Friday 28 August 2015

தனிஒருவன் - சினிமா விமர்சனம்

இந்த ஆண்டு ஜெயம் ரவிக்கு சிறந்த ஆண்டு போல. சிரமப்பட்டு வந்த ரவி இந்த ஆண்டு ரோமியோ ஜுலியட் படம் மூலம் பார்முக்கு திரும்பினார். சகலகலாவல்லவன் காறித்துப்புற ரேஞ்சுல தான் இருந்தது. ஆனால் ஊர்ப்பக்கம் செம ஓட்டம். சிறு நகரங்களில்(சி சென்ட்டர்னு சொன்னா சண்டைக்கு வர்றாரு கோவி. கண்ணன்) நல்ல வசூலாம். இப்போ தனிஒருவன் நன்றாகவே வந்திருக்கிறது.


ஒரு நல்ல படம் என்றால் துவங்கியதிலிருந்து போரடிக்காமல் போய் நல்ல அதிர்ச்சியுடன் இன்டர்வெல் விட்டு அதற்கு பிறகு கூட தொய்வில்லாமல்  முன்பாதியின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்து திருப்தியான க்ளைமாக்ஸ் உடன் படம் முடிய வேண்டும். அதனை இந்த படம் செவ்வனே செய்திருக்கிறது. 

இதே ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில். இந்த வரையறைக்குள் இன்டர்வெல் வரை சென்று சரியான அதிர்ச்சி கொடுத்து இன்டர்வெல் விட்டு இருப்பார்கள்.  ஆனால் அதற்கப்புறம் சொதப்பி வைத்து முதல்பாதியின் கேள்விகளுக்கு சரியான விடையளிக்காமல் கன்னா பின்னாவென்று அலை பாய்ந்து படம் முடிந்தால் போதும் என்ற அளவுக்கு கொண்டு வந்து விட்டு இருப்பார்கள். 


கிட்டத்தட்ட இந்த படமும் அப்படித்தான். ஆனால் முதல் பாதி சுவாரஸ்யத்தை கெடுக்காமல் அப்படியே மெயின்டெயின் செய்திருப்பது தான் இந்த படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது.

ஐபிஎஸ் பாஸ் பண்ணி ட்ரெயினிங்கில் இருக்கும் ஜெயம்ரவியும் அவரது பேட்ச்மேட்களும் இரவு நேரங்களில் உளவுப் பார்த்து சிறு குற்றங்களை கண்டறிகிறார்கள். அதன் மூல ஆதாரங்களை ஆராயும் போது எல்லா சிறு குற்றங்களும் ஒரு பெரிய குற்றத்துடன் சம்பந்தப்பட்டு இருப்பதை கண்டறிகிறார்கள். அனைத்து பெரிய குற்றங்களும் ஹோம் மினிஸ்டர் மகன் அரவிந்த்சாமியிடம் இருந்து தொடங்குவதை அறிகிறார்கள். 

ட்ரெயினிங் முடிந்து வேலையில் சேரும் ஜெயம்ரவி அரவிந்தசாமியை குறிவைத்து வீழ்த்த நினைக்கிறார். அவரை விட பெரிய மூளைக்காரரான அரவிந்தசாமி ஜெயம்ரவியை வீழ்த்தி அவர் உடலில் அவருக்கு தெரியாமல் ஒட்டுக் கேட்பு கருவியை பொருத்தி உளவு பார்க்கிறார். இறுதியில் யார் யாரை ஜெயித்தார்கள் என்பதே தனிஒருவன் படத்தின் கதை.


ரீமேக் படங்கள் மூலம் மட்டுமே ஜெயித்து வந்த மோகன் ராஜா இந்த முறை சொந்தக் கதையுடன் களமிறங்கி தன்னை நிரூபித்து இருக்கிறார். எந்த இடத்திலும் தொய்வு விழுந்து விடாமல் எடுத்துக் கொண்ட கதையை விட்டு விலகாமல் சரியான ஆக்சன் படத்தை கொடுத்துள்ளார்.

சுமாரான வெற்றிகளையே இந்த வருடம் பார்த்த ஜெயம் ரவிக்கு இந்த படம் கண்டிப்பாக ஹிட் படம் தான்.

ஐபிஎஸ் டிரெயினிங்கிற்கு ஏற்ற உடல்வாகு அவருக்கு அட்டகாசமாக பொருந்துகிறது. சண்டைகாட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். அவரது நண்பர் ஜனா வில்லன் கும்பலிடம் அடிவாங்கும் போது பதறும் இடத்தில் நடிக்கவும் செய்து இருக்கிறார்.


நயன்தாரா சும்மா ரெண்டு சீன் நாலு பாட்டுக்கு வந்து போகாமல் நாயகனுக்கு இணையாகவே படம் முழுக்க வரும் பாத்திரம். நன்றாவே செய்திருக்கிறார். ஒரே டூயட் தான். மான்டேஜ் சாங்கில் ஜெயம்ரவியிடம் வழியும் இடங்களில் எக்ஸ்பிரசன் பிரமாதம்.

முதல்முறை வில்லனாக அரவிந்த்சாமி. மனுசன் சும்மா பின்னி எடுக்கிறார். படித்த வில்லனுக்கான உடல்வாகு பிட்டாக மனுசனுக்கு செட்டாகிறது.அசால்ட்டாக நடித்து அனுபவஸ்தர் என்பதை நிருபிக்கிறார். என்னா மேன்லினஸ். படம் இந்தளவுக்கு ஆக்சனில் பொறி பறக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் அரவிந்த்சாமி தான்.

ஒன்னும் தெரியாத அப்பாவி அமைச்சராகவும் அரவிந்த்சாமியின் அப்பாவாகவுமாக தம்பி ராமையா கிடைத்த இடத்தில் எல்லாம் ஸ்கோர் செய்கிறார். பையன் சொன்னான் என்பதற்காக தலையை உயர்த்தி நெஞ்சை நிமிர்த்தி நடந்து செல்லும் போது அப்ளாஸ் அள்ளுகிறார்.

 நெகிழ வைக்கும் படம், வித்தியாசமான கதைக்களம், தெறிக்கும் நகைச்சுவை, செண்ட்டிமெண்ட் என எதையும் தனக்குள் வைத்துக் கொள்ளாமல் படம் இவ்வளவு சிறப்பாக வந்திருப்பது காரணம். திரைக்கதையும் இயக்கமும் தான்.

துவங்கிய காட்சிகளில் அனல்பிடிக்கும் படம் கொஞ்சம் கூட குறையாமல் படம் இறுதி வரை வருவது தான் படத்தின் ஆகச்சிறந்த ப்ளஸ்.

கண்டிப்பாக பார்க்க வேண்டிய பரபர ஆக்சன் படம் தான் இந்த தனிஒருவன்.

ஆரூர் மூனா

6 comments:

  1. Yes kandipa nalla padam romba naal kalichu

    ReplyDelete
    Replies
    1. நன்றாக என்சாய் செய்துள்ளீர்கள்.

      Delete
  2. What about velayudham? Is it remake story ?

    ReplyDelete
    Replies
    1. ஆசாத்னு ஒரு தெலுகு படத்தின் அன்அபீசியல் உல்டா தான் வேலாயுதம்

      Delete
  3. Velayudam - Azad... Old telugu nagarjuna movie

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கூட ரெகுலரா தெலுகு படம் பார்ப்பீர்கள் போல.

      Delete