Wednesday 26 November 2014

ரயில்வே தேர்வின் லட்சணம்

பழைய சாதம் பொக்கிஷம் என்ற லேபிளில் இருக்கும் பதிவுகள் எல்லாது பழைய பதிவுகள் அவை அந்த பதிவிலிருந்து எடுத்து வைப்பதற்காக மட்டுமே இங்கு பதியப்படுகிறது.

இது ஜனவரி 2011 மாதத்தின் பதிவு
நான் 12 வருடங்களுக்கு முன்பு ரயில்வேயில் அப்பரன்டிஸ் முடித்து அங்கு வேலை கிடைக்காமல் வேறு துறைக்கு சென்று விட்டேன். நீண்ட நாட்களுக்கு பிறகு இப்பொழுது தான் நுழைவு தேர்விற்கான அனுமதி சீட்டு வந்தது. சரி என்று என்று எழுத சென்றேன். ஆனால் என்ன கொடுமை பாருங்கள். நான் முடித்தது ரயில் கட்டுமான பயிற்சிக்கு. ஆனால் எனக்கு கேள்வித்தாளில் இருந்தது அதற்கு சம்மந்த மில்லாத கேள்விகள். மொத்தம் 90 கேள்விகள். அதில் பொது அறிவு சம்மந்தமாக 30 கேள்விகள், கணக்கு சம்மந்தமாக 30 கேள்விகள், மின்துறை சம்மந்தமாக 30 கேள்விகள். அவ்வளவு தான். எனக்கு பரவாஇல்லை. ஆனால் என்னுடன் என்னுடன் படித்த நண்பர்கள் ஒன்றுமே எழுதவில்லை, அவர்களுக்கு எழுதியதும் தெரிந்து விட்டது, தேர்வில் தோல்வி தான் என்று. நான் கணக்கு மற்றும் பொது அறிவு கேவிகள் அனைத்தும் சரியாக எழுதி விட்டேன். மின்துறை சம்மந்தமான கேள்விகளில் 20 சரியாக இருக்கும். இந்த லட்சணத்தில் கேள்வியை கேட்டால் மற்றவர்கள் எப்படி எழுதுவார்கள். இவர்களில் தேர்வானவர்கள் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் எப்படி ரயில் பெட்டி செய்வார்கள். அவர்களுக்கே வெளிச்சம். அரசு துறை இப்படி உள்ளது.
வாழ்க கேள்வி தயார் செய்தவர்கள்.
 
ஆரூர் மூனா

No comments:

Post a Comment