Wednesday 26 November 2014

காவலன் - திரை விமர்சனம்

பழைய சாதம் பொக்கிஷம் என்ற லேபிளில் இருக்கும் பதிவுகள் எல்லாது பழைய பதிவுகள் அவை அந்த பதிவிலிருந்து எடுத்து வைப்பதற்காக மட்டுமே இங்கு பதியப்படுகிறது.

இது ஜனவரி 2011 மாதத்தின் பதிவு
விஜய் சிறு வயதிலேயே படிப்பு ஏறாமல் கல்லூரி படிப்பை பாதியில் விட்டு விட்டு ஒரு தாதாவிடம் பாடிகார்ட் ஆக சேருகிறார். அவருடன் ஒரு ஒயின் ஷாப் ஐ காலி செய்ய போகும்போது தாதாவுக்கு வரும் போன் காரணமாக திரும்பி விடுகின்றனர். விஜய் தாதாவே பயப்படும் அந்த பெரிய மனிதர் யாரோ அவரிடமே வேலை சேர்வது என முடிவு செய்து அவரை பார்க்க அவரது ஊருக்கு செல்கிறார். வழியில் பெரிய மனிதர் வீடு சமையல்காரரான வடிவேலுவை பார்க்க அவர் தவறாக புரிந்து கொண்டு அவர்கள் வந்து சேரும் முன்பே போனில் ஊரில் உள்ளவர்களிடம் சொல்லி விடுகிறார். விஜய் பெரிய மனிதரான ராஜ்கிரண் அவர்களின் பாடி கார்ட் என்று ஊர் நம்பி சிறப்பான வரவேற்பு கொடுக்கிறது. தான் சேர தான் வந்திருப்பதாக சொல்லும் முன் ஊர் மக்கள் அவரை ராஜ்கிரண் வீட்டுக்கு அவரை கொண்டு வந்து விட்டு செல்கின்றனர். அங்கு அசின் ஐ பார்க்கும் விஜய் அவர் யார் என்று தெரியாமல் ராஜ்கிரண் பற்றியும் அவரது மகன் பற்றியும் தப்பு தப்பா க சொல்கிறார். பிறகு தான் தெரிகிறது அசின் ராஜ்கிரண் மகள் என்று. பிறகு ஒரு வழியாக வேலைக்கு சேர்கிறார். அங்கு ஒரு ரௌடியால் ராஜ்கிரண் குடும்பத்திற்கு ஆபத்து வர விஜய் உயிரை பணயம் வைத்து காப்பாற்றுகிறார். ராஜ்கிரண் விஜய் ஐ உயர்வாக மதிக்கிறார்.

எந்நிலையில் அசின் படிப்பதற்காக வெளியூர் செல்ல விரும்புகிறார். ஆனால் அவரை தனியாக அனுப்ப ராஜ்கிரண் மறுக்கிறார். விஜய் தான் படிப்பை பாதியில் விட்டவராசே. அவரை மேற்கொண்டு படிக்க வைத்தால் அவருடன் அசின் பாதுகாப்பாக இருப்பார் என்று எண்ணி அவருடன் அனுப்பி வைக்கிறார். அவருக்கு சமையல் வேலைக்கு வடிவேலுவும் போகின்றனர். அங்கு விஜய் விறைப்பாக இருக்க அசின் மற்றவர்களுடன் பழக சிரமமாக உள்ளது. அதனால் அசின் குரலை மாற்றி விஜய்க்கு காதல் தூது விடுகிறார். யார் என்று தெரியாமேல விஜய் அந்த பெண்ணை காதலிக்கிறார். அவரும் மெல்ல விஜய் மீது காதல் கொள்கிறார். எந்நிலையில் ராஜ்கிரணுக்கு தெரிய வர என்ன நடக்கிறது என்பது தான் மீதி கதை.

உண்மைலேயே சொல்கிறேன் கண்டிப்பாக இது விஜய்க்கு வெற்றி படம் தான். காமெடி கலக்குகிறது.

என்னடா படம் என்னும் ரிலீஸ் ஆகவில்லையே எப்படி சொல்கிறான் என்று யோசிக்கிறீர்களா.

ஹி ஹி ஹி .

அது ஒன்றும் இல்லை. பாடி கார்ட் மலையாளம் படம் பார்த்தேன். காவலன் ட்ரைலர் பார்த்தேன். மிக்ஸ் செய்து சொல்கிறேன்.

ஆனாலும் படம் மலையாளத்தில் பார்க்க நன்றாக உள்ளது. அதே போல் தமிழ் படமும் வந்தால் நிச்சயம் வெற்றி தான். அதை விட்டு விட்டு பில்ட் அப் ரொம்ப கொடுத்தால் படம் சந்தேகம் தான்.
அன்புடன்

No comments:

Post a Comment