Saturday, 29 November 2014

நாத்திகன் கோவிலுக்கு செல்லக் கூடாதா

ஒரு பதிவர் அவர், பெயர் வேண்டாமே. அவ்வப்போது வந்து என்னிடம் வாலன்டியராக சாட் பண்ணுவார். நான் ப்ரீயாக இருக்கும் போது பதிலளிப்பேன். நான் திருவாரூர்க்காரன் என்று அறிந்ததும் தேர் பற்றியும் மும்மூர்த்திகள் பற்றியும் விவாதிப்பார். எனக்கு தெரிந்தவற்றை நான் கூறுவேன். தல புராணம் பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டார்.


திருவாரூர் பெரியகோவில் பற்றி ஆர்வத்துடன் நான் விவரித்ததை கவனித்த அவர் ஆன்மீக விஷயங்களை என்னிடம் சொற்பொழிவாக ஆற்றத் தொடங்கினார்.

அய்யா நான் நாத்திகன். இது பற்றி விவாதித்து, அதை நான் மறுத்து பேசி நமது நட்பு கெட்டு விடும், வேண்டாம். உங்கள் நம்பிக்கை உங்களுக்கு, என் நம்பிக்கை எனக்கு. அப்படியே விட்டு விடுவோம். உலகத்தில் பேசுவதற்கு என்று நிறைய விஷயங்கள் இருக்கிறது வாருங்கள் விவாதிப்போம் என்றேன்.

உடனே என்னிடம் சண்டையிட தொடங்கி விட்டார். நம்பிக்கையில்லாத நீ எப்படி கோவிலுக்குள் நுழையலாம். என்ன அருகதை இருக்கு உனக்கு, நல்ல குடும்பத்தில் பிறந்தவங்க சாமி கும்பிடுவாங்க, அப்படி இப்படியென்று இன்னும் சொல்ல முடியாத நிறைய வார்த்தைகளை விட்டார்.

கடவுள் நம்பிக்கை இல்லை என்பதற்காக கோவிலுக்குள் போக கூடாது என்றால் எப்படி. அது கோவில் மட்டுமல்ல, என் பயிற்சிக்களம். நான் கிட்டிபுள், கிரிக்கெட் விளையாட கற்றுக் கொண்டது அங்கு தான். 

ஒவ்வொரு வருடமும் முழு பரிட்சை காலத்தில் நண்பர்களுடன் குரூப் ஸ்டடி பண்ணியது அங்கு தான். தனியாக படிப்பதை காட்டிலும் நண்பர்களுடன் சேர்ந்து படிப்பது நிறைய பலனை தரும் என்பதை அறிந்ததும் அங்கு தான்.

நான் சைட் அடிக்கத் தொடங்கியது அங்கு தான். ஒரு தாவணி அணிந்த பெண்ணை ஒருதலையாக காதலிக்க தொடங்கியதும் அங்கு தான். திருவாரூர் போன்ற சிறு நகரங்களில் பெண்களை கண்ட இடத்திலும் காண முடியாது. ஒரு பார்க், பீச் போன்ற பொழுது போக்கு இடங்களும் கிடையாது. பெண்களை காண வேண்டுமென்றால் சாயரட்சை நடைபெறும் நேரத்திற்கு கோவிலுக்கு தான் செல்ல வேண்டும்.

இன்றும் கூட நான் திருவாரூரில் இருந்து மனசு சரியில்லாவிட்டால் கோவிலுக்கு சென்று என் நண்பர்களுடன் பொழுதை  செலவிட்ட பகுதியில் அமர்ந்து பழைய நினைவுகளை அசை போட்டால் போதும். என் எனர்ஜி லெவல் ஜிவ்வென்று ஏறி விடும்.

இப்படி என்னுடன் என் பால்ய வயதில் இணைபிரியாமல் இருந்த திருவாரூர் கோவிலை இது போன்ற அரைகுறைகளின் பேச்சை கேட்டு புறந்தள்ள முடியுமா என்ன.

