங்கள்!

பழைய சாதம் பொக்கிஷம் என்ற லேபிளில் இருக்கும் பதிவுகள் எல்லாது பழைய பதிவுகள் அவை அந்த பதிவிலிருந்து எடுத்து வைப்பதற்காக மட்டுமே இங்கு பதியப்படுகிறது.

இது ஜனவரி 2011 மாதத்தின் பதிவு
 
ஒரு கிலோ அரிசியின் விலை 44 ரூபாய் ஆனால் சிம் கார்டு இலவசமாக கிடைக்கிறது. பொது விநியோகத்தின் விற்கப்படும் அரிசியின் விலை ஒரு ரூபாய் ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.





வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவீதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவீதம்.


பிட்சா வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் கூட பாதி நேரத்தில் கூட அம்புலன்சும் தீயனைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை.



ஒரு கிரிக்கெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தை கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். ஆனால் அந்த பணத்தில் பதில் ஒரு பங்கை ஏழை மாணவர்களின் படிப்பு செலவுக்காக செலவு செய்ய தயாராக இல்லை.


நாம் அணியும் உள்ளாடைகளும் ஆடைகளும் A/C ஷோரூம்களில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் பழங்களும் காய்கறிகளும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன.

நாம் குடிக்கும் லெமன் ஜூஸ் செயற்கையான ரசாயன பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவும் நீர்கலவை லெமன் கொண்டு தயாரிக்கபடுகின்றன.

மொத்தமாக பள்ளிகளை நடத்த வேண்டிய அரசு சாராயம் விற்று கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் கல்லூரிகளை நடத்தி கொண்டிருக்கின்றனர்.

பிரபலமாக வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. ஆனால் உண்மையான வழியில் செல்ல வேண்டும் என்ற விருப்பம் மட்டும் இல்லை.

குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம் ஆனால். டீ கடையில் சிறுவர்கள் கொண்டு வந்து தரும் டீ யை உறிஞ்சி குடிப்போம்.


எந்த நிலை மாறுவது எப்போது. தூங்கும் பாரதமாதா எழுந்து தான் பதில் சொல்ல வேண்டும்.
 

No comments:

Post a Comment