Thursday, 6 August 2015

Mission: Impossible – Rogue Nation

மிஷன் இம்பாசிபிள் சீரிஸ் வரிசையில் ஐந்தாவதாக வந்துள்ள படம் தான் Mission: Impossible – Rogue Nation. ஒரு காலத்தில் பெண்கள் எல்லாம் ஹாண்ட்சம் என்பதற்கான உதாரணத்திற்கு டாம் குரூஸை தான் கை காட்டுவார்கள். இந்த வயதிலும் மனிதர் அசராமல் அடித்து அதற்கு தகுதியானவர் என்பதை நிரூபிக்கிறார். 


முதல்ல விளக்கம். 

உண்மையிலேயே இதை சொல்ல வெக்கமாக தான் இருக்கு. ஆனாலும் சொல்லித்தான் ஆகனும். மற்றப் ஹாலிவுட் படங்கள் அளவுக்கு இந்த படம் எனக்கு புரியவேயில்லை. அதனாலேயே படம் பார்த்துவிட்டு வந்து விமர்சனம் போடவில்லை. நான் பாட்டுக்கு கௌம்பி வேலைக்கு போயிட்டேன். ஒரு காட்சியை நான் தவறாக புரிந்து கொண்டு விமர்சித்தால் கூட நம்ம நண்பர்கள் நல்லா கலாய்ப்பாங்க என்று தெரியும்.

அப்புறம் புரியாமல் பார்த்த படத்துக்கு விமர்சனம் போடுவதே புது மாதிரி தான் என்று முடிவெடுத்து தைரியமாக எழுதுகிறேன். இந்த மாதிரி படங்கள் எல்லாம் ஒரு இடத்தில் கூட கவனம் சிதறாமல் பார்த்தால் தான் புரியும். ஆனால் இன்னிக்கினு பார்த்து தியேட்டர்ல உக்கார்ந்துக்கு அப்புறம் போனும் மெசேஜுமா வந்துக்கிட்டே இருந்தது. அதனால் படத்தின் கதைக்குள் கவனம் போகவில்லை.


தெலுகு, இந்தி, மலையாளம் எல்லாம் எழுத பேச படிக்க தெரியுமாததால், அந்த மொழி படங்கள் பார்க்கும் போது எந்த பிரச்சனையும் ஏற்படாது. இந்த ஆங்கிலம் தான் பள்ளிக் காலத்திலிருந்தே தகராறு. அதுவும் இவனுங்க இழுத்து இழுத்து பேசுற ஆங்கிலம் கண்ணைக் கட்டி காட்ல விட்ட மாதிரி தான் இருக்கு.

ஒழுங்கா நாளைக்கு வெளியாக இருக்கும் தமிழ் வெர்சனே பார்த்து இருக்கலாம். முதல் நாள் படம் பார்த்து விமர்சனம் போடனும் என்கிற ஆர்வத்தால் ஆர்வக் கோளாறால் படம் பார்த்ததற்கு தண்டனை தான் இது. அதனால் இது விமர்சனமல்ல. ஒரு மாதிரியான விமர்சனம்.


ஐரோப்பிய ஒன்றியங்களில் உள்ள உளவாளிகள் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். அந்த சமயம் இங்கிலாந்து பிரதமரை கொல்லவும் சதி நடக்கிறது. எல்லாவற்றையும் டாம் குரூஸ் அண்ட் குழுவினர் எப்படி முறியடிக்கிறார்கள் என்பதே  MI 5ம் பாகத்தின் கதை. 

படத்தின் துவக்கத்திலேயே ஒடும் விமானத்தில் ஏறி விமானத்தின் வெளியே தொங்கி எண்ட்ரி கொடுத்து விசில் அள்ளுகிறார் டாம். அது போல பைக் சேஸிங் காட்சியும் அவரது திறமைக்கு சவால் தான். திறமையாக கையாண்டு இருக்கிறார். 


நாயகியாக ரெபெக்கா. சரியான அங்கமைப்பில் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் பட்டைய கிளப்பி இருக்கிறார். அதுவும் ஜெயிலில் நடக்கும் சண்டையில் அழகை கண்டு மிரண்டே போனேன். படத்தில் ஒரு கில்மா காட்சி கூட இல்லை. அட முத்தக் காட்சி கூட இல்லை என்பது தான் வருத்தமா போயிடுச்சி.

படத்தில் காட்டப்பட்டு இருக்கும் தொழில்நுட்பங்கள் அசரடிக்கின்றன. கான்டாக்ட் லென்ஸில் கேமிரா முதல் பென்டிரைவை தொடாமலே அதன் டேட்டாவை அழிப்பது வரை எல்லாமே ஏ ஒன். 

அதிக அழுத்தத்துடன் கூடிய தண்ணீருக்குள் இருக்கும் செக்யூரிட்டி சிஸ்டத்தில் டிரைவை சொருகும் காட்சி, பைக் சேசிங்,  டாம் குரூஸை தேடி க்யூபாவுக்கு சிஐஏ போகும் போது அவர் ஈபிள் டவர் பின்னணியில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருப்பது என சில காட்சிகள் மட்டுமே ரசிக்க வைக்கின்றன.

ஆனால் படம் பிடிக்கவில்லை. சொம்மா பேசியே கொல்கிறார்கள். ஆக்சன் பிளாக்குகள் ரொம்ப குறைவாக இருக்கிறது. சாகசம் பத்தவில்லை. இதற்கு முந்தைய பாகத்தில் புர்ஜ் துபாய் கட்டிடத்தில் செய்யும் சாகசம் அப்புறம் அறிமுக காட்சி எல்லாமே அருமையாக இருக்கும். இதில் குறைவாக இருப்பதாக எனக்கு பட்டது. 

அதே போல் க்ளைமாக்ஸும் சொதப்பல் தான். இந்த மாதிரி படங்களுக்கு எதற்கு இவ்வளவு டயலாக் வெர்ஷன். தமிழ் சினிமாவுக்கு போட்டியாக இரண்டரை மணிநேரம் படம் ஓடுகிறது. 

மொழியும் புரியாமல், கதையும் சரிவர புரியாமல், இரண்டரை மணிநேரம் மொக்கைப் போட்டதை பார்த்தற்கு தலைவலி வந்தது தான் மிச்சம். சண்டைக் காட்சிகளை இன்னும் அதிகப்படுத்தி சுவாரஸ்யப்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்னவோ. 

ஆரூர் மூனா

No comments:

Post a Comment