ஆரூர் மூனா

11 comments:

  1. அது சரி ,கோவிலில் கடவுள் இருப்பதாக அவர்கள் நம்பிக்கை ,கடவுளை தவிர எவ்வளவோ இருக்குதுன்னு நமக்குத்தானே தெரியும் :)

    ReplyDelete
    Replies
    1. இவர்கள் திடீர் ஆன்மீகவாதிகள். புறந்தள்ளுவது தான் நல்லது என்று நினைத்து ஒதுங்கிவிட்டேன்.

      Delete
  2. உண்மைதான் நாத்திக ஆத்திக விவாதங்கள் தேவையற்ற மனக் கசப்பையே உண்டாக்கும். பொதுவாக நாத்திகர்கள் ஆத்திகர்களை சீண்டுவது வழக்கம்.இது தலைகீழாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. வாதாடுனா வம்பு தான் வருது. என் கொள்கை என்னோடு என்று முடிவு செய்து விட்டேன்.

      Delete
  3. கோயில்கள் இறைவன் உறையும் இடங்களாக மட்டுமல்லாமல், பொது மக்களின் புகலிடமாகவும், அவர்கள் ஆடல் பாடல் போன்றவற்றைக்கண்டு களிக்க அரங்கேறுமிடங்களாகவும் பலபல காலகட்டங்களில் பொதுமக்களுக்கு உதவுமிடங்களாகவும் அமைந்திருந்தன என்பது தமிழக வரலாறு. தில்லானா மோகனாம்பாள் படத்தில் பார்த்திருப்பீர்களே. ஊர் மக்கள் அனைவரும் சென்று வரும் இடமாகத்தான் இருந்தது. அக்காலத்திலும் ஊர்மக்களில் பலர் சமணர்களாகவும் பவுத்தர்களாகவும் சைவர்களாகவும் வைணவர்களாகவும் இருந்தார்கள். கிருத்துவம், யூதம், இசுலாம் போன்ற மதங்கள் தங்கள்தங்கள் இறைவழிபாட்டிடங்களை (சர்ச், மசூதி, சினகாக்) பொதுமக்கள் வந்து இரசிக்குமிடங்களாக வைக்கவில்லை. இந்துமதம் விசால மனத்தைக்கொண்டதனால், மக்களிடையே வேறுபாட்டை பாவிக்கவில்லை. தற்காலத்தில் இந்துத்வாவினர் இந்துமதத்தின் அடிப்படைக்கொள்கைகளை மாற்றி, அதை தீவிரவாதிகள் மதமாக மாற்றிவருவதால், உங்களிடம் பேசிய நபர் அக்கொள்கைகளுக்கு அடிமையாக மாறிவருகிறார் என்பது தேற்றம்.

    ReplyDelete
    Replies
    1. இப்ப இது தமிழ்நாட்டின் பேசன் ஆகி வருவது நாட்டுக்கு நல்லதில்லை

      Delete
  4. இந்துமதத்தில் நாத்திகருக்கும் ஆத்திகருக்கும் இடமுண்டு என்பதை அறியா தீவிரவாதி அந்த ஆள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னது தான் சரியான வார்த்தை

      Delete
  5. ஆஞ்சநேயர் பக்தர்கள் என்பார்கள். கல்யாணம் செய்துக்கொண்டு சவுகரியமாக இருப்பார்கள். அதுகெல்லாம் லாஜிக் கிடையாது.

    ஆனால், ஒரு நாத்திகன் சைட் அடிப்பதற்காக கோயிலுக்குள் நுழைந்தால் இவ்வளவு கூப்பாடு :(

    ReplyDelete
  6. நீர் நம்ம ஆள் லக்கி, ஹிஹி.

    ReplyDelete
  7. Welcome back, i keep following old blog of " thothavanda "and seen no updates , suddenly ur link appeared as link in " relax please 'blog...welcom with same spirit.What about short film ?
    May be this is my view follow link
    http://www.dinamalar.com/ishavdo_detail.asp?id=31

    ReplyDelete